Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்கள் பலவந்தமாக நாமலிடம் அழைத்துச் செல்லப்பட்டனர்:

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்கள் பலவந்தமாக நாமலிடம் அழைத்துச் செல்லப்பட்டனர்: தோ்தலில் இருந்து விலகினால் இலட்சம், இலட்சம் தருவதாகப் பேரம்

[Friday, 2011-07-22 09:18:24]

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி வேட்பாளர்களைப் பணம் கொடுத்து வாங்க அரச தரப்பு முயற்சிக்கிறது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் தெரிவித்தார்.

கூட்டமைப்பின் கரைச்சிப் பிரதேச வேட்பாளர் 4 பேரை பலவந்தமாக அழைத்துச் சென்ற, நாமல் ராஜபக்ஷ போட்டியில் இருந்து விலகுமாறும் அதற்காக லட்சம் லட்சமாக பணம் கொடுப்பதாகவும் மிரட்டி உள்ளார் என்றார் சிறீதரன்.

கிளிநொச்சி மாவட்டத்தில் மூன்று பிரதேச சபைகளுக்குத் தேர்தல் நடக்கிறது. பூநகரி பச்சிலைப்பள்ளி பிரதேச சபைகளில் தமிழர் விடுதலைக் கூட்டணியினரின் உதய சூரியன் சின்னத்திலும் கரைச்சி பிரதேச சபையில் தமிழரசுக் கட்சியின் வீடு சின்னத்திலும் கூட்டமைப்பு போட்டி இடுகின்றது.

இதில் கரைச்சி பிரதேச சபைக்குப் போட்டியிடும் வேட்பாளர்களான மாரியப்பன், சுகந்தன், பொன்னையா இராமலிங்கம், இராமசாமி வடிவேல், சின்னையா சுப்பையா போன்றோரே பல வந்தமாக நாமலிடம் அழைத்துச்செல்லப்பட்டார்கள் என்று முறையிடப்பட்டுள்ளது.

கிளிநொச்சி செயலகத்தில் நேற்று நடைபெற்ற அரசியல் கட்சிகளுடனான கூட்டத்தில் வேட்பாளர்கள் தமக்கு நடந்தவற்றை விளக்கினார்கள்.திடீரென என்னிடம் வந்த நான்கைந்து பேர் என்னைப் பலவந்தமாக நாமலிடம் அழைத்துச் போனார்கள். அங்கு சென்றதும் இவர்கள் என்னைக் கடத்தி வந்திருக்கிறார்கள் என்று நாமலிடம் முறையிட்டேன். அவர்கள் தெரியாமல் செய்துவிட்டார்கள் என்றார் எனக் கூறினார் வேட்பாளர் சுப்பையா.கூட்டமைப்பில் இருந்து விலகுவதற்குத் தனக்கு 5 லட்சம் ரூபா தருவதற்கு தயார் என்று நாமல் கூறினார் எனவும் அவர் தெரிவித்தார்.அரசுடன் சேர்ந்து கொண்டால் இன்னும் அதிக பணம் தருவதாக நாமல் வாக்குறுதி அளித்தார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

வேட்பாளர்களை நாமலுடன் வைத்து ஒளிப் படங்கள் எடுதுள்ளார்கள். அவற்றை ஆதாரமாகக் காட்டி கூட்டமைப்பு வேட்பாளர்கள் அரசுடன் சேர விருப்பம் என்பது போன்ற பொய்ப் பிரச்சாரங்களில் அரச ஊடகங்கள் மூலம் ஈடுபடப்போகிறார்கள் என்று தகவல் கிடைத்துள்ளது என்றார் நாடாளு மன்ற உறுப்பினர் சிறீதரன்.

http://www.seithy.com/breifNews.php?newsID=46914&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

பண ஜனநாயகம்.. கொலை நாயகம்.. இராணுவ அநியாயம்.. தெற்காசியாவின் ஜனநாயகம். இது குறித்து அமெரிக்கா உன்னிப்பாக அவதானித்து நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மக்கள் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இழந்து.. அதை தூக்கி எறிய வேண்டிய தேவை ஏற்படும். அது அமெரிக்காவின் உலகளாவிய தோல்விக்கு வழிவகுக்கும்..!

பண ஜனநாயகம்.. கொலை நாயகம்.. இராணுவ அநியாயம்.. தெற்காசியாவின் ஜனநாயகம். இது குறித்து அமெரிக்கா உன்னிப்பாக அவதானித்து நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மக்கள் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இழந்து.. அதை தூக்கி எறிய வேண்டிய தேவை ஏற்படும். அது அமெரிக்காவின் உலகளாவிய தோல்விக்கு வழிவகுக்கும்..!

இதற்கு உலகின் மிகப்பெரிய காட்டுமிராண்டி ஜனநாயகவாதிகளையும் சிதறடிக்க வேண்டியிருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

"2000 ரூபாய் தருவதாச் சொல்லி, ஒரு போத்தில் தண்ணீர்"

"விதைவைகளுக்கு, உதவி செய்வதாக.. தேர்தல் கூட்டத்துக்கு, அழைத்துச் சென்றவர்களுக்கு ஒரு கொத்து அரிசி."

"வேட்பாளர்களை கடத்தல்"

"நாயின் கழுத்தை வெட்டி, கேற் கம்பியில் கொழுவுதல்"

இப்படியான ஒரு நாட்டில், தேர்தல் கூத்து வைப்பது வீண் வேலை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.