Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போர்க் குற்றத்தை விசாரிக்க இலங்கைக்கு அமெரிக்கா உத்தரவு

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போர்க்குற்றம் குறித்து இலங்கை அரசு உரிய விசாரணை நடத்தவில்லை என்றால் அந்நாட்டுக்கான உதவிகள் ரத்து செய்யப்படும் என்று அமெரிக்க செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இலங்கையில் நடந்து இறுதி கட்டப்போரில் லட்சக்கணக்கான தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். இது தொடர்பான ஆவணங்கள் மற்றும் வீடியோ வெளியாகி உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இதையடுத்து உலக நாடுகள் இலங்கை அரசை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்றும், இது குறித்து சர்வதேச நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும் என்று கூறி வருகின்றன.

இலங்கை அரசு போர்க்குற்றம் புரிந்துள்ளதாக ஐ.நா. நிபுணர் குழுவும் அறிக்கை சமர்பித்துள்ளது. எனினும் இலங்கை அரசு மெத்தனமாகத் தான் இருக்கிறது.

இந்நிலையில் போர்க்குற்றம் குறித்து இலங்கை அரசு உரிய விசாரணை நடத்தாவிட்டால் அந்நாட்டிற்கு அளிக்கப்படும் உதவிகள் ரத்து செய்யப்படும் என்று அமெரிக்க செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக இலங்கைத் தமிழ் இணையதளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த தீர்மானத்தை அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த பேர்மன் முன்மொழிந்தார்.

இந்த தீர்மானத்தின்படி மனிதாபிமான உதவிகளைத் தவிர்த்து மற்ற நிதியுதவிகள் அனைத்தையும் நிறுத்த அமெரிக்க செனட் சபையின் வெளிநாட்டு விவகார குழு அனுமதி வழங்கியுள்ளது.

போர்க்குற்ற விசாரணை தவிர்தது ஊடக சுதந்திரம், அவசரகால சட்ட நீக்கம் ஆகியவற்றை அமல்படுத்தவும் அந்த தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் 2010- ம் ஆண்டின் நிதியாண்டுக்காக இலங்கைக்கு வழங்க 13 மில்லியன் டாலர் வேண்டும் என்று அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி நிறுவனம் அந்நாட்டு அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இருப்பினும் இந்த தீர்மானம் உடனடியாக அமல்படுத்தப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..eelamwebsite.com

'இலங்கை மீது தடைவிதித்தால், அமெரிக்க ஜனநாயக கொள்கைக்கு அது முரணானது'

இலங்கையின் உள் விவகாரங்கள் தொடர்பாக அமெரிக்க அரசாங்கம் பிறப்பிக்கும் எந்த உத்தரவும் அமெரிக்காவினால் முன்மொழியப்படும் ஜனநாயகக் கொள்கைகளுக்கு முரணானது என இலங்கை அரசாங்கம் இன்று கூறியுள்ளது.

2009 ஆம் ஆண்டு யுத்தத்தின் இறுதிக்கட்டத்தின் போதான ரத்தக்களறிகள் தொடர்பாக பொறுப்புடைமையை வெளிப்படுத்தத் தவறினால் இலங்கைக்கு அமெரிக்க அரசாங்கத்தின் உதவிகளை தடைசெய்யப்பட வேண்டும் என அமெரிக்க நாடாளுமன்ற வெளிவிவகாரக் குழுவின் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

இது தொடர்பாக அரசாங்க பேச்சாளரான அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிடம் கருத்து கேட்டபோது, அமெரிக்கா இத்தகைய தடையை கொண்டுவந்தால், அது அவர்கள் போதிக்கும் ஜனநாயக கொள்கைகளுக்கு முரணானது. அதன்பின் பொறுப்புடைமை குறித்து ஒருதலைப்பட்சமாக ஆராய வேண்டியிருக்கும் என அவர் கூறினார்.

பொறுப்புடைமை குறித்து போதுமானளவு உள்ளூர் மன்றங்களில் தீவிரமாக கலந்துரையாடப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/25113-2011-07-22-11-53-22.html

நல்ல ஆரம்பம். ஐ ந விற்கு செய்தது போல் விமலும் மற்றயோரும் எதிர்ப்பை தெரிவிப்பார்களாக.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.