Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இராணுவ பயிற்சிக்கு எதிரான போராட்டம்; நாம் தமிழர் இயக்கத்தவர் 150 பேர் கைது

Featured Replies

வெள்ளிக்கிழமை, யூலை 22, 2011

இலங்கை ராணுவ வீரர்களுக்கு குன்னூர் ராணுவ பயிற்சி மையத்தில் பயிற்சி அளிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெரியார் தி.க., நாம் தமிழர், விடுதலை சிறுத்தைகள் அமைப்பினர் குன்னூரில் போராட்டம் நடத்தினர்.

.

இதனால் 200க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பும், பதட்டமும் நிலவியது.

குன்னூர் வெலிங்டன் ராணுவ மையம் முன்பு நாம் தமிழர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுதது போலீசாருககும் பல்வேறு அமைப்புகளுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. மறியலில் ஈடுபட்டதாக நாம் தமிழர் இயக்கத்தினர் 150 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

http://www.eelanatham.net/story/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81

  • கருத்துக்கள உறவுகள்

நாம் தமிழர் தோழர்களுக்கு, பெரியார் தி.க., விடுதலை சிறுத்தைகள் நன்றிகள் ........

தமிழர் இயக்கத்தினர் 150 பெயரும் அவர்கள் விரைவில் விடுதலையாகி வரவேண்டும் .

தமிழினப் படுகொலை செய்த சிங்களப் பயங்கரவாதிகளுக்கு தமிழ் மண்ணில் பயிற்சி கொடுக்கும் நயவஞ்சகர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை இராணுவத்தினருக்கு தமிழகத்தில் மூன்று நாள் பயிற்சி.

23 ஜூலை 2011

Bookmark and Share

இலங்கை இராணுவத்தினருக்கு தமிழகத்தில் மூன்று நாள் பயிற்சி.

3ம்இணைப்பு - குன்னூர் வெலிங்டன் இராணுவப் பள்ளி முற்றுகை -நூற்றுக்கணக்கானோர் கைது :

தமிழகத்தில் குன்னூர் மாவட்டத்தில் உள்ள வெலிங்டன் இராணுவப் பள்ளியில் இலங்கையைச் சார்ந்த 25 இராணுவ வீரர்கள் பயிற்சிக்காக வந்து ரகசியகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். உடனடியாக அவர்களை தமிழகத்தை விட்டு வெளியேற்றக் கோரி நேற்று பெரியார் தி.க, விடுதலைச் சிறுத்தைகள், நாம் தமிழர் அமைப்பைச் சார்ந்தவர்கள் குன்னூர் வெலிங்டன் இராணுவப் பள்ளியை முற்றுகையிட்டனர். இதை ஏற்கனவே எதிர்ப்பார்த்திருந்த காவல் துறையினர் அவர்களை இரணுவப் பள்ளியை நெருங்க விடாமல் தடுத்தனர். இதனால் போலீசாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. சிறிய அளவிலான தள்ளு முள்ளும் ஏற்பட்டது.

கலைந்து போகச் சொன்ன போலிசாரின் கோரிக்கையை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏற்க மறுத்ததால் 200- க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டனர். இந்த பயிர்ச்சி தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,''சிங்களப்படையை சார்ந்த உயர் அதிகாரிகளுக்கு நீலமலை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இந்திய அரசு பயிற்சியளித்து வருவதாக தெரியவந்துள்ளது. அதனையொட்டி விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட ஓர் இரு அமைப்புகள் கண்டனம் தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிங்கள இனவெறியர்களை அரசியல் ரீதியாகவும் ,இராணுவம் ரீதியாகவும்,வலிமைப்படுத்துவதில் இந்திய அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை எல்முனையளவும் பொருட்படுத்தாமல் சிங்கள காடையர்களால் இந்திய அரசு தொடர்ந்து ஊக்கப்படுத்தி வருகிறது. ஏற்கனவே பலமுறை இவ்வாறே இராணுவ பயிற்சிகளை வழங்கியதை கண்டித்து தமிழ்நாட்டில் போராட்டங்கள் நடந்து இருகின்றன.

ஆனால் மீண்டும் தமிழ்நாட்டிலே சிங்களவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கு இந்திய அரசு முன்வந்துள்ளது என்றால் தமிழக மக்களின் எதிர்ப்பை எவ்வாறு மதிப்பீடு செய்கிறது என்பது தெரியவருகிறது .இந்திய அரசுக்கும்,சிங்கள அரசுக்கும்,இடையில் மிகவும் வழுவான ,உறுதியான நட்புறவு என்பதையும் வெளிப்படுத்துகிறது. தமிழீழத் தமிழர்களையும், தமிழ்நாட்டு மீனவர்களையும் கொன்றுகுவித்து வரும் சிங்கள படையினரை இந்திய அரசு வலிந்து வலிந்து ஆதரித்து வருகிறது. தமிழ் மக்களின் பாதிப்புகளை பற்றி கவலைபடாமல் சிங்கள இனவெறியர்களுக்கு உறுதுணையாக நிற்கும் இந்திய அரசின் தமிழ் விரோதப்போக்கை விடுதலைச்சிறுத்தைகள் மிகவும் வன்மையாக கண்டிக்கிறது.தமிழர்களின் பெரும் ஆதரவோடு ஆட்சியை கைப்பற்றியிருக்கிற அதிமுக அரசு இந்திய ஆட்சியாளர்களின் இந்தகைய போக்குளை தடுத்து நிறுத்த வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கேட்டுக்கொள்கிறது'' என்று தெரிவித்துள்ளார்.

2ம்இணைப்பு - இராணுவ பயிற்சிக்கு தமிழகத்தில் எதிர்ப்பு.

22-07-2011 - 06:49

இலங்கையைச் சார்ந்த இராணுவ அதிகாரிகள் தமிழகத்தின் குன்னூர் இராணுவக் கல்லூரியில் பயிற்சி பெற தமிழகத்தில் எதிர்ப்பு எழுந்துள்ளது.பெரியார் திராவிடர் கழகம் இலங்கை இராணுவ அதிகாரிகளை உடனடியாக வெளியேற்ற வேண்டும் இல்லை என்றால் குன்னூர் வெலிங்டன் இராணுவ மையத்தை முற்றுகை இடுவோம் என்று அறிவித்துள்ளனர்.கோவை மாவட்ட பெரியார் திக தலைவர் கு.இராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். இது போல நாம் தமிழர் உள்ளிட்ட ஏராளமான அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

இலங்கை இராணுவத்தினருக்கு தமிழகத்தில் மூன்று நாள் பயிற்சி.

இலங்கையும்,இந்தியாவும் பிராந்திய நலன்,இராணுவ, வர்த்தக நலன்களில் இணக்கமான நாடுகளாக இணைந்து செயல்பட்டு வருகின்றன. கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கை இராணுவத்தினர் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் இராணுவ பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.இந்திய இலங்கை கடற்படைகளின் கூட்டுப் பயிற்சியும் அவ்வப்போது நடந்து வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தின் குன்னூர் அருகே உள்ள இந்திய இராணுவ பயிர்ச்சி மையத்தில் இலங்கை இராணுவத்தினர் மூன்று நாள் பயிற்சிக்கு வந்துள்ளனர். இவ்வாறு பயிர்ச்சிக்கு வந்துள்ள இலங்கை இராணுவத்தினரை குன்னூர் வெலிங்டன் அருகே உள்ள தனியார் ஓட்டலில் ரகசியமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள், ராணுவ பயிற்சிக் கல்லூரியில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்துள்ளதாக கூறப்படுகிறது. என்ன நிகழ்ச்சி என்பது போன்ற விவரங்களை தெரிவிக்க அதிகாரிகள் மறுத்துவிட்டனர். இவர்கள் தங்கியுள்ள ஓட்டலைச் சுற்றி, 20க்கும் மேற்பட்ட போலீசார் 'மப்டி'யில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்கள் வருகை குறித்து செய்தி சேகரிப்பதற்கும், புகைப்படம் எடுப்பதற்கும் ஓட்டல் நிர்வாகம் தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டது. குன்னூரில் உள்ள இராணுவ பயிற்சிக் கல்லூரியில் ஆசியாவில் பல நாடுகளைச் சார்ந்த இராணுவத்தினரும் பயிற்சி பெற்றுச் செல்வது வழக்கம்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/64492/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.