Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேர்தலில் வெற்றி: ஆளமாக பார்க்கவேண்டிய சர்வதேசத்தின் பார்வை

Featured Replies

Election%20result.jpg

வழமையாக உள்ளூராட்சி தேர்தல் என்றால் அது நாய் பிடிப்பவர்கள், சாக்கடைகளை சுத்தம் செய்பவர்கள், மிதி வண்டிக்கு இலக்கத்தகடு வழங்குபவர்கள்,கிரவல் ரோடு போடுபவர்களை மேய்க்கும் ஆட்களை தெரிவு செய்யும் தேர்தல் என ஊரில் சொல்வார்கள். இந்த மாதிரியான உள்ளூராட்சி தேர்தலினை மக்கள் அலட்டிக்கொள்வதில்லை.

.

ஆனால் இந்த முறை கடந்த இரு தசாப்தங்களுக்கு மேலாக வடக்கு கிழக்கில் உள்ளூராட்சி தேர்தல் நடைபெறவில்லை. இரு தசாப்தங்களும் வடக்கு கிழக்கில் விசேட ஆணையாளர் எனும் அரச அதிகாரிகளே உள்ளூராட்சி சபைகளை நிர்வகித்து வருகின்றனர். ஆகவே வடக்கு கிழக்கில் 18-40 வயது வரையான வாக்காளர்களுக்கு உள்ளூராட்சி சபைகள் என்றால் அது அரசாங்கத்தின் ஒரு நிறுவனம் ( ஒரு திணைக்களம் ) என்றே நினைத்ததும் உண்டு.

.

ஆனால் இந்த முறை உள்ளூரட்சி தேர்தலில் என்றும் இல்லாதவாறு விழிப்புணர்வுக்கு உள்ளாகியது. இதற்கு முதற்கட்டம் சிங்கள அரசிற்கே நன்றி சொல்லவேண்டும். ஏனென்றால் சிங்களம் தான் இந்த தேர்தலினை பெரிது படுத்தி அதன் மூலம் தனது நரித்திட்டத்தினை நகர்த்த முடிந்தது. அதாவது மக்கள் உள்ளூராட்சி தேர்தலில் அக்கறைகொள்ளமாட்டார்கள் இந்தன் நேரத்தில் சிங்களம் கணிசமான வெற்றியைப்பெற்று அதன் மூலம் சர்வதேசத்திற்கு தம்மை தமிழ் மக்கள் ஏற்றுக்கொண்டு விட்டார்கள் என நிரூபிக்க நினைத்தது.

.

ஆனால் சுதாகரித்த தமிழர் தரப்பு கடும் அழுத்தங்களுக்கும் மிரட்டல்களுக்கும் மத்தியில் வெற்றி பெற்றனர். இந்த வெற்றியில் இளையோர் உட்பட முதியோர் அனைவரது பங்களிப்பும் வாழ்த்தும் அளவிற்கு இருந்தது.

.

இராஜபக்‌ஷ அரசு எந்தளவு பெரிதாக பிரச்சாரப்படுத்தி தேர்தலினை நடாத்தியதோ அதற்கு சமனாக உலக ஊடகங்களும் இந்த உள்ளூராட்சி தேர்தலிற்கு வித்தியாசமான கோணத்தில் முக்கியத்துவம் கொடுத்தன. ஆனால் அது இராஜபக்‌ஷவிற்கு சாதகமா அல்லது பாதகமா என்பதிலேயே பிரச்சினை. அல்லது தமிழர்க்கு சாதகமா அல்லது பாதகமா? ஏன் சர்வதேச ஊடகங்கள் இவ்வாறு பெரிது படுத்தின.

.

பிபிசி, சி.என்.என், நியூயோக் ரைம்ஸ்,இந்தியா டுடே,ஏபிசி, என உலகத்தில் உள்ள அனைத்து முன்னணி ஊடகங்களும் முக்கியத்துவம் கொடுத்தன. இதில் புதினம் என்னவெனில் முள்ளீவாய்க்காலில் மக்கள் கொத்துக்கொத்தாக கொல்லப்படும் போது கூட இந்தளவு முக்கியத்துவம் கொடுத்து செய்திகளை வெளியிடவில்லை. முள்ளிவாய்க்காலின் போது செய்திகளை இந்த ஊடகங்களில் வெளிவர செய்வதற்கு தமிழர் தரப்பு எத்தனையோ போராட்டங்களையே செய்துள்ளது.

.

சர்வதேசத்தின் வர்ணனை

பிபிசி கூறியது போராளிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசத்தில் நடந்த தேர்தல் என்றும், இராஜபக்‌ஷவின் சிந்தனைக்கு மக்கள் விரும்பவில்லை என்றும் மாறாக தன்னாட்சி உரிமைக்காக மக்கள் வாக்களித்துள்ளார்கள் எனவும் கூறியது.

.

மேற்குறித்த பாணியில் ரொயிட்டர்ஸ், ஏஎஃப்பி போன்றனவும் செய்திகளை பிரசுரித்திருந்தன. இந்த செய்திகள் மறைமுகமாக தமிழர் பிரதி நிதிகளாக விடுதலைப்புலிகளின் நிழல் அமைப்பான கூட்டமைப்புத்தான் என்று மறைமுகமாக கூறியது. மட்டுமன்றி உரிமைக்காகவே மக்கள் வாக்களித்துள்லனர். அதாவது தமிழர் சிங்களம் என்ற ஒரு இனங்களிற்கு இடையே அரசியல் தீர்வுதான் இப்போது முக்கியம் என்ற தோற்றத்தில் செய்திகளை வெளியிட்டன.

.

நியூயோர்க் ரைம்ஸ் இன்னும் ஒரு படி மேலே சென்று விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவு தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வித்தியாசத்தில் வென்றுள்ளன என அதிரடியாக கூறியுள்ளது.

.

இந்த வர்ணனைகள் எல்லாம் ஏன்?

1. விடுதலைப்புலிகள் போரில் தோற்கடிக்கப்பட்ட பின்னர் ஜனனாயக பாதைக்கு திரும்பி விட்டனர் அங்கு தேர்தலில் பங்குபற்றியுள்ளனர் என காட்டுவதா?

2. விடுதலைப்புலிகளுக்கு மாற்றீடாக அவர்களின் ஆதரவில் கூட்டமைப்பு எனும் தலைமைத்துவம் மக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ளது என்பதனை உறுதிப்படுத்துவதா?

3. இந்த மக்களால் தெரிவு செய்யப்பட்ட புலிகளுக்கு மாற்றீடான தலைமைத்துவம் தனி நாட்டு கோரிக்கையினை கைவிட்டு ஒன்றிணைந்த இலங்கைக்கு சிங்கள அரசுடன் அதிகாரப்பகிர்விற்கு பேச்சு நடத்துகின்றது. அதற்கான அங்கீகாரம்தான் தேர்தல் முடிவு என கூறுகின்றதா?

அல்லது கூட்டமைப்பினை தமிழர் தலைமையாக ஏற்று அவர்களை வைத்துக்கொண்டு இலங்கை அரசாங்கத்திற்கு நெருக்கடிகளை கொடுக்க நினைக்கின்றார்களா?

இவ்வாறு பலதரப்பட்ட கேள்விகளை மேற்குறித்த வர்ணனைகள் மூலம் எழுகின்றன. எது எப்படி இருப்பினும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பிற்கு சர்வதேசம் மறைமுகமாக சில அங்கீகாரத்தினை கொடுத்திருக்கின்றது. மறுவளமாக கூட்டமைப்பிற்கு பொறுப்பு அதிகரித்துள்ளது. பொறுப்புக்களை எப்படி முகாமை செய்யப்போகின்றார்கள் என்பதற்கு கடந்த காலத்தினை விட எதிர்கால நடவடிக்கைகளே பதில் கூறவேண்டும்.

.

அனைத்துலக ஆதரவு என்பது ஒரு ஆயுதம் அந்த ஆயுதத்தினை பயன்படுத்தி சிங்கள அரசின் ஆக்கிரமிப்பினை தணிக்க முயற்சி செய்யுமா கூட்டமைப்பு?

நன்றி ஈழ நாதத்திற்காக யாழ் சுதா

ஈழ நாதம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.