Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் மக்கள் வழங்கிய ஆணைக்கு மாறாக கூட்டமைப்பின் நிலைப்பாடு

Featured Replies

தமிழ் மக்கள் வழங்கிய ஆணைக்கு மாறாக கூட்டமைப்பின் நிலைப்பாடு! -

தமிழ் தேசிய மக்கள் முன்னணி குற்றச்சாட்டு!!

உள்ளுராட்சி சபைத் தேர்தலில் தமிழ் மக்கள் வழங்கிய ஆணைக்கு மாறாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்பட்டு வருவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளருமான எஸ்.கஜேந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று (29.07.11) வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அத்தகைய நடவடிக்கைகளை முறியடிக்க தாயகத்திலும் புலத்திலும் வாழும் தமிழ் மக்கள் முன்வரவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

'தமிழர் தாயகப் பிரதேசத்தில் கடந்த 23ஆம் திகதி இடம்பெற்ற உள்ளுராட்சி சபைத் தேர்தலில் சிங்கள பௌத்த பேரினவாதக் கட்சிகளையும் அதன் துணைக் குழுக்களையும் தமிழ் மக்கள் நிராகரித்துள்ளதன் மூலம் தமிழ்த் தேசத்தின் தனித்துவத்தினை வெளிப்படுத்தியுள்ளனர்.

அத்துடன் தமிழ்த் தேசம் வேறு - சிங்கள தேசம் வேறு என்பதனையும் மீளவும் வலியுறுத்தியுள்ளனர். இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பாக இரண்டு தேசங்களும் வேறுபட்டது என்ற அடிப்படையிலேயே சர்வதேச சமூகம் தமிழ் மக்களது இனப்பிரச்சியையை அணுக வேண்டும் என்பதே தமிழ் மக்களது விருப்பம் என்பதனையும் வெளிப்படுத்தியுள்ளனர்.

அனைத்துத் தமிழ் மக்களும் ஒன்றிணைந்து ஒற்றுமையாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்தால்

சிறிலங்கா அரசு மீது சுமத்தப்பட்ட போர்க்குற்றச்சாட்டுக்கள் விசாரிக்கப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்படல்,

தமிழ் மக்களது சுயநிர்ணய உரிமை அடிப்படையிலான அரசியல் தீர்வை அடைதல்,

தமிழர் தாயகத்தில் இடம்பெறும் நிலப்பறிப்புக்கள் இராணுவ மயமாக்கல் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டு மக்கள் குடியிருப்புக்களில் இருந்து படையினர் வெளியேறல்

போன்ற நிலைப்பாடுகளை ஒருமித்த குரலில் சர்வதேச சமூகத்திற்குக் கூறுவதாக அமையும் என்று தமிழ் மக்கள் உறுதியாக நம்பியதனால் கடுமையான இராணுவ நெருக்கடிகளையும் வாழ்வியில் நெருக்கடிகளையும் சந்தித்தவாறு ஒற்றுமையாக ஓரணியில் திரண்டு ஏனைய பேரினவாதக் கட்சிகளையும் நிராகரித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்தனர்.

ஆனால் கூட்டமைப்பினர் தாம் கொள்கையில்உறுதியாக இருப்பது போன்று வார்த்தைகளில் மட்டும் வீர வசனங்களைப் பேசி தமிழ் மக்களை நம்பவைத்து வாக்குகளைப் பெற்றுக் கொண்டனர். தேர்தலின் பின்னர் தமது சுயரூபத்தை வெளிப்படுத்தி தமிழ் மக்களது அரசியல் அபிலாசைகளுக்கு முற்றிலும் எதிராக செயற்பட்டு வருகின்றனர்.

தேர்தல் முடிவுகள் வெளியான மறுநாள் 24-07-2011 அன்று புலம்பெயர் தமிழ் மக்கள் மத்தியில் உரையாற்றிய கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் புலம்பெயர் தமிழ் மக்களை சோர்வடையச் செய்து அவர்களால் போர்க்குற்ற விசாரணையை வலிறுத்தி சர்வதேச அளவில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளை கைவிடச் செய்யும் வகையில் கருத்துரைத்துள்ளதுடன் சிங்கள மக்கள் தருவதற்குத் தயாராக உள்ளதையே அரசியல் தீர்வாக தமிழர்கள் முன்வைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்துள்ள கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள் பிரிக்கப்பட்டாத ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படல் வேண்டுமென தமிழ் மக்கள் தமக்கு ஆணை வழங்கியுள்ளனர் என்று கூறியுள்ளார்.

தேர்தலுக்குப் பின்னர் இரா.சம்பந்தன் மற்றும் எம்.எ.சுமந்திரன் ஆகிய இருவரும் சுயநிணர்ய உரிமை தமிழ்த் தேசம் ஆகிய அடிப்படைக் கொள்கைகளை கைவிட்டு கருத்துக்களை வெளியிட்டுள்ளமையை முக்கியமாகக் கருத்தில் கொள்ள வேண்டும்.

அத்துடன் இவர்கள் இருவரதும் கருத்துக்களை தொகுத்து நோக்கும் போது தமிழ் மக்களால் ஏகோபித்த அடிப்படையில் கடந்த 20 ஆண்டுகளாக நிராகரிக்கப்பட்டு வந்த 13வது  திருத்தச் சட்டத்தின் மூலம் கொண்டுவரப்பட்ட மாகாண சபையை அங்கீகரித்து தமிழர்களை சிறுபான்மை இனம் என்று ஏற்றுக்கொண்டு ஒற்றையாட்சி அரசியல் அமைப்புக்குள் அடிமைகளாக வாழும் நிலைக்குள் தள்ள திரைமறைவு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பதே உண்மையாகும்.

சிறிலங்கா அரசாங்கத்துடனும் சர்வதேச சமூகத்தினருடனும் தமிழ் மக்களின் பெயரால் மேற்கொள்ளப்படும் பேச்சுவார்த்தைக்கு திரு.இராசம்பந்தன், எம்.எ.சுமந்திரன் ஆகிய இருவருமே தலைமை தாங்குகின்றனர் என்பதுகு றிப்பிடத்தக்கது.

தமிழ் தேசத்தின் இறைமைக்கான போராட்டத்தில் எமது மக்களும் இளைஞர்களும் செய்த தியாகங்களையும் சந்தித்த இழப்புக்களையும் விலை பேசும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகள் அமைந்துள்ளன.

அதாவது இனப்படுகொலை புரிந்தவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள போர்க்குற்றச்சாட்டுக்களுக்கான விசாரணையை தமிழ் மக்கள் விரும்பவில்லை என்றும் சிங்கள மக்கள் தருவதற்குத் தயாராக உள்ள எத்தத் தீர்வையும் பெற்றுக் கொண்டு வாழத் தயாராக உள்ளனர் என்ற செய்தியே கூட்டமைப்புத் தலைவர்களின் கருத்துக்களின் தொகுப்பாக சர்வதேச சமூகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்களை நிரந்தர அடிமைகளாக்கும் வகையில் தமிழ் மக்களது நலன்களுக்கு எதிரான மேற்படி தலைவர்களது கருத்துக்களை தமிழ் தேசிய மக்கள் முன்னணி வன்மையாகக் கண்டிக்கின்றது.

புலம்பெயர் தமிழ் மக்கள் சர்வதேச சமூகத்துடன் இணைந்து சிறிலங்காவில் இடம்பெற்றதாகக் கூறப்பட்டுள்ள போர்க்குற்றங்களை விசாரிப்பதற்காக மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை முறியடித்து சிறிலங்கா அரசாங்கத்தை காப்பாற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேற்கொள்ளும் சதிமுயற்சியை தாயகத்திலும் புலத்திலும் வாழும் தமிழ் மக்கள் புரிந்து கொண்டு இவர்களது சதியை முறியடித்து விடுதலை நோக்கிய பாதையில் உறுதியாகப் பயணிக்க வேண்டும் எனக் கோருகின்றோம்.

அத்துடன் தமிழ் மக்கள் மீது புரியப்பட்ட இனப்படுகொலை தொடர்பாக சர்வதேச பக்கச் சார்பற்ற விசாரணையை சர்வதேச சமூகம் மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தியும் தமிழ் தேசத்தின் இறைமை அங்கீகரிக்கப்பட்ட அடிப்படையில் ஒரு நாட்டுக்குள் இரண்டு தேசங்கள் என்ற அரசியல் தீர்வை அடைவதற்காகவும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தாயக மக்களுடனும் புலம்பெயர் தமிழ் மக்களுடனும் இணைந்து தொடர்ச்சியாக ஐனநாயக வழியில் செயற்படும் என்றும் உறுதியளிக்கின்றது' என இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://ponguthamil.com/news/contentnews.asp?sectionid=1&contentid={06C8DE47-FCDC-4E1E-8264-065E49EA21FC}

போர்க்குற்ற விசாரணையால் தமிழர்களுக்க என்ன வடிவத்தில் நன்மை கிடைக்கும் என்பதை இவர்கள் சொல்லாமல் விடுகின்றார்கள். போர்க்குற்ற விசாரணை அவசியம். அது சிங்கள ஆட்சியாளர்களை உலக அரங்கில் சிரத்தைகளுக்குள் ஆளாளாக்கும் நிகழ்ச்சி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.