Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Protest against Lankan delegation

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Protest against Lankan delegation

New Delhi: AIADMK members in the Lok Sabha Monday shouted slogans to protest the presence of Sri Lankan delegates, led by Speaker Chamal Rajapaksa, who were in the house as special foreign guests.

AIADMK members, led by S. Semmalai and Munisamy Thambidurai, shouted "shame, shame" as soon as Speaker Meira Kumar began reading out her welcome message to Rajapaksa and his other colleagues, including Sri Lankan ministers, sitting in the special box to the left of her.

Almost all nine members of Tamil Nadu's ruling party were heard shouting slogans against the Sri Lankan government as MPs from other parties thumped their desks to welcome the nine-member visiting delegation.

P. Lingam, the Communist Party of India (CPI) MP from Tenkasi in Tamil Nadu, also attempted to join the protests over alleged human rights abuses against Sri Lankan Tamils in the island nation. He was seen walking down the aisle towards the speaker's podium but was stopped by his party leader Gurudas Dasgupta, who asked him to go back to his seat.

A visibly irate Meira Kumar rebuked the Tamil MPs and asked them to show some courtesy to the honoured guests.

The Sri Lankan delegation is on a five-day official visit to India on an invitation by the speaker. (NDTV)

http://www.dailymirror.lk/news/12712-protests-against-lankan-delegation-in-ls.html

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்திய பாராளுமன்றம் இன்று கூடுகிறது. இலங்கை பிரச்சனையை எழுப்பத் திட்டம்?

01 ஆகஸ்ட் 2011 சமல் ராஜபக்சேவை இந்தியா வரவேற்றது ஏழு கோடி தமிழ் மக்களின் மனங்களையும் புண் படுத்தி விட்டது- ராமதாஸ்.

தமிழகத்தில் நாற்பது நாடாளுமன்ற உறுப்பினர்களுமே இதை எதிர்ப்பார்க்கவில்லை. மழைக்கால கூட்டத்தொடரின் முதல் மக்களவை, மாநிலங்களவை என இரண்டு அவைகளுக்குமே வந்த தமிழக எம்பிக்களுக்கு அது கொஞ்சம் அதிர்ச்சியாகவே இருந்தது. இரு இந்திய அரசின் விருந்தாளிகளாக இலங்கை அரசின் சமல் ராஜக்சே தலமையிலான குழுவினரைக் கண்டு அதிர்ந்து போனார்காள். உறுப்பினர்காள் திமுக எம்பிக்களைத் தவிர்த்து அனைத்துக் கட்சி எம்பிக்களும் எதிர்ப்புத் தெரித்தனர். இந்நிலையில் இந்திய அரசு விருந்தாளியாக இலங்கை ஆட்சியாளர்களை அழைத்த விவகாரம் தமிழகத்தில் கடும் எதிர்ப்பைக் கிளப்பியிருக்கிறது. இது பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,இலங்கையில் பல்லாயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்களை கொன்று குவித்த மகிந்தா ராஜபக்சேவின் சகோதரரும், அந்நாட்டு நாடாளுமன்ற சபாநாயகருமான சமல் ராஜபக்சே தலைமையிலான இலங்கை நாடாளுமன்ற குழுவினர் இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் அழைக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டுள்ளனர்.இலங்கையில் நடைபெற்ற போரின்போது 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்களிளை ஈவு இரக்கமின்றி கொன்று குவித்ததற்காக இலங்கை அரசு மீது போர்க்குற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். ஆனால், அவர்களின் உணர்வுகளை சற்றும் மதிக்காமல், போர்க்குற்றவாளிகளாக அறிவிக்கப்பட வேண்டியவர்களுக்கு நாடாளுமன்றத்தில் கவுரவம் அளித்த இந்தியாவின் செயல் கண்டிக்கத்தக்கது. இனப்படுகொலையை நடத்திய ராஜபக்சேவையோ அல்லது அவரது நாட்டின் தலைவர்களையோ உலகின் எந்த நாடும் வரவேற்பதில்லை. இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சே இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் உரையாற்றச் சென்றபோது, அங்குள்ள தமிழர்களின் எதிர்ப்பை அடுத்து அவரை பல்கலைக்கழகத்திற்குள் அனுமதிக்க இங்கிலாந்து மறுத்துவிட்டது. அதுமட்டுமின்றி ராஜபக்சே எவ்வளவோ முயன்றும் அவரை சந்திக்க இங்கிலாந்து தலைவர்கள் மறுத்துவிட்டனர். இதனால் அவர் பாதியிலேயே அங்கிருந்து வெளியேற நேரிட்டது. அதேபோல் ராஜபக்சே அமெரிக்கா சென்றால் அவரைக் கைது செய்ய அந்நாட்டுடு நீதிமன்றமும், காவல்துறையும் காத்திருக்கின்றன.

இலங்கை அரசுக்கு எதிராக உலக நாடுகள் இவ்வளவு கடுமையான நிலைப்பாட்டை மேற்கொண்டுள்ள நிலையில், தமிழர்களின் நலன்களை பாதுகாக்க வேண்டிய தார்மீக கடமை கொண்ட இந்திய அரசு மட்டும் இலங்கை அதிபரையும், அந்நாட்டு தலைவர்களையும் மாதத்திற்கு ஒருமுறை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கிறது. இலங்கை தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தமிழத்திற்கு வந்தபோது வானூர்தி நிலையத்திலேயே தடுத்து திருப்பி அனுப்ப்பட்டனர். ஆனால், சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்களை மட்டும் இந்திய அரசு வரவேற்று உபசரிப்பது தமிழகத்திலுள்ள 7 கோடி தமிழர்களின் உணர்வுகளை புண்படுத்துவதாக உள்ளது. ஈழத்தமிழர்களின் நலன்களைப் பாதுகாப்பதில் இந்திய அரசுக்கு உண்மையிலேயே அக்கறை இருக்குமானால் கொலைக்குற்றம் சாற்றப்பட்ட சிங்களத் தலைவர்களை இந்தியாவுக்கு அழைப்பதை நிறுத்திவிட்டு, ராஜபக்சே உள்ளிட்டோர் மீது போர்க்குற்ற விசாரணையை நடத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

2ஆம். இணைப்பு:- சமல் ராஜபக்ஸவுக்கு இந்திய பாராளுமன்றத்தில் கடும் எதிர்ப்பு

இந்திய பாராளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இந்த கூட்டத்தொடரில் இந்திய அரசின் அழைப்பின் பேரில் இலங்கை பாராளுமன்ற சபாநாயகர் உள்ளிட்ட சமல் ராஜபக்ஸ உள்ளிட்ட சில இலங்கை எம்பிக்கள் கலந்து கொண்டனர். தமிழகத்தின் திமுகஇ அதிமுக கட்சிகள் இலங்கை விவாகரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்பவிருந்த நிலையில் அவையின் சிறப்பு விருந்தினர்களாக இலங்கை சபாநாயகர் அமைந்திருந்ததோடு அவர்களை வரவேற்று பாராளுமன்ற சபாநாயகர் மீராகுமார் பேசினார்.

மீராகுமாரின் வரவேர்புரையிடையே இடைமறித்த அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள். மீராகுமாருக்கு எதிராகவும்இ இலங்கையில் இருந்து வந்திருந்த சமல்ராஜபஸவுக்கு எதிராகவும் கடும் கோஷங்களை எழுப்பினார்கள். இதனால் மீராகுமாரால் பேச முடியாமல் போனது.

உறுப்பினர்களை அமைதியாக கடும் தொனியில் கண்டித்த மீராகுமார் விருந்தினர்களை உபசரிக்கும் மரபு நமது இந்திய மரபு. அவர்கள் நமது விருந்தினர்கள். எனவே அமைதியாக அமருங்கள் என்று கடுந்தொனியில் எச்சரிக்கை செய்தார்.

பின்னர் அதிமுக உறுப்பினர்கள் அமைதியாக இருந்தனர். இந்த நிகழ்வின் போது திமுக உறுப்பினர்கள் அமைதியாக இருந்தனர்.

இலங்கைக்கு எதிராக பாராளுமன்ற தீர்மானம் தேவை- திமுக.

ஸ்பெக்ட்ரம், விலைவாசி உயர்வு, உள்ளிட்ட பல் வேறு பரபரப்புகளுக்கிடையில் மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று துவங்குகிறது. பிஜேபி கட்சியின் சுஷ்மா ஸ்வராஜ் தமிழக மீனவர் பிரச்சனையை பாராளுமன்றத்தில் எழுப்ப நோட்டிஸ் கொடுத்துள்ளார். அதிமுக தலைவர் ஜெயலலிதா இலங்கைத் தமிழர் பிரச்சனை, கச்சத்தீவு, மீனவர் மீதான தாக்குதல் பிரச்சனைகளை எங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ரறத்தில் எழுப்புவார்கள் என்று தெரிவித்திருந்த நிலையில், நேற்று நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் கலந்து கொண்ட திமுக எம்பி டி.ஆர். பாலு இலங்கையின் நடைபெற்ற இறுதிப்போரின் போது போர் விதிமீறல் நடந்திருப்பதாக ஐநா நிபுணர் குழு அறிக்கை அறிக்கை வெளியிட்டுருக்கும் நிலையில், இலங்கை மீது பொருளாதாரத் தடை கொண்டு வரும்படி பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்பதோடு, தொடர்ந்து தாக்குதலுக்குள்ளாகும் மீனவர் பிரச்சனை தொடர்பாகவும் முடிவுகள் எடுக்க வேண்டும் இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் எங்கள் கட்சி உறுப்பினர்களும் கேள்வி எழுப்புவார்கள் என்று தெரிவித்தார்.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/64990/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

மேற்குலக நாட்டு பாராளுமன்றங்களுக்குக்கு, ஸ்ரீலங்கா பாராளுமன்ற உறுப்பினர்கள் செல்ல முடியாத நிலையில்...

பக்கத்திலை இருக்கிற இந்தியா, பாகிஸ்தான் போன்ற பிச்சைக்காரர்களின் பாராளுமன்றத்துக்குத்தான் விருந்தினராக போகக் கூடியதாக உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

என்னதான் எதிர்ப்பு தொரிவிச்சாலும் சூடு சுரனை இல்லாதவர்கள் போய் கொண்டே இருப்பார்கள், இவர்களின் வீசி எறியும் எலும்பு துண்டிற்கு ஆட்கள் டில்லியில் இருக்கும்வரை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.