Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிழக்கில் உபத்திரபம் - வடக்கில் வஞ்சகம் - மேற்கில் செல்வம் - தெற்கில் அதிகாரம்

Featured Replies

மகிந்த ராஜபக்ச வேலணை மக்களின் உறவினன், கருணா சிங்கள மக்களின் உறவினன், டக்ளஸ் சமூக வேறுபாடுகளின் தலைவன். இவர்கள் தான் கிழக்கின் உதயத்தையும், வடக்கில் வசந்தத்தையும் கொடுக்கிறார்கள். அவ்வளவிற்கு ஈழத்தமிழர் இழிவானவர்களோ அல்லது மடையர்ககளோ அல்ல.

கருணாவிற்கு மது, மங்கை - டக்ளசிற்கு சாதிவெறி, பணவெறி, சமயவெறி, ஈழத்தமிழ் மக்களுக்கு விடுதலைத் தாகம். மகிந்த, கருணா, டக்ளஸ் இவர்களின் வெறிகள் ஒரு போதும் விடுதலை தாகத்தை தணிக்க முடியாது. ஈழத்தமிழரின் ஆயுதப் போராட்டம் தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ தோல்வி கண்டிருக்கலாம். ஆனால் மக்களின் உணர்வுகள் ஆயுதப் போராட்ட காலத்திலிருந்ததைவிட தற்பொழுது பன் மடங்கு அதிகரித்துள்ளது மட்டுமல்லது, இவ் மும்மூர்த்திகளின் ஆட்டம் நிரந்தரமற்றது என்பதையும், ஈழத்தமிழ் மக்கள் மனதில் தெளிவாகக் கொண்டுள்ளனர்.

இன்னும் சில வருடங்களில் மகிந்த சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திலும், கருணா என்கிற முரளிதரன் இலங்கை, பிரித்தானிய நீதிமன்றங்களிலும், டக்ளஸ்இலங்கை, இந்திய நீதிமன்றங்களிலும் குற்றவாளிக் கூண்டுகளில் நிற்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்பதை மும்மூர்த்திகளும் தெரிந்திருக்க மாட்டார்கள்.

கருணாவும், டக்ளசும் தமது தனிப்பட்ட சுகபோகங்களுக்காக - ஈழத் தமிழினத்தின் அடிப்படை உரிமைகள், சுதந்திரம் ஆகியவற்றை சர்வதிகாரி ராஜபக்ச குடும்பத்தினருக்கு தாரை வார்த்து கொடுத்து இச் சர்வதிகாரிகளை வடக்கு கிழக்குக்கு மூலை முடுக்கெல்லாம் கூட்டிச் சென்று இவர்களை வரவேற்பதும், மாலை போடுவதும் கோவில்களில் பூசைகளும் பால் அபிசேகம் செய்வதால் தமிழினத்திற்கு கிடைக்கும் நன்மை என்ன?

கருணா டக்களசின் அடிமைத்தனம்

சிங்கள படையினர் மிருகத்தனமாக பெண்களை பாலியல் வல்லுறவுக்கு ஈடுபடுத்தவும், சித்திரவதை செய்யவும், கொலை செய்யவும், சிங்களக் குடியேற்றம், பௌத்த மயம், சிங்கள மயம் ஆகியவை எந்த நீதி விசாரணையுமின்றி தமிழர் தாயகத்தில் நடைபெறுகின்றன. இவற்றில் கருணா டக்ளசின் பங்கு என்ன? கலை, கலாச்சாரம் மிகவும் கவனமாக பேணப்பட்டுவந்த தமிழர் தாயகத்தில், இன்று இடம்பெறும் கலாச்சார சீர்கேட்டிற்கும், சிங்களப் படைகளின் காமவெறியாட்டத்திற்கும் என்றோ ஒரு நாள் கருணாவும், டக்ளசும் ஈழத்தமிழ் மக்களுக்கு பதில் சொல்லியாக வேண்டும்.

மகிந்தவையும், அவரது குடும்ப அரசையும் தினமும் புகழ்ந்து துதிபாடும் இவர்கள், ஐ. நா. வினால் வெளியிடப்பட்ட அறிக்கையில,; 40 ஆயிரம் பொது மக்கள் சிறீலங்காப் படைகளால் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள் எனக் குற்றஞ் சாட்டபட்டதையே நிராகரித்துள்ளார்கள். இதில் வேடிக்கையான விடயங்கள் இவர்கள் இருவரதும் ஐ. நா பற்றிய கூற்றுக்கள். வெட்கம்! கருணாவை நம்பும் மகிந்தவிற்கு, இராணுவத்திற்கோ, சிறீலங்கா அரசிற்கோ கருணாவின் சரித்திரத்தை ஒழுங்காக ஆராய்ந்து எதிர்காலத்தில் இவர் என்ன செய்வார் என்பதை அளவிட முடியாதகவர்களவுள்ளனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் 1983ம் ஆண்டு இணைந்த கருணா முக்கிய பதவிகள் வகித்து தமிழீழத் தேசியத் தலைவரின் நம்பிக்கையைப் பெற்றவர், பெண் ஆசை, பொன் ஆசை காரணமாக குத்துக்கரணம் அடித்து இயக்கத்தில் தனக்கு தெரிந்த இரகசியங்களையே காட்டிக்கொடுத்த இவர் உலகில் யாருக்கும் நம்பிக்கைக்கு உரியவராக இருக்க முடியாது.

"ஆலை இல்லா ஊருக்கு இலுப்பம் பூ சர்க்கரை’’

சாத்திர ரீதியாக கூறுவதானால் பிள்ளையானுக்கு இப்பொழுது ‘‘வெள்ளி திசையாக’’ இருக்க வேண்டும்! எங்கையோ ஒரு மூலையில் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பிக் கொண்டிருந்தவர், இன்று கிழக்கின் உதயத்தின் முதலமைச்சர், அதவாது கிழக்கின் முதலமைச்சர். இதை தான் கூறுவார்கள் ‘‘ஆலையில்லா ஊருக்கு இலுப்பம் பூ சர்கரை’’ என்று. இப்படியாக சிலர் புலம் பெயர் வாழ்விலும் இப்பொழுது திடீரென உதயமாகியுள்ளார்கள். என்ன செய்வது, தமிழீழ மக்களின், விசேடமாக புலம் பெயர் வாழ் மக்களின் துர்பாக்கிய நிலை இது தான். டக்களசைப் பொறுத்தவரையில், ராஜபக்சவே சொல்லி உள்ளார் ‘‘டக்ளசுக்கு சல்லி எண்டால் போதும’’ அவர் எதுவும் செய்வார்.

இப்பொழுது தனது தனிப்பட்ட செல்வாக்கை வளர்ப்பதற்காக சாதி, சமயம் பிரச்சினைகளை யாழ் குடாவில் தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கிறார்.

இவர்கள் யாவரும் இன்றுவரை தமிழினத்திற்கு என்னத்தை உருப்படியாகச் செய்துள்ளார்கள்? மனம் மரியதை கெட்ட இப்படியான வாழ்க்கை இவர்கள் வாழ வேண்டுமா?

கிழக்கின் உதயமாம்? அங்கு என்ன உதித்துள்ளது. அங்கு ராஜபக்சவின் சிற்றரசர்களான கருணா, பிள்ளையான் போன்ற கூலி படைகளினால் உபத்திரம் தான் உதயமாகி உள்ளது.

வடக்கில் வசந்தமாம்? இந்த அடிமை வாழ்க்கை வாழும் டக்ளசினால் வடக்கு வாழ் மக்களுக்கு எதை கொண்டுவர முடியும்? வடக்கிலும், கிழக்கிலும் நடைபெறும் உபத்திரமும் வஞ்சகமும் இவர்களுக்கு உதயமும் வசந்தமாகவும் தெரிகிறது!

சிறீலங்காவினால் பொருளாதாரம்

மிக நீண்ட காலமாக சிறீலங்காவினால் பொருளாதார ரீதியாக ஏதோ இலாபம் அடைய முடியுமானால் அது மலையக தமிழ் மக்களின் வியர்வை, கடும் உழைப்பு, விடாமுயற்சியால் கொண்டுவரப்பட்ட செல்வமான – தேயிலை, இறப்பர், கொக்கோ ஆகியவற்றினலே தவிர, ராஜபக்ச பரம்பரையால் உருவாக்கப்பட்டவை எதுவம் அல்ல.

வடக்கு கிழக்கு மேற்கை அடக்கி ஆளுவதற்கான ஆட்சிதான் தெற்கில் உள்ளதே தவிர எந்தவித கடும் உழைப்போ, விடாமுயற்சியோ, வியர்வைசிந்தி உழைக்கும் பக்குவ மனேநிலையோ அங்கு கிடையாது.

ஜெயலலிதாவை வரவேற்கும் அமெரிக்காவிற்கு ராஜபக்சா வேண்டா விருந்தாளி

இந்த ராஜபக்சாக்களை, டக்ளசையும், கருணா, பிள்ளையான் ஆகியோரை யார் உலகில் தேடுகிறார்கள், அன்புடன் அழைக்கிறார்கள் என நாம் பார்ப்போமானால் அது நிட்சயமாக சில நாடுகளுடைய நீதிமன்றங்களும், சர்வதேச குற்றவியல் நீதிமன்றங்களுமே!

பல தடவை அமெரிக்காவிற்கு சென்ற ராஜபக்சவை எத்தனை தடவை அமெரிக்க அரசாங்கம் உத்தியோக பூர்வமாகவோ நட்பாகவோ அழைத்துள்ளது? அமெரிக்கா, பிரித்தானியா, ஐரோப்பா போன்ற நாடுகளுக்கு ஒரு அழையா விருந்தாளியாகவே ராஜபக்ச சென்று வந்தாh,; அதற்கும் இன்று முற்றுப் புள்ளி வைக்கப்பட்டுவிட்டது.

இன்று மூன்றாவது தடவையாக தமிழ்நாட்டின் முதலமைச்சரான செல்வி ஜெயலலிதாவை அமெரிக்காவிற்கு விஜயம் செய்யுமாறு, சென்னைக்கு விஜயம் செய்த அமெரிக்காவின் ராஜாங்கச் செயலாளார் திருமதி கிலாரி கிளிங்டன் அழைப்பு விடுத்துள்ளார். ஒரு மாநில முதலமைச்சருக்கு உலகில் உள்ள மரியாதை கூட ஒரு நாட்டின் ஜனாதிபதியான ராஜபக்சவிற்கு இல்லை என்பதை இவருக்கு சாமரம் வீசும் சிங்கள அடிமைகளான டக்ளஸ், கருணா, பிள்ளையான் போன்றோர் விளங்கிக் கொள்வார்களா?

ச. வி. கிருபாகரன், பிரான்ஸ்

http://www.tamilkathir.com/news/5178/58//d,full_article.aspx

'ராஜபக்சவிற்கு சாமரம் வீசும் சிங்கள அடிமைகளான டக்ளஸ், கருணா, பிள்ளையான் போன்றோர் விளங்கிக் கொள்வார்களா?"

- இவர்கள் 'எப்படியும் வாழலாம்' என வாழும் வாழ்க்கையை விட கேவலமான வாழ்க்கை வாழ்பவர்கள்

- மகிந்தர் இவர்களை இறுதியில் காட்டிக்கொடுக்க, இவர்கள் அவனை காட்டி கொடுப்பார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

'ராஜபக்சவிற்கு சாமரம் வீசும் சிங்கள அடிமைகளான டக்ளஸ், கருணா, பிள்ளையான் போன்றோர் விளங்கிக் கொள்வார்களா?"

- இவர்கள் 'எப்படியும் வாழலாம்' என வாழும் வாழ்க்கையை விட கேவலமான வாழ்க்கை வாழ்பவர்கள்

- மகிந்தர் இவர்களை இறுதியில் காட்டிக்கொடுக்க, இவர்கள் அவனை காட்டி கொடுப்பார்கள்

பதிவிற்கு நன்றி Komakan, நிஐத்தை எழுதியுள்ளார்,

Akootha, ஈனப் பிறவிகள் என்பது இவர்களைதானா???

இது எல்லாம் அவர்களுக்கு எருமை மாட்டில் பெய்யத மழை மாதிரிதான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.