Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போலிச் சாமியாரின் மனச்சாட்சி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒளி வீச்சின் கோணத்தைப் பொறுத்து சில நேரங்களில் நிஜங்களை விட நிழல்கள் அதிகமாக வளர்ந்து விடுவதுண்டு. அதுபோல்தான் இவரும். இவர் எப்போதும் நிழல் தான். இவர் சார்ந்திருந்த நிஜங்கள் மாறிக்கொண்டே இருக்கும். நிழலான இவரோ வளர்ந்துகொண்டே இருப்பார். அரசியலுக்கு கொஞ்சமும் சம்பந்தமே இல்லாமல் ஆட் சியில் இருந்தவர்களுக்கெல்லாம் நெருக்கமாக வலம் வந்தவர், இப்போது கைதுக்கு பயந்து தனியறையில் கிடக்கிறார். அவருடைய மனசாட்சியின் வாக்குமூலம் உங்களுக்காக...

‘‘கடந்த ஆட்சியில் நான் விமானத்திலேயே பறந்து கொண்டிருந்தேன். ஆனால், இப்போது காரில் வெளியில் செல்லக்கூட பயமாக இருக்கிறது. எந்த ரெய்டில் மாட்டுவேன்? எந்த கேஸில் சிக்குவேன்? திகாரா? புழலா? என்ற அச்சமே என்னை ஆட்டி வைத்துக் கொண்டிருக்கிறது.

ஆனால் நான்கு மாதம் முன்புவரை உலகின் எல்லா நாடுகளுக்கும் சென்று சுற்றி வந்தேன். இப்போது தனிமையில் இருந்தபடி என் பழைய வாழ்க்கையை அசை போட்டுப் பார்க்கிறேன். இந்தியாவின் எல்லையாக தமிழகத்தின் ஓரத்தில் ஒட்டிக்கொண்டிருக்கும் மாவட்டத்தில் வறுமையான குடும்பத்தில் பிறந்தவன் நான். என் பெற்றோர் இந்துக்களாக இருந்து கிறிஸ்துவ மதத்திற்கு மாறியவர்கள். சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்ட குடும்பம் என்றாலும், ஊரிலிருந்து ரொம்ப தூரத்தில் இருந்த அரசு தொடக்கப் பள்ளியில் என்னை சேர்த்துவிட்டார்கள். அவ்வளவு தூரம் நடந்து சென்றுதான் ஆரம்பப் பள்ளியையும், உயர்நிலைப் பள்ளியையும் முடித்தேன். எனது பெற்றோர் மிகவும் பக்தியாக இருப்பார்கள். எப்போதும் ஜெபம் செய்வார்கள். என்னையும் ஜெபத்திற்கு அழைத்துச் செல்வார்கள். நான் அவர்களுக்காக ஜெபத்தில் கலந்து கொள்வேனே தவிர, என் மனம் இறைவனிடத்தில் ஒருபோதும் ஒன்றியதே இல்லை. ஆனால், என் பெற்றோரோ என்னை சாமியாராக்க முடிவு செய்தனர். பி.ஏ. முடித்த தும் சாமியார் பயிற்சிக்கு அனுப்பி வைத்தார்கள். மூன்று ஆண்டுகள் உதவியாளராக இருந்து முப்பது வயதில் நான் என் சொந்த ஊரிலேயே பங்குத் தந்தையாக்கப்ப ட்டேன்.

சாதாரணமாகவே சாமியாராகிவிட்டால், பொறுமை, நேர்மை, அமைதி, எளிமை, அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுதல் போன்ற குணங்கள் வந்துவிட வேண்டும். ஆனால், இவை எதுவுமே எனக்கு பிறவியிலிருந்தே இல்லை என்பதால், நான் நல்ல சாமியாராக இருக்க முடியாமல் போய்விட்டது. பின்னாளில் ஒருமுறை பத் திரிகையாளர் சந்திப்பில், ‘நான் ஒரு நீக்கு போக்கான பாதிரிதான்’ என்று நானே ஒப்புக்கொண்டேன். காரணம், என் நடவடிக்கைகள் அப்படி. நான் சாமியாரானதுமே எனது சபலபுத்தி என்னைச் சுத்தி வந்து கொண்டேயிருந்தது. அப்போது ஒரு ஜாக்குவை லிங்க் எடுத்து மடக்கிப் போட்டுக்கொண்டேன். இது அங்கு ஒரு பிரச்னையாக வெடிக்க, என்னை பங்குத் தந்தையிலிருந்து நீக்கி வேறு பணிகளுக்குப் பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்தது நிர்வாகம்.

எனவே, மதம் தொடர்பான ஒரு ரேடியோ ஸ்டேஷனை அமெரிக்கத் தொடர்புகள் நடத்திவர, அதிலே தமிழ் விவகாரங்களுக்காக என்னை நியமித்தார்கள். மணிலாவில் வேலை. இந்த இடத்திலிருந்துதான் என் வாழ்க்கையின் பாதையே மாறத் தொடங்கியது. அப்போது இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களைப் பற்றி அவ்வப்போது ரேடியோவில் நான் பேசத் தொடங்கினேன். இதற்கு உலகம் முழுவதும் இருந்த தமிழர்களின் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது. உலகின் பல நாடு கள், அகதியான தமிழர்களுக்கு உதவ முன்வந்தன. போரில் பாதிக்கப்பட்டு சிதறிப்போன குடும்பங்களைப் பற்றிய செய்திகளை ஒலிபரப்பி சுமார் 4200 குடும்பங்கள் மீண் டும் ஒன்றுசேர நான் காரணமாக இருந்தேன். அதுமுதல் போராளிகள் வட்டாரத்திலும் தமிழ் ஆர்வலர்கள் மத்தியிலும் எனது பெயர் பிரபலமடையத் தொடங்கியது. அந்த நேரத்தில் போராளிகளின் தலைவர் உட்பட பலரின் தொடர்புகள் எனக்குக் கிடைத்தது. அவர்கள் சார்பில் உலக நாடுகள் எங்கும் சுற்றினேன். அவர்கள் தமிழர்களுக்குச் செய்த உதவிகள் எல்லாவற்றிலும் எனது கையாடல்களைச் செய்தேன். இது அவர்களுக்குத் தெரிந்துவிட்டது. அந்த நாட்களில் நார்வேயில் அடிக்கடி ஆயுதச் சந்தை நடக்கும். தமிழ்ப் போராளிகள் இங்கிருந்து ஆயுதங்களை வாங்கியிருக்கிறார்கள். போராளிகள் என்னைக் கழற்றிவிடுவார்கள் என நினைத்து அவர்களை மாட்டிவிட திட்டம் போட்டேன். ஒருமுறை போராளிகளுக்காக நிறைய ஆயுதங்களை வாங்கிக்கொண்டு ஒரு கப்பல் புறப்பட, அதை, தீவில் ஆட்சியில் இருந்தவர்களிடம் போட்டுக் கொடுத் துவிட்டேன். அனைத்து ஆயுதங்களும், பறிமுதல் செய்யப்பட்டன. எனக்கு இடையூறு என்றால் எவ்வளவு பெரிய பொதுநலனாக இருந்தாலும் அழித்துவிடுவேன் என் பதற்கு இதைவிட உதாரணம் இருக்க முடியாது.

அதன்பிறகு உளவுடன் எனக்கு ஏற்பட்ட தொடர்பைத் தொடர்ந்து தீவின் தூதர் ‘சமோசா’வுடன் நான் கூட்டு வைத்துக் கொள்ளையடித்த விவகாரங்களை மறைக்க நான் எவ்வளவோ முயற்சி செய்தும் முடியாமல் போய்விட்டது.

இதற்கிடையில், முன்னாள் சிறுபான்மை சாமியாருக்கும், எனக்கும் நல்ல நெருக்கம் ஏற்பட்டுவிட்டது. அப்போது இசையை ஞானமாக செய்து கொண்டிருந்தவரின் அறிமுகமும் அந்த சாமியார் மூலம் எனக்குக் கிடைத்தது.

சாமியாராக இருந்த காலத்திலேயே எனக்கு இசையில் கொஞ்சம் ஆர்வம் இருந்தது. கிதார், ஆர்மோனியம், தபேலா போன்றவற்றை நான் நன்றாகவே வாசிப்பேன். நான் கண்ணை மூடிக்கொண்டு கிதார் வாசித்தபடி பக்திப் பாடல்கள் பாடினால் பலரும் மயங்கிப் போவார்கள். பக்திப் பாடல்கள் தொடர்பாக இதுவரை ஏழு இசை ஆல்பங்களயும் வெளியிட்டிருக்கிறேன். இவற்றை அறிந்த அந்த ஞான இசையோ என்னோடு ஐக்கியமாகிவிட்டது.

ஒரு வாசகத்தை அவர் இசையில் வெளியிட முடிவு செய்து அதற்காக பல்வேறு முயற்சிகளில் இறங்கினோம். அந்த நேரங்களில்தான் எனது பெயர் எல்லா மட்டத் திலேயும் மிகவும் பிரபலமடையத் தொடங்கியது. வெளிநாடுகளில், பல இடங்களில் அந்த வாசகத்தை வெளியிட்டுவிட்டு, அதன்மூலம் வந்த பல கோடிகளில் பெ ரும்பாலானவற்றை நான் வழக்கம்போல் சுருட்டிக்கொள்ள, இசையும் நானும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு பிரிந்துவிட்டோம்.

அதுவரை வெளிநாட்டில் இருந்து வேலை செய்துவந்த நான், இசையுடன் ஏற்பட்ட தொடர்பிற்குப் பிறகுதான் சென்னையில் சங்கமிக்க வந்தேன். வந்த வேகத்தில் மல் லுக்கட்டுவதில் ஜோராகத் திகழ்ந்த ஒருவரையும் இன்னும் சிலரையும் சேர்த்து மொழி மையம் ஒன்றை ஆரம்பித்தேன்.

அந்த நேரத்தில்தான் சிறுபான்மை சாமியார், வாரிசு ஒருவரை எனக்கு அறிமுகப்படுத்தினார். அப்போது மத்திய அரசு மொழி வளர்ச்சிக்காக நடத்தும் அமைப்பின்மூலம் ஏதாவது செய்யலாம் என்ற எண்ணம் தோன்றியது. எனது ஏமாற்றும் எண்ணம் வள்ளுவரையும் விட்டு வைக்கவில்லை. சங்க இலக்கியம் தொடங்கி திருக்குறள் வரை ஏதேதோ பெயர்களைச் சொல்லி அந்த மத்திய அரசு நிறுவனத்திடம் பல கோடிகளைக் கறந்துவிட்டேன். அதிலும் சிக்கல் ஏற்பட்டுவிட்டது. மத்திய அரசு கொடுத்த பண த்தை நாங்கள் தவறாகப் பயன்படுத்தியிருப்பதாக இப்போது எனக்கு நோட்டீஸ் வந்திருக்கிறது.

இந்த விவகாரங்களுக்கெல்லாம் நான் அந்த வாரிசைத்தான் பயன்படுத்திக் கொண்டேன். வாரிசுடன் நான் நெருக்கமாக இருந்ததை கவனித்த சிறுபான்மை, என்னை கடற்கரையோரத்திலிருந்து காலி செய்யச் சொல்லிவிட்டார். கம்யூனிகேஷனிலிருந்தும் நான் கழற்றிவிடப்பட்டேன்.

சிறுவர்களுக்கு, இளைஞர்களுக்கு, கிழவர் களுக்கு, திருமணமானவர்களுக்கு, விவாகரத்தானவர்களுக்கு என பல்வேறு அமைப்புகளை உருவாக்கினேன். வேலைக்கு வழிகாட்டி பல்வேறு புரோகிராம்களை நடத்தினேன். ஓடினால் மாரத்தான், உட்கார்ந்தால் என் அத்தான் என பல ஊக்குவிப்பு நிகழ்ச்சிகளையும் நான் விட்டு வைக்கவில் லை. இப்படி எதைத் தொட்டாலும் பணம், எதில் இறங்கினாலும் லாபம். இதுதான் எனது தீர்க்கமான கொள்கையாக இருந்தது.

சிமெண்ட் கம்பெனியின் துணையை துணைக்கு வைத்துக்கொண்டு அதற்காக வெளிநாடுகளிலிருந்தும், உள்நாட்டு பெரிய முதலாளிகளிடமும் நிறைய வசூல் செய்தேன். பின்னர் அதேபோல் திருப்பூரில் எக்ஸ்போர்ட் கம்பெனி நடத்திவரும் அந்த சாமியிடம் வாரிசைக் காட்டி ஏமாற்றி பத்துக் கோடியை ஆட்டையைப் போட்டேன். அவர், பணத்தை திருப்பிக் கேட்டபோது, அவருக்கு ‘ஆள்’ செட் பண்ணிட்டேன்.

எங்களின் கடற்கரை நிர்வாகத்தில் எனது அரசியல் செல்வாக்கைப் பார்த்து ஆடிப்போனார்கள். ஒருமுறை மகாபலிபுரத்திற்கு இரண்டு பெண்களை அழைத்துச் சென்ற பெரிய சாமியார் ஒருவர், ரூமில் இருக்கும்போது, போலீஸ் ரெய்டில் மாட்டிக்கொண்டார். உடனே அவர் எனக்கு போன் போட, நான் அவரை அங்கிருந்து மீட்டு வந்தேன். அன்றையிலிருந்து இன்றுவரை அவர் என் பின்னாலேயே வாலாட்டிக் கொண்டிருந்தார். அவர்தான் கடற்கரையோரத்தில் எனக்கெதிராக நடக்கும் சதிகள் குறித்து அவ்வப்போது எனக்கு சொல்லி வருபவர்.

சென்னையில் உண்மையான மதிப்புடைய வீடுகள் கட்டுபவரும், உளவும், நானும் மிகவும் நெருக்கம். யார் மூலம் வேண்டுமானாலும் நான் காரியங்களை சாதித் துக்கொள்வேன். இன்று பரபரப்பாக கைதுகள் நடக்கும் இரண்டு ‘ஜி’ விஷயங்களிலும் எனக்கு கொஞ்சம் தொடர்பு உண்டு. வெளிநாட்டில் எனக்கிருந்த தொடர்புகளைப் பயன்படுத்தி வாத்து கம்பெனி உட்பட பலவற்றில் நான் பகடை ஆடி இருக்கிறேன். அதே நேரத்தில் சிறப்பான மொழிப் பாடலை விற்ற விஷயத்தில் பல கோடிகளைப் பார்த்தேன். இதில் எனக்கும், வாரிசுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுவிட்டது.

எனது மையத்தில் ரெய்டு நடத்தியபோது, என் தொடர்பில் இருந்த மூன்று பெண்களின் இடங்களிலும் தனித்தனியாக ரெய்டு நடந்தது என்றால் என் சபலபுத்திக்கு வேறு சான்றே தேவையில்லை.

எனக்கு தமிழ், ஆங்கிலம், ஜெர்மன், இத்தாலி, ஸ்பானிஷ், மலேயா உட்பட பதினாறு மொழிகள் தெரியும். என்றாலும், போலீஸார் தூக்கிக் கொண்டுபோய் அடித்தால் ‘அம்மா’ என்று தமிழ் மொழியில் அலறுவதைத் தவிர வேறு வழியில்லை.

- குமுதம் ரிப்போட்டர் 07.08.2011

  • கருத்துக்கள உறவுகள்

இவர் அருட் தந்தை ஜெகத் கஸ்பர்.

எனக்கு தமிழ், ஆங்கிலம், ஜெர்மன், இத்தாலி, ஸ்பானிஷ், மலேயா உட்பட பதினாறு மொழிகள் தெரியும். என்றாலும், போலீஸார் தூக்கிக் கொண்டுபோய் அடித்தால் ‘அம்மா’ என்று தமிழ் மொழியில் அலறுவதைத் தவிர வேறு வழியில்லை.

- குமுதம் ரிப்போட்டர் 07.08.2011

:lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இந்த முக்கியமான பதிவு, உலக நடப்பில் இணைக்கப்பட்டு 37 மணித்திய்யலத்தில் 150 ஆட்கள் தான் பார்த்துள்ளார்கள்

இதனை ஊர்ப்புதினத்தில் இணைத்திருந்தால்... பல பேரை சென்றடைந்திருக்கும்.

கந்தப்பு கவனிக்கவும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.