Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராகுல்காந்தியை பிரதமராக்கும் முயர்சிகள் தீவிரம்? அடுத்த பிரதமராக 42 சதம் பேர் ஆதரவு.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ராகுல்காந்தியை பிரதமராக்கும் முயர்சிகள் தீவிரம்? அடுத்த பிரதமராக 42 சதம் பேர் ஆதரவு.

08 ஆகஸ்ட் 2011

கர்ப்பப்பை புற்று நோயால் அவதியுறும் சோனியா காந்திக்கு அமெரிக்க மருத்துவமனையில் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிந்து அவர் தொடர்ந்து அங்கே மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார். இன்னும் மூன்று வாரங்கள் வரை அவர் அங்கே தங்கியிருப்பார் என்று தகவல்கள் சொல்கின்ற நிலையில் பிரதமர் பதவியில் இல்லாவிட்டாலும் சோனியாகாந்திதான் இந்திய அரசை இயக்கிக் கொண்டிருந்தார். அரசை மட்டுமல்ல காங்கிரஸ் கட்சியையும் அவர்தான் இயக்கிக் கொண்டிருந்தார். இப்போதுள்ள சூழலில் கட்சி மிக நெருக்கடியான ஒரு சூழலை சந்திக்கிறது என்றும், ஆகவே சோனியா அம்மையாருக்குப் பதிலாக ராகுல்காந்தியை இந்திய பிரதமராக்கி இப்போதே தயார் படுத்தியாக வேண்டும். அதன் முன்னோட்டமாக அவருக்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களிடையே உருவாகி உள்ளது. இது தொடர்பான மேல் மட்ட ஆலோசானைகள் சோனியா டில்லி திரும்பியதும் நடைபெறலாம் எனத் தெரிகிறது. இப்போதும் ராகுல்காந்தி, ப்ரியங்கா காந்தி உள்ளிட்டோர் அமெரிக்காவில் இருப்பதால் டில்லி திரும்பிய பின் இது தொடர்பான விபரங்கள் தெரியவரும்.

ராகுல் அடுத்த பிரதமராக 42 சதம் பேர் ஆதரவு.

.......................................................................................

நேரு குடும்பம் வாழையடி வாழையாக காங்கிரஸ் கட்சியையும் இந்தியாவையு ஆண்டு வருகிறது. இது தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் இருந்த போதிலும் நேரு வாரிசுகளின் செல்வாக்கு இன்னும் இந்திய சமூகங்களில் சரியவில்லை என்று ஒரு கருத்துக்கணிப்பின் மூலம் தெரியவருகிறது.சிஎன்என் ஐபிஎன் தொலைக்காட்சிக்காக யாதவின் நிறுவனம் ஒரு கருத்துக்கணிப்பை நடத்தியது. மொத்தம் 19 மாநிலங்களில், 39 ஆயிரம் பேரிடம் கருத்துக் கேட்டு அதன் முடிவுகளை இவர்கள் வெளியிட்டுள்ளனர்.மன்மோகன் சிங்கை நீக்கினால் அவருக்குப் பதில் யாரை பிரதமராக நியமிக்கலாம் என்ற கேள்விக்கு 42 சதவீதம் பேர் ராகுல் என்று கூறியுள்ளனர்.அடுத்த பிரதமராக யார் வர வேண்டும் என்ற கேள்விக்கு 19 சதவீதம் பேர் ராகுல் பெயரை கூறியுள்ளனர். கடந்த 2009ம் ஆண்டு 6 சதவீதமாக இருந்த ஆதரவு தற்போது 19 சதவீதமாக கிடுகிடுவென உயர்ந்துள்ளது ஆச்சரியத்தை அளிப்பதாக உள்ளது.அடுத்த இடத்தை மன்மோகன் சிங்கும், சோனியாவும் தலா 10 சதவீத ஆதரவுடன் பகிர்ந்து கொள்கின்றனர். ப.சிதம்பரம், பிரணாப் முகர்ஜி ஆகியோருக்கு தலா 7 சதவீத ஆதரவு கிடைத்துள்ளது.அதே வேளை சோனியாகாந்தி இந்தியாவின் பிரதமராக மக்களிடையே ஆதரவு இல்லை என்பதும் இக்கருத்துக் கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளது.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/65381/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

‘‘ஸ்பெக்ட்ரம் வழக்குல மூன்றாவது குற்றப்பத்திரிகை எப்போது வருமாம்...?’’ சிஷ்யை கேட்டார்.

‘‘அநேகமாக அடுத்த வாரத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்திடுவாங்களாம்.’’ வம்பானந்தா சொன்னார்.

‘‘முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் தப்பிவிடுவார்ன்னு சொல்றாங்களே...’’

‘‘அதற்கான முயற்சி காங்கிரஸில் உள்ள ஒரு சிலர் செய்றாங்களாம். ஆனால் சி.பி.ஐ. வட்டாரங்கள் பெயரை சேர்த்துவிட வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருக்கிறார்க ளாம்.’’

‘‘தயாநிதிக்காகப் போராடும் காங்கிரஸ் புள்ளி யாரோ?’’

‘‘பிரணாப் முகர்ஜியை கை காட்டுகிறார்கள் டெல்லியில் உள்ளவர்கள். ஒருவேளை குற்றப்பத்திரிகையில் பெயர் இடம் பெற்றுவிட்டாலும், அவரைக் கைது செய்யாமல் எப்படி காப்பாற்றுவது என்றும் காய் நகர்த்தி வருகிறாராம், பிரணாப்.’’

‘‘அது எப்படி சாத்தியம்...?’’

‘‘குற்றப்பத்திரிகை தாக்கல் ஆனதும், அவரை விசாரணைக்கு அழைப்பார்கள். போனால் உடனே கைது செய்வார்கள். இப்போது சி.பி.ஐ. கோர்ட்டில் தினமும் வாதம் போய்க் கொண்டு இருக்கிறது. அந்த வாதம் முடிந்த பின்னர் மூன்றாவது குற்றப்பத்திரிகையில் உள்ளவர்கள் வாதாடுவார்கள். அதோடு சேர்த்து ஜாமீன் போட்டால், தயாநிதி திகார் போகாமல் வந்துவிட முடியும் என்று நினைக்கிறார்களாம். அது வரையில் வழக்கை இழுத்தடிக்க டெல்லியில் முயற்சி நடக்குது... இதே பாணியில் தயாளு அம்மாளையும் தப்பிக்க வைக்க முயற்சி நடக்குதாம்...’’

‘‘அவருக்கு இதில் என்ன லாபம்...?’’

‘‘சோழியன் குடுமி சும்மா ஆடுமா... பிரதமர் பதவி மீது பிரணாப் முகர்ஜிக்கு எப்பவுமே ஒரு கண் இருக்குது.அதை அடையறதுக்காக...தி.மு.க. உதவியை நாடியி ருக்கிறாராம்.’’

‘‘இது என்ன டி.வி. சீரியல் மாதிரி திடீர் திருப்பமா இருக்கே...?’’

‘‘விவரமா சொல்றேன் கேளு... போன மாசம் கருணாநிதியை வந்து பிரணாப் முகர்ஜி சந்திச்சாரு இல்லே. அப்ப, பிரதமராகும் தன் முயற்சிக்கு ஆதரவு தரணும்னு கரு ணாநிதியைக் கேட்டுக் கொண்டாராம். ‘மன்மோகன் சிங் இருக்கும் வரை இந்த வழக்குகளில் இருந்து தி.மு.க.வினர் தப்பிக்க முடியாது. நான் பிரதமராக ஆதரவு தந்தால் உங்களை வழக்கிலிருந்து காப்பாற்றுகிறேன்’ என்று உறுதி கொடுத்திருக்கிறார். கருணாநிதியும் ‘ஓகே’ சொல்லிட்டாராம்.’’

‘‘இந்த சந்திப்பு நடந்து ஒரு மாதம் ஓடிடுச்சே... அதுக்கு அப்புறம் ஒண்ணும் தகவல் இல்லையே...?’’

‘‘அதுக்கு அப்புறம்தான் நெறைய மாற்றங்கள் நடந்திருக்கு. ஸ்பெக்ட்ரம் வழக்கில் பிரதமர் மன்மோகன் சிங்கையும்,உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தையும் ராசா நீதிமன் றம் வரை இழுத்துவிட்டதற்குப் பின்னணியிலும் பிரணாப்தான் இருக்கிறாராம்.’’

‘‘பெரிய ஆளா இருப்பார் போலிருக்கே...?’’

‘‘இன்னும் கேள்... சோனியா காந்திக்கும், பிரதமர் மன்மோகன்சிங்கிற்கும் ஏற்கெனவே கருத்து வேறுபாடு இருக்காம். அதோடு, ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தன் பெயர் இணைக்கப்பட்டதால் பிரதமர் டென்ஷன் ஆகியிருக்கிறாராம்.’’

‘‘பிரதமர் டென்ஷனுக்கும், பிரணாப் முகர்ஜிக்கும் என்ன சம்பந்தம்...?’’

‘‘நெருக்குதல் அதிமானால், பிரதமர் பதவியில் இருந்து விலகவும் மன்மோகன்சிங் தயாராயிட்டாராம். இந்த வாய்ப்பைத்தான் எதிர்பார்த்துக் காத்திருக்கிறாராம், பிரணாப் முகர்ஜி. இதற்காகத்தான் தி.மு.க. உட்பட கூட்டணிக் கட்சிகளுடன் நெருக்கமா இருக்கிறாராம்.’’

-குமுதம் ரிப்போட்டர்

‘‘ஸ்பெக்ட்ரம் வழக்குல மூன்றாவது குற்றப்பத்திரிகை எப்போது வருமாம்...?’’ சிஷ்யை கேட்டார்.

‘‘அநேகமாக அடுத்த வாரத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்திடுவாங்களாம்.’’ வம்பானந்தா சொன்னார்.

‘‘நெருக்குதல் அதிமானால், பிரதமர் பதவியில் இருந்து விலகவும் மன்மோகன்சிங் தயாராயிட்டாராம். இந்த வாய்ப்பைத்தான் எதிர்பார்த்துக் காத்திருக்கிறாராம், பிரணாப் முகர்ஜி. இதற்காகத்தான் தி.மு.க. உட்பட கூட்டணிக் கட்சிகளுடன் நெருக்கமா இருக்கிறாராம்.’’

-குமுதம் ரிப்போட்டர்

குமுதத்திலிருந்து நிறையத்தான் தேன் சொட்டுது. சுவைக்க இனிமையாய்த்தான் இருக்கு

யார் இந்த ராகுல் காந்தி...?

பிரபுக்கள் குடும்பத்தில் பிறந்த செல்வச் செழிப்பான குழந்தை...... மற்ற செல்வந்த குழந்தைகளை விடகொஞ்சம் பயமறியாது.....

2001 இல் இந்தியா பெரியதா குஜராத் பெரியதா எனும் கேள்விக்கு பதிலத்தவர் என்பதை விட அதற்கு பதிலளிக்க திணறியவர் தான் இந்த ராகுல்....

அந்த கால கட்டங்களில் IQ இவருக்கு below the average ....

அப்படிப்பட்ட ஒரு மனிதன் இந்தியாவின் பிரதம மந்திரி..... 42 சதவீதம் பேர் ராகுல்பிரதமராக ஆதரிக்கிரார்கலேன்பது சுத்த பொய்.....

இது உண்மையான கருத்துக்கணிப்பு அல்ல.... சோனியாவின் அடிவருடிகளின் பதவி சுகபோச வாசிகளின் மொள்ளமாரித்தனம்.....

அப்படியே ராகுல் இந்தியாவின் பிரதமராக வந்தாலும் காங்கிரசு உட்கட்சிப் பூசலால் அப்பன் ராஜீவுக்கு நடந்ததே இவனுக்கும் நடக்கும்....

சாகும்பொழுது அப்பனுக்கு 46 மகனுக்கு 41 தான் இப்பொழுது.....

ஒன்றைப் பெற ஒன்றை இழக்க வேண்டுமென்பார்கள்.....

பிரதமர் பதவி என்ற ஒன்றைப் பெறலாம்....அதற்காக ஒன்றை இழக்க வேண்டி வரும் அது தான் ராகுலின் உயிர்....

இந்தியாவில் சோனியா அடிவருடிகளைத் தவிர.எவனுமே விரும்பாத ஒன்று ராகுல் பிரதமராவது ...... ராகுல் மட்டுமல்ல காந்தி குடும்பத்தில் எவருமே உங்களின் அதிகார பண பலத்தை பயன்படுத்தி இந்தியாவின் பிரதமர் ஆகலாம் ஆனால் ஆட்சி செய்ய உயிர் இருக்காது.....

அதை இந்தியாவின் கொள்கை வகுப்பாளர்களும் ரா வும் கச்சிதமாக முடித்து வைத்து பழியை வெகு லாவகமாக வேறு திசையில்திருப்புவார்கள்....

100 கோடி பேர் வாழ 1 லட்சம் தமிழ்மக்களை பழி கொடுக்கலாம், எத்தனை கோடி தமிழர்களின் உணர்வுகளையும் இரும்பு கரம் கொண்டு அடக்கலாம் - இது தான் இந்தியாவின் தற்போதைய வெளிநாட்டுக் கொள்கை... காரணம் தமிழன் மட்டும் விடுதலை பெற்று விட்டால் என்ற பயம்...

Edited by Rudran

  • கருத்துக்கள உறவுகள்

ராகுலுக்கு, மக்களிடம் அனுதாபம் பெறத்தான்......

தாய்க்காறி சோனியா புற்று நோயெண்டு ஆசுப்பத்திரியிலை போய் படுத்தாவோ.... ஆர் கண்டது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.