Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்நாட்டிடம் இருந்து கச்சதீவைப் பாதுகாக்கத் தயார் – இலங்கைக் கடற்படை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டிடம் இருந்து கச்சதீவைப் பாதுகாக்கத் தயார் – இலங்கைக் கடற்படை!

Published on August 15, 2011-10:24 am

இந்தியாவின் சுதந்திர தினமான இன்று கச்சதீவில் இந்தியக் கொடியை ஏற்றுவதற்கு தமிழகத்தைச் சேர்ந்த சில அமைப்புக்கள் முயற்சிப்பதாக வெளியான செய்திகளை அடுத்து அத்தகைய எந்த முயற்சிகளையும் தடுக்கத் தயார் நிலையில் இருப்பதாக கடற்படை அறிவித்துள்ளது.

இதேவேளை, நேற்றுமுன்தினம் இரவு கச்சதீவுக்கு அருகே மீன்பிடிப்பதற்கு இலங்கைக் கடற்படையினர் தங்களை அனுமதிக்கவில்லை என்று தமிழக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

சனிக்கிழமை இரவு 10 வேகப் படகுகளில் வந்த இலங்கைக் கடற்படையினர் அந்தப் பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த 511 படகுகளை அங்கிருந்து விரட்டியடித்தனர் என்று அவர்கள் முறையிட்டுள்ளனர். ஒவ்வொரு படகில் இருந்தும் டீசல் மற்றும் மீன்களைக் இலங்கைக் கடற்படையினர் பறித்துச் சென்றதால் ஒவ்வொரு படகுக்கும் இந்திய மதிப்பில் ரூபா 2,000 இழப்பு ஏற்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இந்தக் குற்றச்சாட்டுக்களை வழக்கம் போல இலங்கைக் கடற்படையினர் மறுத்துள்ளனர். இந்தியாவின் முக்கிய எதிர்க் கட்சியான பாரதீய ஜனதாக் கட்சியின் தமிழகத் தலைவர் இல. கணேசன் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய போது, கச்சதீவு சென்று இந்தியக் கொடியை ஏற்றத் தமது கட்சி தயாராக இருப்பதாகத் தெரிவித்தார். ஆனால் அதற்கான திகதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று கூறிய அவர், வேறு பல குழுக்கள் திங்கட்கிழமை இந்திய சுதந்திர தினத்தன்று சென்று கொடியை ஏற்ற தீர்மானித்திருக்கின்றன என்றார்.

அத்தகைய எந்தவொரு நடவடிக்கையையும் தடுத்து நிறுத்த தாம் தயாராக இருப்பதாக கடற்படை தெரிவித்துள்ளது. “கட்டுப்பாட்டு எல்லையைத் தாண்டி யாராவது வரமுயன்றால் அவர்களைத் தடுத்து நிறுத்துவோம். இலங்கையின் கடல் எல்லையைப் பாதுகாப்பது எமது கடமை” என்றார் கடற்படைப் பேச்சாளர் கோசல வர்ணகுலசூரிய.

1974 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சிறிமா சாஸ்திரி ஒப்பந்தத்தின் மூலம் கச்சதீவு இலங்கைக்குச் சொந்தமாக்கப்பட்டது. ஆனால், இந்தியா அந்தத் தீவை மீட்டெடுக்க வேண்டும் என்று, தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்றதும் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

http://www.saritham.com/?p=30491

கச்சதீவில் இந்திய தேசிய கொடியேற்றுவதற்கு சென்ற 43 பேர் கைது

கச்சதீவில் இந்திய தேசிய கொடி ஏற்றுவதற்காக சென்றுகொண்டிருந்த 43 பேரை இன்று கைது செய்துள்ளதாக இந்திய பொலிஸார் தெரிவித்தனர்.

1974 ஆம் ஆண்டு இலங்கைக்கு இந்தியா கச்சதீவை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இந்திய சுதந்திரத்தினத்தை முன்னிட்டு இந்து மக்கள்கட்சியைச் சேர்ந்த அதன் தமிழ்நாடு மாநிலத் தலைவர் அண்ணாதுரை உட்பட 43 பேர் கச்சதீவுக்குச் செல்வதற்காக தூத்துக்குடி மீன்பிடி இறங்குதுறைக்கு சென்றுகொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டதாக இந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கச்சதீவை சுற்றியுள்ள கடற்பகுதியில் இந்திய மீனவர்கள் மீன்பிடிக்க அனுமதிக்கப்பட வேண்டும் என அக்கட்சியினர் வலியுறுத்துகின்றனர்.

விரும்பத்தகாத சம்பவங்களை தடுப்பதற்காக அக்கடற்பகுதியில் இன்று மீன்பிடிப்பதற்கு இந்திய பொலிஸார் தடை விதித்திருந்தனர்.

ராமேஸ்வரத்தின் மண்டபம் பகுதியில் இன்று 2000 இற்கும் அதிகமான மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. (PTI)

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/26374--43-.html

நல்ல தொடக்கம். சும்மா திண்டுட்டு திண்ணைக்கு மண் எடுகாமல் செய்ய ஒரு தொலில் கிடைச்சிருக்கு வடக்கத்தையானுக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

கச்சதீவு இலங்கைக்கு, இந்தியாவால் வழங்கப் பட்ட போது.. அங்கு மீன் பிடிக்கும் உரிமை தமிழக தமிழர்களுக்கும் உண்டு என்று தான்... வழங்கினார்கள். இப்போ அந்தச் சட்டம் செல்லுபடியாகாதா? அல்லது தமிழன் தானே.... எக்கேடு கெட்டாவது போகட்டும் என்று மத்திய அரசு நினைக்கிறதா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.