Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிறீஸ் பூதம் பின்னணியில் கோத்தபாய ராஜபக்­ஷ‌

Featured Replies

கிறீஸ் பூதம் பின்னணியில் கோத்தபாய ராஜபக்­ஷ‌ அடித்துக் கூறுகிறார் மங்கள

படைத்துறைச் செயலாளர் கோத்தபாய ராஜபக்­ஷ‌வின் உத்தரவிற்கமைய படைத்தரப்பின் புலனாய்வுத்துறையினரே மர்ம மனிதர்களின் (கிறீஸ் பூதம்) பின்னணியில் இருக்கின்றனர்.இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர குற்றம் சுமத்தியுள்ளார்.

நாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கும் கிறீஸ் பூதம் களேபரத்தை இட்டு கருத்துத் தெரிவித்த மங்கள சமரவீர மேலும் தெரிவிக்கையில்,வெள்ளை வாகனங்களைக் கொண்டு முன்னர் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த படைத்தரப்பின் புலனாய்வுத்துறையினர் தற்போது மர்ம மனிதர்கள் எனும் பேரில் பொது மக்களை அச்சுறுத்தி வருகின்றனர்.

மர்ம மனிதர்கள் என பொதுமக்களால் பிடிக்கப்பட்டவர்கள் அனைவரும் படைத்தரப்பின் புலனாய்வுத் துறையினர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. பொதுமக்களால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட மர்ம மனிதர்களில் பலரும் தாம் சிறிலங்கா படைத்தரப்பைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காட்டியதும் அவர்கள் விடுவிக்கப்பட்டுவிட்டனர்.கிராமங்கள் தோறும் படை முகாம்களை அமைப்பதற்காகவே படைத்துறைச் செயலாளர் கோத்தபாய ராஜபக்­ஷ‌ இவ்வாறு செயற்படுகின்றார்.

அத்துடன் இப்பிரச்சினையை காரணம் காட்டி ஏற்கெனவே படைத் தரப்பைச் சேர்ந்த 5 ஆயிரம் படையினர் கிழக்கு மாகாணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

http://www.valampurii.com/online/viewnews.php?ID=21489

  • தொடங்கியவர்

கிழக்கிலிருந்து விசேட அதிரடிப்படையினரை முழுமையாக விலக்கிக்கொண்டு வடக்கைப் போன்று கிழக்கிலும் இராணுவத்தினரை கடமையில் ஈடுபடுத்தி மலையகத்தை விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பின் கீழ் கொண்டுவந்து அதாவது சிறுபான்மையினர் பெரும்பான்மையினராக வாழ்கின்ற பகுதிகளை படையினரின் கீழ் கொண்டுவருவதற்காக வகுக்கப்பட்ட முயற்சியா? என்பது விடைகாணப்படாத வினாவாகும்.

- வெளியாகியிருக்கின்ற தகவல்களின் பிரகாரம் தங்களை தாக்கவருகின்றவர்கள் கறுப்பு நிற ஆடை, தொப்பி அணிந்திருப்பதுடன் சப்பாத்தும் போட்டிருக்கின்றான். சில நேரங்களில் முகத்தை மூடி கறுப்புத் துணியினால் கட்டியும் இருக்கின்றான் அப்படியாயின் அவ்வாறானவன் கிறீஸ் மனிதன் அல்ல மர்ம மனிதனேயாவான்.

- மர்ம மனிதன் தனது சேஷ்டைகளை பெண்கள் மட்டும் இருக்கின்ற வீடுகளிலேயே கூடுதலாக காண்பிப்பதற்கு முயற்சிக்கின்றான். அப்படியாயின் அந்த மர்ம மனிதன் வெளியிடத்திலிருந்து வந்தவனாக இருக்கமுடியாது. குடும்பத்தை பற்றி நன்கு தெரிந்தவர்களினால் மட்டுமே இவ்வாறு அச்சுறுத்த முடியும்.

- இரத்தினபுரியில் தனது சேஷ்டையை ஆரம்பித்த மர்ம மனிதன் வடக்கு, தெற்கு மற்றும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தோர் செறிவாக வாழ்கின்ற பகுதிகளில் இன்றேல் இடங்களில் தனது மர்ம செயலை காட்டவில்லை இது ஏன்? என்ற சந்தேகமும் வலுப்பெறுகின்றது. எனினும் மர்ம மனிதனின் சேஷ்டைகள் மலையகத்தில் பொதுவாக பெருந்தோட்டப் புறங்களில் வெகுவாக அதிகரித்துள்ளன.

- கொலை, கொள்ளை, பாலியல் வல்லுறவு உள்ளிட்ட குற்றச் செயல்களை புரிந்து விட்டு தலைமறைவாக வாழ்கின்ற குற்றவாளிகளை பொலிஸாரினால் கைது செய்ய முடியுமாயின் மர்ம நபர்களை மட்டும் ஏன் கைது செய்ய முடியாது? என்ற கேள்வி எழும்பத்தான் செய்கின்றது.

அரசாங்கத்திற்கு அவசரகாலச் சட்டத்தை நீடிக்க வேண்டுமாயின் ஒரு குறிப்பிட்ட பிரதேசங்களில் மட்டும் மக்களை அச்சத்தில் உறைய வைப்பது ஏன்? என்பதெல்லாம் எதிர்காலம் பதிலளிக்கவேண்டிய கேள்வியாகும்.

எது எப்படியோ மர்ம மனிதன் மலையகத்தில் விசேட அதிரடிப்படையை ஊடுருவுவதற்கு வழிவகுத்துவிட்டான் அதற்கு மலையக கட்சிகளும் இடமளித்து விட்டன என்பது மட்டும் திண்ணம். மர்ம மனிதனால் மக்கள் அச்சமடையத் தேவையில்லை. அவதானத்துடனும் விழிப்போடும் இருந்தால் போதுமானதாக இருக்கும் என்பது மட்டுமே நிதர்சனம்.

http://www.alaikal.com/news/?p=79390

2 பேரை பிடிச்சு தூக்கில போட்டால் மிச்சம் அடங்கும்.

சிங்களப் பயங்கரவாதிகளின் காட்டுமிராண்டித் தனத்தை மாற்றலாம் என்று கனவுகாணும் சர்வதேசத்தை விழிப்படைய வைக்காது நித்திரை கொண்டு கொண்டிருக்கும் உருப்படியற்ற அறிக்கைப் பிரதமர் உருத்திர குமரான் எங்காவது ஏதாவது நடக்கும் என்ற கனவுகளுடன் காலத்தைக் கழிக்கிறாரா?

  • கருத்துக்கள உறவுகள்

படைத்துறைச் செயலாளர் கோத்தபாய ராஜபக்­ஷ‌வின் உத்தரவிற்கமைய படைத்தரப்பின் புலனாய்வுத்துறையினரே மர்ம மனிதர்களின் (கிறீஸ் பூதம்) பின்னணியில் இருக்கின்றனர்.இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர குற்றம் சுமத்தியுள்ளார்.

"பாம்பின் கால் பாம்பறியும்".

இது நிருபமாவின் ஆலோசனையாகவும் இருக்கலாம். காட்டுமிராண்டிகளின் வாசனை நல்லா அடிக்குது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.