Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகள் மீண்டும் நாட்டுக்குள் ஊடுருவும் அபாயம்: கோத்த கதறல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

gothabaya-rajapaksha_7-150x150.jpg

சர்வதேசத்தில் தஞ்சமடைந்துள்ள புலி உறுப்பினர்கள் மீண்டும் நாட்டிற்குள் ஊடுருவுவதற்கான அச்சுறுத்தல் உள்ளது. இதனை தடுப்பதற்கு பாதுகாப்பு மற்றும் புலனாய்வுக் கட்டமைப்பை உஷார்நிலையில் வைத்திருக்க வேண்டும். இலங்கையை பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்க வேண்டியது படைத் தரப்புக்களின் கடமையாகும் என்று பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்தார்.

உள்நாட்டில் பயங்கரவாதப் பேராட்டத்தினால் இலங்கை இழந்தது ஏராளமானவையாகும். இனி புதிய சாவால்களுக்கு முகம் கொடுக்க நாம் தயாராக வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற விஷேட நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மேற்கண்டவாறு கூறினார். இவர் இங்கு தொடர்ந்தும் கூறுகையில்;

கடந்த முப்பதாண்டு காலமாக இலங்கை பயங்கரவாதப் போரினால் பீடிக்கப்பட்டிருந்தது. இராணுவம் பாரியளவிலான பங்களிப்புக்களையும் தியாகங்களையும் செய்து நாட்டையும் நாட்டு மக்களையும் மீட்டெடுத்தது. இருந்தும் பயங்கரவாதப் போரினால் நாம் இழந்தது அதிகமாகும். இந்த இழப்புக்களை நிவர்த்தி செய்து கொண்டு நாடு பொருளாதார அபிவிருத்தியை நோக்கி செல்கின்றது.

இந்த நிலையில் தற்போது இலங்கைக்கு எதிராக புதிய சவால்கள் உருவெடுத்துள்ளன. பொருளாதார அரசியல் மற்றும் கலாசாரம் உட்பட அனைத்து துறைகளிலும் ஏற்படும் சவால்களுக்கு ஏற்ற வகையில் படையினர் செயற்பட்டு நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். யுத்த காலப் பகுதியில் புலி உறுப்பினர்கள் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்று தஞ்சமடைந்துள்ளனர்.

இவர்களை மீண்டும் நாட்டிற்குள் ஊடுருவாமல் தடுக்க வேண்டியது படையினரின் பொறுப்பும் கடமையாகும். கடந்த 2005 ஆம் ஆண்டு காலப் பகுதியிலும் அதற்கு முன்னரும் புலிகள் கடல் மார்க்கமாக தமக்குத் தேவையான ஆயுதங்களை பெற்றுக் கொண்டனர். அவர்கள் உள்நாட்டில் தாக்குதல் ஆயுதங்களை தயாரிக்க வில்லை. கடற்படையினர் விஷேட நடவடிக்கைகளின் ஊடாக புலிகளின் கடல் மார்க்கமான ஆயுதக் கொள்வனவை இல்லாதொழித்தனர். இதனை அனுபவமாகக் கொண்டு எதிர்காலத்தில் பயங்கரவாதிகளினால் நாட்டிற்குள் ஆயுதங்களை கொண்டு வருவதை தடுக்க வேண்டும்.

பயங்கரவாதிகளிடமிருந்து மீட்கப்பட்ட வடக்கு நிலப்பரப்பில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்குள் பாரியளவிலான அபிவிருத்திப் பணிகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. இப்பணிகளில் இராணுவம் பங்களிப்புக்களை செய்து வருகின்றது. அது மட்டுமன்றி ஐ.நா. உட்பட பல நாடுகளுக்கு இராணுவம் சார் பிரதிநிதிகள் தூதுவர்களாக சென்றுள்ளனர்.

அது மட்டுமன்றி அவசர சவால்களைக் கருத்தில் கொண்டு குறுகிய காலத்திற்குள் 95 வீதமான மீள்குடியேற்றத்தை படையினர் நிறைவு செய்திருந்தனர். 75 சத வீதமான மிதி வெடிகள் அகற்றப்பட்டன. 11 ஆயிரம் முன்னாள் போராளிகள் புனர்வாழ்வு அளித்து சமூகத்தில் இணைந்துள்ளனர். இவ்வாறு தேசிய வேலைத்திட்டங்களில் படையினர் பங்களிப்புக்களை செய்தனர் என்றார்.

http://www.tamilthai.com/?p=24564

Edited by தமிழ் அரசு

  • கருத்துக்கள உறவுகள்

இவனுக்கு, விசர் முத்திப் போச்சுது என்பதை விட....

ஹிட்லருக்கு கிடைத்த கோயபல்ஸ் போல,

மகிந்தனுக்கு, கோத்தபாயா ஒரு கோயபல்ஸ்.

புலம்பெயர் தமிழர்களை எக்காரணம் கொண்டும் இங்கே வரவேண்டாம் என்கிறாரா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இவனுக்கு, விசர் முத்திப் போச்சுது என்பதை விட....

ஹிட்லருக்கு கிடைத்த கோயபல்ஸ் போல,

மகிந்தனுக்கு, கோத்தபாயா ஒரு கோயபல்ஸ்.

உண்மையில் இவன் ஒருவித மன நோயாளிதான், இவனை குணப்படுத்த சர்வதேச நீதிமன்றம்தான் சரியான இடம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.