Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ், முஸ்லிம் மக்களை மட்டும் மர்ம மனிதர் இலக்கு வைப்பது ஏன்? ஐ.தே.க.கேள்வி.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ், முஸ்லிம் மக்களை மட்டும் மர்ம மனிதர் இலக்கு வைப்பது ஏன்? ஐ.தே.க.கேள்வி.

[saturday, 2011-08-20 21:22:27]

green%202.jpg

கிறீஸ் மனிதன் செயற்பாடுகள் சிறுபான்மை மக்கள் வாழும் பகுதிகளிலேயே மேலோங்கிக் காணப்படுவதாக தெரிவித்திருக்கும் ஐக்கிய தேசியக் கட்சி இதன் காரணமாக இனங்களுக்கிடையேயான முரண்பாடுகள் மீண்டும் தலையெடுக்கும் நிலை உருவாகி வருவதாகவும் அக்கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாஷிம் மேற்கொண்டவாறு தெரிவித்தார். முன்னைய காலத்தில் பூதங்கள்,பேய்கள்,பிசாசுகள்,மோகினி எனக் கேள்விப்பட்டுள்ளோம். எமது பெற்றோர்கள், மூதாதையர்கள் அவற்றைக் கூறி எம்மைப் பயங்காட்டியுள்ளனர்.

நவீன யுகத்தில் வாழும் மக்கள் அவற்றை நம்பத் தயாராக இல்லை.அப்படி இருந்தும் கூட கிறீஸ் மர்ம மனிதரை பூதம்,பிசாசு எனக் கூற சிலர் முற்பட்டுள்ளனர். அதுவும் சிறுபான்மை முஸ்லிம்,தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களிலேயே இந்த மர்ம மனிதர் நடமாட்டம் காணப்படுகின்றது. இன்று இந்த மர்ம மனிதர் விடயத்தில் பலத்த சந்தேகம் தோன்றியுள்ளது.அரசாங்கம் இதன் பின்னணியில் செற்படுபவர்களை கண்டுபிடிக்கத் தவறியுள்ளது. அரசு மீது சந்தேகம் ஏற்பட இதுவே பிரதான காரணமாகும்.

மர்ம மனிதரால் பாதிக்கப்படும் மக்கள் மீதே பொலிஸாரும் தாக்குதலை மேற்கொள்கின்றனர். பொலிஸார் மர்ம மனிதர்களாக வேஷம் போடுவோரைப் பிடிக்க நடவடிக்கை எடுக்கவில்லை.

முஸ்லிம்கள் புனித ரமழானை அனுஷ்டித்துக் கொண்டிருக்கும் இம்மாதத்தில் அவர்களால் இரவுத் தொழுகைகளுக்குப்போக முடியாதநிலை ஏற்பட்டுள்ளது. இக்காலப்பகுதியில் முஸ்லிம் பெண்களும் தராவீஹ் இரவுத் தொழுகைக்கு பள்ளிகளுக்குச் செல்வர்.கடந்த இரண்டு வாரங்களாக நாட்டின் பலபகுதிகளிலும் முஸ்லிம்கள் இரவுத் தொழுகைக்குச் செல்ல முடியாமலும், நித்திரை கொள்ள முடியாமலும் தவித்துக் கொண்டிருக்கின்றனர்.

அரசாங்கம் இந்த விடயத்தில் தொடர்ந்து அசமந்தப்போக்கில் இருக்க முடியாது. இதன் பின்னணியில் நின்று செயற்படுவோரை கண்டுபிடித்து சட்டத்தின் முன்பாக நிறுத்தி தண்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இரத்தினபுரி கஹவத்தையில் தொடங்கிய கிறீஸ் மர்ம மனிதன் விவகாரம் இன்று வடக்கு,கிழக்கு,மத்திய மாகாணமென நாட்டின் பல பகுதிகளிலும் பரவியுள்ளது.இன்று பாக்கியுள்ளது தலைநகர் மட்டுமேயாகும். நாட்டில் அமைதியை ஏற்படுத்தி மக்கள் நிம்மதியாக வாழக் கூடிய சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டிய அரசாங்கம் இன்று மக்களை அச்சம், பீதியுடன் வாழும் நிலைக்கே தள்ளிவிட்டுள்ளது. இதன் காரணமாக மக்கள் அரசு மீதும் பாதுகாப்புத்தரப்பு மீதும் அதிருப்தியடைந்து காணப்படுகின்றனர். இதன் காரணமாகவே பாதுகாப்புத் தரப்பு மீது மக்கள் தாக்குதல் நடத்த முற்பட்டனர்.

மக்கள் சட்டத்தை கைகளில் எடுப்பதைத் தடுக்க வேண்டுமானால் அரசாங்கம் சட்டத்தை சரியாகச் செயற்படுத்த வேண்டியது அவசியமானதாகும்.

அரசியல்வாதிகள் பாதுகாப்புத் தரப்பினரை சட்டத்தை நடைமுறைப்படுத்த இடமளிக்காததன் காரணமாகவே சிவில் சமூகம் சட்டத்தை கையில் எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். பொலிஸ் திணைக்களம் இன்று முழுமையாக அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் நடைபெற்றுவரும் அநீதிகள், முறைகேடுகளால் நாடு குட்டிச்சுவராகும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது எனவும் கபீர் ஹாஷிம் செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=48657&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்பேசும் மக்களுக்கு ஒரு வலுவான செய்தியைக் "கிறீஸ் பேய்கள்" ஊடாகச் சிறுபான்மையெனில் எமக்கு தமிழோ முஸ்லீமோ எல்லாம் ஒன்றே எனக் கொழும்பு சொல்ல முனைகிறது. இதன் பின்னராவது தமிழ் பேசும் சிறுபான்மைகள் மதத்தால் பிரிந்து இனத்தை இனியும் அழிவுக்கிட்டுச் செல்ல வேண்டுமா? எனச் சிந்திக்க வேண்டிய காலமாகும். மதக் கோட்பாடுகளைப் பரஸ்பரம் புரிந்து கொண்டு சகோதரர்களாக வாழ்ந்த தமிழரிடையே பகடைக்காய்களாகிப் பதவி சுகம் காணத் துடித்த அரசியல்வாதிகளின் சதியால் ஏற்பட்ட முரண்னிலைகளை மறந்து ஒரு திரள்நிலையை அடைந்து எமது நில உரிமைகளை மீட்பதூடாக மட்டுமே இலங்கையில் எந்த ஒரு மதத்தவரும் இனத்தவரும் அமைதியாக வாழும் சூழலை எட்ட முடியும்.

எக்காரணியமுமின்றித் தமிழரைச் சித்திரவதை செய்யவும் கொல்லவும் புலிப்பூச்சாண்டியிருந்தது. இப்போது கிறீஸ் பேய்களை உலாவிட்டுள்ளமையை ஆதாரத்தோடு மக்கள் உறுதிசெய்கிறார்கள். அதனால் கொதிப்படைந்த கோத்தாவின் கொலைக் குழுக்கள் அப்பாவி மக்கள்மீது தாக்குதல் தொடுக்கின்றன. தமிழினம் ஒன்று திரளாவிடில் கிறீஸ் பேய் போய் தார்ப் பூதம் வந்தாலும் ஆச்சரியப்பட முடியாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.