Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'நாம் ஒரு புண்பட்ட சமூகம் '

Featured Replies

"நாம் ஒரு புண்பட்ட சமூகம்"- உ.த. பேரவை

சிங்கள மக்களை ஓர் ‘ஒதுக்கப்பட்ட வகுப்பாக’ அனைத்துலகச் சமூகம் பார்ப்பதை நாம் விரும்பவில்லை என்று உ.த. பேரவையின் பேச்சாளர் கூறியுள்ளார்.

ஈஸ்வரன் இரத்தினம் - சண்டே லீடர் செய்தித் தாள்

அண்மையில் சேனல் 4 வெளியிட்ட ஒளிநாடாக்களைத் தொடர்ந்து, வெளிநாடுகளில் இலங்கை அரசுக்கு எதிரான செயற்பாடுகளை வண. எஸ். ஜே. இமானுவேல் அடிகளாரின் தலைமையிலான உலகத் தமிழர் பேரவை (உ.த.பே.) முனைப்பாகச் செயற்படுத்தி வருகின்றது. இலங்கை அரசானது உ.த. பேரவையை ஒரு தீவிரவாத நோக்குடைய விடுதலைப் புலிகளின் முன்னணி அமைப்பாகவே பார்க்கின்றது. உ.த. பேரவையின் உண்மையான நோக்கம் என்ன என்பதை அறியும் பொருட்டு அதன் பேச்சாளரான சுரேன் சுரேந்திரன் அவர்களுடன் சண்டே லீடர் உரையாடியது. அவ்வுரையாடல் பின்வருமாறு:

கே. உலகத் தமிழர் பேரவை போன்ற அமைப்புக்கள் இலங்கை பற்றிய தவறான தோற்றத்தை வெளிநாடுகளில் உருவாக்கி வருகின்றனவென இலங்கை அரசு கருதுகின்றது. இலங்கைப் பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட அண்மைய ஒளிநாடாவிலும் உ.த. பேரவை பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை பற்றிய தவறான தோற்றத்தை உ.த. பேரவை உருவாக்கி வருகின்றதா?

ப. அரசின் ஊழல்களையோ, அதன் அரசியல் ஞானம் இல்லாமையையோ, அனைத்துலகச் சட்டவிதிகளுக்கும் மரபொழுங்குகளுக்கும் முரணாக அது புரிந்துள்ள குற்றச் செயல்களையோ, எல்லாவற்றிற்கும் மேலாக சர்வாதிகாரத்தோடு தான்தோன்றித்தனமான அதன் செயற்பாடுகளையோ எடுத்துரைக்கும் எவரும் - அவர்கள் தனிப்பட்டவராகவோ அமைப்புக்களாகவோ ஏன் அரசுகளாகவோ இருப்பினும,; தற்போதைய இலங்கை அரசைப் பொறுத்தவரை அவை யாவும் இலங்கை பற்றிய தவறான தோற்றத்தை உருவாக்கி வருகின்ற பயங்கரவாத அமைப்புக்களேயாகும்.

சிங்களச் சமூகத்தைச் சேர்ந்த பொதுமக்கள், அரசியல்வாதிகள், செய்தியூடகங்கள் ஆகியவற்றின் மாற்றுக் கருத்துக்களைக்கூட இலங்கை அரசு சகித்துக்கொள்வதில்லை.

இராஜபக்ச ஆட்சியின் பார்வையில் ஐ.நா.வும் ஐ.நா.வின் செயளாளர் நாயகமும் பிழை. அனைத்துலக மனிதாபிமான அமைப்புக்கள் பிழை. நவி பிள்ளை அவர்கள் பிழை. ஐக்கிய அமெரிக்க நாட்டு அரசும் அதன் அரசாங்கச் செயலாளரும் பிழை. தமிழ் நாட்டின் செல்வி ஜெயலலிதா அவர்கள் பிழை. வண. ரூற்று அவர்கள் பிழை. உதயன் செய்தித் தாள் பிழை. லசந்தா விக்கிரமதுங்கா பிழை. சரத் பொன்சேகா பிழை. ஜே.வீ.பீ., தமிழர் தேசியக் கூட்டணி, சேனல் 4 செய்தி, இந்திய ஹெட் லைன்ஸ் தொலைக் காட்சி ஆகிய எல்லாமே பிழை. அப்படியிருக்கையில் இலங்கை அரசுக்கு உ.த. பேரவை எவ்வகையில் வேறாகத் தோன்ற முடியும்!

கே. இலங்கை அரசு எதைச் செய்ய வேண்டுமென உ.த. பேரவை எதிர்பார்க்கின்றது?

ப. மக்கள் சுதந்திரமாகப் பேசவும் அச்சமின்றித் தம் பிள்ளைகளைப் பாதுகாப்பாக வளர்க்கவும் வேண்டும். மக்களின் விருப்பங்களும் அவர்களின் சனநாயக உரிமைகளும் மீட்கப்படவேண்டும். வடக்கிலும் கிழக்கிலுமுள்ள இராணுவ ஆக்கிரமிப்பு முடிவுற வேண்டும். அவசரகாலச் சட்டமும் பயங்கரவாதச் சட்டமும் இரத்துச் செய்யப்பட வேண்டும். சட்டத்துக்கு முரணாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் பெயர்களை அறிவிக்க வேண்டும். அத்தோடு அவர்களுக்குச் சட்ட ஆலோசகர்களையும் மனிதாபிமான அமைப்புக்களையும் அணுகும் உரிமை வழங்கப்படவேண்டும்.

மேலும் அவர்கள் நாட்டின் சட்டங்களுக்கமைய நீதிமன்றங்களின் முன் நிறுத்தப்பட வேண்டும்; - அல்லது அவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும். அரசாலும் அதன் முகவர்களாலும் மேற்கொள்ளப்பட்டு வரும் குடியேற்றங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். மக்களின் காணிகளும் வீடுகளும் அவர்களிடம் திரும்பக் கொடுக்கப்படுவதோடு அவர்களின் சொந்த வாழ்விடங்களில் அவர்கள் மீளக்குடியமர்த்தப்பட வேண்டும். மிதமிஞ்சிய அரச தலையீடும் ஊழலும் அற்ற முறையில் நன்கு வழியமைக்கப்பட்டதும் போதிய நிதி வழங்கப்பட்டதுமான புனர்வாழ்வு மற்றும் மீளக்குடியமர்த்தும் திட்டங்கள் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிறைவேற்றப்பட வேண்டும்.

அபிவிருத்தியைப் பொறுத்தவரையில் இலங்கைத் தீவில் பிரதேசங்களுக்கு இடையே நிலவுகின்ற வேறுபாடுகள் குறைக்கப்பட வேண்டும். (கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு போன்ற) மக்களின் அடிப்படை முன்னுரிமைகள் முதன்மைப்படுத்தப்பட்டு ஊழலற்ற வகையில் செயற்படுத்தப்பட வேண்டும்.

பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்ற பெயரில் எமது மக்களுக்கு இழைக்கப்பட்ட தவறுகளுக்கு நியாயம் வழங்கப்பட வேண்டும். ஆயுதமேந்திய போரில் இரு தரப்பாலும் புரியப்பட்ட போர்க் குற்றங்களும் மனிதத்துக்கு எதிரான குற்றங்களும் பக்கச்சார்பற்ற அனைத்துலக அமைப்பொன்றால் விசாரிக்கப்பட வேண்டும். நீண்ட காலமாக நிலவி வருகின்ற தமிழ் மக்களினதும் மற்றைய எல்லா மக்களினதும் நியாயமான கோரிக்கைளுக்கு நிலையான தீர்வு காணும் பொருட்டு நம்பத்தகுந்த நேர்மையான அரசியல் வழிமுறையொன்று அனைத்துலக முன்னெடுப்புடன் மேற்கொள்ளப்பட வேண்டும். அழுத்தங்கள் அதிகரிக்கையில் இராஜபக்ச அரசு மேற்கொள்ளும் வழமையான நடவடிக்கைகள் (உதா. அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் செயற்குழு மற்றும் த.தே. கூட்டமைப்புடனான பேச்சுவார்த்தைகள், தற்போதைய நாடாளுமன்றச் செயற்குழு) போலல்லாது இது அமைய வேண்டும். மேற்கூறிய யாவும் மக்கள் எல்லோரும் அருகருகே நட்புடன் அயலவர்களாக வாழ வழிவகை செய்வதற்கு ஏதுவாக, நிலையான மீள்நல்லிணக்கத்தை உருவாக்கக் கூடிய அத்திவாரமாக அமைய வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, அரசாங்கத்திலுள்ள சிலர் இழைத்த பாரிய தவறுகளுக்காகவும் குற்றச் செயல்களுக்காகவும்; சிங்கள மக்களை அனைத்துலகச் சமூகம் ஓர் ‘ஒதுக்கப்பட்ட வகுப்பாக’ பார்ப்பதை நாம் விரும்பவில்லை.

கே. விடுதலைப் புலிகள் ‘ஈழம்’ நாடொன்றைக் கோரியது போன்று உ.த. பேரவையும் இலங்கையில் தனி நாடொன்றை அமைக்கப் பிரச்சாரம் செய்து வருகின்றதா?

ப. இறுதித் தீர்வு என்னவாக இருக்கவேண்டுமென முன்னுரைக்க நாம் விரும்பவில்லை. எனினும், எமது சமூகம் அடுத்தடுத்த அரசுகளால் ‘ஏமாற்றப்பட்டதும்’ ‘புண்படுத்தப்பட்டதுமான’ ஒரு சமூகமாக உள்ளதால் பேச்சுவார்த்தைகள் மூலம் விளையக்கூடிய எந்தத் தீர்வு பற்றியும் எமக்கு ஐயுறவும் ஓரளவு சந்தேகமும் இருத்தல் விளங்கிக் கொள்ளப்படக்கூடியதே ஆகும். நான் முன்னர் சொன்னது போன்று எந்தத் தீர்வும் அனைத்துலகச் சமூகத்தால் உத்தரவாதம் வழங்கப்பட்டதொன்றாக இருத்தல் வேண்டும். உ.த. பேரவையின் தலைவர் வண. எஸ். ஜே. இமானுவேல் கூறியுள்ளது போன்று இந்த விவகாரமானது இப்பொழுது தெற்கே வாழுகின்ற நீதியும் நியாயமும் உடைய சிங்கள அரசியல்வாதிகளினதும் மக்களினதும் கைகளில் தங்கியுள்ளது. எனவே நீண்டு நிலைக்கக்கூடிய சமாதானத்தையும் செழிப்பான வாழ்வையும் சனாதிபதி இராஜபக்சாவும் அவரது சகோதரர்களும் தருவார்களா என்பதைத் தீர்மானித்து செயற்படுத்தும் பொறுப்பு அவர்களையே சாரும்.

கே. இலங்கை அரசுடன் நேருக்கு நேர் சந்தித்துப் பிரச்சினைகள் பற்றிக் கலந்துரையாடி வேறுபாடுகளைக் களைய உ.த. பேரவை முன்வருமா?

ப. தமிழருக்கு நியாமான தீர்வைத் தரக்கூடிய எவருடனும் நாம் பேசுவோம். ஆனால் போர்க் குற்றங்கள் பற்றிய விடயம் தற்போதைய அரசின் தலைமேல் தொங்கியுள்ள இவ்வேளையில் அது எவ்வாறு தீர்வைத் தரக்கூடும் என்பதை என்னால் எண்ணிப் பார்க்க முடியவில்லை. அரச பக்கத்தில் தீர்வுக்கான அரசியல் உறுதிப்பாடும் நேர்மையும் இல்லாததன் காரணமாக, பத்துச் சுற்றுப் பேச்சுவார்த்தைகளின் பின்னர் அரசுடனான பேச்சுவார்த்தையை இடைநிறுத்தி உள்ளோமெனத் தமிழர் தேசியக் கூட்டமைப்பு அண்மையில் அறிவித்துள்ளது. அதிகாரப் பரவலாக்கத்தைத் தீர்மானிக்கும் பொருட்டு நாடாளுமன்றச் செயற்குழு பற்றி சனாதிபதி பேசிவரும் இவ்வேளையில் அரசில் உயர்பதவி வகிக்கின்ற அவரது சகோதரர் கோத்தாபய இராஜபக்சவோ தற்போதைய அரசியலமைப்புத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதற்கு மேலாக அதிகாரப் பரவலாக்கத்திற்கு அவசியமில்லையென இந்திய ஹெட்லைன்ஸ் ருடே என்ற தொலைக்காட்சிக்கு அண்மையில் அளித்த நேர்காணல் ஒன்றில்; கூறியுள்ளமை பதிவாகியுள்ளது.

மேலும், இந்தியாவிற்கான இலங்கைத் தூதுவருக்கும் தமிழ் நாட்டு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவிற்குமிடையிலான அண்மைய சந்திப்பை சனாதிபதி வரவேற்றுள்ள அதேவேளையில் கோத்தாபய இராஜபக்ச தமிழ்நாட்டுத் தேசிய அவையையும் அதன் தலைவி செல்வி ஜெயலலிதாவையும் கடுமையாகச் சாடியுள்ளதோடு தமிழ்நாட்டு மக்களையும் அவமானப்படுத்தியுள்ளார். அரசுக்குள்ளேயே நடைபெறும் இதுபோன்ற முரண்பாடுகள் அரசிடம் அதிக நம்பிக்கையை எமக்கு ஏற்படுத்தவில்லை.

-முற்றுப் பெற்றது-

ஊடகத் தொடர்பு: சுரேன் சுரேந்திரன்

தொலைபேசி: +44 (0) 7958 590196

மின்னஞ்சல்: media@globaltamilforum.org

ஆசிரியர் குழுக் குறிப்பு;பு:

உலகத் தமிழர் பேரவையானது உலகளாவிய தமிழ் அமைப்புகளின் ஒரு கூட்டமைப்பாகும். பேரவை உறுப்பினர், நலன் விரும்பிகள் ஆகியோரினதும் அனைத்துலக அரசுகள், நிறுவனங்கள், அமைப்புகள் ஆகியவற்றிலுள்ள முக்கிய முடிவெடுப்பவர்கள் ஆகியோரினதும் அறிவையும் திறமைகளையும் ஒன்று திரட்டி, சிறீலங்காவில் இன்னலுறும் தமிழரது துயர்போக்கவும ; அவர்களது தன்னாட்சி உரிமையை முன்னெடுப்பதற்கு அனைத்துலகச் சட்டங்கள், அவற்றின் கூட்டு ஒப்பந்தங்ககள், பொதுவிணக்க ஒப்பந்தங்கள் ஆகியவற்றிலுள்ள மக்களாட்சிக்குரிய சட்ட வரம்புகளுக்கமைய உழைத்து வருகின்றது. இப்பேரவை 2009 இல் அனைத்துலகத் தமிழ்ச் சமூக அமைப்புகளின் உதவியோடு தொடங்கப்பட்டது. எமது நோக்கம் மற்றும் குறிக்கோள் ஆகியனவற்றை அறியத் தயவுசெயது; info@globaltamilforum.org உடன் தொடர்புகொள்ளவும் அல்லது www.globaltamilforum.org

http://www.thesunday...al-tamil-forum/

Edited by மோகன்

  • கருத்துக்கள உறவுகள்

akootha, font எழுத்து என் computer இல் வாசிக்க முடியாது உள்ளது,

w3tamil_wk & http://www.google.com/transliterate/indic/Tamil இவற்றில் cut & paste பண்ணி பார்த்தன் வாசிக்க முடியல

  • கருத்துக்கள உறவுகள்

akootha, font எழுத்து என் computer இல் வாசிக்க முடியாது உள்ளது,

w3tamil_wk & http://www.google.com/transliterate/indic/Tamil இவற்றில் cut & paste பண்ணி பார்த்தன் வாசிக்க முடியல

இணைப்பிற்கு நன்றி akootha, என்ர computer ல் தான் பிழை, இப்ப ok

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.