Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகிந்தவை சர்வதேச நீதிமன்றம் தண்டிக்க வேண்டும்! - டி.ஆர்.பாலு

Featured Replies

மகிந்தவை சர்வதேச நீதிமன்றம் தண்டிக்க வேண்டும்! - இந்திய நாடாளுமன்றத்தில் டி.ஆர்.பாலு உரை!!

தமிழினப் படுகொலையை மேற்கொண்ட சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன்னிறுத்தி கடுமையாகத் தண்டிக்க வேண்டும் என தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு வலியுறுத்தியுள்ளார்.

இந்திய நாடாளுமன்றத்தில் இன்று (25.08.11) இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து விவாதம் இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இலங்கைத் தமிழர் பிரச்சனைகள் குறித்து இந்திய நாடாளுமன்றத்தில் நேற்று விவாதம் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஊழல் பிரச்சனைக்கு முன்னுரிமை கொடுத்து விவாதிக்க வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி வலியுறுத்தியதால் இவ்விவாதம் இன்று வரை ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்திய நாடாளுமன்றத்தில் இவ்விவாதம் இன்று எடுத்துக் கொள்ளப்பட்ட போது உரையாற்றிய டி.ஆர்.பாலு, பொஸ்னியாவில் இனப்படுகொலையை மேற்கொண்ட அந்நாட்டின் படைத்தளபதியை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தண்டித்துள்ள நிலையில், சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு அதேபோன்ற தண்டனையை ஏன் வழங்க முடியாது எனக் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் தனதுரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது

'இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரின் போது பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். இப்போரின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ உதவிகளைக் கூட சிறிலங்கா அரசாங்கம் வழங்கவில்லை.

இப்போரின் போது இடம்பெயர்ந்த மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டனர். இன்னும் கூட அவர்களுக்கு விடிவு பிறக்கவில்லை. ஐக்கிய நாடுகள் சபை நிபுணர்கள் குழுவின் அறிக்கை இதை தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது.

தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்;பட்ட தமிழ் மக்கள் சொல்லொணா துயரத்திற்கும், சித்திரவதைக்கும் உள்ளானார்கள். பலர் படுகொலை செய்யப்பட்டனர். பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டனர்.

இலங்கையில் தமிழ் மக்களை படுகொலை செய்த சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும்.

இலங்கையின் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு சிறிலங்கா அரசாங்கத்துக்கு இந்தியா கடுமையான அழுத்தங்களைக் கொடுக்க வேண்டும்' என டி.ஆர்.பாலு தனதுரையில் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போர் முடிவுக்கு வந்த பின்னர் டி.ஆர்.பாலு தலைமையிலான தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு வன்னிக்கு விஜயம் செய்து நிலைமைகளை அவதானித்திருந்த போதிலும், அந்நிலைமைகள் தொடர்பில் காத்திரமான எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை.

அதேபோன்று வன்னியில் இறுதிக் கட்டப் போர் தீவிரமாக இடம்பெற்றுக் கொண்டிருந்த போது தமிழகத்தில் அப்போது ஆட்சியில் இருந்த டி.ஆர்.பாலு அங்கம் வகிக்கும் தி.மு.க போரை நிறுத்துவதற்கான காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

http://ponguthamil.com/news/contentnews.asp?sectionid=1&contentid={E2A601EA-C616-4433-A771-18E031D501A5}

  • தொடங்கியவர்

இலங்கை தமிழர் பிரச்னை: மேல்-சபையில் தமிழக எம்.பி.க்கள் வெளிநடப்பு

டெல்லி மேல்-சபையில், இலங்கை தமிழர் பிரச்னையில், கோரிக்கை நிறைவேறாததால், தமிழக எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர்.

டெல்லி மேல்-சபை நேற்று காலை துணை தலைவர் கே.ரக்மான்கான் தலைமையில் கூடியது. அப்போது, தமிழ்நாட்டை சேர்ந்த அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. எம்.பி.க்கள் எழுந்து, இலங்கை தமிழர் பிரச்னை பற்றி விவாதிக்க வேண்டும் என்று துணைத்தலைவரிடம் கேட்டுக்கொண்டனர். அவர்களின் கோரிக்கையை ஆதரித்து ராஷ்டிரீய

ஜனதா தளம், லோக் ஜனசக்தி கட்சி எம்.பி.க்களும் குரல் எழுப்பினார்கள்.

அப்போது பாரதிய ஜனதா துணை தலைவர் எஸ்.எஸ். அலுவாலியா மற்றும் அவரது கட்சியை சேர்ந்த எம்.பி.க்கள் எழுந்து, "அன்னா ஹசாரேþயின் உண்ணாவிரதம் பற்றியும், ஊழலை ஒழிக்க எடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் விவாதிக்க வேண்டும்" என்று வற்புறுத்தினார்கள். இதனால் தமிழக எம்.பி.க்களுக்கும், பாரதிய ஜனதா எம்.பி.க்களுக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது. இதைத் தொடர்ந்து சபையை பகல் 12.10 மணி வரை, சபையின் துணைத்தலைவர் ஒத்தி வைத்தார்.

பின்னர் சபை கூடியதும் இதே பிரச்னைக்காக தமிழக எம்.பிக்களுக்கும், பாரதிய ஜனதா எம்.பிக்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது பாராளுமன்ற விவகாரத்துறை ராஜாங்க மந்திரி ராஜீவ் சுக்லா எழுந்து, முதலில் இன்று(24-ந்தேதி) அன்னா ஹசாரே பிரச்னை பற்றி பேசுவோம். நாளை(25-ந்தேதி) இலங்கை தமிழர் பிரச்னை பற்றி பேசுவோம் என்று கூறினார்.

இதை எதிர்த்து தமிழக எம்.பிக்கள் குரல் எழுப்பினார்கள். இறுதியில் ஹசாரே பிரச்னையை முதலில் எடுத்துக்கொள்வோம் என்று துணைத்தலைவர் அறிவித்தார். இதைத்தொடர்ந்து தமிழக அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. எம்.பி.க்கள் அனைவரும் சபையை விட்டு வெளியேறினார்கள். லோக் ஜனசக்தி, பகுஜன் சமாஜ் கட்சி உறுப்பினர்களும் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

பின்னர் இந்திய கம்யூனிஸ்டு தலைவர் டி.ராஜா பேசுகையில், இலங்கை தமிழர் பிரச்னை தமிழ்நாட்டுக்கு மட்டும் உள்ள பிரச்னை அல்ல. இந்தியர்கள் அனைவரும் இதற்கு குரல் எழுப்ப வேண்டும் என்று குறிப்பிட்டார்.

http://www.koodal.com/news/india.asp?id=66887&title=dmk-aiadmk-members-walk-out-on-tamils-39-issue-india-news-headlines-in-tamilhttp://www.koodal.com/news/india.asp?id=66887&title=dmk-aiadmk-members-walk-out-on-tamils-39-issue-india-news-headlines-in-tamil

  • கருத்துக்கள உறவுகள்

அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் ஈழ விடயத்தில் ஒற்றுமையாக குரல் எழுப்பி, நிறைவேறாத பட்சத்தில் சேர்ந்தே... மேல் சபையை விட்டு வெளியேறியது வரவேற்கத்தக்க செயல். மற்றைய மாநிலத்தவர் போல, தமிழருக்கு பாதிப்பு ஏற்படுத்தும் விடயங்களில்.... இவர்கள் வருங்காலத்திலும் ஒற்றுமையாக செயல் பட்டால்... டெல்லி இறங்கி வரத்தான் வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.