Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மனித உரிமைகளை சிறீலங்கா மதிக்காவிட்டால் சர்வதேசம் தலையிடும். இது குறித்து றொபேட் பிளேக் சிறீலங்காவுடன் பேசுவார் - அமெரிக்கா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

vikthooriyaa%20nuland.jpg28 வருடங்களாக இலங்கைத் தீவில் நடைமுறையிலிருந்த அவசரகாலச் தடைச் சட்ட நீக்கத்தை வரவேற்று அறிக்கை வெளியிட்டுள்ள அமெரிக்கா இந் நடவடிக்கை ஒரு சாதக மனப்பாண்மையை வளர்க்கும் செயலென பாராட்டியுள்ளது.

இது குறித்துக் கருத்துத் தெரிவித்த அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பேச்சாளரான திருவாட்டி விக்ரோறியா நுலாண்ட் “நாங்கள் ராஜபக்ச பாராளுமன்றில் அவசரகாலச் சட்டத்தை நீக்குவது குறித்து பரிந்துரைத்ததை வரவேற்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

இது ஒரு ஆரோக்கியமான நடவடிக்கை. எங்களின் தென்னாசியாவிற்கான இராஜதந்திரச் செயலரான றொபேட் ஈ. பிளேக் அவர்களை ஆகஸ்ட் 29 முதல் ஆகஸ்ட் 31 வரை இலங்கை செல்லவும் வைத்துள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

இந்த நாட்களில் அவர் இலங்கை இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் முயற்சிகள் தொடர்பாகக் பேசுவதற்கு தமிழ்க் கட்சிகளுடன் சந்திப்பை மேற்கொள்வார் என்றும் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்வார் என்றும் தெரிவித்தார்.

அரச, அரச சார்பற்ற மற்றும் கட்சிகளுடன் விரிவான பேச்சுக்களில் ஈடுபடுவார் என்றும் நாங்கள் சிறீலங்கா அரசை மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமானச் சட்டங்களை மதிப்பது தொடர்பாகவும் கடந்த காலத்தில் அது தொடர்பாக நடைபெற்றவை தொடர்பாகவும் தேசிய ரீதியாக விசாரிக்கச் சொல்வோம் எனவும் தெரிவித்தார்.

அவர்கள் அவ்வாறு தங்களால் அதைச் செய்ய முடியாவிட்டால் இந்த விவகாரத்தில் சர்வதேசம் தலையிடும் என்பதை றொபேட் பிளேக் அவர்கள் ராஜபக்சவின் ஆட்சிக்குத் தெரிவிப்பார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ராஜபக்சாவின் இந்நடவடிக்கை குறித்துக் கருத்துத் தெரிவித்த சர்வதேச ஊடகமொன்று தமிழர்களுடான இறுதிப்போரில் சிறீலங்கா மேற்கொண்ட நடைமுறைகள் குறித்து அமெரிக்கா கொடுத்த அழுத்தமே அவரை இச்சட்ட நீக்கத்திற்கு இட்டுச் சென்றுள்ளது எனத் தெரிவித்துள்ளது.

http://www.eeladhesam.com/index.php?option

புஸ்சின் கீழே இருந்த பிளேக்கிற்கும் ஒபாமாவுக்கு கீழே உள்ள பிளேக்கிற்கும் வித்தியாசங்கள் தெரிகின்றன.

பொருளாதார சரிவு, சீனாவின் வளர்ச்சி, அரபு மக்களை எழுச்சி என்பன அமெரிக்காவின் வெளிவிவகார கொள்கைகளில் சில மாற்றங்களை அவர்கள் விரும்பாவிட்டாலும் செய்யவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

அந்த மாற்றங்கள் எமக்கும் ஒரு அரசியல் தீர்வை பெற்றுத்தரலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கேட்டு ...... கேட்டு புளிக்க போகின்றது எதையாவது முதலில் செய்யுங்கள்.

சிங்கள, அயலக இனப்படுகொலையாளர்கள் 40,000 க்கு மேற்பட்ட அப்பாவித் தமிழர்களை படுகொலை செய்வதைப் பார்த்துக்கொண்டிருந்த கையாலாக ராபர்ட் பிளாக் சிங்களக் காட்டுமிராண்டிகள் வழங்கும் விலைமாதர்களைக் கண்டால் தலை கீழாக நிற்பான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.