Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லஞ்சம் வாங்கிய இலங்கை அதிகாரிகள்: விக்கிலீக்ஸ்

Featured Replies

லஞ்சம் வாங்கிய இலங்கை அதிகாரிகள்: விக்கிலீக்ஸ் தகவல்

அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தை வழங்குவதற்காக இலங்கை உயரதிகாரிகள் சீனாவிடமிருந்து பெருந்தொகை பணத்தை லஞ்சமாகப் பெற்றுள்ளனர் என அமெரிக்கா நம்புவதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்துக்கும், கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்துக்கும் இடையில் 1986ஆம் ஆண்டு தொடக்கம் 2010 ஜனவரி மாதம் வரையிலான காலப்பகுதியில பரிமாறிக் கொள்ளப்பட்ட ஆயிரத்துக்கும் அதிகமான இரகசியத் தகவல்களை விக்கிலீக்ஸ் நேற்றிரவு வெளியிட்டுள்ளது.

இலங்கை தொடர்பாக நேற்றிரவு வெளியிடப்பட்ட 1646 ஆவணங்களில் அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா எவ்வாறான ஒப்பந்தத்தில் பெற்றுக்கொண்டது என்பது தொடர்பில் விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தத்தை சீன நிறுவனங்கள் பெறுவதற்கு லஞ்சமும், அரசியல் செல்வாக்குமே காரணமாக இருந்ததாக அமெரிக்கத் தூதரகம் அனுப்பிய இரகசிய ஆவணத்தில் கூறப்பட்டுள்ளது என்றும் விக்கிலீஸ் மேலும் குறிப்பிட்டுள்ளது.

அம்பாந்தோட்டைத் துறைமுகம் தலைநகர் கொழும்பில் இருந்து வெகு தொலைவில் இருப்பதாகவும், அதற்கருகில் கைத்தொழில், வர்த்தக கட்டமைப்புகள் ஏதும் இல்லை என்றும் விக்கிலீக்ஸ் வெளியிட்ட இரகசிய ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் துறைமுகத்தினால் உள்நாட்டு ஏற்றுமதி இறக்குமதியாளர்களுக்கு எந்தப் பயனும் கிடைக்காது என்றும், அம்பாந்தோட்டையில் அமைக்கப்படும் விமான நிலையம் கூட வாடகை விமானங்களை தரையிறக்கவே பயன்படும் என்றும் அந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு வெளியிடப்பட்டுள்ள ஆவணத்தில் விடுதலைப்புலிகள் தொடர்பான ஆவணங்களும் இலங்கை அரசு வெளிநாடுகளுடன் கொண்டுள்ள இரகசிய தொடர்புகள் பற்றிய தகவல்களும் வெளியாயின. விக்கிலீக்ஸ் நேற்றிரவு வெளியிட்டுள்ள அறிக்கையின் படி சீனா தொடர்பில் 8,320 ஆவணங்களும், ஆப்கானிஸ்தான் தொடர்பில் 7,095 ஆவணங்களும், இந்தியா தொடர்பில் 5,087 ஆவணங்களும், பாகிஸ்தான் தொடர்பில் 4,775 ஆவணங்களும் பங்களாதேஷ் தொடர்பில் 2182 ஆவணங்களும் வெளியாகியுள்ளன.

http://www.alaikal.com/news/?p=80323

  • தொடங்கியவர்

அம்பாந்தோட்டை துறைமுகம் வர்த்தக ரீதியில் பயனற்றதென அமெரிக்க அறிக்கை ஒன்று குறிப்பிடுகிறது.

அம்பாந்தோட்டை துறைமுகத்தினை அமைக்கும் திட்டத்தில் சீன நிறுவனங்கள், லஞ்சம் வழங்கி ஒப்பந்தங்ளைப் பெற்றிருக்கலாமென விக்கிலீக்ஸ் வெளியிட்ட அமெரிக்க ராஜதந்திர ஆவணம் ஒன்று குறிப்பிடுகிறது.

சீன நிறுவனங்கள் ஒப்பந்தங்களைப் பெறும்போது, அதற்காக பெருமளவு பணத்தை இலங்கை அதிகாரிகளுக்கு லஞ்சமாக வழங்குவது வழக்கமெனவும், அம்பாந்தோட்டையிலும், அத்தகைய நடவடிக்கை இடம்பெற்றிருக்கலாமெனவும் அமெரிக்க அறிக்கை குறிப்பிடுகிறது.

அம்பாந்தோட்டையை அபிவிருத்தி செய்வதில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஈடுபாடு எத்தகையதென்று தெரியவரவில்லையெனவும், ஆனால், சீன நிறுவனங்கள் ஒப்பந்தங்களுக்காக போட்டியிடும்போது, அதில் அவரும் தொடர்புபட்டிருக்கலாமெனவும் அமெரிக்க தூதரகம் அனுப்பிய அறிக்கை குறிப்பிடுகிறது.

அம்பாந்தோட்டையில் தனியார் முதலீடுகள் இதுவரை இடம்பெறவில்லையெனவும், அந்தப் பகுதியில் தனியார் முதலீடுகள் உடனடியாக இடம்பெறுவது சிரமமாக இருக்குமெனவும் வர்த்தக ரீதியில் அந்தத் திட்டம் பயனள்ளதாக அமைந்தால் தனியார் முதலீடு இடம்பெறலாமெனவும் விக்கிலீக்ஸ் வெளியிட்;ட அமெரிக்க ராஜதந்திர அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

http://thamilfm.com/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=9086

  • கருத்துக்கள உறவுகள்

அம்பா.... என்னும் பெயருடன் துறைமுகத்தை கிண்ட வெளிக்கிடும் போதே... அம்போ... தான்.

மகிந்த ராஜ பக்ச , அந்தக் கடலிலை குந்தி இருந்து குளிச்சாலும்... கோவணம் தெரியும்.

அதுக்குள்ளை கப்பல் வருகுதாம்....

  • தொடங்கியவர்

சர்வாதிகாரிகள் எல்லோருமே செய்வதுதான்.. தனது பெயர்; தனது ஊர்; தனது புகழ்;

இவைக்காவே மக்கள் பணத்தை பறிப்பது, பின்னர் ஒருநாள் அந்த மக்களாலேயே துரத்தப்படுவது.

இது வரலாறு, மகிந்தரும் படிக்காத, படிக்கும் வரலாறு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.