Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காட்டு நாய்த்தனம், வன்மம், கோபம், ஏமாற்றம், விரக்தி, ஆசை, கவலை, இன்பம், சோகம்...

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மனமும் தியானமும்

-கிருஷ்ணன், சிங்கப்பூர்.

asirvatham.jpg

அலைந்து அலைந்து களைத்துக் கிடக்கிறது மனித மனம். எதற்காக என்றே தெரியாத, காட்டு நாய்த்தனம்...! வன்மம், கோபம், ஏமாற்றம், விரக்தி, ஆசை, கவலை, இன்பம், சோகம், மகிழ்ச்சி என்றெல்லாம் மாறி மாறி மோதிய அலையில், மனதின் ஓரங்களில் கப்பிக் கிடக்கிறது உப்புப்பாளங்கள். அடித்தவனை கடிக்கப் பார்க்கும் ஆவேசம்- அறியாமல், காலை மிதித்தவனை நசுக்கி வைக்கும் மிருகரோஷம் மண்டிக் கிடக்கிறது.
இதிலிருந்து எப்படி விடுபடப் போகிறான் மனிதன் ?
விடுபடுவதையோ, விரயப்படுவதையோ உணராத உன்மத்த மனம்... 'சுய அறிதல்' இன்றி, மனம் இன்றி கரைந்து கொண்டிருத்தலைத் தடுத்துக் கரை சேர வழி காணவே இருப்பது பிறவிப்பயன்.....!

இந்த உலகின் தூய்மை அழிந்து கொண்டே போகிறது. பொய்மையும், பொய்யான, போலியான வேடமும், எடுத்து வைக்கிற ஒவ்வொரு அடியிலும், மனிதன் களங்கப்படவே செய்கிறான். மனநிம்மதியை, அமைதியை இழந்து அல்லல்படுவதற்குக் காரணம் ஆசை, பேராசை. இதனிலிருந்து விடுபட்டாக வேண்டும். அவனை விடுவிக்கும் ஆற்றல் வேறு எந்த சக்திக்கும் இல்லாத நிலையில் 'தியானம்' ஒன்றே ஆற்றல்மிக்கதாக விளங்குகிறது. அழிகின்ற உடல், அழிவற்ற 'ஆன்மா''

ஒவ்வொரு மனிதனுள்ளும் ஓர் ஆன்மா. இதனை உணர்வதின் மூலமே, அவன் இருளிருந்து மீள முடியும். இதன் மூலமே அவன் தன்னை உணர முடியும். அன்பு அழிந்து, சகோதரத்துவம் ஒழிந்து, மனிதநேயம் குறைந்து, மனிதனையே, மனிதன் நம்ப முடியாத நிலையில் மனிதனை மனிதன் கொல்வதில்- வக்கர சுகம் காண்பதில் வளர்ந்து கொண்டிருக்கிறான்.
ஐம்புலன்களும் கட்டவிழ்ந்து அலைகிறது. அதற்கு அடிமையாகி இழுத்த இழுப்புக்கெல்லாம் இணங்கிக் கிடக்கிறான். பேராசையின் விளைவால், தனது ஒவ்வொரு குற்றத்தையும் நியாயப்படுத்துகிறான். இதிலிருந்து விடுபட, தீய செயல்- தீய எண்ணங்களில் இருந்து 'விடுதலை' பெற வேண்டும். அதற்கு தியானம் அவசியம்.

இதனை அடைய பொருள் சார்ந்த இந்த உலக நிலை உதவாது. தியானமே அதனைக் கைகொள்ள, மேற்கொள்ள மிகச்சிறந்த வழியாகும். சக்தி முழுவதும் ஒன்று திரட்ட வேண்டும். மனிதனுள் வாழும் தீமையை ஒழித்தால் துன்பம் தொலையும். துன்பங்களுக்கு அடிப்படை காரணம் என்ன என்று அறிதல் வேண்டும்.

'நான் யார்? ' என்று உன்னையே கேட்டுப்பார் என்கிறது, சமயத் தத்துவம். நான் யார் என்று ஆராய்ந்து மனிதன், துன்பங்களை வெல்லும் போராட்டத்திற்கு தன்னை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.'நான்' என்பது கண்முன் தெரியும், புறத்தோற்றத்தால் அல்ல. ஆடை அணிந்து பகட்டாய், பார்வைக்கு இரம்மியமாய் காணும் புறநிலை அல்ல. அதற்கும் அப்பால் ஊடுருவிப் பார்த்தால், ஐம்புலன்களின் அவலத்திற்கு கட்டுப்படாமல், தலைவிரித்து ஆடாமல் பதவி, அந்தஸ்து பொருள் சார்ந்த வாழ்வு என்கிற தீயவைகளை வென்று நிற்கும் நிலையே 'நான்'.

அந்த 'நான்' ஒரு பிரகாசமான தெய்வீக ஒளி, அந்த ஒளி நிலையிலிருந்து வல்லமை மிக்க பரமாத்மாவுடன் தொடர்பு கொள்வதே, மனிதனின் இருளை நீக்கும். தன்னைப் பற்றிய உண்மை நிலையினை உணர வைக்கும். ஒவ்வொருவரும் ஓர் ' ஆன்மா ' என்ற உணர்வினை ஓங்கச் செய்தல் வேண்டும். அத்தகையதொரு மனவளத்தை அடைய வேண்டுமானால், சலசலப்புமிக்க இந்த சமுதாயப் புற ஆவேசங்களிலிருந்து மனதை ஒதுக்கி வைக்க ஒரே வழி தியானம்தான்.
தியானம் என்றால் என்ன ?

உங்களுக்குள்ளேயே பதுங்கி இருக்கும் பயனுள்ள, ஆக்கப்பூர்வமான நல்லொழுக்க சக்தியை கண்டறிதல், அனுபவித்தல், பயனடைதலே. ' தியானம் ' உன்னைப் பற்றியே, நீயே ஆழமாக அறிந்து கொள்ளும் உள்ளுணர்வை தூண்டுவதே தியானம்.
அமைதி, அன்பு, மகிழ்ச்சி ஆகிய இயற்கை வளத்தை மேம்படுத்தி உள் மன உணர்வை வலுப்படுத்துவதே தியானம்.
எதிர்மறையான எண்ணங்களில் இருந்து நம்மை விடுத்து - நம்மிலிருந்தே நம்மை விடுவித்து சுகந்திரமான ஆனந்தத்தை அனுபவிப்பதே தியானம்.
ஒவ்வொருவரும் ஓர் ஆன்மா என்பதை உணர வேண்டும். அந்த ஆன்மாவில் தெய்வீக ஒளிப் புள்ளியாய் புறப்படவேண்டும். அந்த ஆன்மீக ஒளியே, மனித சமுதாயத்தின் பொற்காலமாகும். மனம் சரியானால் மற்ற எல்லா விஷயங்களும் சரிவரும் என்பதில் ஐயமில்லை. மனம் பண்பட வேண்டுமானால் அதற்கான பயிற்சியில் ஒவ்வொருவரும் முறையாக ஈடுபட்டு வரவேண்டும். மனம் சீர் பட்டால் புலன்கள் அடக்கம் பெறுகின்றன. புலன்கள் அடங்கியதால் மனம் நம் கைவசம் இருந்துவிடும் என்பதும் சாதாரண வெற்றியல்ல.
மனம் எதை ஆழ்ந்து நினைக்கிறதோ அதன்படியே குணச்சித்திரம் பதிவு ஆகிவிடும். '' எவ்வுருயிரும் எவ்வுயிரை எச்செயலை நினைத்தால்,அதன் தன்மையாகி விடும்'' என்பதே உண்மை. மனிதன் அறிந்த ஏழு சம்பத்துக்கள், உருவமைப்பு, குணம், அறிவின் உயர்வு, கீர்த்தி, உடல், வலிவு, சுகம், செல்வம் ஆகியவை. இதில் ஒன்று குறைந்தாலும் அதை மனிதன் நாடிப் பெற வேண்டும்.

நமது தமிழர் வாழ்க்கை விஞ்ஞானப் பூர்வமானது. வழிபாட்டிலும் கூடத் தத்துவப் பூர்வமான உண்மை இருக்கிறது. மனதைப் பலப்படுத்தி, அதன் ஆற்றலை முறைப்படுத்தி, இயக்கி வேண்டியதைப் பெறலாம் என்ற வாழ்க்கை கண்டவர்கள், இறை நிலையின் உண்மையைக் கண்டவர்கள். அறிய முயலுபவர்கள் ஆரம்ப நிலையில் இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
தமிழர்களின் எளிமையும், அன்பும், இனிமையும், வலிமையும், நீதியும், நேர்மையும் அழியா சின்னங்கள். பழந்தமிழ் மக்களின் வாழ்க்கையும் முறைகளையும், சமுதாயப் பழக்க வழக்கங்களையும் மேல் நாட்டினர் கண்டு ஆச்சரியமடைகிறார்கள்.

உபநயனம், திருமணம் ஆகிய சடங்குகள் முறையோடு நடத்தப்படுவது போல் இசை, நாடகம், நடனம், இலக்கியப் படைப்புகளில் காணப்படும் புதுமைகள், கணிதம், வானியல், மருத்துவம், அறுவைச் சிகிச்சை போல் மனதினையும் பக்குவப்படுத்தி வாழ்க்கையில் ஒரு நெறி கண்டவர்கள். நமது வாழ்க்கை நெறி ஒரு வறட்டு கோட்பாடு அல்ல. மனதின் பூரணமே அதன் இலட்சியம். எந்த வெளி உலக சக்தியும் அதனை நசுக்கிவிட முடியாது. இருள் அடர்ந்த பின்னணியிலும் நமது பண்பாடு, கலாச்சார தீபம் அணைந்து விடாமல் அற்புதமாக ஒளிவீசுவது என்றால் நமது முன்னோர்கள், சித்தர்கள் கண்ட " தியானம் "
தியானம் என்பது நம் முன் நிலைத்துள்ள மூச்சைக் கொண்டு நமது அறிவு, சிந்தனை வேறு எங்கும் செல்லாது தூய அன்புடன் நம்முள் இறைவனை நேசிப்பதாகும். தியானம் செய்யும் போது நம்மை அறியாமல் ஒரு காந்த உஷ்ணம் ஏற்படும். அந்த உஷ்ணம் தியானத்தின் மூலம் மேலும் மேலும் பெருகும். காந்த உஷ்ணம் தசாய காந்த உஷ்ணமாக மாறி நமது சிரசில் போய் சேரும். நமது சிரசில் பல சுரப்பிகள் சுரந்து அற்புதங்கள் பல உண்டாகும். இவ்வாறு நிகழ்வதால் நமக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்பதை சற்று பார்ப்போம்.
  • உடல் உள்ளம் தூய்மை அடைகிறது.

  • உடல் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.

  • உடம்பில் இருக்கும் நோய்கள் குறைகிறது.

  • அன்பு, சாந்தம், ஆனந்தம், இன்பம் சுரக்கிறது.

  • சக்தி விரயமாவது தடுக்கப்படுவதுடன் உடலுக்கு புதிய சக்தியும் உற்பத்தியாகிறது.

  • மனம் இறுக்கத்திலிருந்து தளர்கிறது.

  • உடல் முழுதும் பூரண ஓய்வு கிடைக்கிறது.

  • குறைவான பிராண வாயுவே செலவாகிறது.

  • உள் உறுப்புகளில் உயிரணுகளுக்கு குறைவான வேலை கிடைக்கிறது.

  • குறைவான சுவாச இயக்கம் கிடைக்கிறது.

  • இதய துடிப்புக்கு குறைவான இயக்கம் கிடைக்கிறது.

  • மனிதனின் சிந்தனை சக்தியை தூண்டிவிடுகிறது.

  • தூக்கத்தினால் கிடைப்பதை விட உடலுக்கு அதிகமான ஓய்வு கிடைக்கிறது.

  • ஞாபக சக்தி, புத்தி கூர்மை அதிகரிக்கிறது.

  • மன உலைச்சல் மன அழித்தம் நீங்குகிறது.

  • அலைபாயும் மனம் அடங்கி அமைதியடைகிறது.

  • சிந்தனை ஆற்றலும், ஞாபக சக்தியும் கூடுகிறது.

  • நோய் இன்றி பெரு வாழ்வில் பல்வேறு பலன் கிடைக்கிறது.

  • மூச்சு விடும் விகிதம் குறைகிறது. ஆதலால் ஆயுள் நீடிக்கிறது.

  • இரத்த அழுத்தம், இதய நோய்கள், காசநோய்கள், தூக்கமில்லாத வியாதி, தோல் நோய்கள், நீரிவு நோய்களும் குணமடைகிறது.

மனம் சரியானால் மற்ற எல்லா விஷயங்களும் சரிவரும் என்பதில் ஐயமில்லை. மனம் பண்பட வேண்டுமானால் அதற்கான பயிற்சியில் ஒவ்வொருவரும் முறையாக ஈடுபட்டு வரவேண்டும். மனம் சீர்பட்டால் புலன்கள் அடக்கம் பெறுகின்றன. புலன்கள் அடங்கியதால் மனம் நம் கைவசம் இருந்துவிடும் என்பதும் சாதாரண வெற்றியல்ல.

இந்த வெற்றியின் வழி நாம் பரிபூரண ஆத்ம நிம்மதியும், இன்பமும் பெறுகிறோம். ஒருவர் அதிகம் பேசுவது கொண்டோ, சுறுசுறுப்புடன் வேலை செய்வது கொண்டோ இதனைக் கண்டறிய முடியும். அதேபோல்தான் மெளனமாக இருப்பதும்; மெதுவாகப் பேசுவதும் ஒருவரின் மனம் அடங்கப் பெற்றதை அல்லது புலன்கள் அடங்கி விட்டன என்பதை காட்டிவிடாது. சுருக்கமாக ஒருவரின் புறத்தோற்றம்- நடவடிக்கைகளை மட்டும் வைத்துக்கொண்டு மன ஒருமுகப் பாட்டை உறுதிப்படுத்த முடியாது. உதாரணத்திற்க்கு, ஒரு நீர் நிலையில் அதன் மேல்மட்டத்தில் நீரோட்டம் அல்லது அலை குறைந்தோ கூடுதலாகவோ எவ்வாறும் இருக்கலாம். ஆனால் நீர் நிலையின் அடியில் எப்படிப் பார்த்தாலும் நிதானமான நீர்தான் ஓடிக் கொண்டிருக்கும். இவ்வாறுதான், சுற்றியுள்ள சூழ்நிலைகள் பல மாதிரி இருந்தபோதிலும், மனம் என்பது அலையாது ஒரே நிலையில் இருக்கும் தன்மையுண்டு.

மனம் என்பதின் கூர்முனை எண்ணம் புருவ மத்தியிலுள்ள சூஸ்மத்தில் குவிகின்றது. இவ்வாறு குவியும் எண்ணம், ஒரு குழாயிலிருந்து விழும் நீர்த்துளி போல உணர்வு நிலையைத் தந்து கொண்டிருக்கும். அவ்வாறு எண்ணம் குவியாது இருந்தால் புலன்கள் சோர்ந்து தூக்க நிலைதான் உண்டாகும். பற்பல நிகழ்ச்சிகள் காண்பது போலிருக்கும். தியானம் பூரணமாக நடைபெறாது. அது உறைப்பான உணர்வு நிலைக்கோ - புத்திக்கோ கொண்டு செல்லாது. விழிப்பு நிலை இதனால் குறைவு பெறுவதுடன் மயக்க புத்தியைத்தான் வளரச் செய்கிறது. மாறாக, உணர்வு நிலையில் மட்டும் தியானத்தை கொண்டு சென்றால், அந்த உணர்வே பின் இதயத்திற்கு இறங்கி விடுகின்றன.அலை கடலில் நங்கூரமிட்ட கப்பலை போல் பிடிமானம் கொண்டு விடும்.
இந்த மனதினைக் குறித்து தாயுமானவரின் ஒரு பாடல்:

'' கொள்ளித் தேள் கொட்டி குதிக்கின்ற பேய்க் குரங்காய் கள்ள

மனம் துள்ளுவது என் கண்டாய் பராபரமே !

குணமில்லா மனமெனும் பேய்க் குரங்கின் பின்னே - மாளாத

கவலையுடன் சுழல என்னை வைத்தானையே !

பஞ்சாய்ப் பறக்கும் நெஞ்சம் பாவியேனைக் கூவி, ஐயா !

அஞ்சாதே என்று இன்னருள் செய்யவும் காண்பேனோ.....!
- தாயுமானவர்.
இதன் பொருள்:
மனம் கள்ளமற்று இருத்தல் வேண்டும். மாறாக மனதில் கள்ளம் புகுந்து விட்டால் மனமானது கொள்ளித் தேளினால் கொட்டப்பட்ட குரங்கினைப்போல் பின் துவளும். ஐயனே..., இறைவா...! நல்ல நிலையான குணமே இல்லாத இந்த மனமென்னும் பேய்க் குரங்கின் பின்னே என்னை மாறாத, மாளாத கவலையுடன் சுழலும்படி செய்துவிட்டாயே...! ஐயா...! அஞ்சாதே...! என்று அழைத்து அடைக்கலம் அருளக் காண்பேனோ நான்...!
தியானம் என்பது நம் முன் நிலைத்துள்ள மூச்சைக் கொண்டு நமது அறிவு, சிந்தனை வேறு எங்கும் செல்லாது தூய அன்புடன் நம்முள் இறைவனை நேசிப்பதாகும். தியானம் செய்யும் போது நம்மை அறியாமல் ஒரு காந்த உஷ்ணம் ஏற்படும். அந்த உஷ்ணம் தியானத்தின் மூலம் மேலும் மேலும் பெருகும். காந்த உஷ்ணம் தசாய காந்த உஷ்ணமாக மாறி நமது சிரசில் போய் சேரும்.
தியானம் ஆறு வகைப்படும். அவைகள் :

தியானம்- 1

குண்டலினியோகம் தியானம் எனும்இது தியானங்களில் மிக மிக முக்கியமானது ஆகும். தொப்புள் கொடியிலிருந்தும் முதுகு தண்டில் இருந்தும் பிரம்ம கபாலம் என்று சொல்லக் கூடிய சிரசு உச்சிக்கு தனது முழுச் சக்தியினையும் கொண்டு வருவதாகும். இது ஞானத்தின் திறவுகோல். அப்படி தன்னுடைய சக்தி அனைத்தும் சிரசு தானத்திற்கு கொண்டு வருபவர்கள் முகத்தில் ஞானி ஒளி வீசும். கண்கள் பிரகாசம் அடையும். இத்தகையோருக்கு சமாதி நிலை கிட்டும். இந்நிலையை அடைவோருக்கு சாதி, மதம், பேதம் கிடையாது.
  • குண்டலிமகா யோக தியானம் என்பது தொப்புள் கொடியையும் முதுகு தண்டையும் சிரசையும் வைத்து பெறுவதாகும். இதற்கு குண்டலினி மகாயோக தியானமென்பது. இதுதான் யோகங்களில் மிக சிறந்தது. இந்த யோகத்திற்கு இல்லற உறவிலிருந்து விடுபட்டு இருப்பது நல்லது. அவர்களூக்கு மட்டும் இது சித்திக்கும். இது நல்ல மனதையும் கல்வியையும் சிறந்த அறிவிவையும் - நோயிலிருந்து நிவர்த்தியும் தருவதாகும்.

தியானம்- 2
இரண்டாவது யோகமானது புருவ மத்தியை மையமாக கொண்டு சர்வேசுவரனாகி ஆண்டவனை மலர்ந்த தாமரை மலரின் மத்தியில் நிலை நிறுத்தி கோடி சூரிய பிரகாசமாக புருவ மத்தியில் தியானித்து ஜீவ ஒளியும் பரிசுத்த ஞானமும் பெறுவார்கள். இதையே E.S.P என்ற ஜீவ சக்தி பெறுவதற்கு உறுதுணையான தியானமாக செய்யலாம். [E.S.P என்பது EXTRA SENSE POWER என்ற அற்புத அதீத சக்தி என்று கூறப்படும்]
தியானம்-3
மூன்றாவது தியானமாவது இதயக்கமலத்தின் மத்திய ஆத்ம ஒளி பெறுவதற்கு தியானித்து நற்சிந்தை, நல்வாழ்க்கை, நல்வாக்கு பெறக்கூடியவர்களுக்கும் ஜீவ விடுதலை பெற்று ஜீவ முக்தி பெறுவதற்கு உரியதாகும்.

மற்ற மூன்று தியான முறையும் தன்னுடைய குருவைக் கொண்டு ஒன்றும் சூரியனை மட்டும் தியானித்து, ஒரு குறிப்பிட்ட மையப்புள்ளியை மையமாக வைத்து அதிலேயே தன் எண்ணங்களைக் குறித்து இரு கண்களையும் வைத்து அதிலேயே தன் எண்ணங்களைக் குறித்து இரு கண்களையும் ஒரே சமஅளவில் செலுத்தி தியானித்து வருபவர்களுக்கு ஹிப்னாடிசம் ( மனோவசியம்) கைக்கூடும்.
மனதுக்கு நிம்மதியை வேண்டுகிறவர்கள் தியானத்தின் மூலமாக அந்த நிம்மதியை அடைய முடியும். உடலில் ஏற்படுகிற நோய்களையும் தியானத்தின் மூலம் கட்டுப்படுத்த முடியும். தியான முறை என்பது தான் இணையவிருக்கும் இறைவனை அடைவதற்கு சரியான முறையாகும். நீங்கள் ஒருநாள் முழுதும் மவுனமாக இருந்து பாருங்கள். அன்று உங்கள் உள்ளம் முழுதும் சனமற்று இருப்பதை உணர்வீர்கள். இதைப்போல் நீங்கள் தியானம் ஆரம்பிக்கப்பட்டு 9 நாளில் தியானத்தின் உண்மையையும் பூரணத் தத்துவதையும் உடலில் உள்ள நோய்களிருந்தும் படிபடியாக விடுபட்டு புத்துணர்வு பெறுவதையும் 4443 நரம்பு நாடிகளும் புதுமைப் பெற்று ஒரு பூரண உற்சாகம், ஆரோக்கியம் பெறுவதை நீங்கள் உணர்வீர்கள்.
தியானம்-4

நான்காவது தியானம் என்பது சர்வமும் ஏகாந்தம். நீக்கமற எங்கும் நிறைந்த இறைசக்தியை உணர்வது, அறிவது, தெரிவது, தெளிவது. இது புத்தியை ஆதாரமாக கொண்டு சிந்திப்பது. இதை புத்தர் பிரான் பின்பற்றினார். பிறப்பு, மூப்பு, இறப்பு, வாழ்வு என்ற நால்வகை தத்துவங்களில் தம்மனதை நிலை நிறுத்தி சிந்தித்து சிந்தித்து இடைவிடாது சிந்தனையின் பலனாய் பர ஒளியை அடைவதாகும், தீர்க்க தரிசனம் பெறுவதாகும். தன்னுள் மறைந்து கிடக்கும் அறிவு ஒளியை இவ்வுலக இயக்க நுண்கதிர்களுடன் சூரியனிலிருந்து வரும் ஏழுவிதமான வர்ண ஒளி அலைகளுடன் இணைத்து ஏகாந்த சித்தி பெற பயன் பெறுவதாகும்.
இதற்கும் இறை வழிபாட்டிற்கும் தொடர்பு இல்லை. நல்ல கொள்கைகளை கடைப் பிடித்து அன்பு இரக்கம் மேலான நற்சிந்தை கொள்வதாகும். ஒருவரை ஒருவர் புரிந்துக்கொண்டு தன்னலம் கருதாத சேவையின் மூலம் இறைநிலை அடைவதாகும். இதன்படி செய்யும் தியானம் மானசீகம் வசீகரம் சர்வ வல்லமை ஆசையின்மை இவ்வுலக இன்பங்களிலிருந்து விடுதலை பெற்றவர்களுக்கு மட்டும் சித்தியாகும். இத்தகைய தியானம் சித்தியை உடையவர்களை எல்லா உயிர்களும் தொழும். உயிர் கொல்லாமை ஆத்மா ஒன்றே என்ற மனப்பக்குவம் பெறுதல்,மேலான குணங்களை இந்த புத்திமார்க்க தியானம் மிகச் சிறந்ததாகும். தியானத்தின் மூலம் தான் கண்ட அறிவு ஒளியை ஆத்மசக்தியால் கிடைத்த உண்மையின் தத்துவங்களை மக்களுக்கு போதிப்பதாகும். இதற்கு சாதி, மத பேதம் கிடையாது.
தியானம்-5
இதற்கு பஞ்சம் யோகம் என்று பெயர். இது ஏகாந்தமாக இருப்பதற்கும் முழு துறவியாக இருப்பதற்கும் ஏற்றதாகும். இது முற்றிலும் துறந்த நிலையாகும்.சர்வமும் இறைவன் மயம் என்னும் சர்ணாகதி நிலை. நமக்கு மேலே இறைவன், அவன் நாலும் அறிந்த ஒருவன். நிற்பதும் நடப்பதும் - உண்பதும் உறங்குவதும் இறைவன் செயல் என்று நினைப்பவர்கள்.
தியானம்-6
இதற்கு சர்வாங்க யோகம் என்று பெயர். இது நோயிலிருந்து விடுபடுவதற்கும் உடலையும் மனதையும் கட்டுபாடாக வைத்துக் கொள்வதற்கும் இருதயத்தின் மத்திய பாகத்தை வைத்து ஆத்மஜோதியை உணர்ந்து அறிந்து கொள்வது இந்த தியானமாகும். இது குரு மூலம் தியானித்து சித்தி பெறுவதாகும். அட்டமா சித்திகளை தரும் கட்டுப்பாடற்று திரியும் மனதை ஒரு நிலைப்படுத்தி எண்ண அலைகளை அடக்குவது. மனம் பரிசுத்தம் நிறைந்தது. அதில் ஒரு சிறுபுள்ளி விழுந்தாலும் எண்ண அலைகளை அது மாற்றிவிடும்.
கண்ணாடி புகைபடியாது தூய்மையாக இருந்தால் அதில் தெளிவான உருவத்தினை காண இயலும். அது தூய்மையற்றதாக இருந்தால் உருவம் தெரிவாகத் தெரியாது. சிறிது நேரம் கண்ணை மூடி அமைதியாக இருங்கள். இயற்கை ஒடுங்குதலை உணவீர்கள். நீங்கள் யார் என்பதை உணர ஆரம்பிப்பீர்கள். பேரானந்தத்தின் வாசல் கதவின் திறவுகோல்தான் தியானம். மற்ற ஏனைய வழிபாடுகளைக் காட்டிலும் தியானத்துடன் ஒப்பிடக்கூடிய வழிபாடு எதுவும் இல்லை. ஆனந்தம், ஆன்மீக உணர்வு உங்கள் ஆன்மாவில் உள்ளது. உங்களுக்குள் மறைந்து கிடக்கும் பேரானந்தத்தை சதா சிந்தித்தும் தியானித்தும் அறிந்துக் கொள்வதே தியானமாகும்.

உங்களால் முடியாது என்பது எதுவுமில்லை. எதையும் முடியாது என்று ஒதுக்கி, தள்ளி விடாதீர்கள். நியூட்டன் புவியீர்ப்பு சக்தியை கண்டுபிடிக்கும் போது எண்ணம் முழுக்க அதிலேயே செலுத்தியதால்தான் கண்டுபிடிக்க முடிந்தது. அப்படியேதான் எல்லா விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் கண்டு பிடிக்கும் போதும் இருந்திருக்கும் என்பது உண்மை. அது போல உங்களுடைய எண்ணங்களும் சிந்தனைகளும் தியானத்தின் மூலம் ஒரு நிலைப்படும் போது உங்களுக்குள் ஒளியினை காணமுடியும். உங்கள் வல்லமை வெளியுலகில் இல்லை. அது உங்களுக்குள்ளேயே புதைந்து கொண்டு இருக்கிறது. ஒருவனின் சிந்தனை அவனின் கண்டுபிடிப்பில் அவனை வெளிக்காட்டிக் கொண்டு இருக்கிறது. இடைவிடாது உங்களது இலட்சியத்தைக் குறித்து போராடுங்கள். வெற்றி நிச்சயம்.
அச்சமற்ற வாழ்வதற்கு பழகிக் கொள்ள உதவுவதுதான் தியானத்தின் சக்தியாகும். சக்தி, சித்து, பரவொளி ஆகிய அனைத்தும் உடையவர்கள் நீங்கள். தியானப் பயிற்சியில் கிடைக்கும் வெற்றியும், அந்த வெற்றியின் பின்னே நமக்கு இன்பம் தருவதாகவும், சகல விஷயங்களையும் புரிந்து கொள்ள வாய்ப்பாகவும் அமைகிறது. நுண்ணிய விஷயத்தினையும் தன் இதயத்தின் மூலமே தெளிவு படுத்திக்கொள்ள தியானத்தின் மூலம் கிடைக்கும் ஒருமுகப்பாடு துணை செய்கிறது. இன்பமும் பெருகுகிறது.
மனம் நிலைபெற, இன்பம் பெற - தினமும் பத்து நிமிட மணித்துளிகளை ஒதுக்குங்கள்.

http://www.muthukamalam.com

Edited by Udaiyar

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.