Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வரலாறு எப்போதும் ஒரே திசையில் செல்லாது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

thalaivar_20110527_1653291312.jpg

காலம் மாறியது காட்சியும் மாறுகிறது, தமிழர் தேசத்தின் நிர்மாணத்திற்கு,தொடரட்டும் வெற்றிகள்.தமிழ்நாட்டு நிகழ்வுகள் உலகத்தமிழினத்தின் ஜீவநாடியாகும்,உலகத்தமிழினம் இன்று நெஞ்சம் நிமிர்க்கிறது.

உலகத்தின் ஏதோ ஒரு மூலையில் இருந்தாலும்,பதுங்கிய புலியாய் சுதந்திர தமிழீழத்தை உருவாக்குவதை மட்டுமே சுவாசித்துக்கொண்டிருக்கும் உலகத்தமிழர்களின் தலைவனின் நெஞ்சம் குளிர இன்று தொடங்கிய ராஜதந்திர வெற்றிகளின் தொடர்ச்சி நிச்சயமாக விரைவில் சுதந்திர தமிழீழம் அமைக்கும்.

தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து எதிரிகளும் துரோகிகளும் சற்றும் எதிர்பாராத வகையில் தமிழ்நாட்டு சட்டப்பேரவையில் பேரறிவாளன்,சாந்தன்,முருகன் ஆகியோரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரும் தீர்மானத்தை துணிச்சலாக நிறைவேற்றி தந்திருக்கும் மாண்புமிகு தமிழ்நாட்டு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா

அவர்களை உலகெங்கும் வாழும் தமிழர்கள் கை கூப்பி வணங்கி நன்றி தெரிவிக்கிறார்கள்.

அம்மா ஜெயலலிதா இன்று நமக்கு காவல் தெய்வமாய் காட்சிதருகிறார்,அதேபோல சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்காடிய வழக்கறிஞர் பெருந்தகைகள் ராம்ஜெத்மலானி,மொகித்சவ்த்ரி,காலின்சால்வேஸ்,மற்றும் என்றென்றும் நமக்காக உணர்வோடு செயல்ப்பட்டுக்கொண்டிருக்கும் வழக்கறிஞர்கள் , துரைச்சாமி,சந்திரசேகர்

ஆகியோர் அடங்கிய படையணி பெற்றுத்தந்திருக்கும் இரண்டுமாதகால தடை உத்தரவு,நிச்சயமாக தூக்கு தண்டனையை ரத்து செய்யும் என்ற நம்பிக்கை பிறக்கிறது.

இப்போது பெரியார் ஊட்டிய இன உணர்வு மீட்டெடுக்கப்படவேண்டும்,துரோகிகளிடமும் கயவர்களிடமும் அப்பாவிகளாக சுய சிந்தனை அற்றுப்போய் இருக்கும் தமிழ் இனத்தை,தட்டி எழுப்பவேண்டும்,குமுறி அழுவது,உரக்க கத்துவது,இல்லையென்றால் வெம்பி தீக்குளிப்பது என்ற நிலைக்கு காரணம் ஒன்றே ஒன்றுதான்,தாயக தமிழ்நாட்டில் ஒரு துரோகியின் ஆட்சி நடந்தது மட்டும் தான் காரணம்.இந்த இனத்தில் மட்டும் தான் துரோகிகள் தலைமை பீடம் வரைக்கும் வரமுடிகிறது.நெஞ்சை அறுத்துக்கொண்டு இருக்கும் ஒரு வேதனை என்னவென்றால்,இன்னும் அந்த துரோகியின் பின்னால் 22 சதவீத வாக்காளர்கள் இருக்கிறார்கள்.தமிழ்நாட்டு மக்கள் இன்னும் ஏன் அந்த துரோகியையும் துரோகியின் குடும்பத்தையும் காறி உமிழ்ந்து ஒதுக்கவில்லை என்பது ஏனென்று புரியவில்லை.

துரோகியாலும் துரோகியின் குடும்பத்தாலும் ஒவ்வொரு தமிழனும் பாதிக்கப்பட்ட நிலையிலும் கூட தமிழ்நாட்டு தமிழனின் குணத்தை நன்கு அறிந்தவனாகையால் இன்றும் கூட வேடிக்கை அறிக்கைகள் வெளிவந்திருக்கிறது.நெஞ்சம் மறக்கவில்லை,ஈழத்து தமிழர்களுக்காக பேசிய சீமானை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்தது.அதேபோல டைரக்டர் அமீர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம்,அய்யா நெடுமாறன் மீது தேசியபாதுகாப்புச் சட்டம்,கோவை ராமகிருஷ்ணன்,கொளத்தூர்மணி ஆகியோர் மீதும் தேசியபாதுகாப்புச் சட்டம்.....எப்படி சாத்தியமாயிற்று இது,இந்தியாவில் சிங்கள தேசிய பாதுகாப்புச்சட்டம் எப்படி நடைமுறைக்கு வந்தது?அதற்கு மிக முக்கிய காரணம் தமிழன்

வசனபோதைக்கு அடிமையாக இருந்தது தான்.தமிழன் துரோகிகளை அடையாளம் காண தவறியது தான்.அடுத்த மிக முக்கிய காரணம் தமிழ்நாட்டு தமிழன்,தன்னுடைய உள்ளூர் பிரச்சனைகள்,மற்றும் தனிப்பட்ட குடும்பத்தில் சொந்தங்களுக்கு இடையில் ஏற்படும் மிக மிக அற்பமான கவுரவ பிரச்சனைகளுக்காக,அரசியல் பின்புலம் தேடி அலைகின்ற காரணத்தால் இத்தகைய துரோகிகள் தலைவனாக பவனிவர முடிகிறது.மிகவும் நுட்பமாக சிந்தித்து துரோகியின் பின்னால் அடிமைப்பட்டு

போயிருக்கும் அப்பாவி தமிழ் மக்களை துரோகியிடம் இருந்து மீட்டெடுக்க வேண்டும்.அதை செய்வதற்கு இதுவே மிக மிக சரியான காலகட்டம்.அடுத்தது அன்றே பெரியார் சொன்னார் பாம்பையும் பாப்பானையும் ஒன்றாக பார்த்தால் பாம்பை விட்டுவிடு பாப்பானை முதலில் அடி என்றார்.

பெரியார் சொன்னதை செய்யத்தவறியதன் விளைவு என்னவென்று தெரியுமா?தமிழ்நாட்டில் வாழ்ந்துகொண்டு,தமிழால் பிழைத்துக்கொண்டு,தமிழனின் பணத்தில் வியாபாரம் நடத்தும் ஒரு பார்ப்பன தினசரி பத்திரிக்கை தினமலர் என்னும் இதழ்,அன்றிலிருந்து இன்றுவரைக்கும் தமிழனுக்கு விரோதமாகவே எழுதிவருவது தமிழ்நாட்டில் இருக்கும் அனைவருக்கும் நன்றாக தெரிந்து இருக்கிறது.

நேற்று தீக்குளித்த தோழர் செங்கொடி வெந்தது என்னமோ சில பல நிமிடங்கள் தான்,ஆனால் இன உணர்வும் மொழி உணர்வும் கொண்ட தமிழ்நாட்டு தமிழர்களின் நெஞ்சில் அந்த தோழர் செங்கொடியின் தீக்குளிப்பு செய்தி இன்னும் நெஞ்சை வேகவைத்துக்கொண்டிருக்கிறது....ஆனால் இன்றைக்கு கூட தீக்குளித்த தோழர் செங்கொடியை

கொச்சைப்படுத்தி எழுதி இருக்கிறான், அந்த பத்திரிக்கையையும் பணம் கொடுத்து வாங்கி படிக்கும் இழிநிலை தமிழ்நாட்டு தமிழனிடம் மட்டும் தான் உள்ளது.அது எப்படி தமிழ்நாட்டு தமிழன் உணர்வற்று போனானென்று தெரியவில்லை.

பெரியார் வளர்த்த இன உணர்வுகள் எல்லாம் வியாபாரிகளிடமும்,விஷமிகளிடமும் முடங்கிப்போன மர்மத்தை அடையாளம் கண்டு உடைத்து நொறுக்கி இன மானம் மீட்டெடுக்க வேண்டும்.கிறிஸ்தவனுக்கு ரோமாபுரி போல, வெள்ளைக்காரனுக்கு அமெரிக்கா போல,தமிழனுக்கு அரசியல் எல்லைகளை கடந்த ஒரு இன தலைமை வேண்டும்

ஏனென்றால் ஆசியாவின் ஒரே சர்வதேச இனம் தமிழன் மட்டும் தான்.இதை ஒவ்வொரு தமிழனும் உணரவேண்டும்.

இனி வரும் காலம் தமிழனின் காலம்.

இன்று தொடங்கி இருக்கும் இந்த வெற்றி இன்னும் தொடரும் பல பரிணாமங்களில் தொடரும்.

தமிழீழ தேசிய தலைவரின் வனவாசம் விரைவில் முடிவுக்குவரும்.

உலகத்தின் முதல் தமிழ் தேசமாயும் தமிழர் தேசமாகவும் தமிழீழம் விரைவில் உதயமாகும்.

ஈழதேசம் இணையதளத்திற்காக தமிழ்நாட்டில் இருந்து நா.மூர்த்தி

http://www.eeladhesa...ndex.php?option

Edited by தமிழ் அரசு

வரலாறு எப்போதும் ஒரே திசையில் செல்லாது

அது தானாகவும் திசை மாறாது.

கடும் முயற்சி செய்தால் மட்டுமே திசை மாறும்.

பூனைக்கு மணிகட்டுவது யார்?

கடந்து சென்றவைதான் வரலாறு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.