Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அவரை ஒரு முறை கைது செய்து தெருவிலே இழுத்து சென்றார்கள்

Featured Replies

மோசமான படத்துக்காக என் படம் பயானது!

""அதிகாலையில் நியூஸ் பேப்பரோடு சில மழைத்துளிகளையும் விட்டெறிந்து செல்கிறான் பேப்பர் சிறுவன். குப்பைகளோடு மழைத்துளிகளையும் அள்ளிச் செல்கிறார் நீல் மெட்டல் பனால்கா ஊழியர். வாழ்க்கை எல்லா தருணங்களிலும் ரசனைக்குரியதுதான்''... பேட்டியை இப்படி வித்தியாசமாகத் தொடங்கி வைக்க இயக்குநர் சீனு ராமசாமியால் மட்டுமே முடியும்.

மதுரையில் பிறந்த நீங்கள், சினிமா கோட்டையில் காலூன்றியது எப்படி?

அய்யா பழ.நெடுமாறனுக்கு இதில் பங்கிருக்கிறது என்றால் அவருக்கேகூட ஆச்சர்யமாகத்தான் இருக்கும். நாங்கள் குடியிருந்த மேலமாசி வீதியில்தான் அவரும் குடியிருந்தார். அவருடைய விவேகானந்தர் அச்சகம் அங்கே செயல்பட்டுக் கொண்டிருந்தது. அங்கே நூல்கள் அச்சாகும். அது எனக்கு வியப்பான விஷயமாக இருந்தது.

அந்தப் பகுதியில் அவருடைய செயல்பாடு மட்டும் மற்றவர்களிலிருந்து வித்தியாசமாக இருந்தது. எதற்காகவோ அவரை ஒருமுறை கைது செய்து

தெருவிலே இழுத்துச் சென்றார்கள். எனக்கு அவர் என்ன செய்கிறார்.. எதற்காக அவரைக் கைது செய்தார்கள் என்பதெல்லாம் தெரியாத வயது. சாதாரணமானவர்கள் மத்தியில் அவர் அசாதாரணமானவராகத் தெரிந்தார்.

என் பிஞ்சு மனதில் விழுந்த தேடலுக்கான விதை அது.

அரசியலும் இலக்கியமும் சினிமாவும் ஒன்றைத் தொட்டு ஒன்றாக அப்படித்தான் எனக்கு அறிமுகமானது.

சினிமாவில் யாரிடம் பணியாற்றினீர்கள்?

பாலுமகேந்திராவின் திரைப்படங்களை விமர்சித்து நான் எழுதிய நீண்ட கடிதம் என்னை அவருக்கு அறிமுகப்படுத்தியது. என்னை சென்னைக்கு வருமாறு அழைத்தார். பிறகு, அவருடன் "ராமன் அப்துல்லா' படத்தில் பணியாற்றினேன். தொடர்ந்து சீமானிடம் பணியாற்றினேன். விளம்பரப் படங்கள் தயாரித்தேன். சினிமா இயக்கும் வாய்ப்பு கிடைத்த ஒரு நீண்ட போராட்டத்தின் கதைச்சுருக்கம் இது.

"தென்மேற்கு பருவக்காற்று' படத்துக்கான தேசிய அங்கீகாரம் எப்படியிருக்கிறது?

எல்லோரும் பணத்துக்காகத்தான் ஏதோ ஒரு தொழிலைச் செய்கிறோம். பணத்துக்காகத்தான் நானும் படம் எடுக்கிறேன். ஆனால் நான் சாராயம் விற்கவில்லை. இளநீர் விற்கிறேன். சாராயம் விற்கிறவர்கள் மத்தியில் இளநீருக்கும் மரியாதை இருக்கிறது என்பதுதான் இந்த அங்கீகாரம். படத்துக்கு மூன்று தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டது.

இதோ அடுத்த மாதம் என் படைப்புக்கான தேசிய விருதை வாங்க அழைத்திருக்கிறார்கள். சந்தோஷம். என் பூமியை, அங்கு வாழும் தாயை, என் மண்ணின் கலாசாரத்தைப் பதிவு செய்த படைப்புக்கு விருது கிடைத்திருப்பதில் இன்னும் கூடுதல் சந்தோஷம்.

""கள்ளிக் காட்டில் பிறந்த தாயே...''ன்னு பலமான வரிகள் கொடுத்து, இந்த கிணற்றில் தவளைகள் கிடக்குதுன்னு வெளிச்சம் காட்டிய கவிஞர் வைரமுத்துவை நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன். வீரத் தாயாக வாழ்ந்து காட்டினார் சரண்யா பொன்வண்ணன்.

அந்த இருவருக்கும் விருதுகள் கிடைத்திருப்பதில் இன்னும் மகிழ்ச்சி... இந்த அங்கீகாரம்... இந்த விருது இன்னும் இங்கு நல்ல சினிமாக்களை உற்பத்தி செய்யலாம் என்ற நம்பிக்கையைத் தந்திருக்கிறது.

விருது கிடைத்தும் நிறைவு இல்லாதது போல பேட்டியளித்திருந்தீர்களே?

விருது கிடைத்தது மகிழ்ச்சிதான். இன்னும் இன்னும் தேடலை, அதற்கான தைரியத்தைத் தந்த இந்த விருதுக்கு கோடி நன்றிகள். ஆனால் இந்த சினிமா இன்னும் நிறைய பேரை சென்று சேரவில்லை என்பதில் நிறைய வருத்தம்.

இனி அப்படி நடக்காமல் பார்த்துக் கொள்வது யாரின் பொறுப்பு?

நட்சத்திர அந்தஸ்து இல்லாத இந்தப் படத்தை மக்கள் ஆதரிக்க ஆரம்பித்த நேரம்... நாடெங்கும் மகிழ்ச்சியாக படத்தின் வெற்றிகரமான 25-வது நாள் போஸ்டர் ஒட்டிக் கொண்டிருந்தோம். அதே நாளில் ஒரு பெரிய நிறுவனத்தின் படம் ரிலீஸ் ஆகிறது என்பதற்காக என் படத்தை எல்லா தியேட்டரிலிருந்தும் ஒரே நாளில் அப்புறப்படுத்திவிட்டார்கள்.

ஒரு நல்ல படத்தை மக்களிடம் கொண்டு செல்லும் அக்கறை இல்லாமல் போனதுகூட கவலை தரவில்லை. ஒரு மோசமான படத்துக்காக என் படம் பலியானது ஆறாத ரணமாக இருக்கிறது.

நல்ல படங்களை ஆதரித்தால் இன்னும் நிறைய படைப்பாளிகள் இங்கு வருவார்கள். கமர்ஷியலைத் தாண்டி சில படைப்பாளிகள் யோசிக்க முயல்வார்கள். அப்படி யோசிக்க வைப்பது நாட்டுக்கும், ரசிகர்களுக்கும் நல்லது.

அடுத்த படமும் வேறொரு புவியியல் சார்ந்த களத்தில் படமாகிறதாமே?

ஆமாம். "நீர்ப்பறவை' என்று பெயர். கடலும், அதைச் சார்ந்த நிலங்களும்தான் களம். அலையில்லாத கடல் பகுதியில் வாழும் பெண்ணுக்கும், அலையின் வேகம் அதிகமான பகுதியில் வாழும் இளைஞனுக்கும் காதல். மீனவர்களின் சோகம் சூழ்ந்த வாழ்க்கை.

அவர்களைச் சுற்றி நடக்கும் அரசியல்ன்னு பரபரப்பு வைத்திருக்கிறேன். நிறைய அதிர்ச்சி காத்திருக்கிறது.

கவனிக்கப்படாத மனிதர்கள், நித்தம் நித்தம் பரபரப்பான வாழ்வு என்று ஒரு இனத்தின் முழு பதிவு இது. சென்னை தொடங்கி கன்யாகுமரி வரை நீண்ட கடல் பரப்பு தமிழகத்துக்கு உண்டு.

தமிழில் இக் கடற்கரை மனிதர்களின் வாழ்வை ரத்தமும் சதையுமாக யாரும் படமாக்கவில்லை. நாவல் இலக்கியத்திலும்கூட கிறிஸ்தவ பரதவர்கள் வாழ்வைச் சொல்லும் சில நாவல்கள் மட்டுமே வந்திருக்கின்றன. தூத்துக்குடி, நாகர்கோவில், நெல்லை கடற்பரப்புகள் மட்டுமே பேசப்பட்டிருக்கின்றன. நான் சொல்லப் போவது தொண்டி துறைமுகப் பகுதி. பெரும்பாலும் இந்து மீனவர்கள் வசிக்கும்பகுதி. புதிய அனுபவமாக இருக்கும். இது அரசியல் மட்டுமே மையமானது அல்ல. அதைத் தாண்டிய அவர்களின் வாழ்வின் இயற்கைப் போராட்டத்தின் சூழலையும் சொல்லும்.

பாலுமகேந்திரா உங்கள் குரு. ஆனால் அடிக்கடி இயக்குநர் மகேந்திரனை சந்தித்து பேசுவீர்களாமே?

எனக்கு இரண்டு பிறப்பு இருக்கு. என் முதல் பிறப்புக்கு தாய், தந்தை என்ற சம்பிரதாயங்கள் தேவைப்பட்டன. என் இரண்டாம் பிறப்புக்கு தாயும் தந்தையுமாக இருப்பவர் என் குரு பாலுமகேந்திரா. ""இந்த உல

கத்தை, இந்த வாழ்வை, உன்னை கடந்து சென்று விட்ட இந்த தருணத்தை இப்படித்தான் பார்க்கணும். சந்தோஷம், துக்கம்ன்னு எல்லாமும் இருக்கு. எல்லா நேரத்திலும் கொஞ்சம் சிரித்து வாழ பழகிக் கொள்''ன்னு நடை வண்டி சிறுவனின் தாயைப் போல என்னைப் பாதுகாத்தார். இப்போதும், இனி வாழும் நாள்களிலும் அவரின் புகழைப் பாடி திரியும் ஒரு முக்கியமான பாடகன் நான்தான்.

இயக்குநர் மகேந்திரன் மீது ஈர்ப்பு வந்தது எப்படி? அவரை நேரில் சந்தித்தீர்களா?

அதேபோல மகேந்திரன் சார் என் எல்லா நாள்களுக்குமான ஆதாரம். 92-ம் ஆண்டு மதுரை அமெரிக்கன் கல்லூரியில் திரையிட்ட "முள்ளும் மலரும்'தான் புதிய திசைக்கான கதவைத் திறந்து வைத்தது. அதுவரை இலக்கியம் படிப்பவனாக மட்டுமே இருந்த என்னில் ஒரு முழு நீள திரைப்படம் நீக்கமற்ற கவிதை நூலாக மனதில் பதிந்தது. மனசு, உடம்பு இரண்டையும் ஒரே நேரத்தில் உறைய வைத்த படம் அது.

ஒரு பனி இரவின் பிற்பகுதியில் அந்தப் படத்தைப் பார்த்துவிட்டு ஏழு கிலோ மீட்டர் வரை நடந்தே வீடு வந்தேன். தூங்கி எழுந்ததும் என் இரண்டு தங்கைகள் மீதும் என்னையறியாமல் அவர்களுக்காக உள்ளார்ந்த கண்ணீர் என்னுள் சுரக்க தொடங்கியது. ஒரு அண்ணனாக உணர்ந்த ஒரு உன்னதமான நிமிடம் அது. ஒரு சினிமா சிரிக்க வைக்கலாம்... அழவும் வைக்கலாம்... வாழக் கற்றுக் கொடுத்தது.. அதுதான் "முள்ளு முலரும்'. பெண்மையின் பேச்சற்ற கணத்தின் பின்னணியில் இருக்கும் மௌனத்தின் அர்த்தம் புரியத் தொடங்கியது.

பின்பு அவரின் அத்தனை படங்களும் என்னுள் உதிரிப்பூக்களாக என்னுள் நிறைந்தது. ஏகலைவத் தவம் தொடங்கியது. ஒரு படத்தை இயக்க வேண்டும் என்றும் அதன் மூலமே அறிமுகமாக வேண்டும் என்றும் தவிப்பு இருந்தது. "ஜானி' மாதிரி ஏன் முயலக்கூடாதென "கூடல் நகர்' படத்தை முயன்றேன். ஆனால் அவரை சந்திக்கும் துணிவு வரவே இல்லை.

"தென்மேற்கு பருவக்காற்று' அத்திசையின் கதவுகளைத் திறந்தது. படத்தை அவர் பார்த்து விட்டார் என்பதை அறியாமலே, என் படத்தைப் பார்க்குமாறு தொலைபேசியில் அவரை கேட்டுக் கொண்டேன்.

அவரோ ""மிஸ்டர் ராமசாமி உங்க படம் பார்த்தேன். நல்லாயிருக்கு. எனக்குப் பிடிச்சிருக்கு''ன்னு சொல்லி ஆச்சரியப்படுத்தினார். மலைச்சரிவில் பட்டத்தைப் பிடிக்க ஓடும் சிறுவனின் பரவசம் என்னைத் தொற்றிக் கொண்டது.

இப்போதும் அவரைப் பார்த்து பேசும் போதெல்லாம் மலைச் சரிவில் ஓடும் சிறுவனாகிறேன்.

மகேந்திரன் மீது மிகப் பெரிய மரியாதை வைத்திருக்கும் நீங்கள்... அவரைப் போல தமிழ்நாவல்களைப் படமாக்குவதில் ஆர்வம் காட்டவில்லையே?

புதுமைப்பித்தனின் சிற்றன்னை நாவலை உதிரிப்பூக்கள் என்றும், உமாசந்திரனின் நாவலை முள்ளும் மலரும் என்றும், சிவசங்கரியின் நாவலை நண்டு என்றும், பொன்னீலனின் நாவலை பூட்டாத பூக்கள் என்றும் அவர் திரைவடிவம் கொடுத்தார். ஆனால் அவர் அந்த நாவல்களின் எழுத்துவடிவத்திலிருந்து திரைவடிவத்துக்கு நிறைய மாற்றங்கள் செய்தார். சத்யஜித் ரேவும் நாவல்களைப் படமாக்கியபோதும் திரைவடிவத்துக்கான பெரிய மாற்றங்களைச் செய்தார்.

பதேர் பாஞ்சாலியும் சாருலதாவும் எழுத்து மூலத்தில் இருந்து விலகியிருந்ததை நாம் அறிவோம். எழுத்துக்கும் சினிமாவுக்குமான மொழியை உணர்ந்தவர்களால்தான் அதைச் செய்ய முடியும். இந்த மாற்றத்துக்கு எழுத்தாளர்கள் சம்மதம் ஒருபக்கம் முக்கியமாகிறது.

இன்னொரு பக்கம் நடிகர்கள். நடிகர்களின் ஆதிக்கம் அதிகமிருக்கும் ஒரு திரைச்சூழலில் நாவலைப் படமாக்குவது படைப்பாளிகளின் கையில் இல்லை. ஒரு சிம்புவோ, ஆர்யாவோ, சூர்யாவோ நாவல் வாசிப்பவராக இருந்து இதைப் படமாக்கினால் நன்றாக இருக்குமே என்று சொல்லும்போதுதான் அது சாத்தியமாகும்.

சமீபத்திய சினிமாக்கள் பற்றி என்னவெல்லாம் பேசுவார் மகேந்திரன்?

"கூடல் நகர்' படத்துக்குப் பின் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் சஞ்சலத்தில் என் உறுதி சரியத் தொடங்கியது. மசாலா கதைகளை உற்பத்தி செய்யலாமா என்ற எண்ணம் வந்தது உண்மை. அமைதியற்ற நேரத்தில், கைகளை கட்டிக் கொண்டு அவரின் "முள்ளும் மலரும்' காளி எனக்கு நம்பிக்கையூட்டினான். என்னால் தென் மேற்கு பருவக்காற்றை உருவாக்க முடிந்தது.

சென்னை பள்ளிக்கரணையில் அவரை சந்திக்கச் சென்றேன். புறநகர் குடியிருப்பு ஒன்றில் செட்டி நாடு வீடு வகைகளை நினைவுறுத்தும் பேரமைதியான இல்லத்தின் முன் ஜப்பானிய மொழியில் அவரின் பெயர் எழுதப்பட்டிருந்தது. ""வாங்க மிஸ்டர் ராமசாமி'' என்று என்னை அழைத்தார் இயக்குநர் மகேந்திரன். வெள்ளுடையில் இருந்தார். புருவம் சுருக்கிப் பேசினார்.

தென்மேற்கு பருவக்காற்றில் சில காட்சிகளைக் குறிப்பிட்டார். பட விழா விருதுகளுக்குப் படத்தை அனுப்பவும் சொன்னார். சினிமா பற்றிய எனது அபிப்பிராயங்களைக் கூர்ந்து கவனித்தார். இணக்கத்தையும், நம்பிக்கையும் நிறைய தந்தார்.

இயக்குநர் சீனு ராமசாமி என கையெழுத்திட்டு அவரின் புத்தகங்களைத் தந்தார். வீட்டிலிருந்து வெளிவந்து யாருமற்ற அத்தெருவில் வெயிலில் நின்று வழியனுப்பினார். என் தந்தையை அறிந்த மன நெகிழ்வில் நெஞ்சில் கை வைத்து நன்றி சொல்லி விடை பெற்றேன். வீடு நோக்கி திரும்பி கொண்டிருந்தேன். நதிக்கரையில் ஓடும் "உதிரிப்பூக்கள்' குழந்தைகளும், "முள்ளும் மலரும்' ஷோபாவின் பொட்டு வைத்த சிரிப்பும், சுடு தண்ணீரை தூக்க சொன்ன தங்கையின் முன் கையிழந்த அண்ணனின் முகமும், பூட்டாத பூட்டுகளாக மனக்கண்ணில் காட்சிகள் ஓடிக் கொண்டிருந்தன.

"நான் இந்த சினிமாவுக்கு ஒன்றுமே செய்யலை. நிறைய செய்திருக்கீங்கன்னு பலபேர் சொல்லிக்கிறாங்க. ஏதோ ஒரு காரணம். எப்படியோ நடந்திருக்கு. நீங்க நல்லாப் பண்ணுங்க'ன்னு தோள் தட்டுவார்.

காதலி வசிக்கும் தெருவைக் கடக்கும் காதலனின் பரவசம் அவரை சந்திக்கும்போது கிடைக்கிறது. அவரை நாம் பாதுகாக்கணும்.

சீனுராமசாமி சில குறிப்புகள்

மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டிதான் இயக்குநரின் தாய் கிராமம். அப்பா ராமகிருஷ்ணன். அம்மா கோவிந்தம்மாள். குடும்பத்தின் மூத்த மகன்.

இவருக்கு மூன்று தம்பிகளும் இரண்டு தங்கைகளும் இருக்கின்றனர். பால்ய பருவத்தை மதுரை மேலமாசி வீதியில் கழித்தார். டி.வி.எஸ். மேனிலைப் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார். மதுரை திருமலை நாயக்கர் கல்லூரிப் படிப்பின் போது இலக்கிய வாசிப்பில் நேசிப்பு வர, கவிதைகள் கட்டுரைகள் எழுத ஆரம்பித்தார்.

இத்தனைக்கும் இவர் படித்தது இளங்கலை கணிதம்தான். காலம் போட்ட கணக்கில் அவர் கணக்கில் இருந்து இலக்கியத்துக்கு மாறினார். அந்த ஆர்வம் மகேந்திரன், பாலுமகேந்திரா படைப்புகளின் மூலம் உந்தப்பட்டு, சினிமா படைப்பாளியாக இவரை முன்நிறுத்தியது.

பாலுமகேந்திராவின் படைப்புகள் பற்றிய விமர்சன கடிதத்தை அவருக்கே அனுப்பி வைத்து பதிலுக்குக் காத்திருந்தார். பதில் இல்லை. அந்தக் கடிதத்தின் ஜெராக்ûஸ அனுப்பி பாலுமகேந்திராவின் கவனம் ஈர்த்தார். சில நாள்களில் ""உங்களின் அசலும், பிரதியும் கிடைத்தது.

சென்னைக்கு வந்து என்னை பாருங்கள்'' என்று அழைத்தது பாலுமகேந்திராவின் கடிதம். ராமன் அப்துல்லாவில் உதவி இயக்குநர் வேலை. தொடர்ந்து சில படங்கள். இயக்குநர் சீமானின் பட்டறையில் சில ஆண்டுகள் வேலை. 2007-ல் கூடல் நகர் என்ற படத்தின் மூலம் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குநராக அறிமுகமானார்.

2010-ல் தென்மேற்கு பருவக்காற்று மூலம் தமிழ் சினிமா உலகத்தை திரும்பிப் பார்க்க வைத்தார். இவரின் "ஒரு வீட்டைப் பற்றிய உரையாடல்' கவிதை தொகுதி மிகவும் பிரபலமானது. மனைவி தர்ஷனா தமிழாசிரியை. தியானா செந்தமிழ், திவ்ய ரஞ்சனா என்ற இரு மகள்கள். சென்னை சாலிகிராமத்தில் வசிக்கிறார்.

http://cinemaexpress...tory.aspx?Title

Edited by வீணா

  • கருத்துக்கள உறவுகள்

வீணா நன்றி இணைப்பிற்கு, நீங்கதான் no title போட மறந்திட்டிங்க என்று நினைச்சேன், நல்லா இருக்கு,

Edited by உடையார்

மகேந்திரன், பாலு மகேந்திரா போன்றவர்களின் தரமான சினிமாக்களின் தாக்கம் 30 வருடங்களாகியும் நிலைத்து நிற்கிறது. தரமான சினிமாவுக்கு எப்போதும் மதிப்புத்தான்.

இணைப்பிற்கு நன்றி வீணா.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.