Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ.நாவின் மனித உரிமைக் கூட்டத்தொடரும் சிறிலங்காவின் காய் நகர்த்தல்களும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஐ.நாவின் மனித உரிமைக் கூட்டத்தொடரும் சிறிலங்காவின் காய் நகர்த்தல்களும்

  • Sunday, September 4, 2011, 0:44

பான்கிமூனின் சொந்த நாடான கொரியாவிற்கே பீரிஸ் முதலில் சென்றுள்ளமையானது சிறிலங்காவால் எடுக்கப்பட்டுள்ள கெட்டித்தனமானதொரு நகர்வாக உள்ளது.

இவ்வாறு Khaleej Times இணையத்தளத்தில் Qadijah Irshad எழுதியுள்ள செய்திக்கட்டுரையில் தெரிவித்துள்ளார்.

அதன் முழுவிபரமாவது,

2009 மே 26 மற்றும் 27 ஆகிய இரு தினங்களிலும் சிறிலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை விவகாரங்கள் தொடர்பாகக் கலந்துரையாடுவதற்காக ஐ.நாவின் மனித உரிமைகள் சபையின் சிறப்புக் கூட்டத்தொடர் ஒன்று மேற்கொள்ளப்பட்டதுடன் சிறிலங்காவிற்குச் சார்பான தீர்மானம் ஒன்றும் நிறைவேற்றப்பட்டது.

இச்சிறப்புக் கூட்டத் தொடரானது, கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழீழ விடுதலைப் புலிகளிற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட போரானது சிறிலங்கா இராணுவப் படைகளால் வெற்றி கொள்ளப்பட்டு ஒருவார காலத்திற்குப் பின்னர் கூட்டப்பட்டிருந்தது.

இதில் சிறிலங்கா அரசாங்கத்திற்குச் சார்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு ஆதரவாக 29 வாக்குகளும், எதிராக 12 வாக்குகளும் வழங்கப்பட்டிருந்ததுடன், சமூகம் தராதவர்களாக 06 நாடுகள் இருந்தன.

அதாவது இப்பரிந்துரையானது சிறிலங்கா அரசாங்கம் பயங்கரவாதத்தை அழித்துள்ளது என்பதைப் பாராட்டுவதை முதன்மைப்படுத்தவில்லை. மாறாக தோற்கடிக்கப்பட்ட புலிகள் அமைப்பால் மேற்கொள்ளப்பட்ட யுத்த மீறல்களை முதன்மைப்படுத்தியிருந்தது.

இது நடந்து முடிந்து இரு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் தற்போது நிலைப்பாடானது முற்றுமுழுதாகத் திசைதிரும்பியுள்ளது.

செப்ரெம்பர் மாதத்தின் நடுப்பகுதியில் மேற்கொள்ளப்படவுள்ள மனித உரிமைகள் கூட்டத் தொடரின் போது, சிறிலங்காவிற்கான ஆதரவுகள் குறைந்திருக்கும்.

மேற்குலக நாடுகளானது சிறிலங்கா அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட யுத்தக் குற்றங்கள் தொடர்பாக அதன் மீது தொடர்ச்சியான அழுத்தங்களைப் பிரயோகித்து வருகின்ற இந்நிலையில் தற்போது நடைபெறவுள்ள பாதுகாப்புச் சபைக் கூட்டத் தொடரில் சிறிலங்காவானது தன்னைச் சரியாக வெளிப்படுத்த வேண்டிய நிலையிலுள்ளது. அதாவது இன்னுமொரு புலியின் பற்களிலிருந்து சிறிலங்கா தப்பித்துக் கொள்ள வேண்டியுள்ளது.

யுத்தம் முடிவுற்றதிலிருந்து சிறிலங்காவானது தனக்கான ஆதரவைப் பெற்றுக்கொள்வதில் பல்வேறு அரசாங்கங்கள், அமைப்புக்கள் போன்றவற்றுடன் சந்திப்புக்களை மேற்கொண்டு வருகின்றது.

சிறிலங்காவின் இறுதியுத்தத்தின் போது இடம்பெற்ற யுத்தக் குற்றங்களுக்கு எதிராக சிறிலங்கா அரசாங்கம் மீதும் அதன் படைகள் மீதும் குற்றம் சாட்டப்பட்டு ஐ.நா பொதுச்செயலர் பான்கீமுனால் நியமிக்கப்பட்ட வல்லுனர் குழுவானது அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.

அத்துடன், நிராயுதபாணிகளாகச் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளை சிறிலங்கா இராணுவப் படைகள் சொல்லொணாச் சித்திரவதைகளுக்கு உட்படுத்திக் கொண்டதை உறுதிப்படுத்தும் முகமாக பிரிட்டனின் சனல் 04 தொலைக்காட்சிச் சேவையானது பல்வேறுபட்ட காட்சிகளைக் கொண்ட ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தது.

இவ்விரு சம்பவங்களும் இடம்பெற்ற பின்னர் அனைத்துலக சமூகமானது தொடர்ச்சியான அழுத்தங்களைப் பிரயோகித்து வருவதால், குற்றமிழைத்த சிறிலங்கா இராணுவத்தினரைக் கைது செய்து மனித உரிமைகள் சபையின் நீதிமன்றில் தண்டிக்கும் உரிமை உள்ளதாலேயே தற்போது சிறிலங்கா அரசாங்கமானது அவசரகாலச் சட்டத்தை நீக்கம் செய்துள்ளது.

நன்றாக நிதியளிக்கப்பட்டுள்ள புலம்பெயர் சமூகத்தவர்களின் விடுதலைப் புலிகளிற்கு ஆதரவான குழுக்கள், சில மேற்குலக அரசாங்கங்கள், மேற்குலக மனித உரிமை அமைப்புக்கள் போன்றன சிறிலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சுயாதீன விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் எனத் தொடர்ச்சியாக அழுத்தங்களைப் பிரயோகித்து வருகின்றன.

ஐ.நா வல்லுனர் குழுவின் அறிக்கை மற்றும் சனல் 04 தொலைக்காட்சிச் சேவையால் வெளியிடப்பட்ட ஆவணப்படம் என்பன போலியானவை என்றும் அவற்றுள் எவ்வித உண்மைகளும் இல்லை எனவும் சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் 300,000 வரையான பொதுமக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தியமையால், இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்ற பொது மக்களின் உயிரிழப்புக்கள் என்பது தவிர்க்கப்பட முடியாத ஒன்று என சிறிலங்கா அரசாங்கம் அறிவித்திருந்தது.

இரு ஆண்டுகளுக்கு முன்னர் மனித உரிமைகள் சபையின் உறுப்பு நாடுகளாக உள்ள சீனா, தென்னாபிரிக்கா, உருகுவே போன்ற பெரும்பான்மை நாடுகள் சிறிலங்காவிற்குச் சார்பாக வாக்களித்திருந்தன. இந்தத் தடவை சிறிலங்காவானது தன் மீது மேற்கொள்ளப்படவுள்ள விசாரணைகளைத் தவிர்ப்பதற்காக சீனா, ரஷ்யா ஆகிய இரு நாடுகளின் ஆதரவுகளை எதிர்பார்த்து நிற்கின்றது.

சிறிலங்காவில் இடம்பெற்ற யுத்தத்திற்குப் பின்னர் பெருமளவான முதலீடுகளை மேற்கொள்கின்ற இருநாடுகளாக சீனா, ரஷ்யா ஆகியன உள்ளன. அத்துடன் இவ்விரு நாடுகளும் ஐ.நா பாதுகாப்புச் சபையின் அதிகூடிய அதிகாரம் உள்ள நாடுகளாக உள்ளன. இவ்விரு இறைமை நாடுகளும் தமது நாடுகளில் நிலவும் உள்நாட்டு இனமுரண்பாடுகளைச் சாமாளிக்க வேண்டும் என்கின்ற பொதுவான கொள்கைப்பாட்டைக் கொண்டுள்ளன.

இம்மாதம் நடைபெறவுள்ள மனித உரிமைகள் கூட்டத் தொடரில் கலந்து கொள்வதற்கு முன்னர், தீர்மானம் எடுக்கும் அதிகாரம் உள்ளவர்கள் மற்றும் ஆதரவுச் சக்திகள் போன்றவற்றைச் சந்திப்பதற்கான இராஜதந்திர ரீதியானதொரு சுற்றுப் பயணத்தை சிறிலங்கா வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் மேற்கொண்டுள்ளார்.

பான்கிமூனின் சொந்த நாடான கொரியாவிற்கே பீரிஸ் முதலில் சென்றுள்ளமையானது சிறிலங்காவால் எடுக்கப்பட்டுள்ள கெட்டித்தனமானதொரு நகர்வாக உள்ளது. அதன் பின்னர் சிங்கப்பூர், ஜோர்தான் போன்ற நாடுகளின் தலைவர்களையும் பீரிஸ் சந்திக்கவுள்ளார்.

சிறிலங்காவிற்கு எதிராக மேற்கொள்ளப்பட வேண்டும் என அழுத்தங்கொடுக்கப்பட்டுள்ள விசாரணைக்கு எதிராக பொருளாதார மற்றும் அரசியல் ஆதரவுகளைப் பெற்றுக் கொள்வதற்காக அதிபர் மகிந்த ராஜபக்ச அண்மையில் சீனாவிற்கு பயணம் செய்திருந்தார்.

“நாங்கள் இணக்கப்பாட்டு முயற்சிக்கான நடவடிக்கைகளை ஏற்கனவே முன்னெடுத்துள்ளோம். அதில் நாம் பல வெற்றிகளையும் கண்டுள்ளோம். ஏனையவை முழுமையடைந்து பயனைத் தருவதற்கான கால அவகாசத்தைக் கோரி நிற்கின்றோம். நாங்கள் அனைத்துலக நாடுகளின் கருத்துக்களை, அபிப்பிராயங்களை எமது கவனத்தில் எடுத்துள்ளோம். ஏனையவர்களின் அழுத்தங்களிற்காக நாங்கள் எமது திட்டங்களைத் துரிதமாக மேற்கொள்ள முடியாது. எல்லாவற்றிக்கும் மேலாக சிறிலங்காவின் மிகப் பிரதான நலன்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை முதலில் நாம் உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும்” என ஜெனீவா கூட்டத் தொடரில் கூறப்போகும் விடயம் தொடர்பாக சிறிலங்காவின் மனித உரிமை ஆதரவாளரும் பெருந்தோட்டத்துறை அமைச்சருமான மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

http://www.tamilthai.com/?p=25862

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.