Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாயத் தயார்: பயங்கரவாத தடைச் சட்டம்; நாவாந்துறை மக்களே முதல் இலக்கு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாயத் தயார்: பயங்கரவாத தடைச் சட்டம்; நாவாந்துறை மக்களே முதல் இலக்கு

  • Sunday, September 4, 2011, 11:03

நாவாந்துறையில் சந்தேகநபர் ஒருவரைத் துரத்திச் சென்ற மக்களுக்கும் படையினருக்கும் இடையில் நடைபெற்ற மோதலை அடுத்துக் கைது செய்யப்பட்ட 100 பேர் மீதும், இராணுவ முகாமைத் தாக்கினார்கள் என்ற குற்றச்சாட்டில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் வழக்குத் தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் நிஹால் ஹப்புஆராய்ச்சி தெரிவிக்கிறார்.

பி.பி.ஸி. சிங்கள சேவையான சந்தேசியவுக்கு வழங்கிய பேட்டியிலேயே இராணுவப் பேச்சாளர் இதனைத் தெரிவித்தார். அவரது செவ்வியில் தெரிவிக்கப்பட்டதாவது:

கே: குடாநாட்டில் கிறீஸ் பூத அச்சம் ஏற்பட்டுள்ளதே?

ப: வடக்கிலோ தெற்கிலோ கிறீஸ் பூதம் என்று ஒன்றுமில்லை. இதுவரை எவரும் அப்படிக் கைது செய்யப்படவில்லை.

கே: கோண்டாவிலில் ஒருவர் மக்களால் கைது செய்யப்பட்டிருக்கிறாரே?

ப: மக்கள் எவரையும் கைது செய்ய முடியாது. பொலிஸார்தான் கைது செய்ய வேண்டும். கோண்டாவிலில் பொலிஸார் யாரையாவது கைது செய்திருந்தால் அவர்களிடம் கேளுங்கள்.

கே: கைது செய்யப்பட்ட 120 பேர் நாவாந்துறையில் இராணுவத்தால் தாக்கப்பட்டதாக தகவல்கள் வந்துள்ளனவே?

ப: இராணுவமோ பொலிஸாரோ அவர்களைத் தாக்கவில்லை. கைது செய்யப்படுவதற்கு முன்னமோ பின்னரோகூட அவர்கள் தாக்கப்படவில்லை.அவர்கள்தான் இராணுவ முகாமைத் தாக்கினார்கள். பொலிஸாரையும் இராணுவத்தினரையும் தாக்கினார்கள். அவர்கள் பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டார்கள். படையினரின் முகாம்களைத் தாக்குவது பயங்கரவாத நடவடிக்கை என்று மக்களுக்குத் தெளிவுபடுத்தி உள்ளோம்.

முகாம்களைத் தாக்கிய அவர்களுக்கு எதிராக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் வழக்குத் தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

கே: யாழ்ப்பாணத்தில் மக்கள் அச்சத்துடன் வாழ்கின்றனர் என்று தகவல் வருகிறதே?

ப: எந்தப் பயமும் அங்கு இல்லை. நேரில் சென்று நிலைமையை அவதானித்துள்ளேன். எந்த அச்சமும் இல்லை. அப்படியே அச்சநிலை ஏற்பட்ட இடங்களுக்குப் பொலிஸாரும் இராணுவத்தினரும் சென்று அமைதியை ஏற்படுத்தி உள்ளனர். கடந்த 48 மணிநேரத்தில் எந்தவொரு சம்பவம் பற்றியும் முறையிடப்படவில்லை.

பாயத் தயார்: பயங்கரவாத தடைச் சட்டம்; நாவாந்துறை மக்களே முதல் இலக்கு

http://www.tamilthai.com/?p=25876

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.