Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை தொடர்பான அமெரிக்காவின் நிலைப்பாடு

Featured Replies

இலங்கை தொடர்பான அமெரிக்காவின் நிலைப்பாட்டை உறுதியாக வெளிப்படுத்த ரொபேர்ட் ஓ பிளேக் முடிவு! - கவலையில் சிறிலங்கா!!

இலங்கைக்கு மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்டு எதிர்வரும் 12ஆம் திகதி செல்லும் அமெரிக்காவின் ஆசிய மற்றும் தென் மத்திய விவகாரங்களுக்கான பிரதி இராஜாங்க அமைச்சர் ரொபேர்ட் ஓ பிளேக் இலங்கை தொடர்பான அமெரிக்காவின் நிலைப்பாட்டை உறுதியாக வெளிப்படுத்தவுள்ளார்.

இலங்கைக்கு கடந்த 29ஆம் திகதி விஜயம் செய்யவிருந்த ரொபேர்ட் ஓ பிளேக் அமெரிக்காவைத் தாக்கிய சூறாவளியால் தனது பயணத்தை இறுதி நேரத்தில் பிற்போட்டிருந்தார்.

அதேவேளை, ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடர் எதிர்வரும் 12ஆம் திகதி ஆரம்பமாவதற்கு முன்னர் ரொபேர்ட் ஓ பிளேக் இலங்கைக்கு விஜயம் செய்வதற்கான சாத்தியங்கள் அதிகம் இருப்பதாக கொழும்பு அரசியல் வட்டாரங்கள் அப்போது கருத்து வெளியிட்டிருந்தன.

இந்நிலையில், தனது பயணத் திட்டங்களை தற்போது மாற்றியமைத்துள்ள அவர் எதிர்வரும் 12ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.

அதேவேளை, இலங்கைக்கு விஜயம் செய்யும் ரொபேர்ட் ஓ பிளேக் இரு முக்கிய விடயங்கள் குறித்து சிறிலங்கா அரசாங்கத்துக்கு வலியுறுத்தவுள்ளதாக முன்னர் செய்திகள் குறிப்பிட்டிருந்தன.

உண்மைகளைக் கண்டறிவதற்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத் தொடரில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்வது குறித்தும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்தும் சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் அவர் வலியுறுத்துவார் எனவும் அச்செய்திகள் தெரிவித்திருந்தன.

உண்மைகளைக் கண்டறிவதற்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள 19வது கூட்டத் தொடரில் விவாதிப்பது குறித்த தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் எதிர்வரும் கூட்டத் தொடரில் கொண்டு வருவது தொடர்பில் சிறிலங்கா அரசாங்கத்துக்கு இராஜதந்திரிகளின் ஊடாக அமெரிக்கா தெரிவித்திருந்தது.

ஆனால் இவ்விடயம் இலங்கை விவகாரத்தை சர்வதேச மயப்படுத்தி விடும் என்பதால் சிறிலங்கா அரசாங்கம் இத்திட்டத்தை உடனடியாகவே நிராகரித்திருந்தது.

இந்நிலையில், இவ்விஜயத்தின் போது ரொபேர்ட் ஓ பிளேக் இலங்கை தொடர்பிலான அமெரிக்காவின் நிலைப்பாட்டை உறுதியாக வெளிப்படுத்துவார் என செய்திகள் தெரிவிக்கின்றன.

அத்துடன், சிறிலங்கா அரசாங்கத்தின் நிலைப்பாட்டை மீள் பரிசீலனை செய்யுமாறும் அவர் அழுத்தம் கொடுப்பார் என நம்பப்படுவதாகவும் இச்செய்திகள் குறிப்பிடுகின்றன.

அதேவேளை, சர்வதேச அழுத்தங்களை தொடர்ச்சியாக நிராகரித்தால், அது இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை கொண்டு வருவதற்கு வாய்ப்பை ஏற்படுத்தி விடும் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் உயரதிகாரிகள் கவலை கொண்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரின் போது மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் சுயாதீனமான சர்வதேச விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என ரொபேர்ட்; ஓ பிளேக் வலியுறுத்தி வந்த நிலையில், கொழும்புக்கு இறுதியாக விஜயம் செய்த அவரை சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சந்திக்க மறுத்திருந்தார்.

சர்வதேச மனிதாபிமான மற்றும் மனிதவுரிமைச் சட்டங்களை சிறிலங்கா அரசாங்கம் தொடர்ச்சியாகப் புறக்கணித்து வந்தால், சர்வதேச சமூகம் தலையிட வேண்டிய நிலை ஏற்படும் என அமெரிக்கா கடந்த 25ஆம் திகதி மீண்டும் எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://ponguthamil.com/news/contentnews.asp?sectionid=1&contentid={930D8FE9-0627-4110-B57A-D1EF4C7C8699}

  • தொடங்கியவர்

ரொபேர்ட் ஓ பிளேக்கின் இலங்கை விஜயம்! - திட்டங்களை மாற்றி அமைத்து கொழும்பு திரும்பும் பீரிஸ்

அமெரிக்காவின் ஆசிய மற்றும் தென் மத்திய விவகாரங்களுக்கான பிரதி இராஜாங்க அமைச்சர் ரொபேர்ட் ஓ பிளேக் எதிர்வரும் 12ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யத் திட்டமிட்டுள்ளதாக தெரிய வருகின்றது.

இதனால், ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் 18வது கூட்டத் தொடரில் கலந்து கொள்ளும் திட்டங்களை மாற்றி சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் அவசரமாகக் கொழும்பு திரும்பவுள்ளார்.

தென் கொரியா, சிங்கப்பூர், பிரித்தானியா, சேர்பியா போன்ற நாடுகளுக்கான விஜயத்தைத் தொடர்ந்து ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் 18வது கூட்டத் தொடரில் கலந்து கொள்ள பீரிஸ் திட்டமிட்டிருந்தார்.

இந்நிலையில் அமெரிக்காவின் பிரதி இராஜாங்க அமைச்சர் ரொபேர்ட் ஓ பிளேக் எதிர்வரும் 12ஆம் திகதி கொழும்புக்குச் செல்வதாகல், சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் ஜெனிவா பயணத்தை பாதியில் நிறுத்தி விட்டு கொழும்பு திரும்பவுள்ளார்.

அதேவேளை, செப்ரெம்பர் 11ஆம் திகதி ஜெனிவாவுக்கு செல்லும் பீரிஸ் அன்று ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத் தொடரில் கலந்து கொள்ளச் செல்லும் இராஜதந்திரிகளுக்கு விருந்து அளித்துவிட்டு உடனடியாகவே கொழும்பு திரும்பவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

http://ponguthamil.com/news/contentnews.asp?sectionid=1&contentid={8E15E6F1-6EA5-41C7-985F-045B90AACA45}

  • தொடங்கியவர்

பொதுநலவாய நாடுகளின் ஆதரவைப் பெற விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் முயற்சி!

போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் சுயாதீனமான சர்வதேச விசாரணைகளை மேற்கொள்வதற்கு பொதுநலவாய நாடுகளின் ஆதரவைப் பெறுவதற்கு வெளிநாடுகளில் உள்ள விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இது குறித்து ஐலண்ட் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், நம்பகரமான இவ்விசாரணைகள் மேற்கொள்ளப்படும் வரை சிறிலங்கா அரசாங்கத்தை பொதுநலவாய நாடுகள் அமைப்பில் இருந்து நீக்க வேண்டும் என்ற தீர்மானத்தை கொண்டு வருவதற்கான முனைப்புக்களில் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வன்னியில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரின் போது மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு சர்வதேச பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை நிபுணர்கள் குழு தனது அறிக்கையில் பரிந்துரைத்திருந்தது.

இந்நிலையில், ஐக்கிய நாடுகள் சபை நிபுணர்கள் குழு அறிக்கையில் பரிந்துரைத்ததின்படி போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் குறித்து சர்வதே விசாரணைகளை மேற்கொள்வது தொடர்பில் பொதுநலவாய நாடுகளின் ஆதரவைப் பெறும் முயற்சியில் உலகத் தமிழர் பேரவை ஈடுபட்டுள்ளதாக இவ்வூடகம் தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டம் மற்றும் மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் 18வது கூட்டத் தொடர் ஆகியவற்றில் சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிரான விவாதங்களைக் கொண்டு வருவதற்கான முயற்சிகளில் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் ஈடுபட்டுள்ளதாக சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் கூறியதாக இவ்வூடகம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், பொதுநலவாய நாடுகளின் அரசியல் தலைவர்களுக்கான கூட்டம் எதிர்வரும் ஒக்டோபர் மாத இறுதியில் அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள நிலையில், போர்க்குற்றம் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் குறித்து சர்வதேச விசாரணைகளை மேற்கொள்வது தொடர்பில் பொதுநலவாய நாடுகளின் ஆதரவைப் பெறவும் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் ஈடுபட்டுள்ளதாக சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டம் மற்றும் பொதுநலவாய நாடுகளின் அரசியல் தலைவர்களுக்கான கூட்டம் ஆகிய இரு கூட்டங்களிலும் சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கலந்து கொள்ளவுள்ளார்.

ஆனால், இவ்விகாரங்கள் தொடர்பில் விடுதலைப் புலிகளின் பரப்புரைகளை முறியடிப்பதற்காக வெளிநாட்டு பரப்புரை நிறுவனங்களுக்கு பெருமளவு பணத்தை வழங்கி சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்ட முயற்சி வெறியளிக்கவில்லை எனவும் இவ்வூடகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://ponguthamil.com/news/contentnews.asp?sectionid=1&contentid={73002DE1-4F02-4040-B921-6F59E036DD53}

எவ்வளவு கடனுதவி செய்வோம். எவ்வளவு திருப்பிச் செலுத்தாத கடன் தருவோம் என்பதைக் கூறிச் செல்ல வருகிறார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.