Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுற்றுலா திட்டங்களுக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்

Featured Replies

சுற்றுலா திட்டங்களுக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்

இலங்கை அரசாங்கத்தின் வளர்ச்சித் திட்டங்கள் காரணமாக தமது வாழ்வாதாரங்களை விட்டு வெளியேற நேர்வதாகக் கூறி நாட்டின் மீனவக் குடும்பங்களும் விவசாயிகளும் தொழிற்சங்க பிரதிநிதிகளும் தலைநகர் கொழும்பில் ஆத்திரம் மிக்க ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.

குறிப்பாக அரசாங்கம் புதிதாக முன்னெடுக்கின்ற பெரிய சுற்றுலா வளர்ச்சித் திட்டங்களை இம்மக்கள் எதிர்க்கின்றனர்.

'மகிந்த சிந்தனை' என்று சொல்லப்படுகின்ற ஜனாதிபதி பெயரிலான அபிவிருத்தித் திட்டங்களின் கீழ் கட்டப்படுகின்ற கட்டமைப்பு பணிகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் விமர்சித்திருந்தனர்.

நாடெங்கிலுமே சுற்றுலா மேம்பாடு என்ற பெயரில் நிலங்களை அதன் நியாயபபூர்வ உரிமையாளர்களிடம் இருந்து அரசாங்கம் அபகரித்துவருகிறது என்று அவர்கள் குற்றம்சாட்டினார்கள்.

'காலாகாலமாக பயன்படுத்திய இடங்கள் பறிபோகின்றன'

நாட்டின் மேற்குக் கரையை ஒட்டியுள்ளாத கன்னித் தன்மை குலையாத சிறு தீவுக் கூட்டம் ஒன்றை அரசாங்கம் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு குத்தகைக்கு விடுவதையும், அங்கு அவை 17 சொகுசு விடுதிகளைக் கட்டவிருப்பதையும் தேசிய மீனவர் ஒற்றுமை இயக்கம் என்ற அமைப்பைச் சேர்ந்த ஹெர்மன் குமார சுட்டிக்காட்டினார்.

தாங்கள் காலம் காலமாக பயன்படுத்தி வந்த நிலங்களை மீனவர்களும் விவசாயிகளும் பயன்படுத்த முடியாத நிலை உருவாகியிருப்பதாக அவர் தெரிவித்தார்.

'சுற்றுலா வளர்ச்சி முக்கியம்'

ஆனால் தனது சுற்றுலா வளர்ச்சிக் கொள்கை சரிதான் என அரசு வாதிடுகிறது.

யுத்தத்துக்கு பிந்தைய நாட்டின் அபிவிருத்ததித் திட்டங்களில் சுற்றுலாத் துறை மிகவும் முக்கியமான இடம் வகிப்பதாக அரசாங்கம் கூறுகிறது.

இலங்கைக்கு வருகின்ற சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை 2016 ஆம் ஆண்டுக்குள் ஐந்து மடங்காக அதாவது இருபத்து ஐந்து லட்சமாக உயர்த்த அரசாங்கம் விரும்புகிறது.

இலங்கையின் இயற்கை அழகை வெளிநாடுகளில் இருந்து மக்கள் வந்து ரசிக்க வேண்டுமானால், அதிகமான விடுதிகள் தேவைதான் என்கிறார் இலங்கை சுற்றுலாத்துறையின் தலைவர் நாளக கொடஹேவா கூறுகிறார்.

நாட்டின் எதிர்கால பொருளாதார வளர்ச்சிக்கு சுற்றுலா மிகவும் அவசியமானதுதான்.

ஆனால் அரசாங்கத்தின் திட்டங்களை உள்ளூர் சமூகங்கள் சொல்வதுபோல அவர்களது வாழ்வாதாரத்தை பாதிக்காமல் முன்னெடுக்க முடியுமா என்பதுதான் இப்போதுள்ள கேள்வி.

http://www.bbc.co.uk...boprotest.shtml

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

அரசாங்கத்தின் அண்மைய அபிவிருத்தித் திட்டங்களை கேள்வியெழுப்புமுகமாக கொழும்பில் ஒரு ஆர்ப்பாட்டம் :

07 செப்டம்பர் 2011

Stop%20Land%20Grap%203_CI.JPG

அரசாங்கத்தின் அண்மைய அபிவிருத்தித் திட்டங்களை கேள்வியெழுப்புமுகமாகவும் கண்டிக்குமுகமாகவும் நேற்று கொழும்பில் ஒரு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விவசாயிகள், மீனவர்கள், தொழிற்சங்கங்கள் என்பன இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை ஒழுங்கு செய்திருந்தன.

போர் முடிவடைந்ததன் பின்னர் மக்களின் நல்வாழ்வு அவர்களுடைய முன்னேற்றம் என்பவற்றைக் கருத்திற் கொண்டு பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை தாம் மேற்கொண்டு வருவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஆனால் அரசாங்கம் அபிவிருத்தியின் பெயரால் மேற்கொண்டு வரும் பல திட்டங்கள் அந்த மக்களுக்கு நன்மை பயப்பதற்குப் பதிலாக அந்த மக்களின் வாழ்வில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்குப் பதிலாக கெடுதல்களை விளைவிப்பனவாக அவர்களை தமது வாழ்விடங்களிலிருந்தும் பாரம்பரிய தொழில்களிலிருந்தும் அப்புறப்படுத்துபவையாக இருக்கின்றன. ஒரு வகையில் இந்த அபிவிருத்தித் திட்டங்கள் அவர்களை நிர்க்கதி நிலைக்குத் தள்ளி விட்;டுள்ளது.

Stop%20Land%20Grap01.JPG

குறிப்பாக சுற்றுலா அபிவிருத்தியின் பெயரால் மேற்கொள்ளப்படும் இத்திட்டங்கள் குறைந்த பட்டம் அதற்கான பண்புகளைக் கூடக் கொண்டதாக இல்லை. ஒரு புறம் அவர்களுடைய நிலங்களிலிருந்து அவர்களைத் துரத்துகிறது. மறுபுறத்தில் சுற்றுச்சூழலில் ஆபத்தை ஏற்படுத்துகிறது. அது மட்டுமின்றி மரபார்ந்த கலாசாரப் பண்புகளையும் அது சிதைப்பதாக உள்ளது.

புத்தளத்திற்கு அண்மையாக உள்ளகல்பிட்டிக் கடற்பரப்பில் உள்ள 14 தீவுகளை அரசாங்கம் அபிவிருத்தியின் பெயரால் சுவீகரித்து சுற்றுலாத்துறைக்கு வழங்கியுள்ளது. அதேபோல் கிழக்கு மாகாணத்தில் சம்பூர், பாணமை, அறுகம்குடா, வாகரை முதலாய பல இடங்களில் உள்ள நூற்றுக்கணக்கான ஏக்கர்கள் சுவீகரிக்கப்பட்டு பல்வேறு உள்நாட்டு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதேபோன்று சீபிளேன் இறங்குவதற்காக பராக்கிரம சமுத்திரம், பொலநறுவை, நாச்சிக்குடா, நுவரவேவா என இருபதுக்கு மேற்பட்ட உள்நாட்டு நீர்நிலைகள் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.

Stop%20Land%20Grap%2021.JPG

இவை யாவும் அந்த மக்களுiடைய மீன்பிடி, மற்றும் விவசாயத் தொழில்களைப் பாதிப்பனவாக உள்ளன. எனவே தமது வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் அபிவிருத்தி உண்மையான மக்களுக்கான அபிவிருத்தி அல்ல. இது ஒரு சிலருடைய வசதிக்காகச் செய்யப்படும் நடவடிக்கைகளே. இவை உடனடியாகத் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று கூறியே மேற்படி ஆர்ப்பாட்டம் இடம் பெற்றது.

Land Forum of Sri Lanka, National fisheries Solidarity Movement and Praja Abhilasha Network.. ஆகிய அமைப்புக்கள் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை ஒழுங்கு செய்திருந்தன.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/66776/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

maathkal_07_09_10_02_89485_445.jpgjaffna_09_10_09_04_89821_445.jpg

வடக்கு, கிழக்கில் உள்ள மக்கள் இயல்பான வாழ்க்கைக்கு திரும்பாத நிலையில்....

தினமும் படையெடுக்கும் பல்லாயிரக்கணக்கான சிங்கள சுற்றுலாப் பயணிகளும் இதனை உணர்ந்தால்... நல்லது.

சுற்றுலா என்று வந்து, புகையிரத நிலையத்தில் குந்தி இருந்து கொண்டு.... தனக்கு தமிழ்ப் பகுதியில் காணி தா... என்று அடம் பிடிக்கவும் கூடாது.

  • தொடங்கியவர்

லிபியாவில் மக்களின் வளத்தை சுரண்டிய கடாபி மேற்குலக ஆதரவுடன் விரட்டப்பட்டான். அங்கு மசகு எண்ணெய் நிலா வாயு இருந்ததால் தாங்களும் சுரண்ட அவை உதவின.

சிங்கள நாட்டில் கூட வளங்கள் உள்ளன, மேலாக மனித நலம் உள்ளது. மகிந்த குடும்பம் தாமும் சீனாவுமாக நீண்டகாலம் சுரண்டமுடியாது. பெரும்பான்மையானோர் பாணுக்கு வழியில்லாமல் + சிங்கள படைகளுக்கு ஊதியம் வழங்க பணம் இல்லாமல் போகும்பொழுது,மகிந்த கூட்டம் ஓடும்.

Edited by akootha

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.