Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இன்னர் சிற்றி பிரஸிடம் தடுமாறிய இலங்கை இராஜதந்திரிகள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இன்னர் சிற்றி பிரஸிடம் தடுமாறிய இலங்கை இராஜதந்திரிகள்!

  • Friday, September 9, 2011, 0:13

பாதுகாப்பு அமைச்சு தயாரித்த ஆவணப் படம் ஐக்கிய நாடுகள் சபையின் வளாகத்தில் நேற்று முன்தினம் காட்சிப்படுத்தப்பட்ட போது ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் அரசாங்கத்தின் இராஜதந்தரிகள் திண்டாடியுள்ளனர்.

சனல் 4 தொலைக்காட்சியின் இலங்கையின் கொலைக்களம் எனும் ஆவணப்படத்திற்குப் போட்டியாக இந்த ஆவணப்படம் காட்சிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி பாலித்த கோஹனவும், பிரதி வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவும் பதிலளித்துள்ளனர்.

வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் போது வெள்ளைக் கொடிகளை ஏந்தியவாறு சரணடைய முன்வந்த தமிழீழ விடுதலைப்புலிகளின் மூத்த தலைவர்கள் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் பாலித்த கொஹன்னவின் பங்கு என்னவென்று அவரிடம் இன்னர் சிற்றி பிரஸ் கேள்வி எழுப்பிய போது அது குறித்து விஜய் நம்பியாரிடம் கேளுங்கள் என அவர் பதிலளித்துள்ளார். இது தொடர்பில் விஜய் நம்பியாரிடம் தாம் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் பதிலளிக்கவில்லை என இன்னர் சிற்றி பிரஸ் தெரிவித்துள்ளது. ஆனால் அல் ஜசீரா தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வி ஒன்றில் அப்போதைய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாலித கொஹன்னவிடம் இதுகுறித்து கேட்குமாறு அவர் கூறியிருந்ததாகவும் இன்னர் சிற்றி பிரஸ் குறிப்பிட்டு காட்டியுள்ளது.

பாலித கொஹன்னவிடம்இது குறித்து கேள்வி எழுப்பியபோது படைத்தரப்புக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை எனக் கூறியுள்ளார். அத்துடன் விஜய் நம்பியாரை ஒரு நட்சத்திர விடுதியில் தான் சந்தித்துப் பேசியதை ஏற்றுக்கொண்ட பாலித கொஹன்ன, அச் சந்திப்பு குறித்து தனது நினைவில் இல்லை என்றும் கூறியுள்ளார்.

அதேவேளை புதுக்குடியிருப்பு மருத்துவமனை மீதான எறிகணைத் தாக்குதலில் படைத்தரப்பின் 58ஆவது படைப்பிரிவு தொடர்புபட்டிருந்ததாக நிபுணர்கள் குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளமை குறித்து சவேந்திர சில்வாவிடம் இன்னர் சிற்றி பிறஸ் கேள்வி எழுப்பியபோது, 58 ஆவது படைப்பிரிவு குறித்து அவ்வறிக்கையில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என கூறியுள்ளார்.

இந்நிலையில் நிபுணர்கள் குழுவின் அறிக்கையில் சிறிலங்கா படைத்தரப்பின் 58வது படைப்பிரிவின் பெயர்கள் குறிப்பிடப்பட்ட பந்தியை இன்னர் சிற்றி பிரஸின் ஊடகவியலாளர் உரத்து வாசித்தார். இதையடுத்து இவ்வறிக்கை தவறானது என்றும் அது 53ஆவது படைப்பிரிவு என்றும் 58-வது படைப்பிரிவு அப்போது வேறொரு இடத்தில் இருந்ததாக சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்கள் குழுவின் அறிக்கைக்கு இலங்கை அரசாங்கம் ஏன் பதிலளிக்கவில்லை என இன்னர் சிற்றி பிரஸ் வினவியபோது அவ்வறிக்கை ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை அல்ல என்று பாலித கொஹன்ன தெரிவித்ததாக இன்னர் சிற்றி பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

http://www.tamilthai.com/?p=26298

  • கருத்துக்கள உறவுகள்

எமது இன்றைய தாயக விடுதலை போராட்டத்திற்கு மிகவும் உதவும் ஒருவர் இவர். இவரை பல மில்லியன்கள் கொடுத்து வாயை அடைக்க சிங்களம் முயன்றிருக்கும், முயலும்.

எதற்கும் அடிபணியாது கேள்விகளைகேட்டு எமக்காக சேவைசெய்யும் இந்த ஊடகம் மக்கள் அன்பளிப்பிலேயே இயங்கிகிறது. முடிந்தால் ஒரு சிறு தொகையை கொடுத்து உதவலாம் இல்லை ஒரு நன்றி கடிதமாவது எழுதலாம்.

to: mlee@innercitypress.com;

Subject: Note of thanks

Dear Mr.Lee,

We Tamils in Sri Lanka have been silenced by the state for many decades. You are one of those who continue to care and raise questions on behalf of us. And for that we shall remain thankful forever.

Sincerely,

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.