Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புதிய பானையில் பளைய கள் - அவசரகாலச் சட்ட நீக்கமும் மகிந்த அரசாங்கத்தின் தகிடுத்தமும்:-

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

10 செப்டம்பர் 2011

குளோபல் தமிழ்ச் செய்திகள்

Gazette%201-1_CI.jpg

சர்வதேச ரீதியாக இலங்கை அரசுக்கு ஏற்பட்டு வரும் நெருக்கடிகளின் காரணமாகவும் செப்டம்பர் 12ஆம் திகதி நடைபெறவுள்ள ஜெனிவா மனித உரிமை கூட்டத் தொடரில் எதிர்கொள்ளவுள்ள நெருக்கடியைத் தணிப்பதற்காகவும், பல ஆண்டு காலமாக நடைமுறையில் இருந்த அவசரகாலச்சட்டச் சட்;டத்தை நீக்கியதாக இலங்கை அரசாங்கம் அறிவித்திருந்த போதும் அதற்கு மாறான பல கடுமையான சட்டங்களை பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழும் இலங்கை அரசாங்கம் இயற்றியிருப்பதாக பல்வேறு தரப்பக்கள் இலங்கi அரசைக் குற்றம் சாட்டியுள்ளன.

இவ்வாறு புதிய மாற்றங்களை உள்ளடக்கிய மூன்று வர்த்தமானிகளை இலங்கை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. இதில் முதலாவது பொது மக்கள் பாதுகாப்பு கட்டளைச்சட்டத்தின் 40வது சரத்தின் 12வது பிரிவின்படி நாட்டிலுள்ள 25 நிர்வாக மாவட்டங்களிலும் எந்த இடத்தில் வேண்டுமானாலும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட நாட்டின் முப்படையினரான கடல் ஆகாய மற்றும் தரைப்படையினரைப் பாவிக்கும் அதிகாரத்தை ஜனாதிபதிக்கு வழங்கியுள்ளது. இவ்வர்த்தமானி அறிவித்தல் பின்னோக்கிய திகதியிலிருந்து நடைமுறைப்படுத்தும் வண்ணம் ஓகஸ்ட் 6ஆம் திகதியிட்டுப் பிரசுரிக்கப்பட்டுள்ளது. (வர்த்தமானி 1 இணைக்கப்பட்டுள்ளது.)

இரண்டாவது, அவசரகாலச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் அவசரகாலச்சட்டம் காலாவதியானவுடன் அவர்கள் விடுதலையாவதைத் தடுத்து தொடர்ந்து தடுத்து வைத்திருக்கும் வண்ணம் 1979ஆம் ஆண்டின் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் 48வது சரத்தும் 1979ஆம் ஆண்டின் குற்றவியல் சட்டத்தின் 15வது பிரிவும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. இந்தவர்த்தமானி அறிவித்தலும் பின்னோக்கிய திகதியிலிருந்து நடைமுறைக்கு வரும் வண்ணம் ஓகஸ்ட் 29ஆம் திகதியிட்டுப் பிரசுரிக்கப்பட்டுள்ளது. இதன்படி விடுதலையாவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட தடுத்து வைக்கப்பட்டுள்ள இரண்டாயிரம் பேர் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட வழி கோலப்பட்டிருக்கிறது. (வர்த்தமானி 2 இணைக்கப்பட்டுள்ளது.)

மூன்றாவதாக, 22ஆம் இலக்க பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச்சட்டத்தின் கீழ் புனர்வாழ்வு ஆணையாளர் நாயகத்தை நியமிக்கும் அதிகாரத்தை ஜனாதிபதிக்கு வழங்கும் வர்த்தமானியும் பிரசுரிக்கப்பட்டுள்ளது. இதுவும் பின்னோக்கிய திகதியிலிருந்து நடைமுறைப்படுத்தப்படும் விதத்தில் ஓகஸ்ட் 29ஆம் திகதியிட்டுப் பிரசுரிக்கப்பட்டுள்ளது. (வர்த்தமானி 3 இணைக்கப்பட்டுள்ளது.)

இந்நடவடிக்கைகள் அவசரகாலச் சட்டத்தை நீக்கியுள்ளதாக அரசு அறிவித்துள்ள போதும் அவசரகாலச் சட்டத்தின் கீழிருந்த அதிகாரங்களை விடவும் கூடுதலான அதிகாரங்களை அரசு இப்போது பெற்றுக் கொண்டுள்ளதைக் காட்டுகின்றன.

பொது மக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 40வது சரத்தின் 12ஆம் பிவின் கீழ் வெளியிடப்பட்டுள்ள பிரகடனத்தின் மூலம் இலங்கை ஆயுத படைகளின் சகல அங்கத்தவர்களும் நாட்டின் சகல நிர்வாக மாவட்டங்களிலும் முனைப்பான சேவைக்காக தன்னால் அழைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட பிரகடனத்தை வெளியிடுவதற்கான காரணம் பயங்கரவாதத்தையும் ஏதேனும் மக்கள் கலவரத்தையும் தடுப்பதற்கும் அடக்குவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதனைப் பாராளுமன்றத்திற்கு அறிவிக்கப்படுகின்றது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவசரகால நிலை நீக்கப்பட்டாலும், எவரையும் கைது செய்து தடுத்துவைக்கக் கூடிய விதத்தில் இன்னும் 'கொடுங்கோலான, துஷ்பிரயோகங்கள் மிக்க' அதிகாரங்களை இலங்கை அரசாங்கம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் பெற்றுக் கொள்வதாக நியுயோர்க்கை தளமாகக் கொண்டியங்கும் ஹியூமன் ரைட்ச் வாட்ச் என்ற மனித உரிமை அமைப்பு சுட்டிக்காட்டியிருக்கின்றது.

சட்டவிரோத நடவடிக்கை என்று கருதப்படும் ஒருச் செயலைக்காட்டி, எவரையும் கைது செய்து, எவ்விதக் குற்றச்சாட்டுமின்றி மூன்று மாதத்திற்கு ஒரு தடவை மட்டும் நீதவான் முன்னிலையில் வெறுமனே ஆஜர்படுத்திக்கொண்டே 18 மாதங்களுக்கு தடுத்து வைக்கும் அதிகாரத்தை பயங்கரவாதத் தடைச் சட்டம் அரசிற்கு வழங்குவதாக ஹியுமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்புத் தெரிவித்துள்ளது.

இதேவேளை இந்த வர்த்தமானி அறிவித்தல்கள் குறித்துக் கருத்துத் தெரிவித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவசரகாலச்சட்டத்தை நீக்குவதாக அறிவித்த அரசு அதனைப் பின்கதவால் மீள அறிமுகப்படுத்துவதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்துக் கருத்துத் தெரிவித்த ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர சர்வதேச சமூகத்தை ஏமாற்றவே அரசாங்கம் அவசரகாலச் சட்டத்தை நீக்குவதாக பாவனை செய்ததென குற்றஞ்சாட்டினார்.

பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் தான் அவசரகாலச் சட்டம் கொண்டு வரப்பட்டது. அவசரகாலச் சட்டத்தை நீக்கிய அரசாங்கம் அதே பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் வேறு சட்டத்தை கொண்டு வருகின்றது. எனவே, அவசரகாலச் சட்டத்தை நீக்கியதால் பயனேதும் இல்லையென அவர் கூறினார்.

http://www.globaltam...IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.