Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தென் சீனக் கடலில் ஒதுங்கியிருக்குமாறு இந்திய கப்பலுக்கு சீனாவின் எச்சரிக்கை

Featured Replies

அண்மையில் தென் சீனக்கடலில் பயணித்துக் கொண்டிருந்த இந்திய கடற்படைக் கப்பலான AIRAVATEUS க்கு சீன அதிகாரிகளால் எச்சரிக்கை விடப்பட்டது. சீன கடற்பிராந்தியத்தை விட்டு வெளியேறும்படி இந்த எச்சரிக்கை விடப்பட்டது.

இது தொடர்பாக சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளதாவது, இந்தியா, வியட்னாமுடன் நெருங்கிய உறவைப் பேண விரும்புகின்றது. அத்தோடு இரு நாடுகளும் மிகவும் நெருக்கமான இராணுவ உறவுகளை தற்போது கொண்டிருக்கின்றன. வியட்னாமின் அழைப்பின் பேரில் இந்த இந்திய போர்க்கப்பல் இங்கு பயணித்துள்ளது. அமெரிக்காவினால் வியட்னாம் யுத்தத்தின் போது பாவிக்கப்பட்ட நாளுங் துறைமுகத்துக்கே இது விஜயத்தை மேற்கொண்டிருந்தது. வியட்னாம் மீதான சீனாவின் பொருளாதார செல்வாக்கை இந்தியா சீர்குலைக்க விரும்புவதாக சீனா இதை நோக்குகிறது. 1990ஆம் ஆண்டுகளிலிருந்து தென் சீனக்கடற்பகுதியிலிருந்து இந்தியாவை ஒதுங்கியிருக்குமாறு சீனா எச்சரித்து வருகிறது. தென் கிழக்காசியாவில் சரித்திர பூர்வமாக இந்திய மாநாடுகளுடன் தொடர்புகளைக் கொண்டிருக்கிறது.

இதற்கு சான்றுகளாக கம்போடியாவிலுள்ள அன்கோர்வற் கோவில்கள், இந்தோனேஷியாவிலுள்ள பாலி நகரிலுள்ள இந்துக் கோவில்கள், லாவேசிலுள்ள சரித்திர பூர்வமான ஞாபகச்சின்னங்களை நினைவுகூறலாம்.

தென் கிழக்காசியாவுக்கும், சீனாவுக்கும் பௌத்தம் இந்தியாவிலிருந்தே பரப்பப்பட்டது. இந் நாடுகளில் இந்தியாவின் செல்வாக்கு அமைதியாகவே இடம் பெற்றது. மலேஷியாவிலுள்ள இந்தியர்கள் புரட்சி ஒன்றிலும் ஈடுபடவில்லை. ஆனால் சீனர்கள் அசம்பாவிதங்களில் ஈடுபட்டனர். 2 ஆவது உலக யுத்தத்தின் போது இந்தியர்கள் நேசநாடுகளையும், பிரிட்டனையும் ஆதரித்தார்கள். சீனாவின் அழுத்தங்களால் தென்கிழக்காசிய, கிழக்காசிய நாடுகளில் கொள்கை மாற்றங்கள் ஏற்படலாம் என்பதை சீன ராஜதந்திரிகள் உணர்ந்துள்ளனர். இந்தியா மகாத்மா காந்தியின் அகிம்சை வழியாலும், விடுதலை வீரர் சுபாஸ் சந்திரபோஸின் இராணுவ நடவடிக்கைகளின் முயற்சியாலும் 1947 இல் சுதந்திரம் அடைந்தது. இந்தியா வரலாறு ரீதியாகவும், தற்போது ஒரு பொருளாதார வல்லரசாக வருவதையும் சீனா தனக்கெதிரான ஒரு போட்டியாளர் போலவே கவனிக்கிறது.

சீன தலைவராக திகழ்ந்த மாசேதுங் வரலாறுகளில் நம்பிக்கையுடையவர். இந்தியாவின் பழமையான கொள்கைகளை நன்கறிந்தவர். இதில் அவர் ஓரளவுக்கு வெற்றியும் கொண்டவர். 1962 ஆம் இந்திய சீன யுத்ததத்தின் மூலம் இந்திய இராணுவத்திற்கும், அதன் வெளிநாட்டு கொள்கைக்கும் படு தோல்வி ஏற்பட்டது. இதனிலிருந்து இந்தியா முழுமையாக மீண்டதாகத் தெரியவில்லை. இந்தியாவில் ஏற்படும் மாற்றங்களை சீனா மறக்கவில்லை. இந்தியாவை சுற்றி ஒரு வலயமமைப்பதில் சீனா பின் நிற்கவில்லை. இந்தியாவுக்கும் சீனாவுக்குமிடையில் தற்போது 60 பில்லியன் டொலராக திகழும் இரு தரப்பு வர்த்தகம் 2015ஆம் ஆண்டளவில் 100 பில்லியன் டொலரை எட்டுமென எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவின் இடம் போல் சீன ஏற்றுமதிகள் இடம் பெறும். அதே வேளையில் இந்தியா விரும்பும் பொருட்களுக்கு சீனா அனுமதி கொடுப்பதில்லை.

பத்து வருடத்திற்கு மேலாக சீன கடற் பிராந்தியத்தை ஈராக், ஆப்கானிஸ்தான் ஈடுபட்ட காரணமாக மறந்திருந்த அமெரிக்கா மீண்டும் தனது இராணுவம், நிதி வலிமையால் இப் பிராந்தியத்தில் ஆதிக்கம் செலுத்த முற்படுவதாக சீனா கருதுகிறது.

சீனாவின் இராணுவ வளர்ச்சி இந்தியாவுக்கு ஓர் அச்சுறுத்தல் என அண்மைய அமெரிக்க பாதுகாப்பு திணைக்கள அறிக்கை பற்றி சீன வெளிநாட்டமைச்சின் அதிகாரி யாங் யூயுங் கூறுகையில், சீனாவும், இந்தியாவும் எதிரிகளல்லர், எதிராளிகளும் அல்லர் ஆனால் அயலவர்களும், பங்காளரும் என கருத்து கூறியிருந்தார். இக் கருத்தின் இரகசியத்தை அறிவதற்கு கீழ்க் காணும் விஷயங்களை அலசி ஆராய வேண்டியது முக்கியம்.

*தொடர்ந்து பாகிஸ்தான் இராணுவத்திற்கும், அணு ஆயுத நிலையங்கட்கும் ஆயுதங்களை வழங்கி வருவது ஏன்? இந்திய எல்லையோரமாக பாகிஸ்தானிய இராணுவத்தோடு சீன இராணுவம் இணைந்து போர்ப் பயிற்சியில் ஈடுபடுவதன் நோக்கம் என்ன? *இலங்கை ஊடக தகவல்களின் படி இலங்கை அரச அதிகாரிகட்கு லஞ்சம் வழங்கி சீனாவில் செல்வாக்கை நிலை நிறுத்துவதற்கு துறைமுகம் அமைக்கும் பணிகள், பாதைகள், மற்றும் கட்டுமான பணிகள், சீனா இராணுவ நிறுவனங்களை அமைப்பதில் சீனா ஈடுபட்டு வருகிறது. சீனாவேõ அல்லது ஜனாதிபதியின் அலுவலகமோ இச் செய்தியை மறுதளிக்கவில்லை. இது உண்மையானதும் அத்தோடு ஆவணங்களும் இதை ஊர்ஜிதப்படுத்துவதுமே காரணமாகலாம். இறுதியாக செப்டெம்பர் 6 7 ஆம் திகதிகளில் பிரதமர் மன்மோகன் சிங்கின் பங்களாதேஷ் விஜயத்திற்கு முன்பதாக, பங்களாதோஷுக்கு தான் வழங்கிய கடனை சீனா தள்ளுபடி செய்தது. காஷ்மீர் சம்பந்தமாக சீனா தனது கொள்கையை மாற்றி பாகிஸ்தானின் நிலைப்பாட்டை ஆதரிக்கிறது. சீனா, இந்திய எல்லையோரங்களில் நடப்பவைகளையும் உதாசீனம் செய்ய முடியாது.

நேபாளத்தில் இந்திய ஆதிக்கத்தை முறியடிக்க சீனா விடுக்கும் சவால்களைக் கவனிக்க வேண்டும். இந்திய கடல் பகுதிக்கு அண்மையில் சீன மீன்பிடிப் படகுகள் வரைபட, மற்றும் உபகரணங்கள் பொருத்தப்பட்டு மீன் பிடித்தலில் ஈடுபவதின் மூலம் இந்திய கடற் பிராந்தியத்தில் தமது கடற்படை ஆதிக்கத்தை அதிகரிக்கவே சீனா நடவடிக்கை எடுத்து வருகிறது புலனாகிறது. சீனாவின் எரிபொருள் மற்றும் மூலப்பொருட்களின் இறக்குமதி/ ஏற்றுமதிக்கு இந்து சமுத்திரம் முக்கிய பாதையாக விளங்குவதும், இதன் முக்கியத்துவமும் விளங்குகின்றது. 10வருடத்திற்கு மேலாக தனது மீன் பிடிப்படகுகள், உளவு பார்ப்பதற்கு சீனா பயன்படுத்துகிறது. ஜப்பானுக்கு எதிராக 2010லும், பிலிப்பைன்சுக்கு எதிராக இவ்வருடமும் இவை களத்தில் பரிசோதிக்கப்பட்டன. பங்களாதேஷ், பாகிஸ்தான், ஸ்ரீலங்காவுடன் இராணுவ பயிற்சிகள் நடைபெறும் போது வங்காள விரிகுடா மற்றும் அண்டைய கடல் பகுதிகளில் வரைபடங்கள் வரையப்படுகின்றன.

இவற்றைப் பற்றி ஆட்சேபம் தெரிவித்து பயனில்லை. இந்தியா தனது நடுநிலைமைக் கொள்கையை விட்டு விலகி சீனாவை எதிர்ப்பதற்காக வல்லரசுகளுடன் சேராது. சீனா என்ன செய்கிறது என இந்தியாவிற்கு தெரியும். இந்தியா அமைதியாக இருப்பதை அதன் பலவீனமெனக் கருதக்கூடாது.

தென் சீனக் கடலை சீனா தனது சொத்தாகக் கருதக்கூடாது. சரித்திர ரீதியாகவோ சட்ட ரீதியாகவோ இப் பிராந்தியத்தில் சீனாவுக்கு உரிமையில்லை. சீனாவில் வசிப்பவரின் அபிப்பிராயமும் அதுவாகத்தான் இருப்பதாக அறியப்படுகிறது.

வீரகேசரி

பாக்கு நீரிணையை முதலில் இந்தியா தக்கவைத்துக்கொள்ள பார்க்கவேண்டும்.

அதைவிட்டுவிட்டு தென்சீனாக்கடலில் எல்லாம் காலை வைக்க எண்ணுவது என்பதெல்லாம் இந்திய பாதுகாப்பு அலுக்கோசர் மீனன் கூட்டத்தின் 'எட்டாப்பழம் புளிக்கும்' நிலைதான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.