Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செப்டெம்பர் 11 தாக்குதல்களில் பலியானோருக்கு கொழும்பில் அஞ்சலி

Featured Replies

செப்டெம்பர் 11 தாக்குதல்களில் பலியானோருக்கு கொழும்பில் அஞ்சலி

அமெரிக்காவில் 2001 ஆம் ஆண்டு செப்டெம்பர் 11 ஆம் திகதி நடந்த தாக்குதல்களில் பலியானவர்களை நினைவுகூரும் வைபவமொன்றை கொழும்பிலுள்ள இலங்கைத் தூதரகம் இன்று நடத்தியது.

இலங்கை மற்றும் மாலைதீவுக்கான அமெரிக்கத் தூதுவர் பற்றீசியா புட்டெனிஸின் இல்லத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் சர்வமத பிரார்த்தனைகள் இடம்பெற்றன.

அமெரிக்கத் தூதுவரின் உரையைத் தொடர்ந்து, அங்கிலிக்கன், பௌத்த இந்து, யூத, முஸ்லிம் மற்றும் ரோமன் கத்தோலிக்க மதகுருக்கள் பிரார்த்தனைகளை நடத்தினர்.

நியூ யோர்க், வாஷிங்டன், பென்சில்வேனியாவின் சாங்ஸ்வில்லே ஆகிய நகரங்களில் இடம்பெற்ற தாக்குதல்களில் 90 இற்கும் அதிகமான நாடுகளைச் சேர்ந்த சுமார் 3000 பேர் கொல்லப்பட்ட இத்தாக்குதல்கள் குறித்து அமெரிக்கத் தூதுவர் பற்றீரியா புட்டெனிஸ் உரையாற்றினார்.

ரஹ்மா சாலி என்பவர் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்தவர். ஜப்பானில் வளர்ந்தவர். கிறீஸ் - அமெரிக்கர் ஒருவரை திருமணம் செய்திருந்தார். பொஸ்டனிலிருந்து கடத்தப்பட்டு, நியூயோர்க் உலக வர்த்தக நிலையத்தில் மோதிய விமானத்தில் ரஹ்மாவும் அவரின் கணவரும் திருமணமொன்றுக்காக் பயணம் செய்துகொண்டிருந்தபோது ரஹ்மா 7 மாத கர்ப்பிணியாக இருந்தார் என பற்றீரிசியா புட்டெனிஸ் கூறினார்.

இலங்கையின் பாரம்பரியமானதும் அத்தியாவசிய அடிப்படை பெறுமானங்களில் ஒன்றான அதன் பல்லின, பல்மத அடையாளம் நீடிக்க வேண்டும் என தான் விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

http://tamilmirror.lk/2010-07-14-09-13-23/27704--11-.html

  • கருத்துக்கள உறவுகள்

செப்டெம்பர் 11 தாக்குதல்களில் பலியானோருக்கு கொழும்பில் அஞ்சலி

அமெரிக்காவில் 2001 ஆம் ஆண்டு செப்டெம்பர் 11 ஆம் திகதி நடந்த தாக்குதல்களில் பலியானவர்களை நினைவுகூரும் வைபவமொன்றை கொழும்பிலுள்ள இலங்கைத் தூதரகம் இன்று நடத்தியது.

http://tamilmirror.l...27704--11-.html

அப்ப கொழும்பு இப்ப தமிழீழத்துக்குள்ளை வந்திட்டுதா? :icon_mrgreen:

  • தொடங்கியவர்

செப்டெம்பர் 11 தாக்குதல்களில் பலியானோருக்கு கொழும்பில் அஞ்சலி

அமெரிக்கத் தூதுவரின் உரையைத் தொடர்ந்து, அங்கிலிக்கன், பௌத்த இந்து, யூத, முஸ்லிம் மற்றும் ரோமன் கத்தோலிக்க மதகுருக்கள் பிரார்த்தனைகளை நடத்தினர்.

யூத மதகுருக்களும் கூட இலங்கையில் உள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

ஆகூதா, கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் என்றல்லவா வந்திருக்க வேண்டும்?? சரி, அதை விடுங்கள், நல்லவேளை, நீங்கள் சர்வமத பிராத்தனை என்றவுடன், நானும் மவுலவியும், காவியுடைப் பயங்கரவாதிகளும் ஓதினார்கள் என்று நினைத்துவிட்டேன்.

  • தொடங்கியவர்

ஆகூதா, கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் என்றல்லவா வந்திருக்க வேண்டும்??

நிச்சயமாக. அந்த செய்தி மூலத்தில் அப்படி பிழையாக உள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.