Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாட்டில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு ரூ .2 கோடி செலவில் பெயர்ப் பலகைகள்; கோத்தாவின் நெருக்கமானவருக்கு விநியோகிக்க அனுமதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு ரூ .2 கோடி செலவில் பெயர்ப் பலகைகள்; கோத்தாவின் நெருக்கமானவருக்கு விநியோகிக்க அனுமதி

news

நகரங்களை அலங்கரிக்கும் திட்டத்தின் கீழ் கூடிய விரைவில் பொலிஸ் நிலையங்களுக்குப் புதிய பெயர்ப் பலகைகளைப் பொருத்துமாறு பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜ பக்ஷ பொலிஸ் திணைக்களத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.

பாதுகாப்புச் செயலாளருக்கு நெருக்கமான ஒருவருக்குச் சொந்தமான நுகேகொடையில் உள்ள நிறுவனமொன்றே இந்தப் பெயர்ப் பலகைகளை விநியோகிக்க உள்ளது. ஏற்கனவே அந்த நிறுவனம் பெயர்ப் பலகையொன்றுக்கு 44 ஆயிரத்து 500 ரூபா மதிப்பீடு செய்து கணக்கினைத் தயாரித்துப் பொலிஸ் திணைக்களத்துக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கமைய, இலங்கையில் உள்ள 450 தலைமைப் பொலிஸ் நிலையங்களுக்கும் புதிதாகப் பெயர்ப் பலகைகள் பொருத்தப்படவுள்ளன. இவற்றைப் பொருத்துவதற்கான மொத்தச் செலவீனம் 2 கோடியே 25 ஆயிரம் ரூபாவாகும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த மொத்தச் செலவினத்தையும் பொலிஸ் திணைக்களமே ஏற்க வேண்டும் எனப் பாதுகாப்புச் செயலாளர் பொலிஸ் மா அதிபருக்கு அறிவித்தல் விடுத்துள்ளார். இதனிடையே, ஒவ்வொரு ஆறுமாதங்களுக்கும் ஒரு முறை பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட வேண்டியுள்ள காலணிகள், காலுறைகள், மேலங்கி, காலணிகளை மினுக்கப் பயன்படுத்தும் பொருள் உள்ளிட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களது உத்தியோகபூர்வ உடைக்கு அத்தியாவசியமான பொருள்கள் ஓராண்டு காலமாக வழங்கப்பட்டிருக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில் பொலிஸ் நிலையங்களுக்குப் புதிய பெயர்ப் பலகைகளைப் பொருத்துமாறு பாதுகாப்புச் செயலர் அறிவித்துள்ளார்.

செப்ரெம்பர் 12, 2011 7:50 திங்கள் மு. ப

http://onlineuthayan.com/News_More.php?id=71686552912437780

  • கருத்துக்கள உறவுகள்

519429-police-station-sign-in-galle-sri-lanka.jpeg

கோத்தாவின் நெருக்கமானவர்களுக்கு தமிழ் தெரிந்திரிந்தால் நல்லது.

அல்லது, தனிச் சிங்களத்தில் பெயர்ப் பலகையை எழுதிவிடுவார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.