Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பழைய இரும்பு வியாபாரத்தில் படையினர் - இளைஞர்களை ஏமாற்றிய சிப்பாய்கள் விளக்க மறியலில்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பழைய இரும்பு வியாபாரத்தில் படையினர் - இளைஞர்களை ஏமாற்றிய சிப்பாய்கள் விளக்க மறியலில்:-

15 செப்டம்பர் 2011

வன்னியில் போர்ப்பகுதிகளில் பழைய இரும்பு வியாபாரத்தில் படையினர் முழுவீச்சினில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வகையில் பழைய இரும்பு வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர்கள் மூவரை தாக்கி அவர்களிடமிருந்த பணம், கைத் தொலைபேசிகளை பறிமுதல் செய்த படையினர் நால்வர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த செவ்வாய்க் கிழமை இரும்பு வியாபாரத்தில் ஈடுபட்ட இம் மூன்று இளைஞர்களுடன் முகமாலைப் பகுதியில் கடமையில் இருந்த நான்கு இராணுவத்தினர் உரையாடி தம்மிடம் இரண்டாயிரம்; கிலோ வரையினில் பழைய இரும்பு இருப்பதாகவும் இதற்காக 35 ஆயிரம் ருபா பணம்

தருமாறும் வியாபாரம் பேசியுள்ளனர். இதற்கு இணங்க குறித்த இளைஞர்களும் இராணுவத்தினர் தெரிவித்த தினத்தன்று இரவு 9.30 மணியளவில் முகமாலை சென்றுள்ளனர்.

அவ்வேளை குறித்த இளைஞர்களுடன் தொடர்பு கொண்ட படையினர் அவர்கள் தெரிவித்த பகுதியில் 50 கிலோ

இரும்புகளை ஏற்றிவிட்டு மிகுதி இரும்பு இன்னுமொரு பகுதியில் உள்ளதாக தெரிவித்து அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு ஏற்கனவே தயார் நிலையில் நின்ற மேலும் நான்கு இராணுவத்தினர் குறித்த இளைஞர்கள் மீது சரமாரியான தாக்குதலை மேற்கொண்டதுடன் அவர்களது கைத்

தொலை பேசிகளையும் பணத்தையும் பறிமுதல் செய்துள்ளனர்.

குறித்த இராணுவத்தினரிடமிருந்து தப்பிய இளைஞர்கள் பளைப் பொலிசாரிடம் சம்பவத்தினைத் தெரியப்படுத்தி முறைப்பாட்டைப் பதிவு செய்துள்ளனர். உடனடியாக நடவடிக்கையில்

ஈடுபட்ட பொலிசார் கிளிநொச்சிப் பொலிசாருக்கு அறிவித்து அன்று பிற்பகல் குறித்த நான்கு இராணுவத்தினரையும் கைது செய்து புதன்கிழமை கிளிநொச்சி மாவட்ட

நீதிமன்றில் முற்படுத்தினர்.

இந்த வழக்கை விசாரணை செய்த நீதவான் குறித்த

இராணுவத்தினரை 14ம் திகதிவரை விளக்க மறியலில் வைக்க உத்தரவிட்டதுடன் அன்றைய தினம் அடையாள அணிவகுப்பிற்கும் உத்தரவிட்டுள்ளார். இதற்கமைவாக இன்றைய தினம் வழக்கு மீள எடுத்துக் கொள்ளப்பட்டபோது குறித்த இராணுவத்தினர் அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்தப்பட்போது குறித்த இளைஞர்களால் இரண்டு இராணுவத்தினர் அடையாளம் காட்டப்பட்டனர்.

குறித்த இராணுவத்தினருக்காக பிரசன்னமான சட்டத்தரணியால்

பிணையில் எடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும் இதற்குப் பொலிசார்

சம்மதம் தெரிவிக்காமையால்; இம்மாதம் 26ம் திகதிவரை படையினரை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்க

நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/67185/language/ta-IN/article.aspx

எவ்வாறு இராணுவத்திற்கு படி அளப்பது? சிங்கள இராணுவம் ஊதிப்பெருத்து போயுள்ளது.

பொருளாதாரமோ ஆபத்தில் உள்ளது :

- உலகளாவிய பொருளாதார தேக்கம்
- தேயிலை ஏற்றுமதி பாதிப்பு / மத்திய கிழக்கில் அமைதியின்மை
- சரிந்துவரும் கொழும்பின் பங்குச்சந்தை
- பெரிதாகும் போர்க்குற்ற விசாரணைகள்
- தொடரும் ஆயுதக்கொள்வனவு

இது ஒரு ஆரம்பமே.
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி கறுப்பி இணைப்பிற்கு, பழைய இரும்பை பொறுக்கக் கூட வழியில்லை,

இனி விறகு, குப்பைகள், மாட்டு சாணம், பனங்கொட்டைகள், சல்லிக் கல்லுகள், பாலப்பழம்.............

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.