Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஐ.நா.முன்றலில் தேசத்தின் உயிர்மூச்சாய் அணிதிரண்ட வட அமெரிக்கத் தமிழர்கள் [படங்கள்]

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Published By பெரியார்தளம் On Sunday, September 25th 2011. Under உலகத்தமிழர் செய்திகள்

கடந்த வெள்ளிக்கிழமை 23 .09.2011, காலை பத்து மணியளவில் நியூ யோர்க் ஐ.நா சபை முன்றலில் ஸ்ரீலங்காத் தலைவர் மகிந்த ராஜபக்சவிற்கு எதிராக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட எதிர்ப்புப் பேரணி ஆரம்பமானது கனடாவிலிருந்தும் அமெரிக்காவிலிருந்தும் சுமார் 2000 வரையிலான மக்கள் குழுமியிருந்தனர். 10 மணியளவில் பேரணி ஆரம்பமாகியபோதும், பேரணி அரம்பித்த நேரம் முதல் அடை மழையும் கொட்ட ஆரம்பித்தது,அந்நிலையிலும் தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் எனும் தாரக மந்திரத்தை மனதிலிருத்தி, பொங்கும் கடலலையென நாடு கடந்த தமிழீழத்தின் பிரஜைகள் பொங்கு தமிழின் உயிர்மூச்சாய் அங்கு திரண்டிருந்தனர்.

நிகழ்வுகள் ஆரம்பித்த வேளையே அங்கு வருகை தந்திருந்த நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமர் கௌரவ உருத்திரகுமாரன் அவர்கள் தனது மக்களோடு தானும் ஒருவராக மழையில் நனைந்தபடி மக்களுக்காக அரசாங்கமே அன்றி அரசாங்கத்துக்காக மக்கள் அல்ல என்பதைத் தெளிவாக நிரூபித்தவண்ணமிருந்தார்.

பாதுகாப்புக் காரணங்களுக்காக நியூயோர்க் நகர காவல்துறையினர் அங்கு திரண்டிருந்தவர்கள் கூடாரங்கள் இட்டுக் கொள்வதையும் தடைசெய்திருந்தனர், மேலும் கம்பியில்லா இணைய வசதியும் அப்பகுதியில் துண்டிக்கப்பட்டிருந்ததால், உடனுக்குடன் சர்வதேச ஊடகங்களுக்கு செய்திகள் அனுப்ப முடியாது இருப்பதாக நாடு கடந்த தமிழீழ அரசின் ஒன்ராரியோ உள்துறைச் செயலரும் பொங்கு தமிழ் நிகழ்வின் ஊடக இணைப்பாளருமான திரு. றோய் விக்னராஜா அவுர்கள் தெரிவித்தார்.

நாடு கடந்த தமிழீழ அரசின் அமெரிக்க ஏற்பாட்டாளர்கள், அங்கு திரண்டிருந்த மக்கள் அனைவருக்கும் மதிய உணவும் பருகுவதற்குக் கோப்பி மற்றும் தேனீர் பொன்ற ஆகாரங்களைப் பரிமாறிய வண்ணம் இருந்தனர். அங்கு நடைபெற்றுக் கொண்டிருந்த பொங்கு தமிழ் நிகழ்வுகளைக் கனடாவின் ரொரன்ரோ மற்றும் மொன்றியல் நகர வானொலிகள், தொலைக்காட்சிகள், இவற்றுடன் சர்வதேச ஊடகங்கள் ஆகியன நேரடியாக ஒலி,ஒளிபரப்பிக் கொண்டிருந்தன. பேரணியில் கலந்து கொண்டிருந்த தமிழீழ தேசியத்தலைவரின் மாமியார் ஒருவரான திருமதி கோகிலேஸ்வரி குமரகுரு எனும் தாயார் மொன்றியல் வானொலி ஒன்றினூடாக நாடு கடந்த தமிழீழ மக்களுக்கு செய்தியொன்றை வழங்கினார்.

தனது மந்திரிகள் துணைப்பிரதமர், அமைச்சுச் செயலர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் புடைசூழப் பிரதமர் உருத்திரகுமாரன் நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தியதுடன் பொங்குதமிழ்ப் பிரகடனமும் அங்கு வாசிக்கப்பட்டது.பிரதமர் விசுவநாதன் உருத்திரகுமாரன் அவர்களின் பொங்குதமிழ் சிறப்புரையில், ஈழத்தமிழ் மக்களது அரசியல் அபிலாசையாவும், உலகத் தமிழர்களின் விருப்பாகவும் உள்ள தமிழீழத்தை வென்றெடுக்கும் வரை எமது விடுதலைப் போராட்டம் ஒயாதென முழக்கமிட்டார்.

பிரதமர் உரையைத் தொடர்ந்து நாடு கடந்த தமிழீழ அரசின் பாராளுமன்ற உறுப்பினர்கள், மற்றும் பிரஜைகள் எனப் பலரது உரைகள் இடம்பெற்றன. பிரதி பிரதமர் கலாநிதி.ராம் சிவலிங்கம் அவர்கள் தனதுரையில், தமிழர்கள் மீது ஸ்ரீலங்கா பேரினவாத அரசு நடாத்திய இனப்படுகொலைக்கு, சர்வதேச சக்திகளும் துணைபோயிருந்தன.இந்நிலையில், தமிழர்களின் இனபடுகொலைக்கு பரிகாரமாக், தமிழர் தரப்பு நியாயங்களை ஏற்றுக் கொண்டு, அவர்களது உரிமை போராட்டத்தை, இந்த சர்வதேச சக்திகள் அங்கீகரிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

கனடாவின் மார்க்கம் நகர கவுன்சிலர் லோகன் கணபதி அவர்கள் தனதுரையில், ஆப்ரகாம் லின்கனின் துணிவுமிக்க செயலால், சட்டமூலமாக அடிமைத்தனத்தை அகற்றிய அமெரிக்க தேசம், இராணுவ அடக்குமுறைக்குள் அடிமைகளாக தமிழர்களை நலனை கவனத்தில் கொண்டு, இன அழிப்பு, போர்குற்றங்கள், மானிடத்துக்கு எதிரான குற்றங்களை புரிந்த ராஜபக்சாவையும், உடந்தையாகச் செயற்பட்ட மற்றைய குற்றவாளிகளையும், அமெரிக்க மண்ணுக்குள் ஒபமா அரசு அனுமதிகக் கூடாது என கேட்டுக் கொண்டார்.

ஊடகத்துறை அமைச்சர் சாம் சங்கரசிவம் அவர்களினால் தொகுத்து வழங்கப்பட்ட பொங்குதமிழ் மக்கள் எழுச்சி நிகழ்வின் ‘பொங்குதமிழ பிரகடனத்தை’ பிரதமர் வி.ருத்திரகுமாரன் அவர்கள் முழக்கமிட்டார்.

கனடாவிலிருந்து வருகை தந்திருந்த நாட்டுப்பற்றாளர் அன்புக்குமரன் நாடு கடந்த தமிழீழப் பிரஜைகள் சார்பில் உரைநிகழ்த்தியதுன், இடைவிடாது மொலை வரை கொட்டிக்கொண்டிருந்த கனமழையும் கனிந்துருகும் வண்ணம் எழுச்சிப் பாடல் ஒன்றைப் பாடினார்.

மழையின் கனத்தையும் பொருட்படுத்தாது தேசத்தின் விடிவுக்காககக் பொங்கு தமிழப் பேரணியில் பொங்கிய கடலாய்த் திரண்டிருந்த தனது பிரஜைகள் தொடர்ந்தும் மழையில் நனைவதைத் தவிர்ப்பதற்காகப் பிரதமர் உருத்திரகுமாரணின் வேண்டுகோளுக்கிணங்கப் பேரணி 2 மணியளவில் நிறைவுக்குக் கொண்டு வரப்பட்டடது.

UN_rally_092311_periyarthalam-1.jpg

UN_rally_092311_periyarthalam-2.jpg

UN_rally_092311_periyarthalam-4.jpg

செய்தி மையம்

கனடியத் தமிழ் செய்திச் செய்தி ஊடகம்

News Center

Canadian Tamil News Media

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.