Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மகிந்தரின் அந்தரங்க முகம் குளோபல் தமிழச் செய்திகளிற்காக யமுனா ராஜேந்திரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தரின் அந்தரங்க முகம் குளோபல் தமிழச் செய்திகளிற்காக யமுனா ராஜேந்திரன்

26 செப்டம்பர் 2011

இலங்கை அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான நோர்வே பேச்சுவார்த்தைகளின் போது, இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பிரீசின் உடல் மொழியையும், அவரது குரலின் தொனியையும், அவரது ராஜதந்திர அணுகுமுறையையும் பார்த்து வியந்தது உண்டு. ஒரு வகையில் அவரது ராஜதந்திர அணுகுமுறையின் ரசிகன் நான் என்றே சொல்லாம். மோகினி மொனிக்கா லெவின்ஸ்க்கியை மயக்கிய பில் கிளின்டனிடமும் அப்படியான ஒரு ஈர்ப்பு உண்டு. ஜோர்ஜ் புஸ்ஸின் உடல் மொழியும் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சேவின் உடல் மொழியும் அழுத்தமாக ஒப்பனை செய்யப்பட்ட வில்லன்களின் மிகை நடிப்பு போல் தெரிவது கூடத் தற்செயலானதுதான் எனவே நினைக்கிறேன்.

பிரச்சினைக்கு வருவோம். இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சேவின் ஐக்கிய நாடுகள் சபை உரையைக் கேட்கிற எவரும் ஒரு நொடி நெகிழ்ந்துதான் போய்விடுவார்கள். மூன்றாம் உலக நாடுகளின் விமோசனம் குறித்துப் பேசும் தலைவர் ஒருவரது உரையாகவும் அதனை தாயன் ஜயதிலகா போன்ற இடதுசாரிகள் வியாக்யானம் செய்யவும் முடியும்.

மகிந்த ராஜபக்சே மூன்று ‘கவர்ச்சிகரமான’ விஷயங்களைப் பேசியிருக்கிறார். ஐநா சபையில் பாலஸ்தீன அரசை அங்கீகரிக்க வேண்டியதை அவர் வலியுறுத்தி இருக்கிறார். பொருளாதாரத் தடை ஒரு நாட்டின் மக்களைப் பாதிப்பது குறித்துப் பேசிவிட்டு, கியூபாவுக்கு அவர் வாழ்த்துத் தெரிவிக்கிறார். அதாவது அமெரிக்க அரசு கியூபா மீத விதித்திதுவரும் தடையை எதிர்க்கிறார். தென் ஆப்ரிக்கா மீது உலகம் விதித்த தடையை நீங்கள் இங்கு சௌகரியமாக மறந்துவிட வேண்டும். அதன் வழி தமது நாட்டின் மீது வரவிருக்கிற சாத்தியமான பொருளாதாரத் தடை கியூபா நாட்டின் மீதானது போன்றதாகவே இருக்கும் என வளர்முக நாடுகளுக்கு மகிந்த தெரிவிக்கிறார். பாலஸ்தீன விடுதலையின் ஆதரவாளர், கியூபப் புரட்சியின் ஆதரவாளர் மகிந்த ராஜபக்சே என இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக் கொள்ளவும் முடியும்.

துரதிருஷ்டவசமாக இன்றைய உலகின் அரசியல் அவ்வளவு எளிமையாக விளக்கிவிடக் கூடியது இல்லை.

பாலஸ்தீனர்கள் மீது இனவெறி இஸ்ரேலியர்களால் பாவிக்கப்பட்ட அதே இராணுவக் கருவிகளைத்தான் ஈழத்தமிழ் மக்களின் மீதும் மகிந்தவின் அரசு பாவித்தது. அதற்கான கொள்வனவு ஒப்பந்தங்களையும் இஸ்ரேலுடன் இலங்கை போட்டுக் கொண்டது. ஓடுக்குமறையாளனான இஸ்ரேலும் ஒடுக்கப்படும் பாலஸ்தீன மக்களின் பிரதிநிதியான மொஹமத் அப்பாசும் ஈழத் தமிழர் பிரச்சினையை மட்டும் பயங்கரவாதப் பிரச்சினையாகத்தான் பார்க்கிறார்கள். இருவரும் மகிந்தவிற்கு இந்த விஷயத்தில் ஒன்றுபட்டு பயங்கரவாத ஒழிப்பு வாழ்த்துப் படிக்கிறார்கள்.

என்ன ஒரு முரண்நகை பாருங்கள்! மகிந்தவிற்கு எதிராக ஐநா சபை முன்பு பொங்குதமிழ் ஆர்ப்பாட்டம் நடத்துவது குறித்த அறிக்கையில், நாடு கடந்த தமிமீழ அரசின் பிரதமர் உருத்திரகுமாரன் ஐநாவின் உள்ளே மொஹமத் அபாசின் பாலஸ்தீன விடுதலைப் பிரகடனம், வெளியே ஈழத் தமிழரின் பொங்கு தமிழ்ப் போராட்டம் எனப் பூரிக்கிறார்.

அரசியல் எவ்வளவு சிக்கலாக இருக்கிறது பார்த்தீர்களா?

மகிந்தா ஒடுக்கப்பட்ட மக்களின் சார்பாகப் பேசுகிறார் என நினைப்பது அபத்தம். இஸ்லாமிய மக்களின் விடுதலை நாதமாக இருக்கிற பாலஸ்தீனப் பிரச்சினையை, இஸ்லாமிய நாடுகளின் ஆதரவினைத் தம்பக்கம் திருப்பப் பாவிக்கிறார் மகிந்த. இதுவே மகிந்தவின் ராஜதந்திரம்.

கியூபாவை இப்போது வாழ்த்த வேண்டிய அவசியம் என்ன? அதுவும் ஐநா சபையில் வாழ்த்த வேண்டிய அவசியம் என்ன? அதுவம் பொருளாதாரத் தடை குறித்துப் பேசும் போது வாழ்த்த வேண்டிய அவசியம் என்ன? இலத்தீனமெரிக்க நாடுகளில் இன்று வளர்ந்து வரும் பாரம்பர்யமான அமெரிக்க எதிரப்பின் தலைமை நாடு கியூபா. கியூபாவின் வெளிநாட்டுக் கொள்கையின் பிரதான எதிரி அமெரிக்க ஏகாதிபத்தியம். அமெரிக்கா உலகில் எது செய்தாலும் கண்ணை மூடிக் கொண்டு எதிர்ப்பது கீயூபாவின் கொள்கை. கம்யூனிஸ்ட்டுகள் உள்பட சொந்த மக்களை வேட்டையாடிய சதாம் குசைனை கியூபா ஆதரித்தது. நாற்பதாண்டு காலம் தனது சொந்த மக்களை வேட்டையாடிய கடாபியை அது ஆதரித்தது. இப்போது மகிந்தவை மனித உரிமைப் பிரச்சினையில் கியூபா ‘ உடுத்துக் கட்டிக் கொண்டு’ ஆதரிக்கிறது. இலத்தீனமெரிக்காவை தம் பக்கம் திருப்ப கியூப ஆதரவு மகிந்தவுக்குத் தேவை. அமெரிக்காவை எதிர்க்க இலங்கை ஆதரவு கியூபாவுக்குத் தேவை. நிரம்பவும் சாதாரணமான சூத்திரம்.

இதில் பொதிந்திருக்கிற இன்னொரு அம்சம், மாரக்சியர்களுக்கு இன அடையாளம் குறித்தும், இயற்கை குறித்தும் எந்தவிதமான தொலைநோக்குப் பார்வையும் இல்லை. பொருளாதாரவாததத்துக்கு அப்பால் கலாச்சாரம் குறித்துச் சிந்திக்கிறவர்கள் மட்டுமே இதில் தரிசனத்தை எட்ட முடியும். இவ்வகையில் கிராம்ஸிக்கு இருந்த தொலை நோக்கு பிடல் காஸ்ட்ரோவுக்கு இல்லை.

மகிந்தரின் ஐநா சபை போதனையில் மிக முக்கியமான பகுதி ஒரு நாட்டின் கலாச்சாரத்துக்கும் மனித உரிமைக்கும் இருக்க வேண்டிய உறவு தொடர்பாக மகிந்த ராஜபக்ச முன்வைத்திருக்கும் கருத்துக்கள் : ஒவ்வொரு நாட்டுக்கும் தனித்துவமான சமூக, கலாச்சார மற்றும் மத விழுமிய அடையாளங்கள் காணப்படுகின்றன எனவும் அவற்றுக்கு குந்தகம் ஏற்படுத்தும் முயற்சிகளில் ஈடுபடக் கூடாது, மனித உரிமைகள் என்ற பெயரில் நாடுகளின் தனித்துவமான அடையாளங்களில் தலையீடு செய்வதோ கலாச்சார மற்றும் மத விவகாரங்களில் தலையீடு செய்வதோ ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என்கிறார் ஜனாதிபதி.

இதனைத் தான் பர்மிய ராணுவ அரசு சொல்லி வருகிறது. இதனைத் தான் மலேசிய அரசு சொல்லி வருகிறது. இதனைத் தான் பெரும்பாலுமான அடிப்படைவாத இஸ்லாமிய நாடுகள் சொல்லி வருகிறது. இதனைத் தான் மேற்கத்தியக் கலாச்;சார எதிர்ப்பு எனும் பெயரில் மர்வின் சில்வாவும், தலிபான்களும் இந்;தியாவில் இந்துத்துவக் குண்டர்களும் சொல்லி வருகிறார்கள்.

மனித உரிமைகள் என்பன குறிப்பிட்ட கலாச்சாரம், மதம், சடங்குகள், தேசியப் பழக்கவழக்கங்கள் என்பதனைத் தாண்டிய உலகு தழுவிய மதிப்பீடா, அல்லது கலாச்சாரங்களால்,மதங்களால் கட்டுப்படுத்தப்படுகிறவையா என்கிற விவாதங்கள் உலகில் தொடரந்து நடந்து வருகின்றன.

சர்வாதிகாரிகளும் மத அடிப்படைவாதிகளும் தமது கலாச்சாரத்தின் பெயரில்தான் தொடர்ந்து மனித உரிமை மீறல்களை நியாயப்படுததிது வருகிறார்கள். இவர்கள் தான் அடிப்படை மனித உரிமை விஷயங்களில் மேற்கு கிழக்கு எனப் பிரித்து தமது அதிகார நோக்கங்களுக்குப் பாவிக்கிறார்கள்.

இந்த நிலைபாட்டுக்கு எதிராக நோபல் பரிசு பெற்ற பொருளியல் அறிஞரான அமர்த்யா சென் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.

ஐரோப்பிய மதிப்பீடுகளுக்கும் ஆசிய மதிப்பீடுகளுக்குமான வித்தியாசங்களைச் சொல்லி தமது நாட்டின் அரசியல் உரிமைகள் மறுப்பை நியாயப்படுத்தும் போது தென் கொரியாவைச் சேர்ந்த லீ குவான், சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர், சீன வெளியுறவு அமைச்சர் போன்றவர்கள், 1993 ஆம் ஆண்டு வியன்னாவில் நடைபெற்ற உலக மனித உரிமைக் கருத்தரங்கில் பேசும் போது, மாறுபட்ட தன்மைகளின் யதார்த்த இருப்பை உலகமய நோக்கு என்பதை உபயோகித்து கண்டுகொள்ளாமல் விடுவதோ நிராகரிப்பதோ இடம்பெறுமானால், மனித உரிமை விழுமியங்கள் என்பதை உலக அளவில் ஒப்புக் கொள்வதென்பது பிரச்சினைக்குரியதாகிவிடும் என்கிறார்கள்.

எமது நாடுகளில் தேசங்களின் உரிமை என்பதை ஒரு நபர் தனது தனிநபர் உரிமைகளுக்கு முன்பாக வைக்கவேண்டும் எனும் அதே போதில், இன்னும் கொஞ்சம் மேலே போய் லீ குவான் அழுத்தமாகச் சொல்கிறார் : ஆசிய மதிப்பீடுகள் என்று நாங்கள் சொல்லும்போது சமுகம் குறித்த மேற்கத்தியர்களின் கருத்தாக்கத்தையும் கிழக்காசியக் கருத்தாக்கத்தையும் மனதில் வைத்துத்தான் சொல்கிறோம். கிழக்கு என்று சொல்லும் போது நான் தென்கிழக்கு ஆசியாவிலிருந்து விலகிய கொரியா, ஜப்பான், சீனா, வியட்நாம் போன்ற நாடுகளைக் குறிப்பிடுகிறேன். தென்கிழக்காசியர்கள் சீன இந்திய கலப்பினர். இந்தியக் கலாச்சாரமும் இதே மாதிரியான மதிப்பீடுகளைத் தான் வலியுறுத்துகிறது என்கிறார லீ குவான்;.

இதனோடு இப்போது இலங்கையையும் சேரத்துக் கொள்கிறார் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச.

இதைக் குறித்து கருத்து வெளியிடும் போது தனது ஆசிய மதிப்பீடுகளும் மனித உரிமைகளும் எனும் தனது ஆய்வுக்கட்டுரையில் மனித உரிமைக் கருத்தாடல்கள் குறித்த பல்வேறு பிரமைகளைத் தகர்த்தெரிகிறார் அமர்த்தியா ஸென்.

ஆசியக் கலாச்சாரம் ஆசிய மதிப்பீடுகள் குறித்துப் பேச வரும் பெரும்பாலான அமெரிக்க மேற்கத்தியக் கோட்பாட்டாளர்கள் கான்பூஸியஸின் சிந்தனை முறைதான் அதிகாரபூர்வமான ஆசியச் சிந்தனை முறை என்று காண்கிறார்கள். அத்துடன் அவரது சிந்தனை அமைப்பின் ஒழுங்கு அதிகாரத்தை நிலைநாட்டுவது குறித்துத்தான் பேசுகிறதேயல்லாமல் சுதந்திரம் குறித்து ஏதும் சொல்வதில்லை என்றும் சாதிக்கிறார்கள். அது மட்டுமன்றி புராதன காலத்திலீருந்தே மேற்கத்திய நாகரீகமானது அரசியல் சுதந்திரம் குறித்தும் ஜனநாயகம் குறித்தும் பேசி வந்திருப்பதாகவும் கோரிக்கொள்கிறார்கள். கேபாட்பாட்டாளர்கள் மட்டுமல்ல அமெரிக்க மேற்கத்திய அரசியல் தலைவர்களும் இவ்வாறே கோரிக் கொள்கிறார்கள்.

இதற்கு எதிர்த்திசையில், தமது அதிகாரத்தைக் காத்துக்கொள்ள வேண்டும் என நினைக்கிற ஆசிய எதேச்சாதிகார அரசியல்வாதிகள் ஆசியக்கலாச்சாரத்தில் தனிநபர் அரசியல் உரிமைகள் பற்றியோ அடுத்த நபரின் உரிமையைச் சகித்துக் கொள்வது பற்றியோ தனிநபர் தேர்வு பற்றியோ எதுவும் சொல்லப்படவில்லை என சாதிக்க முனைகிறார்கள். ஐஸையா பெர்லின் புராதன உலகத்தில் ஐரோப்பியர்கள் தான் ஜனநாயகம் சுதந்திரம் போன்ற கருத்தாக்கங்களைக் கொண்டிருந்தார்கள் என்பதற்கு என்னால் ஆதாரம் காணமுடியவில்லை என்கிறார். கிரேக்க ரோமன் கலாச்சாரத்திலும் சரி கிறித்தவ மரபிலும் சரி திட்டவட்டமான இதற்கான வரையறைகள் இருப்பதாகவும் தான் காணவில்லை என்பதையும் குறிப்பிடுகிறார் ஐஸயா பெர்லின்.

இன்றைய நிலையில் நாம் மனதில் கொண்டிருக்கிற தனிமனித உரிமை எனும் அர்த்தத்தில் இந்தக் கருத்தாக்கம் மேற்கத்தியக் கலாச்சாரத்திலும் இடம்பெறவில்லை. தனிநபர்கள் உரிமைகள் என்கிற போது நாம் அதை இரண்டு விததியாசமான வகைகளில் பார்க்கலாம். தனிநபர் சுதந்திரத்தின் மதிப்பீடு : நல்ல சமுகத்தில் பொருட்படுத்தப்படுகிற ஒருவர்க்கு தனிநபர் சுதந்திரம் முக்கியம. அது உறுதி செய்யப்படவேண்டும். சுதந்திரத்தில் சமத்துவம் : அனைவருமே பொருட்படுத்தப்படவேண்டும். பரஸ்பரம் பகிர்தலின் அடிப்படையில் தனிநபர் சுதந்திரம் உத்திரவாதப்படுத்தப்;படவேண்டும்.

அரிஸ்டாட்டிலும் சரி மண்டாரின்களும் சரி பிராமணர்களும் சரி முதல் வகையான தனிநபர் சுதந்திரம் பற்றிப் பேசியிருக்கிறார்கள். அரிஸ்டாட்டில் அடிமைகளும் பெண்களும் தவிர்த்தவர்களின் உரிமைகளைப் பேசியீருக்கிறார். அடிமைகள் அல்லாதவர்களின் சுதந்திரம் பற்றி கிரேக்கர்கள் ரோமானியர்கள் போலவே மேல் ஜாதி பிராமணர்களின் சுதந்நிரம் பற்றி அர்த்த சாஸ்திரம் எழுதிய கௌடில்யர் பேசியிருக்கிறார். குடும்பத்திற்கு நேர்மையாகவிருப்பதும் நாட்டுக்கு விஸ்வாசமாக இருப்பதும் ஆசிய சமூகங்களின் இரண்டு அடிப்படை மதிப்பீடுகள் என கான்பூஷியஸ் சொல்லயிருக்கிறார். அதே வேளை திருட்டை அரசிடமிருந்து மறைத்த தகப்பனையும் மகனையும் குடும்ப மதிப்பீட்டைக்க காத்ததற்காகப் போற்றவும் செய்கிறார். ஆசியக்கலாச்சாரத்தில் உள்ள தீர்க்க முடியாத மிகப் பெரிய முரணாக இது இருக்கிறது. இன்னும் உண்மை அரச குமாரனைச சுடும் என்றாலும் கூட சொல் எனும் கான்பூஷியஸ் அரசை எதிர்த்த கலகத்தை மறுப்பவர் மட்டுமல்ல அப்போது மெதுவாகப பேசு எனவும் சொல்கிறார்.

புத்த மதமும் அசோகரும் முஸ்லிம் அரசனான அக்பரும் சகிப்புத் தன்மையை மதம் எனும் அம்சத்தில் வலியுறுத்தகிறார்கள். சுதந்நிரத்தையும் சகிப்புத் தன்மையையும் பெண்களிடம் கைக்கொள்ள வேண்டியது பற்றி இவர்கள் பேசவதில்லை. கபீரின் கவிதைகளிலும் சுத்ரகசாவின் நாடகத்திலும் சகிப்புததன்மை பற்றிப் பேசப்படுகிறது. பதினோராம் நூற்றாண்டைச் சேர்ந்த ஈரானிய எழுத்தாளர் அல்பருனி; படையெடுப்பாளர்களின் அட்டுழியங்களைப் பதிவு செய்வதோடு இந்திய கணித நூல்களை வானியல் நூல்களை அராபியில் மொழிபெயர்த்திருக்கிறார். மற்றவரை ஒதுக்கமாகப் பார்ப்பது எல்லா நாட்டினர்க்கும் உரியதாக இருக்கிறது எனவும் அவர் கூறுகிறார.; பிற்பாடு இந்திய கணிதத்தின் செல்வாக்கு மேற்கிலும் பரவியது என்பது வரலாறு.

இன்று நாம் அறிந்தபடியிலான ஜனநாயகமும் சரி அரசியல் சுதந்திரமும் சரி மறுமலர்ச்சி யுகத்திற்கு முன்பாக எந்தக் கலாச்சாரத்திலும் இருந்ததில்லை. அது மேற்கத்திய கலாச்சாரமாயினும் சரி கிழக்கத்தியக் கலாச்சாரமாயினும் சரி இதுவே உண்மை. மேற்கிலும் சரி கிழக்கிலும் சரி அரசியல் சுதந்திரம் ஆள்பவர்க்கான சுதந்திரமாகவே இருந்திருக்கிறது. அதைப்போலவே மற்றவரின் தனித்துவத்தைச் சகிப்பது என்பதும் அரசியல சமத்துவம் என்பதுவும்; ஒப்பீட்டளவில் வேறு வேறு தளங்களில் வேறு வேறு காரணங்களுகாகவே இருந்திருக்கிறது. அனைத்தும் தழுவிய வகையில் அரசியல் சுதந்திரம் பற்றியும் சரி ஜனநாயகம் பற்றியும் சரி சிந்தித்தவர்களென மறுமலரச்சிக் காலத்திற்கு முன் மேற்கிலும் இல்லை கிழக்கிலும் இல்லை.

காலனியாதிக்க எதிர்ப்பு என்பதை மிகத்தந்திரோபாயமாக உள்நாட்டில் மனித உரிமை தவிர்ப்புக்கும் தனிநபர் அரசியல் சுதந்திர ஒடுக்குமுறைக்குமாக தற்போது ஆசிய அரசியல எதேச்சாதிகாரி;கள் பாவிக்கிறார்கள். ஆனால் கேட்க வேண்டிய மிக முக்கியமான கேள்வி இதுதான் : அமெரிக்க ஆதிக்கத்தையும் மேற்கின் ஆதிக்கத்தையும் எதிர்ப்பது நன்று. ஆனால் இதற்கும் உள்நாட்டில் நீங்கள் மனித உரிமையையும் ஜனநாயகத்தையும் ஒடுக்குவதற்கும் என்ன தொடர்பு எனக் கேட்கப்படவேண்டும். அதைப் போலவே ஆசியாவின் பொருளாதார வளர்ச்சி சார்ந்த உரிமைகளையும் அங்கீகரித்து விட்டு உண்மையிலேயே மனித உரிமை அக்கறையுடன் அமெரிக்க மேற்கத்திய அரசுகள் பேச வேண்டும். மாவோ சொன்னபடி இவ்வகையில் மேற்கத்திய நாடுகளும் அமெரிக்காவும் காகிதப்புலிகள் என்பதிலிருந்து அதிகமாக காகித எலிகளாக ஆகி வருவதைத்தான் நாம் பார்க்கிறோம்.

இவ்வாறெல்லாம் ஆசிய மதிப்பீடுகள் மனித உரிமை பற்றி அவதானிக்கும் அமர்த்யா ஸென் இறுதியாகச் சொல்கிறார் :

மிகப் பொதுவான வடிவில் மனித உரிமை எனும் அம்சம் நமது பரஸபர பகிர்தலுணர்வுள்ள மனுக்குலத்தைக் கட்டியெழுப்பும். இந்த உரிமைகள் ஒரு குறிப்பிட்ட நாட்டின் பிரஜையாகவோ அலலது ஒரு தேசத்தின் உறுப்பினனாக இரப்பதாலோ பெறப்படுவதல்ல. ஒவ்வொரு தனிமனிதனும் அதற்குத் தகுதியுள்ளவன் என எடுத்துக் கொள்ளப்படவேண்டும். இந்த உரிமைகள் சட்டபூர்வமாக குறிப்பிட்ட மக்களுக்கென உருவாக்கப்படுகிற உரிமைகளிலிருந்து வித்தியாசப்படும் ( அமெரிக்க பிரஜையின் உரிமைகள், பிரெஞ்சு தேசத்தவர்க்கான உரிமைகள் என்பது போல). ஓரு நபர் சித்திரவதை செய்யப்படக்கூடாது எனும் உரிமை அவர் எந்த நாட்டின் பிரஜை என்பதற்கப்பால் அந்த நாடு அல்லது மற்ற நாடு என்ன செய்ய விரும்புகிறது என்பதற்கு அப்பால் சுயாதீனமாக உறுதி செய்யப்பட வேண்டும். ஓரு நாடு ஒரு நபர் சித்திரவதை செய்யப்படக்கூடாது எனும் சட்டபூர்வமான அவர்க்கான உரிமையை பிரச்சினைக்குரியதாக்கலாம். ஆனால் சித்திரவதை செய்யப்படக் கூடாது எனும் அவர்க்கான மனித உரிமையை பிரச்சினைக்குள்ளாக்கவே முடியாது.

எனது பார்வை யாதெனில் தேசம் சார்ந்த எல்லைகளோ பிரஜாவுரிமை சார்ந்த எல்லைகளோ உண்மையிலேயே அக்கறையுள்ள ஒருவர் பிறர் உரிமையில் அக்கறை எடுப்பதையோ அவர்கள்பால் தமக்கு பொறுப்பு உண்டு எனச்செயல்பட முனைவதையோ தடுக்கக் கூடாது என நினைக்கிறேன். ஒருவர் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதற்கான அரசியல் அறவியல் விசாரணையின் தீர்மானிக்கும் மையமாக எல்லைகள் கடந்த செயல்பாடே இருக்க வேண்டுமெயொழிய எல்லைகளுக்குட்பட்டது அன்று.

வேறுபட்ட கலாச்சாரங்களுக்கிடையிலான வித்தியாசங்களை அங்கீகரிப்பதென்பது இன்றைய சமகால உலகில் அதிமுக்கியமானதாகும். ஆனால் நாம் மிக அதிகமான அளவில் மேற்கத்திய கலாச்சாரம் ஆசிய மதிப்பீடுகள் ஆப்க்கக் கலாச்சாரம் என மிக மலினமாகப் மிகையாகப் பொதுமைப்படுத்திப் பேசிக் கொண்டிருக்கிறோம். காணக் கிடைக்காத வரலாறு நாகரீகம் குறித்த இம்மாதிரி வாசிப்புகள் அறிவுரீதியில் மிகவும் குறுகிய சிந்தையுடைதாகும். அதுமட்டுமன்றி நாம் வாழும் உலகில் அர்ரதமற்ற பிளவுகளையும் ஏற்படுத்தும் தன்மையானவையாகும். அதிகமான அளவில் மேற்கொள்ளப்படும் ஆசிய மதிப்பீடுகள் பற்றிய எதேச்சாதிகார வாசிப்புக்கள் ஆழ்ந்து ஆய்வு மேற்கொள்ளும் போது நிற்கமுடியாது போய்விடும். ஆசிய மதிப்பீடுகள் ஐரோப்பிய மதிப்பீடுகள் எனும் பெரும் எதிர்மை சுதந்திரம் ஜனநாயகம் போன்றவற்றின் நிஜமான அர்த்தங்கள் குறித்த நமது புரிதலுக்கு கொஞ்சமே அர்த்தம் தரும்.

ஐநா சபையின் ஆரவாரங்கள் முடிந்து, இலங்கை மீண்ட பின், புத்த விகாரையில் அவரது வழிபாடுகளும் தேரர்களின் ஆசிகளும் முடிவு பெற்ற பின், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவரது அதிகாரபூர்வ இல்லாமான அமைதி கவிந்த கோயில் மரத்துக்கு - டெம்பில் ட்ரீக்குத் - திரும்பும் போது, சோர்வுடன் உடைகளைந்து தனிமையில் இருந்து கண்ணாடியில் அவர் தம்மைப் பார்த்துக் கொள்ளும்போது, அவரது ஒப்பனை முகம் கழன்று விழக் காண்பார். அப்போது அவர் முகத்தில் லேசாக பிறிதொரு வகையிலான மீசை அரும்பவும் காண்பார். அது ஆரியக் கலாச்சாரத் தனித்தன்மையும் மேன்மையும் பேசிய, இனக் கொலை புரிந்த இட்லரது முகத்தை ஒத்திருக்கவும் காண்பார். நாடு. இனம், மொழி எனும் குறிப்பிட்ட கலாச்சாரத்தின் எல்லைகளைத் தாண்டி, அனைத்து உலக மனிதர் மீதும் அன்பைச் சொரிந்த மகான் புத்தரின் போதனைகள் மகிந்த ராஜபக்சவுக்குக் கொடுத்த அந்தரங்கச் செய்தி அதுவாகத்தான் இருக்கப் போகிறது…

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/67728/language/ta-IN/article.aspx

கடாபியின் இடத்தை மகிந்தர் ஐ.நா.வில் பேச்சின் மூலம் நிரப்பியுள்ளார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.