Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நெடுந்தீவை சுற்றுலா மையத் துறையாக மாற்ற முயற்சி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நெடுந்தீவை சுற்றுலா மையத் துறையாக மாற்ற முயற்சி :

28 செப்டம்பர் 2011

குளோபல் தமிழ்ச்செய்தியாளர்

அரசு ஆதரவுக்கட்சியான ஈபிடிபியின் கோட்டையான நெடுந்தீவை சுற்றுலா மையத் துறையாக மாற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதற்கென சுற்றுலாத்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவொன்று இப்பகுதிக்கு விஜயம் மேற்கொண்டு பார்வையிட்டுச் சென்றுள்ளதாக அப்பகுதி அரச அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக இப்பகுதியில் கடல் விமானங்களை தரையிறங்குவதற்கேற்ற வசதிகளை செய்வதற்கும், அங்குள்ள குதிரை போன்ற கால்நடைகளைப் பாதுகாப்பதற்கு வெளிநாடுகளைப்போன்று புற்தரைகளை அமைப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. தற்பொழுது நெடுந்தீவு இறங்குதுறைப் பகுதியை அண்மித்த பகுதிகளை ஆழமாக்கும் வேலைத்திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

மறு புறத்தே நெடுந்தீவில் குடிநீர்தண்ணீருக்கு மோசமான பஞ்சம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் குடிநீரைப் பெற்றுக்கொள்வதற்கு நீண்டதூரம் பயணம் செய்வதுடன், கால்நடைகள், குறிப்பாக ஆடு, மாடுகள் நாள் தோறும் பலியாவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

நடந்து முடிந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலின்போது நெடுந்தீவிற்கு 24 மணிநேர மின்சாரம் வழங்கப்பட்டுள்ளபோதும் அது நெடுந்தீவு நகரப்பகுதிக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. ஏனைய கிராமப்பகுதி மக்களுக்கு அம்மின்சாரம் வழங்கப்படவில்லை, இதற்கான ஏற்பாடுகள் கூட இதுவரை ஆரம்பிக்கப்படவில்லையெனவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

இதனிடையே நேற்று செவ்வாய்கிழமை யாழ் வணிகர் கழகத்தின் ஏற்பாட்டினில், நெடுந்தீவு உதவி அரசாங்க அதிபர் பிரிவைச்சேர்ந்த வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட 10 குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.இத் திட்டத்தின் கீழ் கோழி வளர்ப்பிற்கான குஞ்சுகளையும் அவற்றிற்கான தீவனம் மற்றும் கூடுகளை வணிகர் கழகத்தினர் வழங்கியுள்ளனர். இதன்போது அத்துடன் அப்பகுதி மக்களது தேவைகள் மற்றும், பொருளாதார மேம்பாட்டு முயற்சிகள் தொடர்பாகவும் கேட்டறிந்திருந்தனர்.

கடல் வழி போக்குவரத்தினை மட்டும் நம்பியுள்ள நெடுந்தீவு பகுதியினில் வசித்து வரும் குடும்பங்களில் 90 சதவீதமானவை வறுமை கோட்டின் கீழேயே வாழந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/67873/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.