Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மகிந்தாவுக்கு மீண்டும் அழைப்பாணை

Featured Replies

மகிந்தாவுக்கு மீண்டும் அழைப்பாணை

நேற்று ( செப்டெம்பர் மாதம், திகதி 30) இலங்கை உட்பட்ட நூற்றுக்கு மேற்பட்ட ஊடகங்களுக்கு ஊடாக

அழைப்பாணை மகிந்தவுக்கு அமெரிக்க சட்டத்தரணி புரூஸ் பெயின் விடுத்துள்ளார்.

அதேநேரம் அமெரிக்க நீதிமன்றத்தில் இந்த பிடியாணையை ஏற்றுக்கொள்ள கேட்டும் தாக்கல் செய்தார். அதாவது நேரடியாக பிடியாணையை கொடுக்க முயன்றும் அவரை சுற்றி நின்ற பாதுகாவலர்கள் ஏற்க மறுத்ததால் தாம் இலங்கை-உலக ஊடகங்கள் மூலம் இந்த ஆணையை அவரிடம் சேர்ப்பித்துள்ளதாக அவர் கூறினார். இதை நீதிமன்றம் ஏற்கும் என நம்பிக்கையும் தெரிவித்தார்.

Mr. President “You Have Been Served”

On Friday September 30, a thirty page long complaint detailing charges against President Rajapaksa, was sent to nearly 100 media outlets in Sri Lanka and around the world by U.S. Constitutional Lawyer, Bruce Fein.

President, Mahinda Rajapaksa, in the plaint is cited for extrajudicial killings under the U.S. Torture Victim’s Protection Act.

Simultaneously, Fein officially filed a motion in the United States District Court, also on Friday (30), seeking authorisation to serve the summons by publication in any newspaper, or through electronic means, as all conventional methods have been denied.

If successful the motion will set an audacious new precedent.

This action follows Sri Lanka’s Ministry of Justice having refused, in June this year, to comply with a request to serve legal summons to President Mahinda Rajapaksa.

http://www.thesunday...ve-been-served/

Edited by akootha

  • தொடங்கியவர்

தாக்கல் செய்த மனுவில் 'மகிந்தா - மனித குலத்தின் விரோதி' என கூறப்பட்டுள்ளது.

இந்த தாக்கீதை நீதிபதி ஏற்கும் தருவாயில்: சனல் நாலு, ஐ.நா. அறிக்கை, வெள்ளை கொடி விவகாரம் போன்ற ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படும்.

பதியப்பட்ட அழைப்பாணை: http://tamilnet.com/img/publish/2011/10/RajapakseMotion.pdf

Rajapakse, an enemy of all mankind, filed U.S. Court papers say

Tamils Against Genocide (TAG), the US-based activist group which sponsored the case and has authority to advise the attorney on behalf of the plaintiffs, said, "this is a precedent setting phase forcing the court to determine if it agrees to allow service through social media including news papers on defendants who can duck traditional means of service under the veil of sovereignty.

http://tamilnet.com/art.html?catid=13&artid=34482

நன்றி அகுத.

இப்பொழுது ஒரு கல் தவறினால் இன்னொன்று மாங்காயை விழுத்துமென்ற தென்பு வரத்தொடங்கியிருக்கிறது. பாதைகள் திறக்கின்றன. பயணம் தொடரும்.

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தவுக்கெதிரான குற்றச்சாட்டுகள் அடங்கிய அழைப்பாணை 100 ஊடகங்களில் வெளியிடப்பட உள்ளது -

03 அக்டோபர் 2011

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அடங்கிய 30 பக்க அழைப்பாணையை இலங்கையில் உள்ள ஊடகங்கள் உட்பட 100 ஊடகங்களில் வெளியிட உள்ளதாக அமெரிக்காவின் அரசமைப்பு சட்டத்தரணி புரூஸ் பெய்ன் அறிவித்துள்ளார். இதன் மூலம் அந்த அழைப்பாணை ஜனாதிபதியைச் சென்றடைந்தமை உறுதிப்படுத்தப்படும் எனவும் அவர் கூறினார்.

செப்ரெம்பர் 30ஆம் திகதி குறித்த நீதிமன்ற ஆவணம் ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகச் சட்டத்தரணி புரூஸ் பெய்ன் தெரிவித்துள்ளார். சட்டத்துக்குப் புறம்பான படுகொலைகளுக்குப் பொறுப்பானவர் என கூறி ஜனாதிபதி மீது அமெரிக்காவில் சித்திரவதைக்கு உள்ளானோரைப் பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

படையினரால் படுகொலை செய்யப்பட்ட மூவரின் சார்பில் அமெரிக்க சமஷ்டி நீதிமன்றத்தில் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இலங்கை ஜனாதிபதியிடம் இருந்து 30 மில்லியன் டொலர் நட்டஈடு கேட்டுத் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்குத் தொடர்பான அழைப்பாணை ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டது. ஆனால் ஜனாதிபதி மாளிகையோ வெளிவிவகாரத்துறை அமைச்சோ நீதி அமைச்சோ அதனைப் பெற்றுக்கொள்ள மறுத்துவிட்டன.

இதையடுத்தே ஊடகங்களின் மூலம் அழைப்பாணையை ஜனாதிபதிக்கு எட்டச் செய்ய அனுமதிக்குமாறு புரூஸ் பெய்ன் அமெரிக்க சமஷ்டி நீதிமன்றத்திடம் அனுமதி கோரியிருந்தார். இந்த அழைப்பாணையை இலங்கை ஜனாதிபதி நீண்டகாலத்துக்குப் புறக்கணிக்க முடியாது எனவும், ஜனாதிபதியிடம் அழைப்பாணை சமர்ப்பிக்கப்பட்டதை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளும் என தாம் நம்புவதாகவும் புரூஸ் பெய்ன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத் தொடருக்காக நியூயோர்க் சென்றிருந்த சமயம் அங்குள்ள குயின்ஸ்சில் புத்த விகாரைக்குச் சென்றபோது அழைப்பாணையை கையளிக்க அமெரிக்க அதிகாரிகள் முனைந்தனர் எனவும், ஆனால் அவரது பாதுகாவலர்கள் அந்த ஆவணத்தை கையளிக்க முடியாமல் தடுத்து விட்டதாகவும் சட்டத்தரணி மேலும் கூறியுள்ளார்.அழைப்பாணை பெறுவதை அவர் தவிர்ப்பது தெளிவாகியுள்ளதால், நீதிபதிகள் மகிழ்ச் சியடையவில்லை. எனவே இந்த அழைப்பாணையை பரிமாற ஊடகங்களின் ஒத்துழைப்பு அவசியம் எனவும் புரூஸ் பெய்ன் தெரிவித்துள்ளார். அழைப்பாணையை முழுமையாக வெளியிட முன்வருமாறு உலகிலுள்ள ஊடகங்களுக்கு குறிப்பாக இலங்கையில் உள்ள ஊடகங்களுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

http://www.globaltam...IN/article.aspx

Edited by கறுப்பி

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதிக்கு ஊடகங்கள் மூலம் அழைப்பாணை வெளியிட நடவடிக்கை - அமெரிக்க சட்டத்தரணி புரூஸ் பெய்ன்

வீரகேசரி நாளிதழ் 10/4/2011 9:17:08 AM

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் அடங்கிய 30 பக்க அழைப்பாணையை இலங்கையில் உள்ள ஊடகங்கள் உட்பட 100 ஊடகங்களில் வெளியிட உள்ளதாக அமெரிக்காவின் அரசமைப்பு சட்டத்தரணி புரூஸ் பெய்ன் அறிவித்துள்ளார் என்று இணையத் தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இதன் மூலம் அந்த அழைப்பாணை ஜனாதிபதியைச் சென்றடைந்தமை உறுதிப்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

செப்டெம்பர் 30 ஆம் திகதி குறித்த நீதிமன்ற ஆவணம் ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணி புரூஸ் பெய்ன் தெரிவித்துள்ளார்.

சட்டத்துக்குப் புறம்பான படுகொலைகளுக்குப் பொறுப்பானவர் என்று கூறி ஜனாதிபதி மீது அமெரிக்காவில் சித்திரவதைக்கு உள்ளானோரைப் பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

படையினரால் படுகொலை செய்யப்பட்ட மூவரின் சார்பில் அமெரிக்க சமஷ்டி நீதிமன்றத்தில் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இலங்கை ஜனாதிபதியிடம் இருந்து 30 மில்லியன் டொலர் நட்ட ஈடு கேட்டுத் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்குத் தொடர்பான அழைப்பாணை ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டது.

ஆனால், ஜனாதிபதி மாளிகையோ, வெளிவிவகாரத்துறை அமைச்சோ, நீதி அமைச்சோ அதனைப் பெற்றுக் கொள்ள மறுத்து விட்டன.

இதையடுத்தே ஊடகங்களின் மூலம் அழைப்பாணையை ஜனாதிபதிக்கு எட்டச் செய்ய அனுமதிக்குமாறு புரூஸ் பெய்ன் அமெரிக்க சமஷ்டி நீதிமன்றத்திடம் அனுமதி கோரியிருந்தார்.

இந்த அழைப்பாணையை இலங்கை ஜனாதிபதி நீண்ட காலத்துக்குப் புறக்கணிக்க முடியாது என்றும் ஜனாதிபதியிடம் அழைப்பாணை சமர்ப்பிக்கப்பட்டதை நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளும் என்று தாம் நம்புகின்றனர் எனவும் புரூஸ் பெய்ன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத் தொடருக்கான நியூயோர்க் சென்றிருந்த சமயம் அங்குள்ள குயின்ஸ்சில் புத்த விகாரைக்குச் சென்றபோது அழைப்பாணையை கையளிக்க அமெரிக்க அதிகாரிகள் முனைந்தனர் எனவும், ஆனால் அவரது பாதுகாவலர்கள் அந்த ஆவணத்தை கையளிக்க முடியாமல் தடுத்து விட்டதாகவும் சட்டத்தரணி மேலும் கூறியுள்ளார்.

அழைப்பாணை பெறுவதை அவர் தவிர்ப்பது தெளிவாகியுள்ளதால், நீதிபதிகள் மகிழ்ச்சியடையவில்லை. எனவே இந்த அழைப்பாணையை பரிமாற ஊடகங்களின் ஒத்துழைப்பு அவசியம் என்றும் புரூஸ் பெய்ன் தெரிவித்துள்ளார்.

அழைப்பாணையை முழுமையாக வெளியிட முன்வருமாறு உலகிலுள்ள ஊடகங்களுக்கு குறிப்பாக இலங்கையில் உள்ள ஊடகங்களுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=34147

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.