Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடியப் பிரதமரின் சிறிலங்கா தொடா்பான பொதுநலவாய மாநாடு குறித்த காத்திரமான நடவடிக்கையை CHRV சரியான திசை நோக்கிய பயணமெனப் பாராட்டுகிறது.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கனடியப் பிரதமரின் சிறிலங்கா தொடா்பான பொதுநலவாய மாநாடு குறித்த காத்திரமான நடவடிக்கையை CHRV சரியான திசை நோக்கிய பயணமெனப் பாராட்டுகிறது.

stephen%20harper%20canada%20president.jpg

இம்மாதத்தின் தொடக்கத்தில் கனடியப் பிரதமா் “ஸ்ரிபன் கார்ப்பர்” கனடிய பல்கலாச்சார வானொலியொன்றுக்குப் பேட்டியொன்றை அளித்திருந்தார். அப்பேட்டியின் போது சிறிலங்கா அரசானது பின்வரும் விடயங்களைக் கடைப்பிடித்து அரசியல் ஜனநாயகப் பாதைக்கூடாக முன்னேறாத பட்சத்தில் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் கனடா சார்பில் தான் பங்குகொள்ள மாட்டேன் என்று கூறியுள்ளார்.

(1) சிறிலங்கா அரசானது, சிறிலங்காவில் வாழும் இனங்களுக்கிடையிலான வேற்றுமைகளை அகற்றி அரசியல்ரீதியான சமரச முயற்சிகளை மேற்கொள்ளுதல் வேண்டும்.

(2) சிறிலங்கா அரசானது சனநாயக நெறிமுறைகளையும், பொறுப்புணா்வையும் ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்தல் வேண்டும்.

மேலும் கனடியப் பிரதமர் ஐ.நாடுகள் சபையின் போர் குற்றம் குறித்த சுயேச்சையான விசாரணைக்கான அழைப்பைத் தான் வரவேற்பதாகவும் சொல்லியுள்ளார்.

இந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் ஐ.நா.சபை அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தது. அவ்வறிக்கை இலங்கை அரசு இழைத்திருந்த போர்க் குற்றங்களைச் சுட்டிக்காட்டி நீதியை நிலைநாட்டுவதற்கான பொறுப்பை இலங்கை அரசு தட்டிக்கழிக்காது நடைமுறைப்படுத்த வேண்டுமென்று கோரியிருந்தது. ஆனால் இலங்கை அரசு அனத்துலக சமூகத்தின் இவ்வாறான வேண்டுகோள்களைப் புறக்கணித்தும், நிராகரித்தும் கொண்டிருக்கின்றது. ஊடக சுதந்திரத்தை அலட்சியப்படுத்தல், அனைத்துலகக் கண்காணிப்பினை ஏற்றுக் கொள்ளாமை, தமிழ் மக்களின் நடமாட்டங்களைக் கட்டுப்படுத்துதல் என்ற வகையில் இலங்கை அரசு மேலும் தனது அராஜக நடவடிக்கைகளைத் தொடா்ந்து கொண்டேயிருக்கின்றது.

எனவே இந்தச் சூழ்நிலையில் கனடியப் பிரதமர் இலங்கையில் வாழும் அடக்கப்பட்ட தமிழ் பேசும் மக்களின் நலன்களைக் கருத்திற் கொண்டு இவ்வாறான அறிக்கையினை விடுத்ததன் மூலம் இலங்கை அரசுக்கு அழுத்தம் ஒன்றினை ஏற்படுத்தியுள்ளார் எனவும் அதனைத் தாம் வரவேற்பதாகவும் CHRV தலைவா் பாபு நாகலிங்கம் அவ்வமைப்பு சார்பில் தெரிவித்துள்ளார்.

1987 இல் மல்றோனி தலைமையிலான கனடிய அரசு, “இன ஒதுக்கல்” முறையைக் கடைப்பிடித்த தென்னாபிரிக்க அரசுக்கு எதிராகப் பொருளாதாரத் தடையினை விதித்தமையையும் நாம் இங்கு ஒப்பு நோக்கலாம்.

கனடியப் பாராளுமன்ற உறுப்பினா் “பற்றிக் பிறவுண்” கடந்த மூன்று வருடங்களாக CHRV யுடன் பணிபுரிவது மகிழ்ச்சியைத் தருகிறது எனக் குறிப்பிட்டிருந்தார். “தொடா்ந்தும் CHRVயோடு பணிபுரிந்து கனடிய அரசாங்கத்தின் மூலம் இலங்கைத் தமிழ் மக்களுக்கு நன்மைகளை ஏற்படுத்தும் வகையில் இலங்கை அரசை நிர்பந்திப்போம் ” எனவும் உறுதியளித்தார் “பற்றிக் பிறவுண்” அவா்கள்.

கடந்த பல வருடங்களாக இலங்கைத் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக உழைத்து வரும் CHRV அமைப்பு தொடா்ந்தும் கனடிய அரசோடு நெருக்கமான உறவுகளைப் பேணி இலங்கைத் தமிழ் மக்களின் விடயத்தில் கனடிய அரசு ஆக்கரீதியான நடவடிக்கைகளை எடுக்குமாறு போராடுமென்றும் CHRV தலைவர் பாபு நாகலிங்கம் உரைத்தார்.

Canadian Human Rights Voice

www.chrv.ca

http://www.eeladhesa...ndex.php?option

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.