Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழக மீனவர் பிரச்னை: பிரதமருக்கு முதல்வர் கடிதம்

Featured Replies

தமிழக மீனவர் பிரச்னை: பிரதமருக்கு முதல்வர் கடிதம்

தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினர் தொடர் தாக்குதல் குறித்து இந்திய அரசின் சார்பில் இலங்கை அரசுக்கு கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கை தமிழக முதல்வர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும், தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை இந்திய அரசின் மீதான இலங்கை அரசின் செயலாக பார்க்க வேண்டும் என்றும், இதனை தேசிய பிரச்சனையாக கருத வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா எழுதியுள்ள கடிதத்தின் விவரம்:

பாக் ஜலசந்தி பகுதியில் மீன்பிடித்து கொண்டிருக்கும் போது தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் இலங்கை கடற்படை மற்றும் இலங்கை குண்டர்களால் தாக்குதலுக்கும், சித்ரவதைக்கும் உள்ளாக்கப்படுவது தமிழக அரசுக்கு மிகுந்த கவலை தரும் விஷயமாக இருக்கிறது என்பதை உங்களது கவனத்துக்கு கொண்டுவர விரும்புகிறேன்.

தமிழக மீனவர்கள் பல காலமாக பாக் ஜலசந்தி பகுதியில் மீன் பிடித்து வருகின்றனர் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். தமிழக அரசு மீனவர்களின் உரிமைகளை பாதுகாப்பதிலும், அவர்களது பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் அதிகபட்ச முன்னுரிமையை வழங்கி வருகிறது.

2011 மே மாதம் இந்த அரசு பொறுப்பேற்று கொண்டது முதல் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையின் தாக்குதல் சம்பவங்கள் 16 முறை நடைபெற்றிருக்கின்றது என்பதை மிகுந்த வேதனையோடு உங்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன்.

7.6.2011 அன்று ராமேஸ்வரத்தை சேர்ந்த 4 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் பிடித்துச் செல்லப்பட்டு பின்னர் தங்கள் தலையீட்டை கோரி நான் எழுதிய கடிதத்துக்கு பிறகே 17.6.2011 அன்று விடுதலை செய்யப்பட்டனர்.

அதன் பிறகு 20.6.2011 அன்று மீண்டும் 5 படகுகளில் 23 மீனவர்கள் இலங்கை கடற்படையால் பிடித்துச் செல்லப்பட்டனர். 21-ம் தேதி நான் மீண்டும் இந்த விஷயத்தில் தாங்கள் தலையிட்டு மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்.

இலங்கை கடற்படையை சேர்ந்தவர்கள் அல்லது இலங்கை குண்டர்கள் தமிழக மீனவர்கள் மீது இத்தகைய தாக்குதலை நடத்துவது வாடிக்கையாக இருக்கிறது. இத்தகைய தாக்குதலில் பல இந்திய மீனவர்கள் காயமடைந்துள்ளனர். அவர்களுடைய மீன்கள் திருடப்பட்டுள்ளன. மீன்பிடி வலைகள் சேதப்படுத்தப்பட்டு அவர்களுடைய உடைமைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்திய மீனவர்கள் குறிப்பாக நாகப்பட்டினம் மற்றும் ராமநாதபுரத்தை சேர்ந்த மீனவர்கள் இலங்கை கடற்படை அல்லது குண்டர்களால் தாக்கப்படலாம் என்ற அச்சத்துடனேயே கடலில் மீன்பிடிக்க செல்கின்றனர். கடந்த 8-ம் தேதி இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ரஞ்சன் மத்தாய் என்னை சந்தித்தார்.

மீனவர்கள் மீதான தொடர் தாக்குதல் பற்றி அவருடைய கவனத்துக்கு கொண்டு வந்து ஒரு பக்கத்தில் மீனவர்கள் பிரச்னைக்கு தீர்வு காண்பதற்காக இந்தியஇலங்கை அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்பதோடு மற்றொரு பக்கத்தில் மீனவர்கள் மீதான தாக்குதலிலும் ஈடுபட்டு வரும் இலங்கை அரசின் கவனத்துக்கு இந்த பிரச்னையை கொண்டு செல்லுமாறும் கேட்டுக் கொண்டேன்.

இருப்பினும் மிகவும் கவலை தரும் வகையில் அன்றைய தினமே அதாவது 8-ம் தேதி அன்று வெளியுறவுத்துறை செயலாளர் கொழும்பு செல்வதற்கு முன்பாகவே இலங்கை கடற்படை ராமநாதபுரத்தின் மண்டபம் பகுதி அருகே வானை நோக்கி சுட்டு மீனவர்களை விரட்டி அடித்துள்ளது. பத்திரிகை மற்றும் தொலைக்காட்சியில் இது தொடர்பான செய்தி வெளியாகி உள்ளது.

பாரம்பரியமாக மீன் பிடித்து வரும் பாக் ஜலசந்தி பகுதியில் அமைதியான முறையில் வாழ்ந்து வரும் தமிழக மீனவர்கள் மீதான இத்தகைய தொடர் தாக்குதல் மற்றும் சித்ரவதை குறித்து இந்தியாவின் கடும் ஆட்சேபத்தை இலங்கை அரசுக்கு தெரிவிக்க வேண்டும் எனும் கோரிக்கையோடு மிகவும் கவலை அளிக்கும் இந்த பிரச்சனை குறித்து நீங்கள் தலையிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

மேலும், தமிழக மீனவர்கள் மீதான இந்த தாக்குதல் சம்பவங்களை பாகிஸ்தான் மற்றும் சீனா போன்ற அண்டை நாடுகள் எல்லைப் பகுதியில் மேற்கொள்ளும் துப்பாக்கிச்சூடு போன்ற சம்பவங்கள் போலவே இந்திய அரசுக்கு எதிரான செயல்களாக பார்க்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.

தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் மீதான தாக்குதல் தமிழ்நாட்டின் பிரச்னையாக மட்டும் பார்க்கப்படாமல் தேசிய பிரச்னையாக பார்க்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்," என்று அந்தக் கடித்தில் முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

http://news.vikatan.com/?nid=4329

  • தொடங்கியவர்

விகடனில் இருந்து ஒரு பின்னூட்டம்:

ஒரு மாநிலத்தின் முதல்வராய் மக்கள் வாழ்வதாரப்பிரச்சினையில் போராட்ட உணர்வுடன் செயல்பட வேண்டும்.கடிதம் எழுதும் கலைஞரின் செயல்பாடுகளை விமர்சித்த அ தி மு க அரசு அதையே பயன்படுத்துவது மக்களிடம் அவனம்பிக்கையை ஏற்படுத்துகிறது.

டெல்லியில் சென்று போராடவேண்டிய விசயம்.டெல்லி வரை சென்று மக்கள் பிரச்ஷினைகளுக்காக வாதாடிய வைகோ வை நாம் தோற்கடித்தோம்(ஸ்டெர்லைட் உட்பட).காவிரிக்காக உண்ணாவிரத

நாடகம் போட்ட ஜெயா,ஈழத்துக்காக அரை நாள் உண்ணா நோன்பிருந்த கலைஞரை அதிகார மையத்திலிருந்து விரட்டுவோம்.

Jayalalithaa trains guns on Sri Lankan navy

Tamil Nadu Chief Minister J. Jayalalithaa has urged Prime Minister Manmohan Singh to look at the Sri Lankan Navy attacks on Indian fishermen hailing from the state as a national issue and not as a problem of Tamil Nadu alone.

In a letter to the prime minister Monday, copies of which were released to the media Tuesday, she said: "I would also like to emphasise that the harassment of the fishermen of Tamil Nadu should be viewed as an act of provocation and aggression against India by Sri Lanka, similar to acts of firing across the borders of India by neighbours such as Pakistan and China.

http://www.theweekendleader.com/Causes/738/Under-attack.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.