Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐரோப்பிய பாராளுமன்றத்தில் திரையிடப்பட்ட இலங்கையின் கொலைக்களம்! மயான அமைதி! அதிர்ச்சி! அனைவரும் கண்கலங்கினர்!

Featured Replies

[ வியாழக்கிழமை, 13 ஒக்ரோபர் 2011, 08:51.33 AM GMT ]

12%20octobre%20011.JPGசனல்-4 இன் ஆவணப்படம் ஐரோப்பிய பாராளுமன்றத்தில் இன்று Alliance of Liberals and Democrats of Europe கட்சியின் தலைமையில் S&D, Green/EFF,EFA,GUE/HGL ஆகிய கட்சிகளின் துணையுடன் Amnesty International, International Crisis Group, Humanrights watch ஆகிய அரசசார்பற்ற மனிதநேய அமைப்புகளின் ஆதரவுடன்...

...200க்கு மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குகொள்ள சிறிலங்காவில் நடைபெற்ற தமிழர்களுக்கு எதிராகான 'சிறிலங்காவின் கொலைக்களம்' கொலைகளின் சாட்சிகள் இன்று ஐரோப்பிய பாராளுமன்றத்தில் ஒளிபரப்பப்பட்டது.

இந்த நிகழ்வை ஆரம்பித்து வைத்த பாராளுமன்ற உறுப்பினர் திருமதி Ana Gomes உண்மைகள் நிலைநாட்டப்படவேண்டும் என்ற முக்கியதுவத்தை விளக்கியதோடு Channel 4 தொலைகாட்சிக்காக இந்த சாட்சியங்களுக்கான ஆவணப்படத்தை தயாரித்தவர் என்ற அடிப்படையில் அதன் தயாரிப்பாளர் இந்த ஆவணப்படம் உருவாக்கப்பட்ட விபரத்தை விளக்கினார்.

இந்த ஆவணப்படம் திரையிடப்பட்ட போதும் அதன் பின்பும் சபையில் மயான அமைதி நிலவியது., அதன் பின் பேசிய அவைத் தலைவர் திருமதி Ana Gomes கண்கலங்கிய நிலையில் பேசுவதற்கு வார்த்தைகளை தேடிக்கொண்டு இருந்தார்.

இந்த அவையில் பங்குபற்றிய அனைவரின் வார்த்தைகளிலும் அதிர்ச்சி, பெண்களின் உடல்களை தூக்கி எறிந்து காலால் உதைக்கும் போது கோபம் அவர்கள் முகத்தில் தெரிந்தது. சிலர் இந்த நுற்றாண்டில் இப்படியும் ஒரு காட்டுமிராண்டித்தனம் உண்டா என்று கேள்வியை எழுப்பினார்கள்.

அதே நேரத்தில் இந்த நிகழ்வில் பங்குபற்றிய சிறிலங்காவின் தூதுவர் ரவிநாத் ஆரியசிங்க அந்த ஆவணப்படத்தை மறுதலித்தது மட்டுமல்லாமல், இது ஐரோப்பிய பாராளுமன்றத்தில் ஒளிபரப்பப்படுவது அநீதி என்றும், வழமை போல் தமிழர்களின் போராட்டத்தைப் பயங்கரவாதம் என்றும் பயங்கரவாதிகளுக்கு இடமளிப்பதாக புலம்பினார்.

அவரின் கூற்றுக்கு வக்காலத்து வழங்குவது போல் பிரித்தானிய கொன்சவேட்டிவ் கட்சியை சேர்ந்த Van Hoden சிறிலங்கா அரசுக்கு பல்லவி பாடினார்.

அதேநேரத்தில் இந்த நிகழ்வில் பங்கு பற்றிய திருமதி Ana Gomes, திருமதி Laima Andrikienne, திரு Raul Romevai, திரு Paul Murphy, திருமதி Marietje Schaake ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் சிறிலங்கா அரசின் வாதத்தை கண்டித்தது மட்டுமல்லாமல் அவர்களின் செயல்கள் உலக சட்டங்களை மதிக்கவில்லை என்றும் கூறினார்கள்.

திரு Paul Murphy சிறிலங்கா அரசே ஒரு பயங்கரவாத அரசு என்றும் சிறிலங்கா அரசு தொடர்ந்தும் பல வழிகளிலும் தமது அடக்கு முறைகளைத் தொடர்வதாகவும், சர்வதேசம் இதில் தலையிடவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இந்த நிகழ்வில் பங்குபற்றிய மனிதநேய அமைப்புகள் போர் முடிந்து இரண்டு வருடங்களுக்குப் பின்பும் சிறிலங்கா அரசு எந்த வகையிலும் ஐக்கிய நாடுகள் சபையின் வேண்டுகோளுக்கு செவிசாய்க்கவில்லை என்றும், தொடர்ந்து வேற்று வழிகளில் சிறிலங்கா தமிழ் மக்களை அடக்கி வாழ்வதாகவும், தமிழர்களை அவர்களின் நிலங்களில் மீள்குடியேற்றம் செய்யத் தவறுவதாகவும், சிறிலங்காவில் ஒரு சுயாதீன கமிஷனை உருவாக்கிவிட்டு காலம் கடத்துவதாகவும் தெரிவித்தார்.

ஐரோப்பிய பாராளுமன்றம் அறிக்கைகளை மட்டும் விட்டுக்கொண்டு இருப்பதை விட்டு விட்டு சிறிலங்கா அரசு மீது சிறிலங்காவில் நடைபெற்ற போர்க்குற்றம், மனித நேயத்திற்கு எதிரான குற்றத்திற்கு விடை தேடவேண்டும் என்றும் கூறினர்.

Amnesty International பேச்சாளர் சிறிலங்காவில் இந்த இனப்பிரச்சனைகான மூல காரணங்களையும் ஆராய்ந்து தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று கூறினார்.

சிறிலங்கா தூதுவர் அங்கு நடைபெற்ற கலந்துரையாடலில் இந்த போராட்டத்தை ஆயுத போராட்ட காலத்தை மட்டும் முக்கியமாக குறிப்பிட்டு கூறுகையில் இதை பயங்கரவாதம் என்ற பார்வையில் கூற்றுகளை முக்கியமாக வைத்த பொழுது தமிழர்களின் கேள்விகள், நீங்கள் ஏன் இந்த 30வருடத்தை மாத்திரம் முக்கியமாக குறிப்பிடுகிறீர்கள் என்று கேட்ட போது, சிங்கள மக்கள் சுதந்திரம் பெற முன்பு புறக்கணிக்கப்பட்டவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் என்ற கூற்றை முன்வைத்தார்.

இதை ஆழமாக நாம் பார்த்தால், சுதந்திரத்திற்கு பின் சிறிலங்கா அரசு சிங்கள பேரினவாத கொள்கையுடன் செயற்படுவதாக ஆதார பூர்வமாக காட்டுகிறது. சிறிலங்காவில் நடைபெறுவது ஒரு திட்டமிடப்பட்ட இன அழிப்பு என்பதையே இது வலியுறுத்துகிறது.

ஐரோப்பிய பாராளுமன்ற செய்தியாளர் (தமிழ்)

http://news.lankasri.com/view.php?22ap7ec3BI340823204HQWbd2Cjv22P9q3eckLBdb3RGk2

இவ்வளவு பேரழிவுகளுக்கும் பிள்ளையார் சுழி போட்டு தொடக்கி வைத்ததே இந்த ஐரோப்பிய ஒன்றியம் தான்.ஒட்டுமொத்த தமிழ் இனமும் இலங்கையில அழியவில்லை என்றுதான் கவலப்படுகிறாங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.