Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனாதிபதிக்கு விடுக்கப்பட்ட நீதிமன்ற அழைப்பாணையை ஊடகங்களில் வெளியிடுமாறு அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது

Featured Replies

இலங்கை ஜனாதிபதிக்கு விடுக்கப்பட்ட நீதிமன்ற அழைப்பாணையை ஊடகங்களில் வெளியிடுமாறு அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஊடகங்களைப் பயன்படுத்தி அழைப்பாணை விடுப்பதற்கு அமெரிக்க நீதிமன்றம் ஒன்று உத்தரவிட்டது.

அமெரிக்க நீதிமன்றத்தில் இலங்கை ஜனாதிபதிக்கு எதிராக மூன்று தமிழர்கள் தாக்கல் செய்த வழக்கின் விபரங்களையும், அதற்குப் பதிலளிக்குமாறு கோரும் நீதிமன்ற உத்தரவையும் இலங்கை ஜனாதிபதிக்கு வழங்குவதற்கு எடுக்கப்பட்ட வழமையான முயற்சிகள், அந்த ஆவணங்களை ஏற்றுக் கொள்வதற்கு இலங்கை அதிகாரிகள் மறுத்தமையால் வெற்றியளிக்கவில்லை.

இந்த நிலையில், District of Columbia வின் மாவட்ட நீதிமன்றத்தின் நீதிபதியான கோரெலி (Kotelly), தமிழ் நெட் இணையத்தளத்தின் பிரதான பக்கத்திலும், இலங்கையின் இரண்டு நாளேடுகளிலும் முழுமையான அழைப்பாணையையும், இலங்கை ஜனாதிபதிக்கு எதிரான முறைப்பாட்டையும் முழுமையாகப் பிரசுரம் செய்யுமாறு உத்தரவிட்டார். இந்த உத்தரவு நிறைவு செய்யப்பட்டதும், அழைப்பாணை சமர்ப்பிக்கப்பட்டாகக் கருதப்படும்.

அனைத்துலக சாசனத்தின் படி, நேரடியாக அழைப்பாணையைச் சமர்பிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சியை நிராகரித்தமையால், ஊடகங்களில் அதனை வெளியிடுவதைத் தவிரவேறு மார்க்கங்கள் இல்லையென நீதிபதி கூறினார்.

அழைப்பாணையை வழங்கும் நடவடிக்கை நிறைவுபெற்றதும், இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நீதிமன்றத்திற்குப் பதிலளிக்கவேண்டிய கட்டாயம் ஏற்படுமெனவும், மஹிந்த ராஜபக்ஷவால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் வெற்றியைத் தேடிக் கொடுப்பதற்கு சாத்தியமான அனைத்து தார்மீக ஆதரவும், நிதி ஆதரவும் தேவைப்படுவதாகவும் வழக்கறிஞர் புறுஸ் ஃபெய்ன் கூறினார்.

http://www.cmr.fm/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=9635

  • தொடங்கியவர்

இதில் 'தமிழ்நெட்டையும்' வேறு இரு சிங்கள ஊடகங்களையும் நீதிபதி பிடியாணியை வெளியிட அனுமதித்துள்ளார். இது ஒரு வெற்றி என சட்டவல்லுனர்களை மேற்கோள் கட்டி தமிழ்நெட் கூறியுள்ளது.

அதேவேளை இந்த செய்தியை மின்னஞ்சல், முகநூல், குறுஞ்செய்தி மூலமும் கொண்டு செல்ல கேட்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நெட் : http://www.tamilnet.com/art.html?catid=13&artid=34518

சிங்கள ஊடகம்: http://www.lankastandard.com/2011/10/exclusive-us-court-says-publication-on-tamilnet-sufficient-to-serve-summons-on-president-rajapakse/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=exclusive-us-court-says-publication-on-tamilnet-sufficient-to-serve-summons-on-president-rajapakse

  • தொடங்கியவர்

அழைப்பாணையை வழங்கும் நடவடிக்கை நிறைவுபெற்றதும், இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நீதிமன்றத்திற்குப் பதிலளிக்கவேண்டிய கட்டாயம் ஏற்படுமெனவும், மஹிந்த ராஜபக்ஷவால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் வெற்றியைத் தேடிக் கொடுப்பதற்கு சாத்தியமான அனைத்து தார்மீக ஆதரவும், நிதி ஆதரவும் தேவைப்படுவதாகவும் வழக்கறிஞர் புறுஸ் ஃபெய்ன் கூறினார்.

மனமும் வசதியும் உள்ளவர்கள் கைகொடுங்கள்.

போர்க்குற்ற விசாரணைகளே எமது மக்களுக்கு நீண்டகால கௌரவமான அரசியல் தீர்வை இட்டுத்தரும்.

  • தொடங்கியவர்

அமெரிக்காவின் படைகளை அனுப்பும் ஒபாமா - ஒட்டுக்குழு துணைக்குழு தலைவரை

இவர்கள் சண்டையில் ஈடுபடமாட்டார்கள், ஆனால் சண்டைக்கு தயாராக இருப்பார்கள். இவர்கள் உகண்டா நாட்டு படைகளுக்கு உதவுவார்கள் ஒரு ஒட்டுக்குழு துணைக்குழு தலைவரை பிடிக்க. இவர் பேரின் மரணத்திற்கு காரணமானவர்.

Obama sends U.S. troops to capture Lord’s Resistance Army chief

The latest U.S. military adventure, the deployment of 100 troops to Central Africa to hunt for a notorious militia commander, is provoking cheers from human rights activists and befuddlement from many others.

President Barack Obama, who announced the move on Friday, said the U.S. troops would be combat-equipped but would serve as advisers to African armies and will not fight unless attacked. Their mission is to help capture Joseph Kony, infamous leader of the Lord’s Resistance Army, a fanatical militia that has killed an estimated 30,000 people over the past two decades.

http://www.theglobeandmail.com/news/world/africa-mideast/obama-sends-us-troops-to-capture-lords-resistance-army-chief/article2202029/

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்கா ஜனாதிபதிக்கான அழைப்பாணையை தமிழ் நெட்டில் பிரசுரிக்க நீதிமன்றம் உத்தரவு !

[saturday, 2011-10-15 00:02:05]

அமெரிக்காவில் சிறிலங்கா ஜனாதிபதி மீது தொடுக்கப்பட்ட வெவ்வேறு வழக்குகள் இருக்கிறது. இதில் சட்டவல்லுனராகச் செயல்படும் திரு புரூஸ் பெஃயின் அவர்கள் தொடுத்த வழக்கில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளது. சிறிலங்கா ஜனாதிபதிக்கு எதிராக டாக்ட்டர் காசிப்பிள்ளை மனோகரன் என்பவர் ஒரு வழக்கை தொடர்ந்திருந்தார். இவ்வழக்கிற்கு நீதிமன்றத்தால் அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால் அதனை ஏற்க மகிந்தர் மறுத்து, அனுப்பப்பட்ட அனைத்து கடிதங்களையும் வழமைபோல திருப்பி அனுப்பியது அலரி மாளிகை. எனவே இந்த அழைப்பாணையை அவருக்கு வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. அதாவது அமெரிக்க சட்டவரைபில் குற்றஞ்சாட்டப்பட்டவர் இந்த வழக்கு குறித்து நிச்சயம் அறிந்திருக்கவேண்டும் என்பது அவசியமாகும்.

அழைப்பாணையை அனுப்புவதன் மூலமோ இல்லை கடிதம் ஒன்றை அனுப்புவதன் மூலமோ குற்றஞ்சாட்டப்படும் நபர் தனக்கு எதிராக நீதிமன்றில் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளதை அறியவேண்டும். எனவே தற்போது சட்ட வல்லுனரான திரு புரூஸ் பெஃயின் அவர்கள் இலங்கையில் இருந்து வெளிவரும் 2 பத்திரிகையில் முதல் பக்கத்தில் சிறிலங்கா ஜனாதிபதிக்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்துள்ள அழைப்பாணையை விளம்பரமாக பிரசுரிக்க ஏற்பாடுகளைச் செய்துள்ளார். அதுமட்டுமல்லாது நீதிமன்ற அனுமதியோடு அதனை தமிழ் நெட் இணையத்திலும் பிரசுரிக்க அவர் ஏற்பாடுகளைச் செய்துள்ளார். இதனை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு உத்தரவை வழங்கியுள்ளது.

எனவே சிறிலங்கா ஜனாதிபதிக்கு எதிரான அழைப்பாணையை தமிழ் நெட் இணையமும் இலங்கையில் இருந்து வெளியாகும் 2 பத்திரிகைகளும் பிரசுரிக்கின்றன. இதன் மூலம் சிறிலங்கா ஜனாதிபதிக்கு உத்தியோகபூர்வமாக அவர் மேல் அமெரிக்காவில் வழக்கு தொடரப்பட்டுள்ளது என்ற செய்தி சென்றடையும் என நம்பப்படுகிறது. அதனைத் தொடர்ந்து சிறிலங்கா ஜனாதிபதி தனது பக்க நிலையை தெளிவுபடுத்தவேண்டிய கட்டாயம் தோன்றும்.

அதற்குமேலும் அவர் மெளனமாக இருக்க முடியாது. அப்படி அவர் இருந்தால் மேற்கொண்டு பல பின்விளைவுகளை அவர் சந்திக்க நேரிடும். திறமையாக வாதாடியும் பல வித்தியாசமான கோணங்களில் சிந்தித்தும் இந்த வழக்கை திறம்பட நகர்த்திவரும் சட்டவல்லுனர் திரு புரூஸ் பெஃயின் அவர்களை பாராட்டாமல் இருக்க முடியாது.

http://seithy.com/breifNews.php?newsID=50848&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.