Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடாவில் சிறீலங்கா சுற்றுலா கண்காட்சி ரத்து!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் சிறீலங்கா சுற்றுலா கண்காட்சி ரத்து!

[saturday, 2011-10-15 11:15:20]

ஓக்டோபர் மாதம் 16ம் 17ம் திகதிகளில் மிஸிஸாகா நகரில் உள்ள லிவிங் ஆர்ட்ஸ் மண்டபத்தில் நடக்கவிருந்த சிறீலங்கா அரசின் சுற்றுலா மற்றும் வர்த்தக கண்காட்சி காரணங்களின் அறிவிப்பின்றி திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. இத் தகவலை மிஸிஸாகா நகர பொலீஸார் இன்று கனடிய தமிழர் பேரவைக்கு தெரிவித்தனர்.

எதுவித காரணங்களின் அறிவிப்புமின்றி மேற்படி கண்காட்சி ரத்து செய்யப்பட்டிருந்தாலும் கனடிய தமிழரின் ஒருங்கிணைந்த எதிர்ப்பும் அவர்கள் ஏற்பாடு செய்திருந்த மாபெரும் புறக்கணிப்பு ஆர்ப்பாட்டமுமே முக்கிய காரணிகளாக இருக்கலாம் என அரசியல் ஆர்வலர்களால் கருத்துத் தெரிவிக்கப்பெற்றுள்ளது.

இக் கண்காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளதால் ஒக்டோபர் 16இ 17ம் திகதிகளில் ஏற்பாடு செய்யப்பட்ட புறக்கணிப்பு ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ் மக்கள் கூடத்தேவையில்லை என கனடிய தமிழர் பேரவையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

எனினும் பாரதூரமான போர்க் குற்றங்களை புரிந்திருக்கும் சிறீலங்கா அரசின் நிகழ்ச்சிகளை மிஸிஸாகா நகரில் நடக்க அனுமதிக்க வேண்டாமென மிஸிஸாகா நகரபிதா மற்றும் அங்கத்தவர்களை கேட்டுக்கொள்ளும் இணைத்தளம் மூலமான மனுவில் கனடிய தமிழ் மக்கள் தொடர்ந்து கையெழுத்திடுமாறு கேட்டுக்கொள்ளப்பெற்றுள்ளது.

இவ் மனுவானது எதிர்வரும் ஒக்டோபர் 17ம் திகதி மிஸிஸாகா நகரபிதாவின் காரியாலத்துக்கு சமர்ப்பிக்கப்படும்.

http://www.petitiononline.com/notosl/petition.html

http://seithy.com/breifNews.php?newsID=50868&category=TamilNews&language=tamil

கனடாவில் சிறிலங்காவின் உல்லாச பயணத்துறைக் கண்காட்சி நிறுத்தப்பட்டாலும் சிறலங்காவுக்கு எதிரான பரப்புரைகள் தொடரும் !

சிறிலங்கா அரசாங்கத்தினால் கனடா mississauga நகரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உல்லாச பயணத்துறை வர்த்தக கண்காட்சி நிறுதப்பட்டுள்ளநிலையில் இந்த நிகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன புறக்கணிப்பு விழிப்புரை போராட்டம் பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இன்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் வெளிவிவகார அமைச்சகத்தின் மக்கள் தொடர்பக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில்...

கனடா (mississauga ) மிசுசாகா நகரில் சிறிலங்கா அரசினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உல்லாச பயணத்துறை வர்த்தக கண்காட்சி நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த வர்த்தக கணக்காட்சியை தடுத்து நிறுத்தும் நோக்கில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மக்கள் பிரதிநிதிகளால் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

mississauga நகரபிதாவையும் - நகரசபை உறுப்பினர்களையும் சந்தித்த நா.த.அரசாங்கத்தின் துணைப் பிரதமர் ராம் சிவலிங்கம் அவர்கள் தமிழர்கள் மீதான போரின் வடுக்களையும் - வலிகளையும் மறைத்து, இலங்கைத்தீவை ஒரு உல்லாசபுரியாக, சர்வதேத்துக்கு காட்ட சிறிலங்கா அரசு முற்றபட்டு வருகின்றமை குறித்து விளக்கியிருந்தார்.

அத்தோடு, சிறிலங்கா தொடர்பில் தனது கடுமையான நிலைப்பாட்டை கனடிய அரசு எடுத்துள்ள இவ்வேளை, கனடிய மண்ணில் இரத்தக் கறைபடிந்த சிறிலங்காவுக்கு செங்கம்பளம் விரி;ப்பது கவலைதருகின்றதென்ற தமிழர்களின் நிலைப்பாட்டையும் தெரியப்படுத்தியிருந்தார்.

இந்நிலையில் கண்காட்சி நிறுத்தப்பட்ள்ளதாக LIVING ARTS நிர்வாகம் தெரவித்துள்ள நிலையில் சிறிலங்காவின் தமிழின அழிப்பு முகத்தை அம்பலப்படுத்தும் நோக்கில் நாடுகடந்த தமிழீழ அரசாங்க பிரதிநிதிகளால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 'சிறிலங்கா புறக்கணிப்பு போராட்டம்' பிற்போடப்பட்டுள்ளது.

இதேவேளை சிறிலங்கா தொடர்பிலான விழிப்பை ஏற்படுத்தும் நோக்கிலான பரப்புரைகள் தொடர்சியாக நாடுகடந்த தமிழீழ அரசாங்க பிரதிநிதிகளால் முன்னெடுக்கப்படும்.

தாயகம் தேசியம் தன்னாட்சி உரிமை எனும் தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை சனநாயகரீதியாக பிரதிபிலித்த நிற்கும் தமிழீழ தேசிய அரசாங்கமாகிய நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பின்னால் சகல தமிழர் அமைப்புக்களும் தோழமையொடு அணிதிரண்டு சுதந்திர தமிழீழத்தை வென்றெடுக்க உழைப்போம் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாதம் ஊடகசேவை

சிறிலங்காவின் கண்காட்சியைப் புறக்கணிப்போம்: http://www.yarl.com/forum3/index.php?showtopic=92202

இதற்கு பின்னால் உழைத்தவர்களுக்கும், கைநாட்டு போட்டவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.