Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகிந்த ராஜபக்சவுக்கு எதிரான சம்மனை தமிழ்நெட் இணையத்தில் வெளியிடமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

rajapakse300_CI.jpg

“The order read thus “Pursuant to Fed. R. Civ. P. 4(f)(3), Plaintiffs’ [6] Motion for Service by Publication or Alternative Means is GRANTED IN PART. Plaintiffs are authorized to complete service upon the Defendant in his personal capacity by December 27, 2011 by publishing in two Sri Lankan newspapers with the largest national circulation three times per week on a staggered schedule to cover six days each week for a period of four weeks and by posting the full summons and complaint on the main page of the TamilNet website. Plaintiffs shall file proof of service upon Defendant by publication by December 27, 2011. Plaintiffs’ motion is DENIED to the extent it seeks to serve Defendant in his official capacity through means other than as required by Fed. R. Civ. P. 4(j)(1) and 28 U.S.C. § 1608(a). Signed by Judge Colleen Kollar-Kotelly on 10/13/11.(lcckk2)”

அமெரிக்காவின் கொலம்பியா நீதிமன்றத்தில் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் பிறப்பிக்கப்பட்ட சம்மனை ராஜபக்ச தொடர்ந்து வாங்க மறுத்ததால் அதனை தமிழ்நெட் இணையத்தில் வெளியிடமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்காவில் மகிந்த ராஜபக்ச மீது பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இவை பெரும்பாலும் போர்க்குற்ற வழக்குகளே. இவற்றின் மீது பிறப்பிக்கப்படும் அழைப்பாணை (சம்மன்) எதையும் ராஜபக்சவோ இலங்கை அரசோ பெற்றுக் கொள்ளாமல் திருப்பியனுப்புவது வழக்கமாகி உள்ளது.

இந்த வழக்குகளுக்கு தமிழர்கள் சார்பில் ஆஜராகும் புரூஸ் பெஃயின் யோசனையின்படி புதிய உத்தரவொன்றை அமெரிக்காவின் கொலம்பியா மாவட்ட நீதிமன்ற நீதிபதி கோடெல்லி பிறப்பித்துள்ளார்.

டாக்டர் காசிப்பிள்ளை மனோகரன் என்பவர் ராஜபக்சவுக்கு எதிராக ஒரு போர்க்குற்ற வழக்கை தொடர்ந்துள்ளார். அவரது உறவினர்களை சர்வதேச போர் விதிகளுக்கு முரணாக ராஜபக்சவின் உத்தரவுப்படி ராணுவம் கொன்றுவிட்டதாக வழக்கை தொடர்ந்திருந்தார். இவ்வழக்கிற்கு நீதிமன்றத்தால் சம்மன் அனுப்பப்பட்டது.

ஆனால் அதனை ஏற்க மகிந்த ராஜபக்ச மறுத்துவிட்டார். எனவே இது தொடர்பான கடிதங்கள் மற்றும் சம்மனை திருப்பி அனுப்பியது அலரி மாளிகை. இதனால் இந்த சம்மனை அவருக்கு வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது.

அமெரிக்க சட்டப்படி குற்றம் சாட்டப்பட்டவர் குறிப்பிட்ட வழக்கு குறித்து நிச்சயம் அறிந்திருக்கவேண்டும்.

அழைப்பாணையை அனுப்புவதன் மூலமோ இல்லை கடிதம் ஒன்றை அனுப்புவதன் மூலமோ குற்றஞ்சாட்டப்படும் நபர் தனக்கு எதிராக நீதிமன்றில் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளதை அறியவேண்டும்.

ஆனால் ராஜபக்ச இதனை அறிய மறுப்பதால் இலங்கையில் இருந்து வெளிவரும் 2 பத்திரிகையில் முதல் பக்கத்தில் ராஜபக்சவுக்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்துள்ள சம்மனை முதல்பக்கத்தில் விளம்பரமாக பிரசுரிக்க உத்தரவிடுமாறு கேட்டுக் கொண்டார்.

மேலும் தமிழ் நெட் இணையத்திலும் பிரசுரிக்கும் வகையில் இந்த உத்தரவு இருக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். இதனை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு உத்தரவை வழங்கியுள்ளது.

இதன்படி ராஜபக்சவுக்கு எதிரான சம்மனை தமிழ் நெட் இணையமும் இலங்கையில் இருந்து வெளியாகும் 2 பத்திரிகைகளும் பிரசுரித்துள்ளன. இதன் மூலம் ராஜபக்ச மீது அமெரிக்காவில் வழக்கு தொடரப்பட்டுள்ளது என்ற செய்தி அதிகார பூர்வமாக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அமெரிக்க நீதிமன்றத்தில் உள்ள வழக்கில் ஆஜராகி அல்லது தன் சார்பில் வழக்கறிஞர் வைத்து அவர் தனது விளக்கத்தைச் சொல்லியாக வேண்டும்.

ஒருவேளை அவர் இதையும் கண்டுகொள்ளாமல் விட்டால் பல பின்விளைவுகளை அவர் சந்திக்க நேரிடும். ஏன கூறப்படுகிறது

http://www.globaltam...IN/article.aspx

இந்த தடவை அமெரிக்க நீதிமன்றம் ஒன்றால் இலங்கையில் தேவைகேற்ப படிக்க படும் பத்திரிகையாக தமிழ்னெட். கணக்கெடுக்க பட்டிருக்கிறது. தமிழ்னெடுக்கு வாழ்த்துகள். இது பயங்கர வாதிகளாக உலகத்தால் சோடிக்கபட்ட தமிழரை அவர்கள் தரமான குடிமக்கள் என்று தமிழ்நெட் நிரூபித்திருக்கும் செயல்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.