Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்கள் சுய நிர்ணைய உரிமையினை இழந்து பேசமுடியாது: விக்னேஸ்வரன்

Featured Replies

வடக்கு கிழக்கு தமிழர் பிரதேசம் என்பதனை 1921 ஆம் ஆண்டு சிங்களம் ஏற்றுக்கொண்டுள்ளது.1921 ஆம் ஆண்டிற்கு முன்னர் சிறிலங்காவில் இன ரீதியான தனி அலகுகள் தான் இருந்தன.ஆனால் அதன் பின்னர்தான் நிலமைகள் மாறியது. இவ்வாறு கூறியுள்ளார் முன் நாள் உயர் நீதிமன்ற நீதியரசர் விக்னேஸ்வரன். இனத்துவ அடையாளங்களையும் பாதுகாப்பையும் கருத்தில்கொண்டு ஆங்கிலேயர் தனித்தனி அலகுகளாகவே ஆட்சி அதிகாரங்களை வைத்திருந்தார்கள்.

.

ஆனால் 1917 ஆம் ஆண்டு பிரதேச முறைப்படி அது அமைய வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. ஆனால் அதனை அப்போது சபாபதி தலைமையிலான யாழ்ப்பாண சங்கம் எதிர்த்தது. பிரதேச ரீதியில் இருந்தால் பெரும்பான்மை இனத்தவர்கள் கூடுதல் பலம் பெற்று விடுவார்கள். சிறுபான்மை இனத்தவர்களைக் கணக்கிலெடுக்க மாட்டார்கள் என்று வாதிட்டார்கள். ஆனால் தமிழர்களுக்குக் கொழும்பில் ஓர் ஆசனம் தருவோம் என்று பெரும்பான்மையினத்தவர்கள் நம்பிக்கையளித்தார்கள்.

.

எனினும் 1921 இல் தேர்தல் வந்தபோது வடக்கு கிழக்கைச் சேர்ந்தவர்களுக்குக் கொழும்பில் சலுகைகள் தேவையில்லை என்றார்கள். தமிழர்கள் வடக்கு கிழக்கில் பெரும்பான்மை இனம் என்பதால் கொழும்பில் அவசியம் இல்லை என்றார்கள். ஆக, வடக்கு கிழக்கு தமிழர் பிரதேசம் என்பதை அன்றே ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். ஒரு பிரதேசத்தில் தனிப்பட்ட மொழி, கலாசாரம், சீதோஷ்ண நிலை வேறாக இருப்பின் சுயமான உரிமை வழங்கப்பட வேண்டும் என்பது உலக உரித்தாவணங்கள் மூலம் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. ஆகவே தமிழ் பேசும் மக்கள் இந்த உரித்தை இழந்துவிடக்கூடாது.

.

தமிழர் தரப்பும் தம்மைத் தாழ்த்திக்கொண்டு பேச்சுவார்த்தைக்குச் செல்லக்கூடாது. இதுவரை காலம் பேச்சுவார்த்தை நடத்தியும் எந்தப் பலனும் ஏற்படாததால் இனிவரும் காலங்களில் பேச்சுவார்த்தைக்கென ஒரு கால நிர்ணயத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இருதரப்பும் இதுவரை என்னென்ன விடயங்களைப் பேச்சு வார்த்தைக்கு உட்படுத்தியதோ அந்த விடயங்களைப் பட்டியலிட்டு அதன் அடிப்படையில் குறித்த காலப் பகுதிக்குள் பேச்சை நிறைவுசெய்யும் விதத்தில் திட்டமிட வேண்டும். என உச்ச நீதிமன்ற முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மூலம்

கூட்டமைப்பினருக்கும், ஏனைய தமிழ் அரசியல்வாதிகளுக்கும் சொல்லப்பட்ட தெளிவான செய்தி.

குறிப்பாக சிந்தனைவளம் குறைந்த சம்பந்தன், ஆனந்தசங்கரி, சித்தார்த்தன் போன்றவர்களும், இந்திய அடிவருடித்தனம் நிறைந்த சுரேஷ் பிரேமச்சந்திரன், மாவை, அடைக்கலம் போன்றவர்களும், பச்சோந்தியான சுமந்திரன் போன்றவர்களும் முன்னாள் நீதிபதியும் சிறந்த சிந்தனையாளருமான சி. வி. விகேஸ்வரனின் கருத்துக்களை தெளிவாக உள்வாங்க வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.