Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழக உள்ளுராட்சி சபைத் தேர்தல் முடிவுகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

# அரக்கோணம் நகராட்சியில் திமுக வேட்பாளர் மனோகரன் முன்னிலை

# கடலூர் நகராட்சியில் அதிமுக வேட்பாளர் சுப்பிரமணியன் முன்னிலை

# கோவை மாநகராட்சி மேயர் தேர்தலில் அதிமுக வேட்பாளர் முன்னிலை

வேதாரண்யம் நகாட்சியில் திமுக வேட்பாளர் முத்துலட்சுமி முன்னிலை

கிருஷ்ணகிரி நகராட்சியில் அதிமுக வேட்பாளர் தங்கமுத்து முன்னிலை

# மேட்டூர் நகராட்சியில் திமுக வேட்பாளர் கோபால் முன்னிலை

# பத்மநாபபுரம் நகராட்சியில் அதிமுக வேட்பாளர் சத்யாதேவி முன்னிலை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

# திண்டுக்கல் நகராட்சியில் அதிமுக முன்னிலை

# ராஜபாளையம் நகராட்சியில் அதிமுக முன்னிலை

# கோவையில் 4 வார்டுகளில் அதிமுக முன்னிலை, 1ல் திமுக முன்னிலை

# நாகர்கோவில் நகராட்சியில் பாஜக வேட்பாளர் முன்னிலை

# திருப்பூரில் அதிமுக வேட்பாளர் விசாலாட்சி முன்னிலை

# கரூர் நகராட்சி 1வது வார்டு அதிமுக வேட்பாளர் விஜயலட்சுமி வெற்றி

# மேட்டூர் நகராட்சியில் திமுக வேட்பாளர் கோபால் முன்னிலை

# கடலூர் நகராட்சி 1வது வார்டில் அதிமுக வேட்பாளர் அய்யாதுரை வெற்றி

# சாத்தூர் நகராட்சியில் அதிமுக வேட்பாளர் முன்னிலை

மதுரை: 7வது வார்டில் அதிமுக வெற்றி

மதுரை மாநகராட்சியில் 100 வார்டுகளில் முதல் வெற்றியாக அதிமுக தட்டிப்பறித்தது. திமுக டெபாசிட் இழந்தது.

மதுரை மாநகராட்சியில் 7வது வார்டில் அதிமுக சார்பில் முத்து ராஜாவும், திமுக சார்பாக பால் ராஜ் ஆகியோர் போட்டியிட்டனர். இதில், அதிமுக வேட்பாளர் 3,700 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் 750 வாக்குகள் பெற்று டெபாசிட் இழந்தார்.

இரண்டாம் இடத்தில் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பிடித்தார். மேலும் இரண்டு வார்டுகளில் அதிமுக முன்னிலையில் உள்ளது.

திருச்சி: 1, 7, 30 வார்டுகளில் அதிமுக வெற்றி

திருச்சி மாநகராட்சியில் 1வது வார்டு அதிமுக வேட்பாளர் லதா, 7வது வார்டு அதிமுக வேட்பாளர் அன்புலட்சுமி, 30 வது வார்டு அதிமுக வேட்பாளர் பாஸ்கர் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.

மதுரை: 67வது வார்டில் திமுக வெற்றி

மதுரை மாநகராட்சியில் 67வது வார்டில் திமுக வெற்றி பெற்றுள்ளது. முபாரக் மந்திரி திமுக சார்பில் போட்டியிட்டார். 1589 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் பிரேம் சந்தார். 740 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். சுயேட்சை வேட்பாளர் எம்.ஆர்.மாணிக்கம் 1318 வாக்குகள் பெற்றார்

# தூத்துக்குடி நகராட்சி 2வது வார்டில் திமுக வேட்பாளர் முருகேசன் வெற்றி

# நெல்லை மாநகராட்சி 11வது வார்டில் திமுக வேட்பாளர் வசந்தா வெற்றி

# சென்னை, மதுரை, திருச்சி, கோவை, தூத்துக்குடி, திருப்பூர் மாநகராட்சி மேயர் பதவி-அதிமுக முன்னிலை

# மதுரை மாநகராட்சி 7வது வார்டில் அதிமுக வேட்பாளர் வெற்றி

# சேலம் நகராட்சி 4வது வார்டில் திமுக வேட்பாளர் புவனேஸ்வரி முரளி வெற்றி

# கரூர் நகராட்சி 2வது வார்டில் தேமுதிக வேட்பாளர் மாலதி வெற்றி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

# சென்னை, மதுரை, திருச்சி, கோவை, தூத்துக்குடி, சேலம், திருப்பூர் மாநகராட்சி மேயர் பதவி-அதிமுக முன்னிலை

# நாகர்கோவில் நகராட்சி பாஜக முன்னிலை !

# மேட்டூர் நகராட்சியில் திமுக வேட்பாளர் முன்னிலை !

# திண்டுக்கல் நகராட்சியில் அதிமுக முன்னிலை !

# ராஜபாளையம் நகராட்சியில் அதிமுக முன்னிலை !

# சாத்தூர் நகராட்சியில் அதிமுக வேட்பாளர் முன்னிலை

# ராமேஸ்வரம் நகராட்சியில் திமுக முன்னிலை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திருச்சி மேயர் தேர்தல் முடிவு நிலவரம்

அதிமுக 9356

திமுக 4888

மதிமுக 875

தேமுதிக 932

# சென்னை, மதுரை, திருச்சி, கோவை, தூத்துக்குடி, சேலம், திருப்பூர் மாநகராட்சி மேயர் பதவி-அதிமுக முன்னிலை

# 10 மாநகராட்சிகளிலும் அதிமுக அமோக முன்னிலை!

# ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் அதிமுக வேட்பாளர் செந்தில்குமாரி முன்னிலை

# பெரும்பாலான இடங்களில் 3, 4வது இடத்தில் தேமுதிக

# உதகை நகராட்சியில் திமுக முன்னிலை

# சென்னை மாநகராட்சி-15 வார்டுகளில் அதிமுக, 4ல் திமுக முன்னிலை

# 125 நகராட்சிகளில் 7ல் அதிமுக, 8ல் திமுக முன்னிலை

# கோவை மாநகராட்சி மேயர் தேர்தலில் அதிமுக வேட்பாளர் சே.ம.வேலுசாமி முன்னிலை

# காஞ்சிபுரம் நகராட்சியில் அதிமுக வேட்பாளர் மைதிலி திருநாவுக்கரசு முன்னிலை

மதுரை: 10 வார்டுகளில் அதிமுக, 3 வார்டுகளில் திமுக வெற்றி

மதுரை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் 10 வார்டுகளில் அதிமுகவுக்கு வெற்றி கிடைத்துள்ளது. 7, 14, 16, 17, 31, 40, 50, 75, 93, 94 ஆகிய வார்டுகளில் அதிமுகு வெற்றி கிடைத்துள்ளது.

2, 67, 84 ஆகிய 3 வார்டுகளில் திமுகவுக்கு வெற்றி கிடைத்துள்ளது.

தேமுதிக இதுவரை ஒரு வெற்றிக் கூட பெறவில்லை.

சேலம் மாநகராட்சி: அதிமுகவின் போட்டி வேட்பாளர் வெற்றி

சேலம் மாநகராட்சியில் வார்டு 5ல் சுயேட்சை வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். இவர் அதிமுகவின் போட்டி வேட்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வெற்றி நிலவரம்

பேரூராட்சித் தலைவர் -திமுக 2, அதிமுக 1, பாஜக 1

கவுன்சிலர்கள் - அதிமுக 31, திமுக 15, சுயேச்சை 8, தேமுதிக 3, காங். 3,

வார்டு உறுப்பினர் - அதிமுக 388, திமுக 247, சுயேச்சைகள் 246, தேமுதிக 43, காங். 42, பாஜக 14, மதிமுக 13, பாமக 10, சிபிஎம் 6,

சிபிஐ 5, பா.பிளாக் 1, சி.சிறுத்தைகள் 1, மற்றவர்கள் 6

குளித்தலை நகராட்சித் தலைவர்-மதிமுக முன்னிலை

சென்னை மாநகராட்சி-15 வார்டுகளில் அதிமுக, 4ல் திமுக முன்னிலை

125 நகராட்சிகளில் 7ல் அதிமுக, 8ல் திமுக முன்னிலை

கீரமங்கலம் பேரூராட்சி: மதிமுக வெற்றி

புதுக்கோட்டை மாவட்டம்: கீரமங்கலம் பேரூராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்ட மதிமுக வேட்பாளர் துரை. தனலட்சுமி வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் கார்த்திகா சிவக்குமாரை விட 70 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

# உள்ளாட்சித் தேர்தல் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பின்னடைவு !

# உள்ளாட்சித் தேர்தல் பாமக பின்னடைவு !

# கரூர் - தோட்டக்குறிச்சி பேரூராட்சி அதிமுக வேட்பாளர் வெற்றி !

# கரூர் - டி.என்.பி.எல். பேரூராட்சி அதிமுக வேட்பாளர் கமலகண்ணன் வெற்றி !

ஆத்தூர் நகராட்சி: அதிமுக 4, திமுக 3, பாமக 1

சேலம் மாவட்டத்தில் ஆத்தூர் நகராட்சியில் நான்கு வார்டுகளில் அதிமுக, 3 வார்டுகளில் திமுக, ஒரு வார்டில் பாமக வெற்றி பெற்றுள்ளது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உள்ளாட்சித் தேர்தல் முடிவு- 10 மாநகராட்சிகள், பெருவாரியான இடங்களில் அதிமுக முன்னிலை

சென்னை: தமிழ்நாட்டில் இரண்டு கட்டமாக நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை வெள்ளிக்கிழமை காலை தொடங்கியது.

சென்னை, மதுரை, கோவை, திருச்சி, நெல்லை, சேலம், ஈரோடு, திருப்பூர், தூத்துக்குடி, வேலூர் ஆகிய பத்து மாநகராட்சிகளிலும், பெருவாரியான நகராட்சிகள், பேரூராட்சிகளிலும் அதிமுகவே முன்னணியில் உள்ளது.

இதில் தூத்துக்குடி, மதுரை, திருப்பூர் உள்ளிட்ட பெரும்பாலான மாநகராட்சி மேயர் தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் மிகப் பெரிய வித்தியாசத்தில் முன்னணியில் உள்ளனர்.

தமிழகம் முழுவதும் மொத்தம் 822 மைங்களில் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. ஊரகப் பகுதிகளில் 400 மையங்களிலும், நகர்பப்பகுதிகளில் 422 மையங்களிலும் வாக்குகள் எண்ணப்படுகின்றன.

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மூலம் வாக்குப் பதிவு நடந்த மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சித் தலைவர், உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் முடிவுகள் இன்று மாலைக்குள் வெளியாகி விடும். வாக்குச் சீட்டு முறையில் நடந்த தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியாக நாளை மாலை வரை ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் 10 மாநகராட்சிகள் அதற்குட்பட்ட 820 வார்டுகள், 125 நகராட்சிகள், 3697 நகராட்சி வார்டுகள், 629 பேரூராட்சிகள், 8303 பேரூராட்சி வார்டுகள், 31 மாவட்ட ஊராட்சிகள், 655 மாவட்ட ஊராட்சி வார்டுகள், 385 ஊராட்சி ஒன்றியங்கள், 6471 ஒன்றிய வார்டுகள், 12524 கிராம ஊராட்சிகள், 99333 கிராம ஊராட்சிகளுக்கான வார்டுகள் ஆகிய 1 லட்சத்து 32 ஆயிரத்து 467 பதவிகளுக்கு 2 கட்டமாக தேர்தல்கள் நடைபெற்றன. இந்த பதவிகளுக்கு மாநிலம் முழுவதும் 4 லட்சத்து 11 ஆயிரத்து 767 பேர் போட்டியிட்டனர்.

உள்ளாட்சித் தேர்தலில் இரண்டு கட்டங்களையும் சேர்த்து பதிவான வாக்குகளின் எண்ணிக்கை 78.5 சதவீதமாகும். முதல் கட்டத் தேர்தலில் நாமக்கல் மாவட்டத்தில் அதிகபட்சமாக 85 சதவீதம் வாக்குகள் பதிவாகின. மாநகராட்சிகளைப் பொறுத்தவரை சென்னை குறைவான அளவாக 51.63 சதவீதம் வாக்குகள் மட்டுமே பதிவாயின. வேலூர் மாநகராட்சியில் தான் அதிகபட்சமாக 71 சதவீதம் வாக்குகள் பதிவாயின.

சென்னையில்

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகள் மற்றும் மேயர் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை 18 மையங்களில் நடைபெறுகிறது. பச்சையப்பன் கல்லூரி, லயோலா கல்லூரி, ராணி மேரி கல்லூரி உள்ளிட்ட பல்வேறு வாக்கு எண்ணும் மையங்களை மாநில தேர்தல் ஆணையர் சோ.அய்யர் சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன், மாநகர காவல் துறை ஆணையர் திரிபாதி உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.

மதுரையில்

மதுரை மாநகராட்சியில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி 3 மையஙக்ளில் நடைபெறுகிறது. வாக்கு எண்ணும் மையங்களுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணும் மையங்களுக்குள் செல்போன், இங்க் பேனா உள்ளிட்டவற்றைக் கொண்டு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது

- தட்ஸ் தமிழ்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திருப்பூர் மாநகராட்சி: மேயர் தேர்தலில் அ.தி.மு.க. முன்னணி

திருப்பூர் மாநகராட்சி தேர்தலில் மேயர் பதவிக்கு இன்று காலை ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. ஒவ்வொரு சுற்றுகள் முடிவிலும் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம் வருமாறு:-

மொத்த ஓட்டுகள்- 408768

பதிவானவை- 275807

ஏ.விசாலாட்சி (அ.தி.மு.க.)-5249

என்.தினேஷ்குமார் (தே.மு.தி.க.)-2102

க.செல்வராஜ் (தி.மு.க.)-1860

நாகராஜ் (ம.தி.மு.க.)-321

சித்திக் (காங்.)-219

சின்னச்சாமி (பா.ஜனதா)-206

சி.வடிவேல் (பா.ம.க.)-82

2-வது சுற்று

ஏ.விசாலாட்சி (அ.தி.மு.க.)-10419 க.செல்வராஜ் (தி.மு.க.)-3869 என்.தினேஷ்குமார் (தே.மு.தி.க.)-3591 நாகராஜ் (ம.தி.மு.க.)-559 சின்னச்சாமி (பா.ஜனதா)-413 சித்திக் (காங்.)-405 சி.வடிவேல் (பா.ம.க.)-119

-மாலை மலர்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாகர்கோவில் நகரசபையில் பாரதீயஜனதா முன்னிலை

நாகர்கோவில் நகரசபை தலைவர் பதவிக்கான தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் டாரதிசாம்சனும், தி.மு.க. சார்பில் மேரிஜெனட் விஜிலாவும் போட்டியிட்டனர். பாரதீய ஜனதா சார்பில் மீனாதேவ், காங்கிரஸ் சார்பில் ஐரின்சேகர், தே.மு.தி.க. சார்பில் ஷைலா கோல்டு ஏஞ்சலின் ஆகியோர் போட்டியிட்டனர்.

நாகர்கோவில் எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. முதல் சுற்று முடிவில் பாரதீய ஜனதா வேட்பாளர் மீனாதேவ்-141 ஓட்டுகள் அதிகம் பெற்று முன்னிலை வகித்தார்.

முதல் சுற்று

மீனாதேவ்(பா.ஜனதா)-4674

டாரதிசாம்சன் (அ.தி.மு.க.) -4533.

மேரிஜெனட்விஜிலா (தி.மு.க.)-3970.

ஐரின்சேகர்(காங்) -1557.

ஷைலாகோல்டு ஏஞ்சலின்(தே.மு.தி.க.)-917.

நெல்லை மாநகராட்சி மேயர் பதவி: அ.தி.மு.க. முன்னணி

நெல்லை மாநகராட்சி மேயர் பதவி மற்றும் 55 வார்டுகளின் கவுன்சிலர் பதவிகளுக்கு நடத்தப்பட்ட தேர்தலில் பதிவான வாக்குகள் பாளை அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் எண்ணப்பட்டன. ஓட்டு எண்ணிக்கைகாக 6 பகுதிகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பகுதியிலும் 14 டேபிள்கள் போடப்பட்டிருந்தன.

ஓட்டு எண்ணிக்கை சரியாக காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணும் பணி தொடங்கியது. பின்பு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டன. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே அ.தி.மு.க. மேயர் வேட்பாளர் விஜிலா சத்யானந்த் முன்னிலையில் இருந்து வந்தார்.

9 மணியளவில் விஜிலா சத்யானந்த் 1660 வாக்குகளும், தி.மு.க. வேட்பாளர் அமுதா 1218 வாக்குகளும் பெற்றிருந்தனர். 9-30 மணி நிலவரப்படி விஜிலா சத்யானந்த் 3231 ஓட்டுகளும், அமுதா 2264, சுயேச்சை வேட்பாளர் அசன்பாத் 2100 ஓட்டுகளும், தே.மு.தி.க. வேட்பாளர் கண்ணம்மாள் 845 ஓட்டுகளும், காங்கிரஸ் வேட்பாளர் ஜுலியட் பிரேமலதா 195 ஓட்டுகளும், ம.தி.மு.க. வேட்பாளர் மகேஸ்வரி 172 ஓட்டுகளும் பெற்றிருந்தனர்.

நெல்லை மாநகராட்சி மேயர் பதவிக்கு போட்டியிட்டவர்கள் பெற்ற ஓட்டுகள் விவரம் சுற்று வாரியாக வருமாறு:-

முதல் சுற்று

விஜிலா சத்யானந்த் (அ.தி.மு.க.)- 9267 அமுதா (தி.மு.க.) - 6339 அசன்பாத் (சுயே)- 2459 கண்ணம்மாள் (தே.மு.தி.க.)- 1364 மகேஸ்வரி (ம.தி.மு.க.) -754 ஜுலியட் பிரேமலதா (காங்.)- 744

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உள்ளுராட்சி தேர்தல்களில் மாநகராட்சி மேயர் தேர்தலில் தான் கட்சியின் செல்வாக்கு தெரியும். மற்றைய பதவிகளில் நகராட்சி தலைவரைத் தவிர பெரும்பாலானவை போட்டியிடும் வேட்பாளரின் செல்வாக்கு, சாதி, சமயம் பார்த்து மக்கள் வாக்களிக்கிறார்கள். எனினும் ஆளும் கட்சிக்கு சார்பாகவே வாக்குகள் விழுவதுண்டு. அரசியல் செல்வாக்கினைக் காட்டக்கூடிய மாநகராட்சி மேயர் தேர்தலில் நடைபெற்ற 10 இடங்களிலும் அதிமுகவே கைப்பற்றியுள்ளது. அவ்விடங்களில் முதல் 5 இடங்களைப் பிடித்த வாக்காளர்களின் வாக்குகள் விபரம்

தூத்துக்குடி மாநகராட்சி

வாக்குகள் விவரம்

எல். சசிகலா புஷ்பா(அதிமுக) 65,050

எம். பொன் இனிதா(திமுக) 41,794

பாத்திமா பாபு (மதிமுக) 29,336

ச. ராஜேஸ்வரி (தேமுதிக) 7,407

ஜெ. சிந்தியா வயலட் லில்லி(காங்கிரஸ்) 6,485

நெல்லை மாநகராட்சி

விஜிலா சத்தியானந்த் (அதிமுக) 80,265

எஸ். அமுதா (திமுக) 55,681

எஸ். கண்ணம்மாள் (தேமுதிக) 10,021

அசன்பாத்து (சுயேச்சை) 11,587

ஜூலியட் பிரேமலதா (காங்கிரஸ்) 8,456

திருப்பூர் மாநகராட்சி

வாக்குகள் விவரம்

ஏ.விசாலாட்சி (அதிமுக) 136949

க.செல்வராஜ் (திமுக) 59280

என்.தினேஷ்குமார் (தேமுதிக) 43378

ஆர்.நாகராஜ் (மதிமுக) 9562

டி.டி.கே.சித்திக் (காங்கிரஸ்) 7139

வேலூர் மாநகராட்சி

வாக்குகள் விவரம்

பி.கார்த்தியாயினி (அதிமுக) 1,08,127

ஆர்.இராஜேஸ்வரி (திமுக) 82,139

எஸ்.தேவி (காங்கிரஸ்) 8,546

ஜி. லதா (மார்க்சிஸ்ட் கம்யூ.) 7,398

ஜெ.ஈஸ்வரி (மதிமுக) 5,567

திருச்சி மாநகராட்சி

வாக்குகள் விவரம்

அ. ஜெயா (அதிமுக) 1,61,458

விஜயா ஜெயராஜ் (திமுக) 1,09,043

எஸ். ரொஹையா பீவி (மதிமுக) 37,618

மு. சித்ரா (தேமுதிக) 30,471

செü. விஜயா (காங்கிரஸ்) 15,387

ஈரோடு மாநகராட்சி

வாக்குகள் விவரம்

மல்லிகா பரமசிவம்(அதிமுக) 1,05,672

செல்லப்பொன்னி மனோகரன்(திமுக) 59,532

என்.எஸ்.சிவகுமார் (தேமுதிக) 27,544

பா.ராஜேஷ்(காங்கிரஸ்) 6,196

மு.சாமிநாதன் (மதிமுக) 6,071

க.முகமது யூனுஸ் (சுயேச்சை) 4,952

பெ.அருள்மொழி (பாமக) 4,568

சேலம் மாநகராட்சி

வாக்குகள் விவரம்

எஸ். சவுண்டப்பன் (அதிமுக) 1,92,866

எஸ்.டி. கலையமுதன் (திமுக) 97,793

ஏ.ஆர். இளங்கோவன் (தேமுதிக) 43,155

இரா. அருள் (பாமக) 16,853

ஆர். விஜயவர்மன் (காங்கிரஸ்) 14,666.

மதுரை மாநகராட்சி

வாக்குகள் விவரம்

ராஜன் செல்லப்பா (அதிமுக) 3,12,226

பி.பாக்கியநாதன் (திமுக) 1,38,329

கவியரசு (தேமுதிக) 88,788

சிலுவை (காங்கிரஸ்) 22,904

ராஜேந்திரன் (பாஜக) 14,352

கோவை மாநகராட்சி

வாக்குகள் விவரம்

செ.ம.வேலுசாமி (அதிமுக) 2,81,728

கார்த்திக் (திமுக) 1,53,816

சிவஞானம் (மார்க்சிஸ்ட்) 32,834

சின்னையன் (காங்கிரஸ்) 30,446

அர்ஜுனராஜ் (மதிமுக) 27,209

சென்னை மாநகராட்சி

வாக்குகள் விவரம்

சைதை துரைசாமி (அதிமுக) ..............12,40,340

மா. சுப்பிரமணியன் (திமுக) ...............7,20,593

வேல்முருகன் (தேமுதிக) ...............1,42,203

ஏ.கே. மூர்த்தி (பா.ம.க.) ...............47,327

சைதை ரவி (காங்கிரஸ்) ...............62,772

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.