Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரான்ஸில் கருத்தரங்கு: இளையோர்களுக்கு நல்ல சந்தர்ப்பம்

Featured Replies

போர்-சமாதானம் நடுவில் தமிழ் சமூகம்(பிரான்ஸ்) : பிரென்சுக் கருத்தரங்கில் தமிழ் இளையோர்களை பங்கெடுக்குமாறு கோரிக்கை !

Cité national de l'histoire de l'immigrations எனும் பிரென்சு மண்ணில் வெளிநாட்டவர்கள் தொடர்பிலான ஆய்வு மையத்தின் ஏற்பாட்டில் இடம்பெறுகின்ற Diaspora Sri Lankaise : Entre Guerre et Paix 'போர்-சமாதானம்: நடுவில் தமிழ் சமூகம்' எனும் இருநாள் கருத்தரங்கில் பிரான்ஸ் வாழ் தமிழ் இளையோர்களை பங்கெடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஒக்ரோபர் 21-22 ஆகிய வெள்ளி - சனி இரு நாட்களும் இடம்பெறுகின்ற இந்தக் கருத்தரங்கில் பிரான்ஸ் வாழ் தமிழ் சமூகத்தின் குடும்பம், அரசியல் ,வர்த்தகம், கல்வி, மொழி, உணவுப் பழக்க வழக்கங்கள், உடை, மத சம்பிர்தாயங்கள் என பல்வேறுபட்ட விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவாதங்கள், ஒளிப்படக்கண்காட்சி, குறும்பட திரையிடல் மற்றும் பல கலை நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன.

பிரான்சில் வாழ்ந்து வருகின்ற ஆசிய இன மக்களில், இலங்கைத் தமிழர்கள் குறிப்பிடத்தக்க இடத்தை வகித்து வருகின்றனர் என இந்நிகழ்வு தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள Cité national de l'histoire de l'immigrations எனும்ஊடகக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.histoire-immigration.fr/2011/8/diasporas-sri-lankaises-entre-guerre-et-paix

புலம்பெயர் தமிழ் மக்களுடைய உரிமைப் போராட்டத்தின் நியாயப்பாடுகளை மையப்படுத்தி கடிதமொன்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சார்பில் இந்த கருத்தரங்க ஏற்பாட்டளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கருத்துரைத்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரான்சின் வட பிராந்திய மக்கள் பிரதிநிதி பாக்கியசோதி வள்ளுவன் அவர்கள் தெரிவிக்கையில், புலம்பெயர்ந்து வாழ்ந்து வருகின்ற தமிழர்கள் வேலைக்காக வெளிநாடுகளுக்கு வந்தவர்கள் என்ற கருத்தினை சிறிலங்கா அரச தரப்பு பல தடவைகள் கூறியிருக்கின்ற நிலையில், இக்கருத்தரங்கில் பங்கெடுத்துக்கு கொள்கின்ற சிறலங்கா அரச சார்புடையர்களும் அக்கருத்தினையே பிரதிபலிக்க வாய்ப்புள்ளது.

இந்நிலையில் தமிழ் இளையோர்கள் பலரும் இதில் பங்கெடுத்து தமிழர்களுடைய உண்மையான நிலைப்பாட்டினையும், நியாயப்பாட்டினையும் முன்வைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

Palais de la Porte Dorée, 293, avenue Daumesnil, 75012 Paris எனும் முகவரிய் இக்கருத்தரங்கம் இடம்பெறுகின்றது.

வெள்ளி காலை 10முதல் மாலை 17:30 வரையும் சனி மாலை 15 மணிமுதல் 18:30 மணி வரையும் கருத்தரங்கம் இடம்பெறுகின்றது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.