Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐந்து கோரிக்கைகளை முன்நிறுத்தி பிரித்தானியாவில் 'நீதிக்கான நடைப்பயணம்' !அனைவரும் ஒன்றுபட்டு கரங்கொடுப்போம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Jeyashanker_Murugiah150.jpg

பிரித்தானிய மக்களிடமும், பிரித்தானிய அரசாங்கத்திடமும் நீதி கேட்டு, மன்செஸ்டர் நகரில் இருந்து லண்டன் மாநகரம் வரையிலான 'நீதிக்கான நடைப்பயணமொன்று' திரு.ஜெயசங்கர் முருகையா அவர்களினால் மேற்கொள்ளப்படவுள்ளது. 29-10-2011 முதல் 7-11-2011 வரைக்குமாக அமையவுள்ள இந்த நடைப்பயணம் ஐந்து கோரிக்கைகளை முன்னிறுத்தி மேற்கொள்ளப்படுகின்றது.

* ஈழத்தமிழர்களின் மீதான சிறிலங்கா அரச பயங்கரவாதிகளின் இனப்படுகொலையையும், போர்க்குற்றங்களையும், மானுடத்திற்கு எதிரான குற்றங்களையும் விசாரிப்பதற்காக ஒரு சுயாதீனமான, நீதியான, சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் ஒன்று உருவாக்கப்படல் வேண்டும்.

* ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பதோடு, தமிழீழத்தில் சர்வதேச சமுகத்தின் மத்தியஸ்தத்துடன் கூடிய ஒரு சர்வசன வாக்கெடுப்பு நடாத்தப்படல் வேண்டும்.

* ஈழத்தமிழர்களை ஒரு முற்றான இன அழிப்பிலிருந்து காப்பாற்றும் முகமாகவும், சிங்கள பேரினவாத அரச பயங்கரவாதத்தின் கொடுமைகளை ஆண்டாண்டு காலமாக அனுபவித்து வரும் ஈழத்தமிழர்களுக்கு நிவாரணம் அளிக்கும் முகமாகவும், தமிழீழத்தில் ஈழத்தமிழர்களின் தனியாட்சி உரிமையினை அங்கீகரிக்க வேண்டும்.

* சிறிலங்காவின் கொடுஞ்சிறைகளினுள்ளே அடைபட்டு, துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் அனைத்து ஈழத்தமிழ் பொதுமக்களும், முன்னாள் போராளிகளும் உடனடியாக விடுதலை செய்யப்படல் வேண்டும்.

* தமிழீழத்தில் சிங்கள பேரினவாத அரசாங்கத்தின் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் யாவும் உடனடியாக நிறுத்தப்படுவதோடு, அனைத்து ஈழத்தமிழர்களும் அவர்களது சொந்த இடங்களில் மீண்டும் குடியமர்த்தப்படல் வேண்டும்.

மேற்குறிப்பிட்டுள்ள கோரிக்கைகள் அடங்கிய மனு நீதிக்கான நடைப்பயணத்தின் போது பிரித்தானியப் பிரதமரிடமும், அமைச்சர்களிடமும் மற்றைய நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் கையளிக்கப்படவுள்ளது.

இதேவேளை நீதிக்கான நடைப்பயணத்தில் ஆகிய Manchester, Stoke-On-Trent, Birmingham, Coventry, Milton Keynes, Luton, London நகரங்களில் சிறிலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்ட தமிழீழன அழிப்பின் காணொளிச் சாட்சியங்கள் திறந்த வெளியரங்குகளில் திரையிட்டு காண்பிக்கபடவுள்ளன.

மேலும் ஐந்து கோரிக்கைகளுக்கும் ஆதரவு திரட்டும் நோக்கில் நடைப்பயணத்தின் போது பிரித்தானிய மக்களிடம் கையெழுத்தும் சேகரிக்கப்படவுள்ளது. இந்தக் கையெழுத்துப் பிரதிகள் பிரித்தானிய அரசாங்கத்திற்கும், ஏனைய சர்வதேச மற்றும் மனித உரிமைகள் அமைப்புக்களுக்கும் அனுப்பி வைக்கப்படவுள்ளது.

http://youtu.be/P75ahPF4PaA

மற்றும் ஈழத்தமிழர்களின் உரிமைப் போராட்டத்தினை நியாயப்பாடுகளை வலியுறுத்தி துண்டுப் பிரசுரங்களும் நடைப்பண வழியெங்கிலும் விநியோகிக்கபடவுள்ளன.

தனது நீதிக்கான நடைப்பயணம் குறித்து தமிழ் உறவுகளுக்கு அழைப்பு விடுத்துள்ள ஜெய்சங்கர் முருகையா அவர்கள், இந்த 'நீதிக்கான நடைப்பயணத்தில்' தன்னோடு சேர்ந்து நடைபயணம் மேற்கொள்ள விரும்புகின்ற அனைவரையும் அன்போடு வரவேற்று கொள்வதாகவும், நீதிக்கான நடைப்பயணத்துக்கு வேறு எந்த வகையிலாவது உறுதுணை வழங்க விருபம்புகின்றவர்கள் தொடர்பு கொள்ளுமாறும் கோரியுள்ளார்.

jeya_shanker@hotmail.com மின்னஞ்சல் முகவரியூடகவோ அல்லது ( 44)07960125257 எனும் தொலைபேசி இலக்கத்தின் ஊடகவோ ஜெய்சங்கர் முருகையா அவர்களை தொடர்பு கொள்ளலாம்.

இதேவேளை ஜெய்சங்கர் முருகையா அவர்கள் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மக்கள் பிரதிநிதிகளில் ஒருவர் என்பது இங்கு குறிப்பிடதக்கது.

நாதம் ஊடகசேவை

TGTEwalk_for_justiceandpeace_392_001.jpg

TGTEwalk_for_justiceandpeace_392_002.jpg

http://www.seithy.co...&language=tamil

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜெயசங்கரை நன்றாக தெரியும். தமிழ் ஈழத்திற்காக கடுமையாக உழைப்பவர்.

இப்படிப்பட்ட தனி நபர் போராட்டங்கள் தான் அவுஸ்திரேலியாவுக்கு மகிந்தவை வேட்டியை மடிச்சு கட்டி கொண்டு ஓட வைத்திருக்கிறது.

இங்கிலாந்துக்கு அவருக்கு வர இப்ப பயம். ஜெயசங்கரின் பரப்புரை பயணம் வெற்றி அடைய வாழ்த்துக்கள்.

அவர் முன்வைக்கும் கோரிக்கைகள் வெற்றி பெற இணைந்து போராடுவோம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.