Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தாயகத்துக்காய போன தந்தையரின் பிள்ளைகளுக்கு10€ போதும்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

10€ போதும் ஒரு பிள்ளையின் கல்வி உயர்வடைய.

எங்களுக்காக தங்கள் வாழ்வை இழந்து சிறைகளில் வாடும் தந்தையர்களின் காணாமல் போன தந்தையர்களின் பிள்ளைகளுக்கான கல்வியை வழங்கி அவர்களது வாழ்வில் ஒளியேற்றுங்கள் உறவுகளே.

இல.1) பிள்ளைகள்:-

1) டிலக்சனா 19வயது ஏஎல்உயர்தரம். (மாதம் 10€)

2) டிலானி 17வயது ஏஎல்உயர்தரம். (மாதம் 10€)

3) டிசான் 15வயது (தந்தை சிறையில் இருப்பதால் குடும்ப வறுமை காரணமாக 15வயது டிசான் கடையொன்றில் வேலைசெய்கிறார்)

4) டிலுக்சன் 9வயது 4ம் ஆண்டு. (மாதம் 10€)

முகவரி – செங்கலடி , மட்டக்களப்பு

தந்தையார் – 05.03.2010 அன்று மட்டக்களப்பில் கைதுசெய்யப்பட்டவர். இப்பிள்ளைகளின் தந்தையார் மீது 3 வழக்குகள் போடப்பட்டுள்ளது. தாயாருடன் வாழ்ந்து வருகின்றனர்.

இப்பிள்ளைகளின் தாயார் வாழ்வாதார மேம்பாட்டுட்டு உதவியாக ஆடு மாடு வளர்க்க உதவி கோருகிறார்கள். (40ஆயிரம் ரூபா உதவியை வேண்டுகிறார்.அண்ணளவாக 267.00€)

இல.2) பிள்ளைகள்:-

1) வீரன்றோய் 6வயது தரம்1 (மாதம் 10€)

2) சமர்வீரன்றோய் முன்பள்ளி.

முகவரி – அந்தநாள்புரம் , இலுப்பைக்கடவை, மன்னார்.

தகப்பன் 16.09.2009அன்று கைது செய்யப்பட்டு அனுராதபுர சிறையில் இருக்கிறார்.

இப்பிள்ளைகளின் தாயார் பிள்ளைகளின் கல்வியுதவி அல்லது வாழ்வாதார உதவி கோருகிறார்கள். எதிர்பார்க்கும் உதவித்தொகை 30ஆயிரம் ரூபா. அண்ணளவாக 200.00€)

இல.3) பிள்ளைகள்:-

1) அமராஜ் 16வயது 9ம் ஆண்டு. (மாதம் 10€)

2) லக்சாயினி 10வயது 6ம் ஆண்டு. (மாதம் 10€)

3) கவியரசி 6வயது 1ம் ஆண்டு. (மாதம் 10€)

பிள்ளைகளின் தகப்பன் இறுதியுத்தத்தில் சரணடைந்தவர். தாயார் பிள்ளைகளின் கல்விக்கான உதவியும் வாழ்வாதார உதவியாக கோழிவளர்க்க 40ஆயிரம் ரூபா உதவி கோருகிறார். அண்ணளவாக 267.00€.

முகவரி – புத்தூர் கிழக்கு , விக்னேஸ்வராவீதி , புத்தூர்

இல.4) பிள்ளைகள்:-

1) பகீரதன் 11வயது தரம்6 (மாதம் 10€)

2) கிருபாலினி 21வயது மூத்தமகள் (வீட்டில் இருக்கிறார்)

இவர்களின் தந்தைக்கு 56வயது. தாயாருக்கு 55வயது. 07.11.2008அன்று தகப்பன் கைதானார். இவர் பெயரில் 3வழக்குகள் பதியப்பட்டுள்ளது. தாயார் பிள்ளையின் கல்விக்கான உதவியும் வாழ்வாதார உதவியாக கோழிவளர்க்க 30ஆயிரம் ரூபா உதவி கோருகிறார். அண்ணளவாக 200.00€.

முகவரி :- உடையார்கட்டு வடக்கு உடையார்கட்டு

இல.5)குழந்தைகள்:-

1) மொறிஞ்சலா 11வயது. (மாதம் 10€)

2) பிறின்சி 9வயது. (மாதம் 10€)

3) நில்மன் முன்பள்ளி.

இப்பிள்ளைகளின் தந்தை 26.06.2006 கைதுசெய்யப்பட்டவர். 6வழக்குகள் பதியப்பட்டுள்ளது.

முகவரி :- கிளிநொச்சி

இல.6) பிள்ளைகள்:-

1) அம்சவாணி 04.09.2002 (மாதம் 10€)

2) எழில்பிரியன் 14.03.2008

இப்பிள்ளைகளின் தகப்பன் 10.06.1998 அன்று தலையில் இடது பக்கம் காயமடைந்தார். காயமடைந்த பின்னர் வலது கண் பார்வை குன்றியது. தொடர்ந்து வலிப்பு இருக்கிறது. 17.05.2009அன்று கைது செய்யப்பட்டார். கடுமையான நோயாளியாக சிறையில் இருக்கிறார்.

பிள்ளைகளுக்கான கல்வியுதவியும் வாழ்வாதார உதவியையும் எதிர்பார்க்கிறார்கள். வாழ்வாதாரத்தை மேம்படுத்த 30ஆயிரம்ரூபாவை எதிர்பார்க்கிறார்கள். அண்ணளவாக 200.00€.

இல.7) பிள்ளைகள்:-

1) சர்மிலன் 6ம்ஆண்டு (11வயது) (மாதம் 10€)

2) தட்சாயினி 1ம் வகுப்பு (6வயது) (மாதம் 10€)

பிள்ளைகளின் தகப்பன் 26.03.2009அன்று கைதுசெய்யப்பட்டவர். பி்ளைகள் தாயாருடன் வாழ்கிறார்கள். வாழ்வாதார உதவியாக 30ஆயிரம் ரூபா எதிர்பார்க்கின்றனர். அண்ணளவாக 200.00€.

முகவரி :-மன்னார் வீதி, நெழுக்குளம், வவுனியா.

இல.8) பிள்ளைகள் :-

1) R.D.பிரசா ஜானக 19வயது ஏஎல்உயர்தரம் (மாதம் 10€)

2) பிமுத்து சதுரங்க – 15வயது 11ம்ஆண்டு (மாதம் 10€)

3) டவிது உத்தால 11வயது 6ம்ஆண்டு (மாதம் 10€)

இப்பிள்ளைகளின் தகப்பனுக்கு 50வயது. இராணுவப் பணியில் இருந்தவர். தமிழர்களுக்கு உதவியமையால் 26.06.2006 அன்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர். இவர்கள் சொந்த ஊரிலிருந்து அயலவர்களால் வெளியேற்றப்பட்டு தற்போது வேறொரு இடத்தில் மிகுந்து சிரமங்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அயல்சூழல் எவ்வித சுயதொழிலும் செய்ய முடியாத நிலமையில் தாயாருடன் வாழ்கிற பிள்ளைகளின் கல்விக்கு உதவுமாறு சிறையில் வாழும் தந்தையார் வேண்டுகிறார்.

மேற்படி கல்வியுதவியை வேண்டும்16 பிள்ளைகளுக்கான உதவியை எதிர்பார்க்கிறோம். ஒரு பிள்ளைக்கு மாதம் 10.00€ உதவியை வழங்கி ஒவ்வொரு பிள்ளையை நீங்கள் பொறுப்பேற்று கல்விக்கான உதவியை வழங்கலாம்.

உதவ விரும்புவோர் பிள்ளைகளுடன் நேரடியான தொடர்புகளைப் பேணிக் கொள்வதோடு உதவிகளையும் நேரடியாக வழங்கலாம். உங்களுக்கு எந்தப்பிள்ளையின் விபரம் தேவையென்பதனை தெரிவு செய்து அறியத்தாருங்கள் விபரங்களைத் தந்துதவுவோம்.

கல்விக்காக ஏங்கும் சிறார்களின் கல்வியை மேம்படுத்த விபரங்களைப் பெற்றுக்கொள்ள நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய விபரம்:-

முகவரி:

Nesakkaram e.V

Hauptstr – 210

55743 Idar-Oberstein

Germany

Shanthy Germany – 0049 6781 70723

மின்னஞ்சல்: nesakkaram@gmail.com

Vereinsregister:

AZ- VR 20302

Amtsgericht 55543 Bad Kreuznach

Finanzamt Idar-Oberstein,Steuer-Nr. 09/665/1338/8

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பிள்ளையைப் பொறுப்பெடுங்கள் உறவுகளே....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.