Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

துணைவேந்தருக்கும் இராணுவத்தளபதிக்கும் இடையில் சந்திப்பு -

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் கிளிநொச்சியை சேர்ந்த மற்றுமொரு மாணவர் தாக்கப்பட்டுள்ளார்

Jaffna%20Uni%20VC%20met%20hathru%202_CI.jpg

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் சு. தவபாலசிங்கம் தாக்கப்பட்டமை தொடர்பில் மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ள பாதுகாப்பின்மை தொடர்பான கலந்துரையாடல் ஒன்று யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரத்தினத்திற்கும் யாழ் மாவட்ட தளபதி மகிந்தஹத்துருசிங்கவுக்கும் இடையில் நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

இச்சந்திப்பில் மாணவர்கள் எந்த விதமான அச்சமுமின்றி கல்வியைத் தொடரலாம் என்று மகிந்த ஹத்துருசிங்க தலைமையிலான பாதுகாப்புத் தரப்பினர் துணைவேந்தருக்கு உறுதியளித்துள்ளதாக யாழ் பல்கலைக்கழக பதிவாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் படைத்தரப்பினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் படைத் தரப்பினருக்கும் முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும் திட்டத்திதுடன் வெளிசக்திகள் இவ்வாறான முயற்சிகளை எடுப்பதாகவும் மாணவர்கள் அச்சமின்றி தமது கல்வியை தொடரலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Jaffna%20Uni%20VC%20met%20hathru%201.jpg

இந்த விடயம் தொடர்பில் பலாலி இராணுவத் தலைமையகத்தில் யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரசரத்தினம் தலமையிலான குழுவினருக்கும் யாழ் மாவட்ட இராணுவத்தளபதி மகிந்தஹத்துருசிங்ன தலமையிலான இராணுவத்திற்கும் இடையில் சந்திப்பு ஒன்று நடைபெற்றுள்ளது.

யாழ் பல்கலைக்கழகத்தில் பகிஸ்கரிப்புப் போராட்டம் தொடரும் நிலையில் கிளிநொச்சியை சேர்ந்த மற்றுமொரு மாணவன் தாக்கப்பட்டுள்ளதாக யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது. பரந்தன் பூநகரி வீதியில் ஆர்.கவிதாஸ் என்ற மாணவன் இரும்பு பொல்லுகளால் தாக்கப்பட்டதாக மாணவர் ஒன்றியத் தலைவர் தவபாலசிங்கம் இன்று மாலை தெரிவித்துள்ளார்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/69123/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது தானப்பா சன நாயகம். மாணவன் தாக்கப்பட்டால் இராணுவத்தளபதியுடன் பேசுவது. இது தானப்பா தமிழனின் சன நாயகம்.

யாழ் எம்பி பங்கருக்க பம்மினால் இதுகளும் என்னத்த செய்யிறது? கொமாண்டருக்கு கொஞ்சம் இலஞ்சம் குடுத்து விஷயத்தை முடிப்பம் எண்டு கிழம்பியிருப்பினம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.