Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வளர்ச்சியடைந்த நாடுகளுக்கு ஜனாதிபதி மஹிந்தவின் அறிவுரை

Featured Replies

வளர்ச்சியடைந்த நாடுகளுக்கு ஜனாதிபதி மஹிந்தவின் அறிவுரை

ஆசிய பசுபிக் பிராந்திய நாடுகளே உலக பொருளாதாரத்துக்கு ஆதாரமாகவுள்ளதனால் முன்னேறிய நாடுகள் ஒரு கட்டுப்பாட்டுக்குள் தம்மை ஒழுங்குபடுத்திக்கொள்ள வேண்டுமென கூறியதன் மூலம் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வளர்ச்சியடைந்த நாடுகளை கிண்டலடித்துள்ளார்.

பேத் நகரில் பொதுநலவாய வணிக அரங்கத்தில் பேசிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முன்னேறிய நாடுகளின் தலைவர்கள் அவர்களது நிதிச்சந்தைகள் தள்ளாட்டம் கண்டுவரும் பிரச்சினை தொடர்பாக காலம் பிந்திய நிலையில் அற்பசொற்ப நடவடிக்கைகளையே எடுத்துள்ளனரென கூறினார்.

முன்னேறிய பொருளாதாரங்களை கொண்ட நாடுகளில் வேலையின்மைப் பிரச்சினை அரசியல், பொருளாதார கலங்களை தோற்றுவித்துள்ளதாக அவர் கூறினார்.

இந்த நிலைமை தொடருமாயின் மிகவும் மோசமான அரசியல் பிரச்சினைக்கு இட்டுச்சென்று உலக பொருளாதார உறுதிப்பாட்டை மேலும் குழப்பிவிடுமென ஜனாதிபதி தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

உலகத் தலைவர்கள் சரியான மாற்று நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் நம்பிக்கையை கட்டியெழுப்ப வேண்டும். இல்லாதுவிடின் நிலைமை மோசமடைந்து மீளமுடியாத வீழ்ச்சிக்கு இட்டுச்செல்லுமென அவர் கூறினார்.

அடுத்த உச்சிமாநாடு நடைபெறவுள்ள இலங்கை, கடந்த ஆறு வருடங்களாக நம்பிக்கையை பேணிவருவதில் வெற்றி கண்டுள்ளது. நாம் உறுதியான அரசியல் பின்னணியை வழங்கியதாலேயே இது சாத்தியமாகியதென அவர் தெரிவித்துள்ளார்.

யுத்தம் நடந்த வடக்கு, கிழக்குப் பிரதேசத்தில் 22 சதவீத வளர்ச்சியை கண்டுள்ளோமென அவர் கூறினார். 8 சதவீதமாக இருந்த வேலையின்மை 4.3 சதவீதமாக வீழ்ச்சி கண்டுள்ளது. 28 சதவீதமாக இருந்த பணவீக்கம் 6 சதவீதமாக வீழ்ச்சி கண்டுள்ளதென அவர் கூறினார்.

http://www.tamil.dai...7-09-10-02.html

Edited by akootha

இவன் அவன்களுக்கு தான் எதையாவது ஏற்றுமதி செய்வது. அவங்களுக்கு காசுப்பிரச்சனைஎன்டால் இவனுக்கு ஏக்கக் காச்சல். தான் கந்தை கட்டிகொண்டு, அடுத்தவள் கட்டியிருக்கிற விலையான பட்டுப்புடவையைக்காட்டி "நாங்கள் எங்கன்ரை ஊரிலிலை இப்பிடி விலையானதுகள்தான் வேண்டிக்கட்டுறனாங்கள்" என்றார்.

கதைக்கதக்க கதைகள் எல்லாம் அடைபட்டு போச்சு. இந்த பக்கத்தாலை திறக்க பார்கிறார். சமாதானத்திற்கு சொலெயுமுக்கு குடுத்த காசு கானாட்டில் சொலெயும் நோபல் பரிசு போட்டு குடுக்காது. அதாலை பொருளியலிலையாவது வாங்கிபோடுவம் என்றுபாக்கிறார். அது அமெரிக்கா காறன்ரை பரிசு. 82 பரிசிலிலை 48 ம் அவனுக்குதான் போனது. 60% கிட்ட எல்லா பொருளியல் பரிசுகளும் அவனுக்குதான். மகிந்தாவுக்கு வாய்க்காது.

சயன்ஸ்சிலை எதாவது கண்டு பிடிக்க வேணும்.சமாதனம் என்டால் ஏதாவது செய்ய வேணும். இது சும்மா வாயாலை வெட்டி விழுத்தி போட்டு போறதுதானே என்டு நினைக்கிறார் போலை. முதலிலை இவற்றை சிவப்பு சீலைகாறி சீனா காசை றீவால்யூ பண்ணாட்டில் யப்பன் பட்ட பாடு படப்போற என்டது இவருக்கு தெரியேல்லை. 48 நோபல் பரிசு பொருளாதார நிபுணனர்களையும் மிஞ்சி அவங்களுக்கு படிப்பிகிறார்.

அவங்கன்ரை தலைவர்மார் பொருளாதாரம் பேசி போட்டு வீட்டை திரும்பி போனால் அதை பற்றி உரிச்செடுக்க ஆயிரம் ரிப்போட்டேஸ் எயார்போட்டிலை காத்துகொண்டு நிற்பாங்கள். உன்னட்டை அந்த சேட்டை அவியாது என்டு காட்ட உப்பிடி ஒருகதை கதைக்கிறாய். எதுக்கும் கவனம். காடுக்குள்ளை அடிச்ச குண்டாலை காயப்பட்டு தண்ணிக்கு கத்திகொண்டுகிடந்த சீவங்களை சித்திரைவதை செய்து சாக்காட்டி போட்டு, மனிதாபமான விடுதலை மீட்பு பணி செய்தனான் என்று சொன்னால் தனக்கெண்டு நாடில்லாத தமிழன் கேட்டுகொண்டு போவான். ஆரோ நாடுகள் ஆக்கினைப்படுத்தி வாங்கின GSP உனக்கும் வருகுது. பிடிக்கேலையெண்டால், தேவையில்லாத பொருளாதாரம் பேசி பின்னுக்கு குறிசுடு பட்டுபோகிடாதை; கவனம். இது என்ரை அறிவுரை உனக்கு.

Edited by மல்லையூரான்

  • தொடங்கியவர்

இந்த அறிவுரையை போர்குற்றவாளி கூறியது சிங்கள மக்களுக்கு மட்டுமே, அவர்களை குளிர வைக்க.

எல்லா சர்வாதிகளும், கடாபி வரை, இவ்வாறு கூறிய 'தலைவர்களே'.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.