Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடா - ரொறன்ரோ 'பொங்கு தமிழ்' நிகழ்வில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு:

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Toronto_pongutamil291011_150.jpg

கனடா ரொறன்ரோவில் ஒன்ராறியோ பாராளுமன்றத்துக்கு முன்னால் 29-ஒக்ரோபர் 2009 சனிக்கிழமை நடைபெற்ற பொங்கு தமிழ் நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான மக்கள் உணாவு பூர்வமாக கலந்துகொண்டனர். இந்நிகழ்வினை கனடியத் தமிழ் சமூகமும் கனடியத்தமிழ் மாணவர் சமூகமும் ஏற்பாடு செய்திருந்தனர்.

நிகழ்வில் லிபரல் கடசியைச் சோந்த ஏஐpன்கோட் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ஐpம் கரியானிஸ் (Jim Karygiannis Member Parliament from Scarborough-agincourt) என்டீபி கடசியைச் சேர்ந்த பீறேமலியா � கோர் - ழேல்ரன் தொகுதி ஒன்ராறியோ நாடாளுமன்ற உறுப்பினர் யக்மீற் சிங் (Jagmeet Singh, MPP (Bramalea--Gore�Malton) ஆகியோர் உட்பட பல அரசியலாளர்களும் 180 அமைப்புகளை பிரதிநித்துவப்படுத்தும் கனடிய தேசிய அமைப்புகளில் ஒன்றான சமாதானத்துக்கான கனடியக் கூட்டமைப்புபேச் சேர்ந்த (The Canadian Peace Alliance) பத்துப் பிரதிநிதிகள கனடிய மனித உரிமைகள் அமைப்பின் பிரதிநிதிகள் கனடியத்தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகள் உட்பட பல பிரமுகர்கள் உரையாற்றினர்.

Toronto_pongutamil291011_001.jpg

Toronto_pongutamil291011_002.jpg

பாரளுமன்ற உறுப்பினர் ஜிம் கரியானிஸ் அவர்கள் உரையாற்றும்போது சுpறிலங்கா அரசினால ; மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றம் சம்பந்தமாக சர்வதேச விசாரனை மேற்கொள்ளப்பட வேண்டும் என வலயுறுத்திப் பேசினார். ஒன்ராறியோ நாடாளுமன்ற உறுப்பினர் யக்மீற் சிங் உரையாற்றும்போது தமிழ் மக்கள் தமது சுயநிர்ணய உரிமைக்காக தொடர்ந்து போராட வேண்டும் என்றும் சீக்கிய மக்களும் இணைந்து குரல் கொடுப்பார்கள் என்று பலத்த கரகோசத்தின் மத்தியில் உரையாற்றினார்.

புpரபலங்களின் உரைகளுடன் தேசிய எழுச்சியை பிரதிபலிக்கும் நடனங்கள் நாடகம் மற்றும் வானம்பாடிகளின் இசை நிகழ்ச்சியும் இடம் பெற்றது. நிகழ்வில் தேசியத்தலைவரின நிழற் படத்துடன தமிழீழத் தேசியக்கொடி கனடியத்தேசியக்கொடி மற்றும் மஞசல் சிவப்பு வர்ணக் கொடிகளையும் மக்கள் தாங்கி நின்றனர்.

இளையோர் பாதுகாப்புக் கடமையை மிச்சிறப்பாக செய்திருந்தனர் ஊர்ச்சங்கங்களின் பிரதிநிதிகள் விளையாட்டுச்சங்கங்களின் பிரதிநிதிகளும் தமது கடமையை செவ்வனே செய்து முடித்தனர்

நிகழ்வுக்கு ஆதரவு வழங்கிய முக்கிய தேசியவாதிகளினால் மக்களுக்கு சூடான தேனீர் வழங்கினர் இந்நிகழ்வினைப்பற்றி; 680 news, cp24News போன்ற ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்து செய்திகள் வெளியிட்டன.

மகிந்த அரசின் கைக்கூலிகள் இந்நிகழ்வு நடைபெறாமல் இருக்க எவ்வளவோ இடையூறு விளைவித்தும் மக்கள் பல்லாயிரக்கணக்கில் இதில் கலந்தகொண்டதன்மூலம் தமிழ் மக்களின் தேசிய உழுச்சியை எந்த சக்தியாழும் மழுங்கடிக்க முடியாது என்பதை மீண்டம் ஒருமுறை வெளிப்படுத்தியுள்ளனர்

ரொறன்ரோவி இன்றையதினம் மாலை குளிர் காணப்பட்டபொதம் பல்யிரப்பணக்கான மக்கள் நிகழ்வில் கலந்துகொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இறுதியில் பொங்கு தமிழ் தீர்மாணம் பிரகடனப்படுத்தப்பட்டு உறுதிமொழியுடன் நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது.

Toronto_pongutamil291011_003.jpg

Toronto_pongutamil291011_004.jpg

Toronto_pongutamil291011_005.jpg

Toronto_pongutamil291011_006.jpg

Toronto_pongutamil291011_007.jpg

Toronto_pongutamil291011_008.jpg

Toronto_pongutamil291011_009.jpg

Toronto_pongutamil291011_011.jpg

Toronto_pongutamil291011_012.jpg

Toronto_pongutamil291011_013.jpg

Toronto_pongutamil291011_014.jpg

Toronto_pongutamil291011_825_010.jpg

http://www.seithy.co...&language=tamil

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அனைத்துலக ஆதரவு கோரி குயின்ஸ்பார்க்கில் திரண்ட 5000 தமிழர்கள் - ‘ரொரன்ரோ சன்‘ ஊடகம்

toronto%20ralley%201.jpg

கனடாவின் ரொரன்ரோ நகரில் நேற்றுமாலை சுமார் 5000 தமிழர்கள் பங்கேற்ற தமிழர் சுதந்திரப் பேரணி இடம்பெற்றுள்ளது.

சிறிலங்காவில் போர் முடிவுக்கு வந்து இரண்டு ஆண்டுகள் கழிந்த நிலையில், தமிழர்களுக்கு எதிரான மனிதஉரிமை மீறல்கள், போர்க்குற்றங்களுக்கு காரணமான சிறிலங்கா அரசாங்கத்தைக் கூண்டில் ஏற்ற வலியுறுத்தி இந்தப் பேரணி நடத்தப்பட்டுள்ளது.

நேற்றுப் பிற்பகல் 3 மணியளவில் ஆரம்பமாகி மாலை வரை இடம்பெற்ற இந்தப் பேரணியில் கனடாவில் வாழும் சுமார் 5000 தமிழர்கள் பங்கேற்றுள்ளனர்.

toronto%20ralley.jpg

குயின்ஸ் பார்க் மைதானத்தில் இந்தப் பேரணியில் இந்தப் பேரணியில் ரொரன்ரோ மற்றும் யோர்க் பிராந்திய தொழிலாளர் சபையின் ஜோன் காட்ரைட், லிபரல் பன்முக கலாசார விமர்சகர் ஜிம் கரஜியானிஸ் ஆகியோரும் கலந்து கொண்டு கனேடிய அரசாங்கத்தின் அகதிகள் தொடர்பான கொள்கையை கடுமையாக விமர்சித்தனர்.

“சிறிலங்காவில் போரின் இறுதிக்கட்டத்தில் போர்க்குற்றங்களும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்களும் இடம்பெற்றுள்ளதாக ஐ.நா அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாகவும், போரின் கடைசி நான்கு மாதங்களில் மட்டும் 40,000 தொடக்கம் 75,000 பேர் வரை கொல்லப்பட்டதாகவும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற கனேடிய தமிழர் தேசிய சபையின் பேச்சாளர் கிருஸ்ணா சரவணமுத்து தெரிவித்துள்ளார்.

இறுதியான அரசியல் தீர்வு ஒன்றையே தாம் எதிர்பார்ப்பதாகவும், இல்லையேல் மீண்டும் போர் ஏற்படும் ஆபத்து உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகள் இராணுவ மயப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அங்கு ஒரு இலட்சம் சிறிலங்காப் படையினர் குவிக்கப்பட்டுள்ளதாகவும், தமிழர்கள் தமது நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் திரும்புவதற்கு அனுமதி மறுக்கப்படுவதாகவும் கனேடியத் தமிழர் தேசிய சபை குற்றம்சாட்டியுள்ளது.

அமைதியை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையை அங்கீகரிக்குமாறு சிறிலங்கா அரசுக்கு கனேடியத் தலைவர்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கோருவதாகவும் கிருஸ்ணா சரவணமுத்து தெரிவித்துள்ளார்.

இந்தப் பேரணியில் பங்கேற்றவர்கள் பலரும் தமிழீழ மற்றும் கனேடியத் தேசியக் கொடிகளை தாங்கியிருந்தனர்.

தகவலும் படமும் – Toronto Sun

http://www.puthinappalakai.com/view.php?20111030104961

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.