Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூட்டமைப்புடனான சந்திப்பு: சிறிலங்கா அரசாங்கத்தின் கோரிக்கையை நிராகரித்தார் பான் கீ மூன்!

Featured Replies

கூட்டமைப்புடனான சந்திப்பு: சிறிலங்கா அரசாங்கத்தின் கோரிக்கையை நிராகரித்தார் பான் கீ மூன்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனுடன் நடத்தவுள்ள  சந்திப்பைத் தடுத்து நிறுத்த சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகள் வெற்றி பெறவில்லை என  கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் நியூயோர்க்கில் சந்திக்கவுள்ளனர்.

இச்சந்திப்புத் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மௌனம் காத்து வருகின்ற போதிலும், இச்சந்திப்புத் தொடர்பான தகவலை கொழும்பு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

இந்தச் சந்திப்புக் குறித்து சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சுக்கோ அல்லது ஐக்கிய நாடுகள் சபைக்கான சிறிலங்காவின் நிரந்திர வதிவிடப் பிரதிநிதி பாலித்த ஹொகன்னவுக்கோ உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான இச்சந்திப்பை ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையே ஒழுங்கு செய்து கொடுத்துள்ளதாக நம்பகமான வட்டாரங்கள் கூறியுள்ளன.

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளைச் சந்திப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபைக்கான சிறிலங்காவின் நிரந்திர வதிவிடப் பிரதிநிதி பாலித்த ஹொகன்ன எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுடனான இச்சந்திப்பைத் தவிர்க்க வேண்டும் என பாலித்த ஹொகன்ன கோரிக்கை விடுத்திருந்த போதிலும், பான் கீ மூன் அக்கோரிக்கையை நிராகரித்து விட்டதாகவும் தெரிய வந்துள்ளது.

அதேவேளை ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனை கடந்த வாரம் சந்தித்திருந்த சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் விசேட தூதுவரும், அமைச்சருமான மகிந்த சமரசிங்க இது குறித்து கூறியிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் அல்ல என்றும், இலங்கையில் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஏனைய தமிழ்க் கட்சிகளும் இருப்பதாகவும் அவர் பான் கீ மூனுக்கு எடுத்துக் கூறியதாக கொழும்பு ஆங்கில ஊடகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.pongutham...99-cbb05fab2030

Edited by akootha

அகுத: இது ஐ.நா அலுவலகதிலிருந்து வந்த அறிக்கை இல்லையானாலும் இந்த செய்திகள் கொண்டு வருபவர்கள் எல்லோருக்கும் ஒரு பச்சை.

  • தொடங்கியவர்

TNA at UN

TNA leader R. Sampanthan and party MP M.A. Sumanthiran are due to meet the UN Secretary General Ban Ki-moon at the UN headquarters in New York. The TNA had made it a point to keep mum about the impending meeting with the UN Chief, but the media had gone to town with the news. No authoritative source had appraised either the External Affairs Ministry here or the country’s Permanent representative at the UN Dr. Palitha Kohana of the upcoming meeting between the UN Chief and the TNA delegation.

According to reliable sources, Head of UNHRC Navanethan Pillay had intervened to arrange the meeting between Ban Ki-moon and the TNA delegation. Kohona had protested against Ban Ki-moon granting an audience to the TNA. The UN Chief had refused to call off the meeting at that stage.

However, Minister Mahinda Samarasinghe who was on a visit to United Nations last week had already informed Ban Ki-moon of the government’s stand on the matter. Minister Samarasinghe had told the UN Chief that the TNA is not the sole representative of the Tamil people in the country and the other Tamil political parties too deserve the courtesy that he had extended to the TNA. The Minister has also apprised the UN Chief of the progress being made by his government in the sphere of human rights and of the government’s Action Plan on Human Rights.

(28 Oct 2011)

http://www.nation.lk/2011/10/30/politics.htm

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.