Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஜெகதீஸ்வரனுக்காக உதவிய உறவுகளே உங்களுக்காக கண்ணீரோடு சில வரிகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

play-button.gif?w=28&h=30கடந்த சில மாதங்களாக தனது உயிருக்காக போராடிக் கொண்டிருக்கிற ஜெகதீஸ்வரனெண்ட ஒரு முன்னாள் போராளியை விடுவிக்கிறதுக்கும் அவருக்கான சிகிச்சையை செய்யிறதுக்கும் மனிதநேயப்பணியாளர்களும் அவருடைய குடும்பமும் பெரும் பிரயாசைப்பட்டு உழைச்சதிற்கான பயன் இண்டைக்கு எட்டியிருக்கு.

ஜெகதீஸ்வரனுக்கான சிசிச்சையை மேற்கொள்ள பிணை கிடைச்சிருக்கு அது பற்றி அவருடன் இருந்த கைதிகள் அவருடைய அக்கா புலம்பெயர்ந்த உறவுகளுக்கு சொல்ல வருகிறதை இந்த ஒலிப்பதிவிலை கேப்பம்…

ஒலிப்பதிவினை கேட்க இணைப்பில் அழுத்துங்கள்.

ஜெகதீஸ்வரனுக்கு மேலதிக உதவிகளை வழங்க தொடர்பு கொள்ள :-

Nesakkaram e.V

Hauptstr – 210

55743 Idar-Oberstein

Germany

Shanthy Germany – 0049 6781 70723

மின்னஞ்சல்: nesakkaram@gmail.com

Vereinsregister:

AZ- VR 20302

Amtsgericht 55543 Bad Kreuznach

Finanzamt Idar-Oberstein,Steuer-Nr. 09/665/1338/8

Donation

Bank information

Germany:

NESAKKARAM e.V.

55743 Idar-Oberstein

Konto-Nr. 0404446706

BLZ 60010070

Postbank Stuttgart

Other countrys:

NESAKKARAM E.V

A/C 0404446706

Bank code – 60010070

IBAN DE31 6001 0070 0404 4467 06

Swift code – PBNKDEFF

Postbank Stuttgart

Germany

திருக்கேதீஸ்வரம் மன்னாரைச் சேர்ந்த ஜெகதீஸ்வரன் (வயது-32) என்பவர் 2009 ஆம் ஆண்டு பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்தார்.

இந் நிலையில் அவரின் இரு சிறுநீரகங்களும் பாதிப்படைய கடந்த சில மாதங்களாகத் தனது உயிருக்காகப் போராடி வருகின்றார் ஜெகதீஸ்வரன். இவரின் மருத்துவத் தேவையின் நிமிர்த்தம் ஏற்படும் செலவுகளை ஈடுசெய்ய புலம்பெயர் வாழ் தமிழ் மக்களின் உதவியும் பெறப்பட்டு, அதுவும் கிடைக்கப் பெற்றுள்ள நிலையில்,

மருத்துவத் தேவையைப் பெறும் பொருட்டு அவரைப் பிணையில் விடுதலை செய்யுமாறு குடும்பத்தினரால் இலங்கை அரசிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

ஜெகதீஸ்வரனின் தற்போதைய உடல் நிலையைக் கருத்தில் கொண்டு விடுக்கப்பட்ட இவ் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டது இலங்கை அரசு.

அதன்படி சட்டமா அதிபரின் பணிப்பின் பேரில் ஜெகதீஸ்வரன் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் சார்பில் வாதாடின சட்டத்தரணி அறிவித்துள்ளார். எனவே ஜெகதீஸ்வரன் விடயம் தொடர்பில் மனிதநேயத்திற்கு மதிப்பளித்து, மனிதாபிமான முறையில் நடந்து கொண்டுள்ளது இலங்கை அரசு.

அத்துடன் எத்தனையோ ஜெகதீஸ்வரன்கள் சிறையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழும், அவசர காலச் சட்டத்தின் கீழும் கைது செய்யப்பட்டு வாடி வதங்கிக் கொண்டிருக்கும் நிலையில், அவர் வைத்தியசாலையில் சங்கிலியுடன் கட்டி மருத்துவ சேவை பெற்ற புகைப்படமே இப் பிணைக்குக் காரணம் எனலாம்.

ஏனெனில் வெறும் வார்த்தைகளால் மட்டும் அவரின் துன்ப, துயங்களை எடுத்துரைக்கும் பட்சத்தில் அது அனைவரினதும் மனங்களைப் பாரியளவில் பாதிப்படையச் செய்திருக்காது, மாறாக புகைப்படத்துடன் அவரின் நிலைமையினை எடுத்துக் கூறியவுடன் அனைவரினதும் உள்ளங்களும் கனிந்து தற்போது பிணை கிடைத்துள்ளது ஜெகதீஸ்வரனுக்கு.

http://www.youtube.com/watch?v=6M0gN4r_IXY&feature=player_embedded

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிகவும் நல்ல விடயம். நேசக்கரத்தின் சேவை நம்மவர்க்கு இன்னும் தேவை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.